Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. கட்சி ஆரம்பித்தமையால் இனி படங்களில் நடிப்பதை நிறுத்தினால் அது முழு தமிழ் சமுதாயத்துக்கும் செய்யும் மிகப் பெரிய நன்மையாக இருக்கும்.
  2. 32 வயதியில் மரணம்! மிக இளம் வயதிலேயே இறந்து விட்டார். அஞ்சலி
  3. நுணா, நீங்கள் எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள்? ஊரே இந்திய மயம் அல்லவா? இந்திய கடவுள்கள் (ஐயப்பன், கல்கி, சாயிபகவான்), இந்திய உடுப்பு வியாபாரிகள், இந்திய சாத்திரகாரர்கள், இந்திய இசைக் குழுவினர்கள், இந்திய அனுசரனையில் பல பல நிகழ்சிகள்.. இவற்றை விட இந்தியாவுக்கு சுற்றுலா போகின்றவர்களும், பழனி, வேளாங்கனி மாதா போன்ற திருத்தலங்களுக்கு படையெடுக்கின்றவர்களும் நிறையப் பேர். வடக்கு, முக்கியமாக யாப்பாணம் பாதி இந்தியாவாக மாறி கனகாலம்.
  4. இந்த சம்பவம் பற்றி, அது நிகழ்ந்த சமயத்தில் செய்திகள் பல வெளியாகின. யாழிலிலும் இச் சம்பவம் தொடர்பாக வாழும் புலம் பகுதியில் செய்தி பகிர்ந்து இருந்தனர். ஆனால், இத் தீர்ப்பு பற்றி சமூக வலைத்தளங்களில், முக்கியமாக வட்ஸ் அப் இல் பகிரப்பட்டதுக்கு அப்பால் தேசியம் என்ற ஒரே ஒரு இணையச் செய்தித் தளத்தை தவிர வேறு எங்கும் வந்ததாக நான்(னும்) காணவில்லை. எனவே இத் தீர்ப்பின் உண்மைத் தன்மை பற்றி தெளிவில்லை. தேசியம் தளத்தில் வந்த செய்தி: https://thesiyamnation.com/36430/
  5. பிரி(யா)விடை 9 ஜூலை 1995 காலமை ஆசுபத்திரீ; காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patient ஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை எண்டு senior group இல எல்லாரையும் wardக்கு வெளீல கலைச்சு விட்டிட்டார். ஆர்டை நோயாளி எண்டு சேர் கேக்கேக்க ஒற்றுமையா காட்டிக் குடுக்காம விட்டிட்டு பிறகு “எல்லாம் அரவிந்தனால” எண்டு பெட்டைகள் விரலை நீட்ட, நான் canteen இல சாப்பிட்டிட்டு வாறன் எண்டு அரோ போனான். படிப்பை மட்டுமே மூச்சாயும் மூலதனமாயும் நினைச்சு வந்திருந்த எல்லாப் பொம்பிளைப் பிள்ளைகளும் சில பெடியளும் “சேர் இனிமே இப்பிடி நடக்காது” எண்டு சொல்லிக் காலில விழ, “சரி , இண்டைக்கு இரவும் நிண்டு எல்லாரும் full history யும் கேட்டு வையுங்கோ” எண்டு கணேசர் சொல்ல, “ஓம் சேர்” எண்டு சொன்னது நல்லூர் முருகனுக்கே கேட்டிச்சுது. பின்னேரம் போல “அடேய் இண்டைக்கு கணேசர் medicos nite க்கு chief guest ஆப் போறாராம் நாங்கள் பின்னேரம் வரத்தேவேல்லை” எண்டு சிலர் வெளிக்கிட “சேர் சொன்னாக் கட்டாயம் வருவார்” எண்டு பெட்டைகள் வெருட்ட வெளிக்கிட்ட பெடியள் திருப்பி நிண்டிச்சினம். ஆர்வக்கோளாறுக்காரர் எல்லாம் அண்டைக்கு வயித்துநோ , கட்டி வெண்டு வந்த ஆளை வைச்சு கட்டி கரைஞ்சு போற அளவுக்கு அமத்திப் பாக்க சிலர் மட்டும் Nursing பழக வந்த பிள்ளைகளோட “சள்” அடிச்சுக்கொண்டு இருந்திச்சனம். புத்தகத்தைப் படிச்சு ஏறாத அறிவை தலைக்கு கீழ படுக்க வைச்சு ஏத்திக் கொண்டு சிலர் இருந்திச்சினம். பாவம் இந்த குறூப் அண்ணாமாரும் அக்காமாரும் மட்டும் இரவிரவா ஆஸ்பத்திரீல நிக்க மருத்துவபீடம் களைகட்டி இருந்திச்சுது. பின்னேரம் medical faculty; Ragging நேரத்தில பாத்தோண்ணயே பிடிச்சதும் சரிவராம , “பழகப் பழகப் பிடிச்சிடும் எண்டு ஒண்டாப் படிச்சதும் சரிவராம கடைசி நாள் வரை முயற்சியைக் கைவிடாம தன்டை காதல் அம்புகளை இசை ரொக்கற்றில விட்டுக் கொண்டிருந்தார் ஒரு அண்ணா. மருத்துவ பீட farewell நிகழ்வில இது எப்பவுமே நடக்கிறது. இவர் விட்ட இசைத்தூதுக்கு இணை அனுசரணை வழங்கின பிரதாபன் organன்டை எந்தப்பக்கமும் எட்டா( வது ) சுரக்கட்டையை தேடித்தேடி வாசிக்க, எங்கடை பீலிங்குக்கு ஏத்த மாதிரி மழை மட்டும் பெய்யத் தொடங்கிச்சுது. முதலாவது வருசத்தில கம்பஸில நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுக்கும் புதுசா வாறாக்கள் தான் எடுபிடி , ஆனாலும் எங்களுக்கும் எல்லாத்திலேம் பங்கு கிடைக்கும் கட்டி முடிக்காத இப்பத்தைய Hoover Auditorium சுவருக்கு பாயைக் கட்டி வைச்சதால பேர் வந்த “பாய்க்கடை” . இந்தப் பாய்க்கடைப் பக்கம் காத்து வாங்கிறதுக்காக போன கூட்டம் நல்ல “கணகணப்போட” திருப்பி வந்திச்சுது. வந்த குறூப் சும்மா நிக்காமல் சுதியோட வந்து சோகப்பாட்டுக்கும் லயத்தோட ஆடத் தொடங்கிச்சுது. இந்த ஜோதீல பலர் சேர நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டிருந்த சிலர் மட்டும் “வாங்கோ சேந்து குறூப்பா படம் எடுப்பம்” எண்டு சொல்லீட்டு இரகசியமா ரெண்டு பேரா போச்சினம் . படம் எடுக்கிறதை எட்டிப் பாப்பம் எண்டு போய்ப் பாத்தா இந்த ஊர்க்காரர் இந்தப் பள்ளிக்கூட காரர் எண்டு தேடிக் கூப்பிட்டும் தங்கடை சோடிகளோட இணைஞ்சும் படம் எடுத்துக்கொண்டு இருந்திச்சினம் கொஞ்சப் பேர். சோடிகளோட இணையாத பல பேர் இசையோட இணைஞ்சு இருத்திச்சினம். பெய்த மழையில கேட்ட பெரிய இடி உள்ளயா வெளியையா எண்டு தெரியாத அளவு உச்சம் தொட்டிருந்தது பிரியாவிடைப் party. மேடைக்குப் பக்கத்தில கொஞ்சப்பேர் “ குரங்குகள் போலே மரங்களின் மேலே“ எண்டு பாட்டை கும்பலா பாடமாக்கிக் கொண்டு இருந்திச்சினம், கடைசியாப் பாடிறதுக்கு. பிரியிற சோகம் பெரிசாக ஆடிற இடத்தை தாண்டி ஆக்கள் இருக்கிற இடத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிச்சினம் . நாசூக்கா , நாகரீகமா “ நாங்கள் வெளிக்கிடிறம்“ எண்டு கொஞ்சக் காஞ்சிபுரம் கட்டினவையும், டை கட்டினவையும் வெளிக்கிடத் தொடங்கிச்சினம். உடுக்கேறியும் கலை வராத ஆக்களுக்கு கலவைப் பானம் குடுத்து ஆட வைக்க முயற்சிகள் தீவிரமா நடந்து கொண்டிருந்திச்சுது. இரவு ஆசுபத்திரி: வெளீல பெய்த மழையையும் இடிச்ச இடியையும் தாண்டி அங்க எங்களை விட்டிட்டு party போடிறவங்களைத் திட்டிக்கொண்டிருந்த studentsக்கு ஆசுபத்திரீல இருந்து “கணேசரட்ணம் சேருக்கு“ அம்புலன்ஸ் போகத் தான் ஆசுபத்திரி எல்லாம் தெரிய வந்திச்சுது ஒருக்கா மட்டும் கேட்ட இடி இறங்கினது நவாலி church க்க எண்டு. பள்ளிக்கூடக் காலத்தில ஆனந்தராஜா சேரை சுட்டிட்டாங்களாம் எண்டு கேட்ட உடன எப்பிடி கிரவுண்ட் வெறிச்சோடி ஆசுபத்திரி நிரம்பிச்சுதோ அப்பிடித்தான் இண்டைக்கும் நடந்திச்சுது மருத்துவபீடம் வெறிச்சோடி ஆஸ்பத்திரி நிரம்பிச்சுது. ஆசுபத்திரில இருக்கிற ஓரு அம்புலன்ஸை அனுப்பி என்ன செய்யிறது , எத்தினை வாகனம் தேவை எண்டு நிர்வாகம் யோசிக்க ஓட்டோ, மோட்டசைக்கிள் , land master எண்டு நிண்ட எல்லா வாகனத்திலேம் காயக்காரர் வந்திறங்கிச்சனம். வந்தவனுக்குப் பதிவு ஒண்டும் போடாமல் நேர வாட்டில விட்டிட்டு, பெரிய காயக்காரரை theatre க்கு கொண்டு போகத் தொடங்கிச்சினம். ஒப்பிரேசன் தியட்டருக்க போய்ப் பாத்தா ஒரு trolley இல ரெண்டு மூண்டு பேராக் கிடத்தி இருச்சினம். Theatre வாசலிலியே ஒப்பிரேசனுக்கு எடுக்க முதலே ஒவ்வொரு உயிராப் பிரியத் தொடங்கிச்சுது. வீம்பா அறிக்கை விட்டு நான் டொக்டரா வாறது தான் நோக்கம் எண்டு பாலர் வகுப்பிலயே சொல்லிப் படிச்சு வந்த வெள்ளைக் கோட்டுக் கார senior அக்கா மார் இறந்ததுக்கெல்லாம் உயிர் கொடுக்க முயற்சிச்சு சரிவராதெண்டு அறிஞ்சு விக்கி விக்கி அழுது கொண்டு நிண்டிச்சினம். கடைசியா OPD யில வந்திறங்கின tractor ஆல இறங்கக்கூடிய ஆக்கள் இறங்கி வர, இறங்க ஏலாததுகளை தூக்குவம் எண்டு போய் கையைப்பிடிச்சுத் தூக்கினவனுக்கு கைமட்டும் , காலைப் பிடிச்சவனுக்கு கால் மட்டும் கிடைச்சுது . முழுசா ஒண்டு கூட இருக்கேல்லை . எல்லாத் துண்டையும் இறக்கீட்டு அண்டிரவு முழுக்க கையெது காலெது எண்டு பாத்த jig saw puzzle மாதிரி பொருத்தீட்டு அடையாளம் கண்டு பிடிச்சாக்களை அப்பிடியே கட்டிக் குடுத்து விட்டிச்சினம் death certificate கூட இல்லாமல். அடுத்தநாள் விடியாத பொழுதில் செத்தவை ஆரார் எண்டு பேப்பர்காரான் தான் கண்டுபிடிச்சுப் போட்டிருந்தான். பொறுக்காத பொருந்தாத துண்டுகளின் கணக்கு எத்தினை எண்டு இப்பவரை தெரியாது. இந்த சோகத்தை ஊர் அழுது முடியமுதல் அடுத்தடுத்த ஊரிலேம் இடம் பெயர்வு வர எட்டுச் செலவு எட்டாமலும் , அந்திரட்டி அந்தரிச்சும் போனது . இடம்பெயர்வு 30/101995 “ பல்கலைக் கழகம் அகதி முகாமானது” எண்ட தலைப்போட ஒரு நாள் உதயன் வர அதோட சனம் ஒதுங்கின இடம் எல்லாம் அகதி முகாமாக மாற, அண்டின சனத்துக்கு அண்டைக்கு சமைச்சதை பிரிச்சுக் குடுத்துச் சாப்பிட்டிட்டு அடுத்த வேளை கூட சமைக்கலாமா இல்லையா எண்டு சனம் யோசிச்சுக் கொண்டு இருந்திச்சுது. ஸ்பீக்கர் வைச்சு ரோடு ரோடாப் போய் வெளிக்கிடச் சொன்னதை கேக்காம ரெண்டு நாள் பொறுத்துப் பாப்பம் எண்ட சனம் , துவக்குச்சூட்டுக்கும் அசையாத சனம், குண்டு விழுந்தாலும் வரமாட்டேன் எண்ட சனம் எல்லாம் கடைசீல வீம்பைக் கைவிட, உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு இனமே மரதன் ஓடியது. உயிரற்றதை எல்லாம் அப்பிடியே விட்டிட்டு, மனமில்லாமல் அடை வைச்ச முட்டையைக் கூட அரை உயிரோட கொண்டு போச்சுது. படிப்புமில்லை இனி ஓடிப் பயனுமில்லை எண்ட சிலர் மட்டும் திருப்பி அடிப்பம் எண்டு அண்ணை வழி போக வழமை போல மற்றவர் எல்லாம் மந்தைகளாய் பிரிந்தனர். நான் தான் முன்னுக்கு ஓடிறன் எண்டு வந்தவனெல்லாம் நிண்ட இடத்திலேயே ஓடிக் கொண்டிருந்தான் . யாழ்ப்பாணத்தில இருந்த நாவக்குளிப் பாலத்துக்கால சனம் எல்லாம் தென்மராட்சிக்கு, பிரசவிச்சு வெளீல வரக் கஸ்டப்படிற பிள்ளை மாதிரி முக்கி ,மூச்சு முட்டி, இஞ்சி இஞ்சியாய் அசைஞ்சு கொஞ்சம் கொஞ்சமாய் வந்துது. “அறுந்து போவாங்கள் இப்பிடி செய்யிறதுக்கு ஒரேடியா குண்டைப் போட்டு எல்லாரையும் சாக்காட்டி விடலாம்” எண்டு ஒரு கிழவி சொன்னது ஆருக்கு கேட்டிச்சோ தெரியேல்லை அவனடிச்ச செல் நீர்வேலி தரவை வரைக்கும் வந்து விழ குடும்பமா, குறூப் குறூப்பா ஓடத் தொடங்கினவை எல்லாம் , கூட்டத்தில தாங்கள் எங்க நிக்கிறம் எண்டும் தெரியாம தங்களைச் சுத்தி ஆர் நிக்கினம் எண்டும் தெரியாம தேடிறதையும் கை விட்டிட்டு தனித்துப் போக , வாழக்கைச் சங்கிலிகள் கனக்க அறுந்து போய் தனி வளையங்களாகியது. விடை பெறாமலே பிரிஞ்ச கம்பஸ் பிரியாவிடையும் , சொல்ல முடியாமலே போன இடம் பெயர்வுகளும் கன பேரை பிறகு சேர்க்கவே முடியாத பிரிவிடையாப் போனது தான் சோகம். ஒண்டு மட்டும் உண்மை இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை, இனிமேலும்…… Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  6. கடந்த வார இறுதியில் நானும் இப் படத்தைப் பார்த்தேன். நன்றாக இருந்தது. நேர் கொண்ட பார்வை படத்தின் சாயல் இடையிடையே தெரிந்தாலும், படத்தில் பாதிக்கப்பட்டவர் விழிப்புலன் இல்லாதவர் என்பது வித்தியாசமாக இருந்தது. ஒரு பெரிய கதாநாயகன் வழக்கை ஏற்று வாதாட முன்வரும் போது அதன் முடிவில் அவர் வெல்வார் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும். ஆனால், எப்படி அதனை வெல்கிறார் என்பதில் தான் அப் படத்தின் / அக் கதையின் வெற்றி தங்கியுள்ளது. இப் படத்தில் வழக்கை கொண்டு செல்லும் விதம் நல்ல விறுவிறுப்பாக இருக்கின்றது. மோகன்லாலின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு வழக்கம் போல சிறப்பானதாக உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் சின் பின் (Post climax scene), அப் பெண் தன் முகத்தை மறைத்து கொள்ளும் துணியை விலக்கி விட்டு நடந்து வரும் அந்த காட்சி, அருமை! பாலியல் வல்லுறவுக்கு எதிராக, அதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக உலகம் முழுதும் ஒலிக்கும் குரல்களில் ஒன்றாக இந்த கேரளத்து குரலும் கேட்கின்றது,
  7. நாகரீகமான சமூகம் ஒன்றில் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இவ்வாறு குரூரமாகவும் அருவருப்பாகவும் கருத்து பகிர்கின்ற ஒருவர் மீது நடவடிக்கைகள் எடுக்காது விடின், அது சமூகத்துக்கே இழுக்கு.
  8. எனக்கும் கண்ணில காட்டக் கூடாத சாமான் இது (இதை தப்பித்தவறி குடித்தால் அன்று முழுதும் டமால் டுமால் என்று ஒரே வாயுத் தொல்லைதான்...)
  9. நேற்று முழுதும் இதனை எப்படி இளையராஜா தாங்கப் போகின்றார் எனும் ஏக்கமே மனசில் நிறைந்து இருந்தது. தன் இசையால் பல இலட்சக்கணக்கானவர்களின் மனசை, வாழ்வை ரம்மியமாக்கிய இளையராஜாவின் இசையின் ஆன்மா இதனால் எந்தளவுக்கு காயப்பட்டு இருக்கும் என நினைக்கவே கவலையாக இருக்கின்றது. இந்த வயதில் அவரால் தாங்கக் கூடிய இழப்பாகவா இது இருக்கப் போகின்றது.. யோசித்துப் பார்த்தால், எங்கள் வாழ்வை, அதன் அர்த்தத்தை அப்படியே மாற்றக் கூடிய நிகழ்வு ஒன்று எத்தனை வயதிலும் எமக்கு நேரலாம் எனும் உண்மை தான் நெஞ்சில் அறைகின்றது. சுவர்ணலதாவுக்கு அடுத்ததாக வாழ்வை அதன் முழுமையை அண்மிக்க முதலே பவதாரிணியும் காலமாகி விட்டார். இரண்டு இசைக் குயில்களின் வாழ்வையும் காலம் அவகாசம் கொடுக்காமல் தின்று தீர்த்து விட்டது. கண்ணீர் அஞ்சலி.
  10. விபத்தால் சிதைந்து இருக்கும் உடலையும் வீடியோவில் காட்டி எழுதுகிறார்கள் (பிரேத அறையில் வளர்த்திய உடலை) ஒருவர் இறந்த பின் அவர் சமூகத்தை சார்ந்தவர்களே இவ்வாறு தூற்றுவதற்குரிய கேவலமான ஒருவராக அவர் இருந்திருக்கின்றார். அண்மையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி தொடர்பாகவும் இப்ப எழுதி இருந்தார்கள்.
  11. திட்டமிட்டு கொலை செய்யும் கொடூர கொலையாளிகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும், குழந்தைகள் மீது பாலியல் வல்லுறவு செய்யும் மிருகங்களுக்கும், ஒரு தலைமுறையையே சீரழிக்கும் போதை வியாபாரிகளுக்கும் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கப்படல் வேண்டும். இதில் எந்த கருணையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
  12. தன்னுடைய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டதற்காக ரஷ்யா உக்ரைனை கண்டிக்குதாம். தான் 2014 இல் Amsterdam மில் இருந்து கோலாலம்பூர் இற்கு போன பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 அப்பாவிப் பயணிகளை கொன்றதை மறந்து விட்டது போலும்.
  13. ஈரானின் பற்கள் ஒவ்வொன்றாக புடுங்கப்படுவை காண மகிழ்ச்சி. இது மேலும் தொடர வேண்டும்.
  14. Alcohol லை முற்றாக கை விடுவதை விட ஆயுளில் சில வருடங்களை விடலாம் 😁 எனக்கு இன்னும் sugar அளவு குருதியில் கூடவில்லை. நீரிழிவும் இல்லை. ஆகவே 1 லீட்டருக்கு 3 g சீனி இப்போதைக்கு ஓகே என நம்புகிறேன். ஒரே நாளில் ஒரே அடியாக குடிப்பதில்லை. காலையில் ஒரு தேக்கரண்டி சீனி போட்டு பால்தேத்தண்ணி குடிக்காவிடின் அந்த நாள் ஆரம்பமாகவே மாட்டுது எனக்கு. நாளொன்றுக்கு ஒரே ஒரு (பால்)தேத்தண்ணி தான்.
  15. உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் அனுவப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அண்ணா. நான் அறிந்தவரையில் விஞ்ஞான ரீதியில் வைட் வைன்னால் (White Wine)மாரடைப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் இல்லை. காரணம், அதில் கொழுப்பு இல்லை (நல்ல கொழுப்பும் இல்லை, கெட்ட கொழுப்பும் இல்லை), உப்பு இல்லை, மற்றும் துரித உணவில் கலக்கப்படும் விடயங்களும் இல்லை.
  16. இதை வாசிக்க வாசிக்க ஆனந்தமாக இருக்கின்றது. யான் படும் துன்பம் மற்றவர்களும் படும் போது எழும் ஆறுதல் இருக்கே... சொல்லி மாளாது! இதே வசனங்களுடன் "உங்கள் படத்தை வேறு போட்டு எழுதுகிறியள்... முகனூலிலும் அரசியல் எழுதி அவனே அடிக்கடி உங்களை தடை செய்கிறான்" என்ற வசனங்களும் சேரும்.
  17. ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட்டேன். மிகவும் சுவாரசியமான எழுத்து நடை. ஒரு குட்டி குறுந்திரைப்படமே எடுக்கலாம். கடைசிப் படத்தில் துப்பாக்கியை உறையில் தொங்கப் போட்டபடி கையில் சிகரெட்டுடன் சிந்தனையில் இருப்பவர் யார்? டாடோ வும் முகமதுவும் இப்படி ஒய்யாரமாக இருக்க கூடிய சூழ் நிலையில் இல்லையே...?
  18. விளக்கத்துக்கு மிக்க நன்றி ஜஸ்ரின். Sweet wine இனை நான் இதுவரைக்கும் ஒரு முறை கூட குடித்தது இல்லை. எம்மில் சிலர் Cognac brandy யில் சீனி இல்லை என்று நம்பி அதிகம் குடிப்பினம்.
  19. அண்மையில் பார்த்த நல்ல படங்களில் ஒன்று. கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் முடிவில் நல்லதொரு சினிமாவாக பரிணமித்து முடியும். தமிழ் super stars எல்லாம் வன்முறையையும், கடும் ஹீரோயிசத்தையும் கையில் எடுத்து சமூகத்தை மேலும் சீரழிக்கும் போது மலையாள மூத்த super star ஒரு homosexual ஆணாக ஆக நடித்தது மட்டுமன்றி அப் படத்தை தானே தயாரித்தும் உள்ளார். என் மாமா ஒருவரும் இப்படித்தான். அவருக்கு 3 பிள்ளைகளும் உள்ளனர். அவருக்கும் மாமிக்கும் இடையில் ஒரு போதுமே ஒத்துப் போகாமல் சண்டை நிகழ்ந்து கொண்டே இருக்கும். சிறுவர்களாக நாம் இருந்த போது அதன் காரணம் புரியவில்லை. தன் மூன்று பிள்ளைகளும் படித்து முடித்த பின் அவர் தனக்கான ஒரு ஆண் துணையுடன் தன் இறுதிக் காலத்தை கழித்தார். இது தொடர்பாக அவரது சகோதரி, அதாவது என் அம்மாவிடம் கேட்டபோது... "ஓம் அவன் அப்படித்தான் என்று எங்களுக்கு அப்பவே தெரியும்.... ஆனால் அவனை அவன் போக்கில் விட்டு இருந்தால் எங்கள் குடும்ப மானம் என்னாவது" என்று கேட்டார் என்னிடம்.
  20. சிங்கபூர் ஒரு இனவாத நாடு. இவர் ஒரு தமிழர் என்பதால் தான் இந்த நடவடிக்கை என்று இன்னும் ஒருவரும் வந்து எழுதவில்லை என்பது ஆச்சரித்தை ஏற்படுத்துகின்றது.
  21. காலநிலை நல்லா இல்லாட்டிக் கூட, வீட்டுக்குள் நன்கு நடக்கலாம். அதைத் தான் நான் செய்கின்றேன் இந்த குளிர் காலத்தில் Basement இல் அல்லாவிடின் Hall லுக்குள் நடக்கின்றேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7 கிலோ மீற்றர். @Justin Hard liquor இனை கைவிட்டு இப்ப white wine இனை அருந்துகின்றேன். White wine இல் சீனி அதிகமா? (எனக்கு ரெட் வைன் ஒத்துக் கொள்வதில்லை... 'பின்விளைவுகள்' கடுமையாக இருக்கும்)
  22. தவறான தகவல் கந்தையா அண்ணா. ரணில் மட்டுமல்ல இலங்கையின் எந்த அதிபரும் வெளி நாடு சென்ற வேளை பதவி இறக்கப்பட்டவில்லை. அதே நேரத்தில் JVP யின் அழுத்தத்தால் ரணில் இடை நடுவில் பதவி இறக்கப்பட்டார் https://www.aljazeera.com/news/2004/2/7/sri-lankas-parliament-is-dissolved

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.