Everything posted by நிழலி
-
துவாரகா உரையாற்றியதாக...
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid07EkJvbNu8Yoh19kszqErZ155n4kWNM94ATWYoVoVdZM2PVTAEe3kr4L7FQajJWZQl&id=100078207157578&mibextid=Nif5oz நெத்தி அடியான, நியாயமான பேச்சு. இந்த காணொளியை நேரடியாக இணைக்க முடியவில்லை.
-
துவாரகா உரையாற்றியதாக...
பல மணி நேரத்தின் பின் YouTube நிர்வாகம், இந்த போலி காணொளியை நீக்கியுள்ளது. தமது இலக்கு நிறைவேறாதது மட்டுமன்றி, கேலிக்கிடமாக போனதால் இவ் காணொளியை தயாரித்தவர்களே நீக்கச் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.
-
துவாரகா உரையாற்றியதாக...
யாழ் களம் மே மாதத்தில் 17 , 18 திகதிகள் வரும் வாரத்தில் தான் தலைவருக்கு படத்துடன் கூடிய அஞ்சலியை செலுத்துவது. இந்த வருடமும் அதனையே செய்தோம். நன்றி.
-
துவாரகா உரையாற்றியதாக...
தலைவருக்கு நான்கு பிள்ளைகள், அதில் கடைசி பிள்ளை ஒருபோதுமே வெளியில் வரவில்லை, எனவே அந்தப் பிள்ளையை வெளியே காட்டுகிறோம் என்று ஒரு திட்டத்துடன் அடுத்த முறை வந்தாலும் வருவார்கள்
-
துவாரகா உரையாற்றியதாக...
முழுமையாக கேளுங்கள், பலருக்கும் பகிருங்கள்.
-
துவாரகா உரையாற்றியதாக...
ஒன்று விளங்கவில்லை... வளவன் இணைத்தமைக்கு ஏன் எல்லோரும் இனை குத்துகின்றீர்கள் என. உண்மையில் அவர் இங்கு இணைத்தமையை வரவேற்க வேண்டும். இதைப் பற்றி உரையாடுவதற்கும், உண்மைத்தன்மை பற்றி கதைப்பதற்கும், இந்த போலிகளை தோலுரிக்கவும், இதனை இணைத்தல் அவசியம் அல்லவா?
-
துவாரகா உரையாற்றியதாக...
துவாரகா வின் பேச்சு என்ற கபட நாடக உரையை வெளியிட்டவர்கள் ஆகக் குறைந்தது செய்யும் களவிலாவது கொஞ்சம் மினக்கெட்டு இருக்கலாம். 'அவர்களின்' வளத்தையும் காசையும் கொள்ளை அடித்த இந்தக் கூட்டம், Deep fake போன்ற நவீன தொழில் நுட்ப விடயங்களுக்காகவது கொஞ்சம் காசை செலவழித்து இதனை வெளியிட்டு இருக்கலாம். இனை கூட பயன்படுத்தவில்லை இந்த மூடர்கள். இனி இதைச் சொல்லி உண்டியல் குலுக்கிக் கொண்டு இவர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, கக்கூஸ் கழுவ பயன்படுத்தும் துடைப்பத்தை எடுக்க மறந்து விடாதீர்கள்
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
இறுதி காலத்தில் தன் தொலைபேசியை அணைத்து வைத்து இருந்த இந்த வைகோ எனும் சந்தர்ப்பவாதி சொல்கிறார் இதை. தனக்காக தீக்குளித்த தொண்டர்களின் தியாகத்தை மதிக்காத இந்த தலைவர் இன்று காசு அடிக்கும் கயவர் கூட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடிய விடயம் அல்ல.
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இது ஐ.பி.எல் 2024 திரி அல்லவா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அவ்வாறு பொறுப்பேற்ற பின் இஸ்ரேல் என்னென்ன செய்யும்? 1. போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து, இளம் தலைமுறையை நாசம் செய்யும் 2. களவு, கொலை, பாலியல் வல்லுறவு குற்றங்கள் செய்கின்றவர்களுக்கு உறுதுணையாக நின்று, பாதுகாத்து, ஊக்குவித்து பாலஸ்தீனச் சமூகத்தை சிதைக்கும். 3. பாலஸ்தீனத்தில் தன் அரசியல் எடுபிடிகளையும், ஜோக்கர்களையும் வைத்து தன் பொம்மை அரசை நிறுவியோ, அல்லது காயடிக்கப்பட்ட அரசியலை செய்கின்றவர்களை வளர்த்து விட்டு, போராட்ட குணத்தை நீர்த்துப் போகச் செய்யும். 4. எல்லா வழிகளிலும் நெருக்குவாரங்களை கொடுத்து, இளம் சமூகத்தை வேறு நாடுகளுக்கு அகதியாக செல்ல ஊக்குவிக்கும். 5. மேலும் எப்படி பாலஸ்தீனத்தை நாசமாக்குவது என்பது பற்றி அறிய, இலங்கையின் சிங்கள பெளத்த இனவாத அரசிடம் ஆலோசனை கேட்கும்.
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதில் சிறுவர்களையும் ஈடுபடுத்தி எடுத்து இருக்கின்றார்கள் இந்த ஈவு இரக்கமற்ற அரக்கர்கள். சில வருடங்களுக்கு முன், இஸ்ரேல் வான்வெளித்தாக்குதலையும்,ஏவுகணைத்தாக்குதல்களையும் பாலஸ்தீனத்தின் மீது ஏவி பல நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்து கொண்டு இருக்கும் போது, இந்த தாக்குதல்களுக்காக இஸ்ரேல் மண்ணில் இருந்து கிளம்பும் ஏவுகணைகளையும், தாக்குதல் விமானங்களையும் வேடிக்கை பார்ப்பதற்காக beach chair இல் அமர்ந்து கடற்கரை ஒன்றில் திரள் திரளாக கண்டு களித்த காணொளிகள் பரவியது ஞாபகத்தில் உள்ளது. ஒவ்வொரு குண்டும் வெடித்த ஓசை எழும்போதெல்லாம், ஆரவாரம் செய்து களிப்புற்று இருந்தனர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அருமையான, காலத்துக்கு தேவையான ஒரு பகிர்வு விசுகு. நன்றி காசாவில் நடந்து கொண்டிருப்பது முள்ளிவாய்க்காலின் Version 2 உலகம் முழுதும் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றுக் கொண்ட பாலஸ்தீனர்களுக்கு எதிராகவே இவ்வளவுபடுகொலைகளை ஏவி விட்டாலும் எவரும் தடுக்க மாட்டார்கள் எனும் போது எமக்கு மட்டும் எப்படி தடுத்திருப்பார்கள் என்ற கேள்வி தான் எழுகின்றது.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த திரியின் தலைப்பை 'இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு' என்று மாற்றியுள்ளேன்- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
என்றாவது முஸ்லிம் அகதிகளை முஸ்லிம் நாடுகள் / அரபு நாடுகள் வரவேற்று உள்ளனரா? இல்லை. ஆனால், இந்த முஸ்லிம்களை மேற்குலகு நோக்கி அகதிகளாக போவதற்கு தூண்டுவார்கள். மேற்கு நாடுகளும் இவர்களை வரவேற்று அடைக்கலம் கொடுக்கும். அப்படி, மேற்கில் குடியேறிய பின், இதே அரபு நாடுகள் பள்ளிவாசல்களை அமைக்வும், இஸ்லாமிய அமைப்புகளை உருவாக்கவும் (NGO), இஸ்லாமிய கல்வி நிலையங்களை கட்டியமைக்கவும் பெருமளவு நிதி உதவி செய்யும். இவ்வாறுதான் அவர்களின் (இஸ்லாமியர்களின்) கனவான, உலகெங்கும் தம் மதத்தை பரப்பி, உலகில் அதிக சனத்தொகை கூடிய இனமாக / மதமாக மாற்றுகின்றனரோ என்ற எண்ணம் எனக்கு எழுவது உண்டு (conquering the world) இதை நீங்கள் குடியேறி இருக்கும் நாடுகளில் கூட அவதானித்திருப்பீர்கள்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்தச் செய்தி இந்திய ஊடகங்கள் அவித்த செய்தி போல உள்ளது. ஏனெனில் BBC, CNN, Al Jazeera போன்ற தளங்களிலும் கனடிய பிரதான ஊடகங்களிலும் மீட்புப் பற்றி எந்த செய்தியும் வரவில்லை.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பலஸ்தீன மக்களுக்கு உலக அளவில் இருக்கும் ஆதரவையும், அனுதாபத்தையும் இப்படியான முஸ்லிம்களில் இருக்கும் அடி முட்டாள்கள் இல்லாமல் செய்து கொண்டு இருக்கின்றனர். இஸ்ரேலும் இதைத்தான் எதிர்பார்க்கின்றது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா. என்றும் மனதளவில் மார்க்கண்டேயன் ஆகவே இருங்கள்!- கருத்துக்களில் மாற்றங்கள் [2023]
சீக்கியர் கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்தி பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ - என்ன காரணம்? என்ற திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாத எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.- ‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
நான் எல்லாம் முரட்டு அன்றோயிட் (Android) பக்தர்கள். ஒரு நாளும் இந்த அப்பிள் பொருட்களை எனக்கு வாங்கியது இல்லை. எப்பவும் எந்த நாளும் சம்சுங் தான்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஆஹா .. குருவே, உங்கள் கால்கள் எங்கே ... சிங்கம் ஒரு மோட்டுச் சிங்கம் (சுவி அண்ணாவின் கருத்தை பார்த்து தெளிவு வந்து விட்டது).- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஆனாலும் அந்தக் குரங்கு, தன்னை நம்பி உயிருடன் விட்ட அந்த சிங்கத்தை ஏமாற்றி விட்டது தானே..? எல்லாரும் என்றோ ஒரு நாள் நம்பியவரை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றோம்.- கருத்துக்களில் மாற்றங்கள் [2023]
"யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!" என்ற திரியில் அனாகரீகமாக எழுதப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டது.- அறிவித்தல்: யாழ் இணையத்தில் இருந்து 'திண்ணை' நீக்கம்
திண்ணை (இப்போதைக்கு) திறந்து விடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட அனுமதி மற்றும் மட்டுறுத்துநர் பார்வைக்குள் இருப்பவர்களால் திண்ணையை பயன்படுத்த முடியாது. ஏனையவர்களால் பயன்படுத்த முடியும். நன்றி - இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.