Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. @Kavi arunasalam இறுதி இரண்டு அத்தியாயங்களையும் இப்பதான் வாசித்து முடித்தேன். ஊருக்கு ஒருக்கால் போய் பார்க்கும் ஆசையை மீண்டும் தூண்டிவிட்டது உங்கள் தொடர். முதல் அத்தியாயத்தில் மாவீரர் வாரத்தில் அங்கு நிற்கும் சந்தர்ப்பம் நீண்ட காலத்தின் பின் கிடைத்ததாக சொல்லியுள்ளீர்கள். அங்கு நிற்கும் போது, மாவீரர் நாள் அஞ்சலிக்கு போனீர்களா?
  2. Society of the snow (Netflix release) மனித இனத்துக்கு வேகமாக ஓடக் கூடிய கால்கள் இல்லை. பறப்பதற்கு சிறகுகள் இல்லை. ஏனைய விலங்குகளுடன் கைகளால் போரிட்டு வெல்ல நீண்ட நிகங்களோ அல்லது உறுதியான கைகளோ, உடலோ இல்லை. பழகாவிடின் நீந்தக் கூட முடியாது. பறவைகளைப் போல், இலகுவாக கூடு கட்ட முடியாது. அதிக குளிரையோ வெப்பத்தையோ தாங்கும் தோல் கூட இல்லை. காதின் கேட்கும் திறன் கூட மட்டுப்படுத்தப்பட்டது. இரவில் பார்க்க நல்ல வெளிச்சம் தேவை அதன் கண்களுக்கு. இயற்கையால் பல வழிகளில் வஞ்சிக்கப்பட்ட ஒரு உயிரினம் என்றால் அது மனித இனம் தான். அப்படி இருந்தும் ஏன் மனித இனம், மற்ற எல்லா உயிரினங்களை விட மேலாக நின்று ஆதிக்கம் செய்கின்றது இயற்கைக்கு சவால் விடுகின்றது என யோசித்துப் பார்த்தால், அது தன்னை தக்க வைக்க, உயிர்வாழ எந்த எல்லைக்கும் போகும் திறன் வாய்ந்தது என்பதுவும், இயற்கைக்கு சவால் விடுவதன் மூலமே தன்னை தக்கவைக்க முடிகின்றது எனவும் புரிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படை உண்மையை 1972 இல் அந்தீஸ் மலைத் தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் தப்பி மனித இனம் வாழவே முடியாத கடும் குளிர் நிறைந்த பனி சிகரத்துக்குள் 70 நாட்களுக்கும் மேல் வாழ்ந்து உயிர் பிழைத்தவர்களின் வாழ்வு எமக்கு சொல்கின்றது. உண்பதுக்கு எதுவும் இன்றி, தம்முடன் பயணித்த சக நண்பர்களின் மற்றும் பயணிகளின் இறந்த உடல்களை வெட்டி உண்ணும் நிலை வரை அவர்கள் சென்று தம் உயிரை காப்பாற்றிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் 4 தினங்களுக்கு மேல் பனிக்குவியலால் பல அடிகள் ஆழத்தில் புதைக்கப்பட்டு மீள்கின்றனர். அருகில் இருக்கும் சக நண்பர்களின் மரணங்களை நேரடியாகவே காண்கின்றனர். எந்த ஒரு உரினமும் வாழ முடியாத சூழலை தாக்குப் பிடித்து 16 பேர் தப்புகின்றனர். அவர்களை காப்பாற்றியது மனித இனத்துக்கு என்று இருக்கும் அந்த உயிர்பிழைத்தலுக்காக எந்த சவாலையும் எதிர் கொள்ளும் பண்புதான் (Survival). இவர்களின் உண்மைக் கதையை ஒட்டி Netflix இனால் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Society of the snow. விபத்து நிகழ்ந்த இடத்துக்கே சென்று, அந்த கடும் குளிர் பிரதேசத்திலேயே செட் வைத்து, உண்மைக்கு மிக நெருக்கமாக சென்று இப்படத்தை எடுத்துள்ளனர். படம் ஆரம்பித்து, விமான விபத்து நிகழ்ந்த அந்த நிமிடத்தில் இருந்து முடிவு வரைக்கும் பார்ப்பவர்களை 'சில்லிட' வைக்கும் சினிமா இது. நேற்று இரவு இப் படத்தை பார்த்தேன். என் பிள்ளைகள் இருவருக்கும் 'கண்டிப்பாக பார்க்கவும்' என கேட்டுக் கொண்டுள்ளேன். முடிந்தால் நீங்களும் பாருங்கள்.
  3. சசி, நானும் இளையராஜாவின் பரம ரசிகன். என் வாழ்வின் எல்லா தருணங்களிலும் அவரது இசை என்னுடன் பயணித்துக் கொண்டே இருக்கின்றது. என் வாழ்வில் இருந்து அவரது இசையை பிரித்து விட்டால், பின்னனியிசை அற்ற ஒரு சினிமாவை பார்ப்பது போலத்தான் வெறுமையாக இருக்கும். ஆனால், அவரது இசைக்கும் அவர் குணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உயர்வு வருகையில் பணிவு வேண்டும் என்பர். பணிவு கூட இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மற்றவர்களை ஏளனத்துடன் அணுகுவதும், அவர்களை மதிக்காமல் அதை எந்த கூச்சமும் இன்றி வெளிப்படுத்துவதும் இளையராஜாவின் குணங்கள். பாலா (SPB) இறந்தவுடன் அவர் விகடனுக்கு பாலா பற்றிஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அதை தேடி வாசித்துப் பாருங்கள் என்ன சொன்னார் என. அதே போன்று பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேற வேண்டி வந்த பின் அவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியே போதும் அவரது மன ஒட்டம் எந்தளவுக்கு சிறுமையானது என (பிரசாத் ஸ்டூடியோ நாசமாக போய்விடும் எனும் தொனியில் பேட்டி கொடுத்து இருந்தார்). 96 படத்தில் அவரது பாடலை சில இடங்களில் ஒலிக்க விட்டமைக்கு கூட தரக் குறைவாக அப்படத்தின் இசையமைப்பாளரை திட்டி இருந்தார். ஊடகவியலாளர்களை மதிக்காதவர் (ஆனால் அவர்களின் புகழுரையை வேண்டி நிற்பவர்). அவரது இந்த உரையில் கூட, இப்ப இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு திறமை இல்லை என சாடியிருந்தார் (அந்த வரிகள் இந்த திரியில் இல்லை- ஆனால் பல தமிழக ஊடகங்களில் முழுமையாக வந்துள்ளது) இந்த திட்டு, அகங்காரமாக நடந்து கொள்வது எல்லாம் தான் சிறுமையாக நினைக்கும் மனிதர்களிடம் மட்டும்தான். பிஜேபி தலைவர்களுடன், மோடியுடன், அரசியல்வாதிகளுடன், சூப்பர் ஸ்டார்களுடன், குனிந்து குழைந்து பேசுகின்ற ஆள் மட்டுமன்றி, முட்டுக் கொடுப்பவராகவும் உள்ளார். அவ்வளவு ஏன், தான் பிறந்து வளர்ந்த சாதி 'உயர் சாதி' என போற்றப்படும் சாதியில் பிறந்தவர்களால் ஏளனமாக பார்க்கப்படுவதால், தன்னை அந்த சாதியில் இருந்து விலத்தி வைக்க விரும்புகின்றவர் மட்டுமன்றி, தன்னை பிராமணராக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்குகின்றவர். அதற்காகவே சங்கிகளுக்கு முட்டுக் கொடுப்பவர். ஒருவரை விரும்புகின்றோம், அவரது திறமையை விரும்புகின்றோம் என்பற்காக சிறுமைத்தனத்துக்கு முட்டுக் கொடுக்க அவசியம் இல்லை. என் அப்பாவுக்கு அவர் தலைமுறை இசையமைப்பாளர்களை பிடித்து இருந்தது. அவரது அப்பாவுக்கு அதற்கும் முற்பட்ட இசையமைப்பாளர்களின் இசையை / பாடலை பிடித்து இருந்தது. கண்டசாலாவின் பாடல்களை என் அப்பப்பா விரும்பி கேட்பார். அப்பாவுக்கு கே.வி. மகாதேவனது பாடல்கள் உயிர். சுசீலா அம்மாவின் குரல் தான் அவருக்கு பிடித்தமானது. அதே போன்று, எனக்கு இளையராஜாவின் இசையை பிடித்தும் அனிருத் இன் இசையை பிடிக்காமலும் உள்ளது. என் மகனதும் மகளதும் Play List டில் தமிழ் பாடல்கள் கொஞ்ச எண்ணிக்கையில் தான் உள்ளன. அவற்றில் அனிருத் இனதும், ஏ.ஆர்.ரஹுமானின் இன்றைய பாடல்களும் தான் உள்ளன. நாளைக்கு இதுவும் மாறி விடும்.
  4. வெத்து இலை அம்மா செய்த மைசூர்ப்பாகை களவெடுத்து பள்ளிக்கூடம் கொண்டு போக ஒளிச்சு வைச்சதை எறும்பு காட்டிக் குடுக்க, அம்மா அடிக்கத் தடி தேடி ஆச்சீன்டை பொயிலைக் காம்பைக் கொண்டந்தா. அப்ப அடிக்கிறதுக்கு வசதியா கனக்க இருந்திச்சுது. ஏப்பைக் காம்பு, பூவரசந்தடீ, முருக்கஞ் செத்தல் , பொயிலைக்காம்பு எண்டு கன சாமாங்கள் வீட்டிலயோ வேலீலயோ ready made ஆ இருந்தது. இப்ப வீட்டை அடிக்க கடையில போய் பிரம்பை வாங்கி வைக்க பிள்ளைகள் எடுத்து உடைச்சுப் போடும். வழமையான கடைக்குப் போற வேலைக்கு extra வா சில நேரம் வெத்திலை வாங்கிற வேலை வரும். சைக்கிள் பழகின புதுசில அதை ஓடிறதுக்காகவே சைக்கிளில போக விட்டா வாங்கித்தாறன் எண்டு deal போட்டு , ஓம் எண்டா ஓடிப் போய் வாங்கிறது. மாமா வீட்டை வந்தா வெத்திலை வாங்கு எண்டு சொல்லி கொஞ்சம் கூடக் காசு தருவார் எனக்கும் ஏதும் வாங்க எண்டு. “ வெத்திலை வாங்கேக்க உமா ஸ்ரோர்ஸில வாச வெத்திலை எண்டு கேட்டு வாங்கு” எண்டு மாமா சொன்னார், வெளிக்கிட்டு வர ஆச்சி எனக்கு வெறு வெத்திலை எண்டு சொல்லி காசும் தந்தா. வண்ணார்பண்ணை சிவன் கோயிலுக்கு முன்னால இருக்கிற உமா ஸ்ரோர்ஸ் எண்ட கடை இப்பவும் இருக்கு. வாழைப்பழமும் வெத்திலையும் மட்டும் தான் அப்ப விக்கிறது. வாச வெத்திலை ஒரு கூறு எண்டு கேக்க, “ஒரு வெத்திலையா மூண்டு வெத்திலையா “ எண்டு கேட்டதுக்கு பதில் சொல்ல மூண்டு வெத்திலையை பாத்து எடுத்து வாளித்தண்ணீல கழுவி உதறி மேசையில வைச்சிட்டு மேல் வெத்திலையில பாக்கை வைச்சு, ரெண்டாவதில அசோகாப் பாக்கு வைச்சி, பிறகு மூண்டாவதில மூண்டு சீவல் நாறல் பாக்கை வைச்சிட்டு கிழிச்ச பேப்பர்த் துண்டில சுண்ணாம்பை வைச்சு மடிச்சு வெத்திலைக்கு அடீல வைச்சிட்டு ,பழைய கொப்பிப் பேப்பரில மூலைப் பக்கமாச் சுத்தி நிமித்தி் சுருளின்டை அடியை ரெண்டு தரம் மேசையில தட்டீட்டு வெத்திலை நுனியோட பேப்பரையையும் சேத்து மடிச்சுத்தாற ஸ்டைலுக்காக ரெண்டு வெத்திலைக் கூறு வாங்கலாம். யாழ்ப்பாணத்தில அப்ப வெத்திலை போடாதவன் இல்லை எண்டு சொல்லலாம் . சாப்பிட்டாப்பிறகு வெத்திலை பாக்கு கட்டாயம் போடிற பழக்கம் இருந்தது அதோட பழைய laxpray பைக்குள்ள எல்லாம் வைச்ச ஒரு வெத்திலைப் பையும், பாக்கு வெட்டியும், பொக்கை வாய்க்கிழவிக்கு உரலும், இடிக்குறதுக்கு தண்டவாளத்தில சிலிப்பர்கட்டை இறுக்கிற ஆணியோ இல்லாட்டி ஒரு இரும்போ இருக்கும். வீடுகளில பத்து மணிப் பிளேன்ரீயோட ஒருக்கா, மத்தியானம் சாப்பாட்டுக்குப் பிறகு ஒருக்கா, அப்பிடியே பின்னேரம் தேத்தண்ணிக்குப் பிறகு ஒருக்கா எண்டு சாப்பாட்டுக்கு நிறை குறை நிரப்பியா வெத்திலை இருக்கும். வீடுகளில மூத்திரம் பெய்ய ஒரு மூலை மாதிரி வெத்திலை துப்பிற வேலியும் இருக்கும். வீட்டில ஆரும் வந்தாலும் தேத்தண்ணி குடிச்சிட்டு வெத்திலை போடுவினம். அதே போல வெத்திலை ஒரு அத்தியாவசிய உப உணவாக கன கூலி வேலைக்காரருக்கு இருந்திச்சுது. எண்பதில யாழப்பாணம் townக்க “ வாளிக்குள் துப்பவும் “ எண்ட போட்டோட பழைய மண்ணெண்ணை பரலை நிமித்தி வைச்சு வெள்ளைப் பெயின்ற்றும் அடிச்சு வைச்சிருந்தவை . அதோட நல்லூர் வீதியிலையும் திருவிழாக் காலத்தில துப்பிறதுக்கு வாளிகள் வைச்சிருந்தது. ஊரில ஏனோ தெரியேல்லை துப்பிற பழக்கம் பொதுவா இருந்திச்சுது. பயணங்கள் போறவை ஒண்டுக்குப் போகமால் மூத்திரத்தை அடக்கினாலும் வெத்திலை போட்ட எச்சிலை உடனயே துப்பீடுவினம் . ஆனபடியாத்தான் பரலை வெட்டி கக்கூஸ் கட்டாமல் முழுசா நிமித்தி துப்பிறதுக்கு வைச்சாங்கள். முனிசிப்பல் காரங்கள் இடைக்கிடை குப்பை பரலை எடுக்கிறவங்கள் ஆனால் துப்பல் பரலை ஒருநாளும் எடுக்கிறேல்லை . குப்பை எடுக்க வரேக்க பரலுக்குள்ள நெருப்புத் தண்ணி ( Lysol) மாதிரி ஊத்துவாங்கள் அது துப்பலோட சேந்து வெய்யிலுக்கு காஞ்சு போடும். பழைய காலத்தில கசம் கனபேருக்கு இருந்ததால கண்ட இடத்திலேம் துப்பி எச்சிலில இருந்து கிருமி பரவாமத் தடுக்க அப்பிடிச் செய்தாங்களோ தெரியேல்லை. ஆனாலும் அதுக்கு வெத்திலை போடிற ஆக்களுக்கு அது வசதியா இருந்திச்சுது. வெத்திலை வெறும் விசேசத்துக்கும் கோயிலுக்கு கொண்டு போறதுக்கும் மட்டும் இல்லை அதை பரியாரிமார் மருந்துக்கும் பாவிக்கிறவை. தம்பிக்கு ஒரு நாள் சளி இழுக்க வெத்திலையில எண்ணை பூசி தணலில வாட்டி “ அது சளியை உறிஞ்சுமாம் எண்டு” நெஞ்சில வைச்சவ ஆச்சி. குழந்தைப் பிள்ளைகளுக்கு எண்டால் தலையில வைக்கிறதாம் . “சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிச்சுவைக்கும் நிஜாம் பாக்கு “ எண்டு ஆல் இந்தியா ரேடியோவில அடிக்கடி விளம்பரங்கள் போகும். பாலர் வகுப்புப் படிக்கேக்க பள்ளிக்கூடத்துக்கு முன்னால இருந்த முரளீன்டை தாத்தான்டை கடையில சுருட்டின பாதி வெத்திலைக்கு கலர் தேங்காய்பூவும் , முறிச்சு உடைச்சுத் தூவின கறுவாவும் எண்டு 10 சதத்துக்கு வித்தது. சந்தைக்கு விசேசத்துக்கு மரக்கறி சாமான் வாங்கப் போய் கடைசீல வெத்திலைக் கடைக்கும் போறது. தேவைக்கு ஏத்த மாதிரி ரெண்டோ , மூண்டோ கும்பம் வெத்திலை , கிலோவில சீவல் , கொட்டைப்பாக்கு , சுண்ணாம்பு ரின், சுருட்டுக்கட்டு எல்லாம் வாங்கீட்டு , பொயிலைக்காம்பு எண்டு கேட்டுப் பொயிலை எடுத்து விரிச்சு மணந்து பாத்துக் குடுக்க, விரிச்சதை திருப்பிச் சுருட்டி இலையை மடக்கி முடிச்சுப் போட்டுத் தருவாங்கள். ஊரில நல்லது கெட்டது எல்லாத்திலேம் வெத்திலைத் தட்டு இருக்கும். தட்டில ஒரு பக்கமா வெத்திலையை அடுக்கி பாக்குச் சீவலை அள்ளிப் போட்டு பழைய ரின்பால் பேணீல வாங்கின சுண்ணாம்பை அள்ளி வைச்சிட்டு, சுருட்டுக் கட்டொண்டையும் வைச்சுக் குடுப்பினம். அதோட பொயிலைக் காம்பில இருந்து இலையை வெட்டீட்டு காம்பை எடுத்து வைப்பினம், அடிக்கிறதுக்கும், மூக்கில விட்டுத் தும்மிறதுக்கும். அதோட மலச்சிக்கல் காரருக்கு மல வாசலில வைச்சா சிக்கல் இல்லாமல் போகும். ஆய கலைகளில சேக்க மறந்ததில இந்த வெத்திலை போடிறது ஒரு கலையும் ஒண்டு . நல்லது கெட்டதில வைக்கிற வெத்திலைத் தட்டத்தை எடுத்து மடீல வைச்சபடி பழசுகள் வெத்திலை போடும். வெத்திலைத் தட்டில அடுக்கின வெத்திலைக்கு நடுவில ஆகலும் முத்தலும் இல்லாத வெளிறின பச்சையாப் பிஞ்சும் இல்லாத வெத்திலை ஒண்டை எடுத்து ரெண்டு பக்கத்தையும் கையால ( சில வேளை வேட்டியிலே) வடிவாத் துடைச்சிட்டு காம்பை முறிச்சு அப்பிடியே நடு நரம்போட இழுத்து எறிஞ்சிட்டு சுண்ணாம்பை சுண்டு விரலால எடுத்து வெத்திலையின் வெளிப்பக்கத்தில் மெதுவாகப் பூசோணும். அதோட நல்ல மெல்லிசாச் சீவின, காஞ்ச சீவலா பாத்து எடுத்து சாடையாக் கசக்கீட்டு மெல்ல ஊதி தூசை பறக்கவிட்டிட்டு அப்பிடியே ஒரு பக்கக் கொடுப்புக்குள் வைத்து மெல்லச் சப்பத் தொடங்க வாய்க்குள்ள இருக்கிற பாக்கில எச்சில் ஊறும். பிறகு வெத்திலையை மடிச்சு மற்றப் பக்க கொடுப்புக்குள்ள வைச்சிட்டு இரண்டையும் சமமான அளவில் சப்பினபடி நாக்கினால் பிரட்டிக் கலக்க வாற வெத்திலைச்சாறை சுண்டு விரலையும் நடு விரலையும் வாயில வைச்சு தெறிக்காம எட்டித் துப்போணும். காரத்துக்கும் tasteக்கும் தேவையான அளவுக்கு ஏத்த மாதிரி விரலில் இருக்கும் சுண்ணாம்பை நுனி நாக்கில் இடைக்கிடை தடவிக் கொள்ளலாம். அப்பப்ப சின்னத்துண்டா வெட்டியிருக்கிற பொயிலையை எடுத்து விரித்துப் பாத்து நல்லா மணக்கிற பொயிலைத் துண்டை எடுத்து வெறுமையாக இருக்கும் கொடுப்புப் பகுதிக்குள் தள்ளி் அடக்கி வைத்திருக்க வேண்டும். எச்சில் ஊறிய பொயிலைச்சாற்றை வெத்திலையுடன் கலந்து அசைபோட்டுக் கொண்டு இருக்கேக்க வாற எச்சில் கடைவாயின் பக்கம் வழிய முதல் எச்சிலைத் துப்பிப் போடோணும். போட்ட வெத்திலையை ஒரு நாளும் அப்பிடியே விழுங்கக்கூடாது, அசை போட்டு சாறை உறிஞ்சீட்டு எழும்பி்ப் போய் வேலிப்பக்கம் எல்லாத்தையும் துப்பிப் போட்டு, விரலில மிஞ்சி்இருக்கிற சுண்ணாம்பை மரத்திலயோ சிவத்திலயோ பூசீட்டை வாயைக் கொப்பிளிச்சிட்டு வரோணும். இல்லாட்டி எல்லாத்தையும் சேத்துப் போட்டு மாடு மாதிரி அசையும் போடலாம். ( பி.கு . இதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பேற்காது.) இப்ப ஏன் எண்டு தெரியாம வாங்கி வைக்கிற வெத்திலையை போடிறதுக்கு ஆக்களும் இல்லாமல் , அதை போடிறதை ரசிக்கிற ஆக்களும் இல்லாமல் வெத்திலை இப்ப எல்லாம் பெயருக்கு ஏத்த மாதிரி வெத்து இலையாகவே இருக்கு. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
  5. போலி துவாரகா நாடகம் பற்றி வாய் திறக்காமல், மவுனமாக இருந்ததன் மூலம் ஒத்து ஊதிய அமைப்புகள் எல்லாமே தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்யும் அமைப்புகளே. அதில், இந்த நட்டுக் கழன்ற அமைப்பும் விதி விலக்கல்ல.
  6. எனக்கு ஊர் வாழ்க்கையை விட கொழும்பு வாழ்க்கை மிகவும் பிடித்த ஒன்று. வெள்ளவத்தை, கல்கிசை போன்ற இடங்கள் எனக்கு மிக பிடித்தமான இடங்கள். ஆனால் ஓய்வு காலத்தில், ஊருக்கோ அல்லது கொழும்புக்கோ போய் வாழும் எண்ணம் இல்லை.
  7. இன்றைய பிபிசி தகவல்களின் படி, சிறிய விமானத்துக்கு பறப்பதற்கு அனுமதி அளித்து இருக்கவில்லை. ஆனால் பெரிய விமானத்துக்கு இறங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். எனவே பெரிய விமானம் தனக்கான ஓடுபாதையில் இறங்கிக் கொண்டு இருக்கும் போது, சிறிய விமானம் அதே ஓடுபாதையில் புறப்பட தொடங்கியமையால் இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. ஒழுங்குமுறைகளை அப்படியே கடைப்பிடிப்பதற்கு யப்பானியர்கள் உலகம் பூராவும் பெயர் போனவர்கள். மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை முறை அவர்களுடையது. வேலைக்கு போகு அவசர நேரங்களிலும் அவர்கள் ரயில் நிலையங்களில் காத்திருந்து ரயில் ஏறும் வீடியோக்கள் பல சமூகவலைத்தளங்களில் உள்ளன. விதிகளை அப்படியே கடைப்பிடிப்பார்கள்.
  8. வாசிக்க சுவாரசியமாக இருக்கு படத்தில் இருக்கும் restaurant காந்தி லொட்ஜா? தொடருங்கள் ...
  9. எங்கட இலங்கை இந்திய சனம் என்றால் , கைப்பையை மட்டுமல்ல விமானத்தில் பாவிக்க கொடுத்த ear phone, blankets எல்லாவற்றையும் அந்த அவசரத்திலும் தூக்கி கொண்டு இறங்கி இருக்கும்.
  10. கல்வி பின்புலத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கில்மிஷாவின் திறமை இந்த ஆடம்பர வரவேற்பாலும் மீடியாக்களின் அதீத கவனிப்பாலும் குன்றிவிடக்கூடாது எனும் அக்கறை எமக்கு இருப்பது போல், அவரது பெற்றோர்களுக்கும் இருக்கும் என நம்புகின்றேன்.
  11. மிகச் சிறந்த மனிதர். நல்ல அரசியல்வாதியாகவும் இருந்தவர். நேற்று முழுதும், நல்லா பழகிய ஒருவரை இழந்துவிட்டதாக மனம் அரட்டிக் கொண்டு இருந்தது. இவரது அரசியல் வாழ்வையும் நாசமாக்கியவர் வேறு யாரும் இல்லை...வைகோ தான்.
  12. ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.
  13. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று காலை உய Live Update நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும், உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் செல்வது வழக்கம். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் 18-ம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். விஜயகாந்த் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, தே.மு.தி.க தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி கடந்த 14-ம் தேதி நடந்த கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில், விஜயகாந்த் முன்னிலையில் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார், பிரேமலதா. பின்னர் விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசியும் பெற்றார். இந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 42 mins ago இது குறித்து தே.மு.தி.க வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "மருத்துவப் பரிசோதனையில் கேப்டனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் சிகிச்சையளிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் மருத்துவமனை பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் சிகிச்சைக் குறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,நேற்று உடல்நிலை சீரற்ற நிலையில், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே நுறையீரல் தொற்று இருந்த நிலையில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அதனால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்" எனக் குறிப்பிட்டிருக்கிறது. விஜயகாந்த் மரணம் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில், தொண்டர்களும், அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அவரது உடல், சாலிகிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அவரது இல்லத்தில் தேமுதிக கட்சிக் கொடி, அறைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. https://www.vikatan.com/government-and-politics/corona-dmdk-leader-actor-vijayakanth-passed-away?pfrom=home-main-row
  14. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்.
  15. 'யாழில் போதைப்பொருட்களுடன் கைதாகும் பெண்கள் – பெருமளவான பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் மீட்பு!' எனும் திரியில் எழுதப்பட்ட அரட்டைத்தனமான கருத்து ஒன்று நீக்கப்பட்டது. யாழ் ஒரு அரட்டைக் களம் அல்ல என்பதை மீண்டும் நினைவூட்டுகின்றோம்.
  16. இவர்கள் மகிந்தவை சந்தித்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வளவு காலமும் மகிந்தவுக்கும் மகிந்த அரசுக்கும் எதிராக போர்க் குற்றம், போர்க்குற்றவாளி என்றெல்லாம் குரல் எழுப்பி விட்டு, இன்று அவர்களுடன் சந்தித்து சேர்ந்து நின்று படம் எல்லாம் எடுத்து கனடிய தமிழ் சமூகத்தின் முகத்தில் காறி துப்பியுள்ளார்கள். அண்மையில் கனடாவில் உள்ள இலங்கை தூதுவரையும் சந்தித்தனர் என செய்தி வந்ததாக நினைவு,
  17. இவர் ஒவ்வொரு பிள்ளை பிறந்த பின்னும் யாழ் வந்து போனவர் என நினைக்கின்றேன்.
  18. காத்திரமும் ஆத்திரமும் கொண்ட கட்டுரை. இணைப்புக்கு நன்றி.
  19. இப்படியான நக்கல் நளினத்துக்கு, அதுவும் தலைவரின், அவர் குடும்பத்தின் ஒப்பற்ற தியாகத்தை கொச்சைப்படுத்தும் நக்கல் கேள்விகளுக்கு பதில் சொல்லி என் தரத்தை உங்கள் அளவுக்கு கீழிறக்க விரும்பவில்லை. நன்றி
  20. துவாரகா வருவா என நம்பியவர்கள், நம்பி அதனை வெளியே காவித்திரிந்தவர்கள் அனைவரும் கபட நோக்கில்தான் செய்தனர் என்று கூற முடியாது. பலர், உண்மை என நம்பி இருந்தனர். விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் மீதும் கட்டமைக்கப்பட்டு இருக்கும் அதீத நம்பிக்கை அவர்கள் ஒரு போதும் இறந்து போக மாட்டார்கள் என்று நம்பும் அளவுக்கு சிலருக்கு இருந்ததை அவதானித்துள்ளேன். அந்த அதீத நம்பிக்கை, சரி பிழைகளை சீர் தூக்கிப் பார்க்கும் அறிவை மேவி இருந்தது. ஆனால், இந்த காணோளி வந்த பின்பும், அப்பட்டமாக அது துவாரகா இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்த பின்னும் கூட, தம் தவறை ஒத்துக்கொள்ள மறுத்தும், சாக்கு போக்கு சொல்லி தம் நம்பிக்கையை நியாயப்படுத்தியும், நேரடியாக மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கின்றவர்களையும், "இல்லை அது துவாரகா தான்" என்று இன்னும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களையும் இனி ஒரு போதும் தமிழ் இனம் நம்பக் கூடாது. இப்படியானவர்களுக்கு தலைவர் பெயர் சொல்வதற்கும், புலிகளின், மக்களின் தியாயங்களைப் பற்றி கதைப்பதற்கும் கூட அருகதை அற்றவர்கள். இவர்களுக்கு தமிழ் தேசியம் பற்றி இனி வாயைத் திறப்பதற்கு கூட தார்மீக உரிமை இல்லை. இந்த போலி நாடகம், பலரை எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே இந்த நாடகத்தை நடாத்தியவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டு, எம்மைச் சுற்றி இருந்த போலித் தமிழ் தேசிய வியாதிகளுக்கு ஒரே அடியாக நன்றி வணக்கம் சொல்வோம்.
  21. Tiktok இல் பரவலாக கிடக்கின்றது. தமிழக உறவுகள் பலர் நம்பி தொடர்ச்சியாக repost பண்ணுகின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.