Everything posted by நிழலி
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
மெரினா கடற்கரையிலும் தமிழகத்தை ஆட்சி செய்த சிலர் அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் சமாதியில் ஈ காக்காவுக்கு கூட உணவு போட யாரும் இல்லை. ஆனால் ஏழைகளின் மனசை கவர்ந்த கப்டனின் சமாதியில் பல்லாயிரக்கணக்கானோர் பசியாறுகின்றனர். மீம்ஸ்களில் அதிகம் நையாண்டி செய்யப்பட்டவர்களில் ஒருவர் விஜயகாந்த். ஆனால் அவர் தான் பலரின் பசியை ஆற்றி இருக்கின்றார். அதை அவர் வாழ்ந்த காலத்தில் கொண்டாட எவரும் இருக்கவில்லை..
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
இந்த நிறுவனம் நேற்று கால தாமதம் ஏற்பட விடாமல். காசையும் குறைத்து வாங்கி இருந்தால், வாயையும் *** ம் மூடிக் கொண்டு உல்லாசப் பயணிகளில் இருந்து சிங்களவர்களை வரை பேசாமல் போய் இருப்பார்கள் என்பதுடன் ஏன் இந்தியா (அல்லது இன்னொரு நாடு) என்ற கேள்வி கூட எவருக்கும், முக்கியமாக சிங்களவருக்கு ஏற்பட்டே இருக்காது. முழு நாட்டையும் தமிழர் அல்லாத எந்த வெளி நாட்டவர்களுக்கு விற்றாலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கவலை இல்லை. ஆனால், அது இலவசமாகவோ அல்லது கட்டணம் குறைவானதாகவோ இருக்க வேண்டும். சவூதிக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ, அவ்வளவு ஏன், ஆப்கனின் தாலிபான்களுக்கோ கொடுப்பதாக இருந்தால், இதே வாய் மாறி கதைத்து இருக்கும். இவர்கள் தான் கனடா விசா விண்ணப்பங்களையும் ஏற்பது, மீள கடவுச் சீட்டை ஒப்படைப்பது, கூரியரில் அனுப்பி வைப்பது ஆகிய வேலைகளை கொழும்பில் செய்கின்றனர் (வீசா தகுதி யை கனடிய தூதரகம் மேற்கொள்ளும்) இங்கும் கனடாவில் ஒன்ராரியோவில் இந்திய பாஸ்போர் விண்ணப்பங்களை ஏற்பதும், விண்ணப்பதாரிகளுக்கு ஒப்படைப்பது தொடர்பான வேலைகளை செய்வதும் இவர்கள் தான் (VFS global)
-
கணவன் படுகொலை: மனைவி தவறான முடிவு
கடைசியில் மூன்று பிள்ளைகளும் தாய் தந்தை அற்றவர்களானது தான் இதில் வேதனையான விடயம். இப்படியான கொலை / தற்கொலைக்குள்ளானவர்களின் பிள்ளைகளை எம் சமூகம் எப்படி நோக்கும் என்பது தெரிந்த விடயம். நல்ல ஒரு ஆர்வமுள்ள அமைப்போ சொந்தங்களோ பொறுப்பேற்றால் பிள்ளைகளின் வாழ்க்கை செழிக்கும்.
-
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.
சென்னை: திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தீபன் சக்ரவர்த்தி உடன் இணைந்து அந்தப் பாடலை அவர் பாடி இருந்தார். கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தோடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் இவர் பின்னணி பாடலுக்கு பாடியுள்ளார். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1239836-film-playback-singer-uma-ramanan-no-more.html
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
அதாவது நீங்கள் பார்க்க வேண்டிய நெருக்கமான அனைத்து உறவுகளும்,நண்பர்களும் வெளி நாட்டுக்கு வந்து விட்டார்கள் போல...? ஆனால் எம் / என் நிலை அப்படி இல்லையே. என் சகோதரி தொட்டு, எல்லா நெருக்கமான உறவுகளும் பல நல்ல நண்பர்களும் அங்குதான் உள்ளனர். எனவே அங்கு போவது தவிர்க்க முடியாதது.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
நான் எழுதியது தவறு போலத்தான் தெரிகின்றது. ஆனாலும் தேடிப்பார்த்ததில் எங்கும் தெளிவாக இல்லை. Presidential Candidate Should Be A Parent To Be Eligible - A Response - Colombo Telegraph
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
1. வெறுமனே தமிழர்களின் வாக்குகளை வைத்து இலங்கையில் சனாபதியாக வர முடியாது. 50 வீத வாக்குகள் பெற வேண்டும். 2. இலங்கை அரசியலமைப்பின் படி சிங்கள பெளத்த சமூகத்தை / இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் சனாதிபதியாக முடியும். எனவே தமிழர் ஒருவர் சனாதியாவது நடைமுறை சாத்தியமற்றது.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
நடைமுறையில் தமிழர் ஒருவர் சனாதிபதியாக சந்தர்ப்பம் தற்சமயம் அறவே இல்லை எனும் நிலையில் இவ்வாறான கோட்பாட்டை முன்வைத்தால், அது நகைப்புக்கிடமாகவே போகும். வடக்கு வேட்பாளருக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் விடுவதோ, அல்லது கிழக்கு வேட்பாளருக்கு வடக்கு மக்கள் வாக்களிக்காமல் விடுவதோ வெறுமனே பிரதேசவாதம் என்ற வகைக்குள் வராது (நீங்களும் கூட, வடக்கு கிழக்கு என்று மட்டுமே குறுக்கிக் கொண்டு மலையக தமிழர்களை குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்.). இரு தரப்பிலும் ஆதரவை பெருவாரியாகப் பெற்றுக் கொண்ட ஒருவர் இன்று யாரும் இல்லை, வேட்பாளராக நிறுத்துவதற்கு. அதே போன்று, தமிழ் கட்சி ஒன்று கூட இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் ஜேவிபி உட்பட தேசிய கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் அப்படியான ஒருவர் எவரும் இல்லை. அத்துடன் முஸ்லிம் மக்கள் ஒரு போதும் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கப் போவதும் இல்லை. இரு இனங்களுக்கும் இடையில் இருக்கும் பிளவை மேலும் வெளிக்காட்டிக் கொள்வதில் பலனடையப் போவது தமிழ் பேசும் இனங்கள் அல்ல. தமிழ் கட்சிகளின் அரசியல் எப்போதும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை செய்வதில் தான் தேங்கி நிற்கின்றது. அப்படியான ஒன்றுதான் இந்த தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதும்.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது, தமிழர்களுக்கிடையே பிளவுகள் உள்ளன என்பதை வெளிக்காட்டும் ஒரு முறையாக ஏனையோரால் பார்க்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என நம்புகின்றேன். உதாரணத்துக்கு வடக்கில் இருந்து ஒருவரை நிறுத்தினால், அவருக்கு கிழக்கு மக்கள் குறைவாக வாக்களித்தாலோ, அல்லது கிழக்கில் இருந்து ஒருவரை நிறுத்தினால், அவருக்கு வடக்கு மக்கள் குறைவாக வாக்களித்தாலோ, அதனை சிங்களம் தனக்கு சாதகமாகவே எடுத்துக் கொள்ளும். வடக்கு கிழக்கில் இருந்து ஒருவரை நிறுத்தி, அவரை மலையக தமிழ் மக்கள் நிராகரித்தாலும் இதே நிலை தான் (அதற்கான சாத்தியங்கள் மிக அதிகம்) அத்துடன், அவ்வாறு நிறுத்தப்படும் ஒருவரை விட, சிங்கள கட்சியில் இருந்து நிறுத்தப்படும் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் நிலமை மேலும் தலைகீழாக மாறி சிங்களத்துக்கு பெரும் வாய்ப்பைக் கொடுத்ததாகி விடும். என் கணிப்பு படி, தமிழ் மக்கள் அவ்வாறு தான் நடந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். சஜித்துக்கோ அல்லது ரணிலுக்கோ தான் அதிகமாக வாக்களிப்பார்கள் என நினைக்கின்றேன்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நுணா, இந்த இரண்டு பதில்களிற்கிடையிலும் முரண்பாடு உள்ளது. இதே போன்று, பங்கு கொண்ட சிலரது பதில்களுக்கிடையிலும் முரண்பாடுகள் இருக்கின்றன.
-
“ யாரொடு நோகேன்...." - T. கோபிசங்கர்
“ யாரொடு நோகேன்…….. 2015 சனி இரவு 10:30 இருக்கும் சூப்பர் சிங்கர் பாத்துக்கொண்டு இருந்தன் . விளையாடிக் கொண்டிருந்த phoneஐக் கொண்டந்து “அப்பா உங்களுக்கு call “எண்டு தந்தாள் மகள். சேர் “இருபத்தி ஐஞ்சு வயசு , கிளிநொச்சீல இருந்து அனுப்பினவை “எண்டு சொல்லத்தொடங்க , சரி நான் வாறன் எண்டு phone ஐ வைச்சிட்டு சாரம் கழற்றி உடுப்பு மாத்தி வெளிக்கிட்டன். அங்க போய் உடனயே operation தொடங்க வேணும் எண்டு யோச்சபடி. இண்டையான் on call surgeon னிடசொல்லி அவையின்டை operationஐ நிப்பாட்டி எங்கடை case ஐச் செய்யக் கேக்கோணும், ஆர் anaesthetist எண்டு கேக்க வேணும் ICU bed தேவைப்படும் ,bed இல்லாட்டித்தான் பிரச்சினை எண்டு பல யோசனைகளோடு நான் வெளிக்கிட்டன். Theatre க்கு நான் போக எல்லாம் ரெடியாகி அடிபட்டவனை உள்ள எடுத்து மயக்கம் குடுக்கத் தொடங்கீட்டினம் . வெளீல நிண்ட attendant ரெஜிபோம் பெட்டியோட இரத்தம் எடுக்க ஓடிப்போக நானும் உடுப்பு மாத்தி உள்ள போனன் . X-ray எடுக்க கேட்டனான் தான் duty இல்லை ஆனாலும் வாறன் எண்ட தயாபரன் உடுப்பு மாத்தி உள்ள நிண்டான். nurse மதி எல்லாத்தையும் ஒழுங்கு படித்தீட்டு assist பண்ண ready யா நிண்டான். இரண்டு மணித்தியாலத்திக்கு பிறகு வெளீல வந்து யாரும் சொந்த காரர் இருக்கினமோ எண்டு பாக்க ஒருத்தரும் இல்லை. எல்லாம் முடிஞ்சுது எண்டு நானும் வீட்டை வெளிக்கிட்டன். அடுத்த நாள் காலமை போக , கைக்குழந்தையோட இன்னொரு பெரிய குழந்தை ICU வாசலில நிண்டது. “Sir இவை தான் இரவு வந்த …” எண்டு Nurse சொல்ல , கையில இருக்கிற அழுற சின்னனை, எப்படி ஒராட்டோணும் எண்டும் தெரியாமல் குறுக்கும் மறுக்குமா ஆட்டி ஆட்டி , “அவருக்கு எப்பிடி “, எண்டு கேக்கத்தான் உறவு முறைகள் விளங்கிச்சு. முள்ளிவாய்க்கால் நேரம் கட்டினாக்களை பிடிக்கமாட்டாங்களாம் எண்டு அவசரமாக நடந்த தாலி போடும் விழாவுடன் ஓடத் தொடங்கி ,பெயர்ச்சிகளால் இடம் மாறி ,இலகு நிவாரணங்களுக்காக இப்ப தஞ்சம் புகுந்தது திருவையாறு எண்ட கதையை கேட்டிட்டு, அவருக்கு நடந்ததை எப்படி சொல்லுறது எதை சொல்லாமல் விடுறது , சொன்னால் விளங்குமா எண்டு நானும் குளம்பி, வழமையான டாகுத்தர்மாரின்டை பாசையில, “அம்மா முள்ளந்தண்டு பாதிச்சிட்டுது operation செய்தனாங்கள் , முன்ணாண் , நரம்புகள் எல்லாம் பாதிச்சிட்டுது , எழும்பி நடக்கிறது கஸ்டம் , எண்டு கொஞ்சம் விளங்காத மாதிர சொன்னன். எல்லாம் விளங்கின மாதிரிக் கேட்டுட்டுப் பாவம், “ ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே எண்டு மீண்டும் அப்பாவியாய் கேக்க” , நான் இதுக்கு என்னத்தை சொல்லிறதெண்டு யோசிக்க ,security வந்து “அம்மா நேரமாகீட்டுது இப்ப போட்டு பிறகு வாங்கோ”எண்டு என்னை காப்பாத்தி விட்டான் . ரெண்டு நாளால Ward க்கு மாத்தின அவனுக்கு பாக்க ஆக்கள் இல்லாத படியால ஆம்பிளை வாட் எண்டாலும் பரவாயில்லை எண்டு கொஞ்ச நேரம் பகல்ல மனிசியியையும் பிள்ளையோட அவனுக்குப் பக்கத்தில நிக்கவிட்டம். முதல் மூண்டு நாளும் ஒவ்வொரு நாளும் வந்த மனிசி பிறகு விட்டு விட்டுத் தான் வந்திச்சுது . ஒரு கிழமை கழிய திருப்பியும் நான் அவனின் நிலமையை விளங்கப்படுத்தினன். இப்ப நிலமை விளங்க அவரால இனி நடக்க முடியாததை உணர்ந்து “அது நடக்காப்பிணம் நான் நடைபிணம்” எண்டதை அறிந்து நடந்தாள் அவள். இளம் பெடியன் இப்படி நடந்திட்டு ,பாவம் எண்டு physiotherapist எல்லாம் கடுமையா உழைக்க , எல்லாருக்கும் குடுக்கும் அதே காருண்யத்தை ward nurses இவனுக்கு கொஞ்சம் கூடக் குடுக்க, அவனுக்குள் ஒரு ஒளிவட்டம் தெரியத்தொடங்கிச்சு. அவள் வந்து போறது இன்னும் கொஞ்சம் குறைய , “ என்ன மூண்டு நாளா அவவைக்காணேல்லை”எண்டு வாட்டில கேக்கத்தான் வீட்டு நிலமை விளங்கியது . வீட்டில ஒரு சொந்தங்களும் இல்லை எண்டும், இருக்க இடம் குடுத்தது தூரத்து சொந்தமாம் எண்டும். 2009 க்கு பிறகு ஊரப்பக்கம் முளைத்த கம்பனிகள் ஒண்டில Lease க்கு எடுத்த Auto , ஓடித்திரியேக்க சாப்பிட மட்டும் காணுமான காசு கிடைக்க முதல் முதலா வாழக்கையில் பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்படத்தொடங்கினது எண்டு சொன்னான் . எப்பவாவது ஒரு முன்னேற்றம் வரும் எண்ட நம்பிக்கையில் மட்டுமே வாழுற வாழ்க்கையில் மீள்குடியமர்வு, நிவாரணம் , சமுர்த்தி, வீட்டுத்திட்டங்கள் எண்ட நம்பிக்கைகள் ஏனோ அந்நிய நாடுகளின் அனுசரணை போல இருந்தும் இல்லாமல் இருந்தது. ஒரு மாசமா இருந்தவனைப் பாக்க மனிசி வாறதும் குறையத் தொடங்கிச்சுது. கடைசியா வரேக்க கொஞ்சச் சாமாங்களும் Nestomalt ரின் ஒண்டும் கொண்டு மனிசி வந்தது, அதுக்குப் பிறகு காணேல்லை. சரி எண்டு எல்லாம் முடிய அவனை ambulance மூலம் கிளிநொச்சிக்கு திருப்பி அனுப்பி வைச்சம் . ஒரு நாள் நான் கிளினிக் முடிச்சு வெளீல வரேக்க பிள்ளையோட அவன்டை மனசி நிண்டுது. ஏனெண்டு கேக்க , இல்லை உங்களை பாக்கத்தான் எண்டு ஒரு form ஒட வந்தவளை கூட்டிக்கொண்டு போய் முள்ளந்தண்டு வடம் பாதிப்பு எண்டு உறுதி செய்து குடுத்து விட ஒரு ஓட்டோவில் ஏறிப் போறதைப் பாக்க வந்த கவலையை call ஒண்டு போக்கியது. மூண்டு மாதத்தால வழமை போல கிளினிக்குக்கு ஆஸ்பத்திரிக்கு அந்தப்பெடியன் நடந்து walking stick ஓட நடந்து வந்தான் , எனக்கே என்னை பெருமைப்பட வைச்ச சந்தர்ப்பம் அவன் walking stick ஓட நடந்தது. “சேர் வாகனத்தை பொலிசில இருந்து எடுக்க license கேக்கிறாங்கள் , license தரமாட்டாங்களாம் எண்டு சொல்லுறாங்கள் , தாற எண்டா உங்கடை கடிதம் வேணுமாம்” எண்டபடி உள்ள வந்தான். Recommended for modified three wheelers எண்டு குடுத்துப்போட்டூ , அவன்டை மனிசியேயும் பிள்ளையேயும் தேடினா காணேல்லை. அடக்கமுடியாத தமிழனின் விடுப்பு குணத்துடன் , “ எங்க மனிசி பிள்ளையைக் காணேல்லை” எண்டு கேக்க ஒரு சங்கடத்துடன் அவன் பதட்டப்பட , அப்படியே அடுத்த patient உள்ள வர , உள் மனதால் அவனையும் வெளிக்கண்ணால் வந்த நோயாளிகளையும் பார்க்கத் தொடங்கினன். கிளினிக் முடிஞ்சு வெளீல வர அவன் car அடீல நிண்டான். எனக்காகத் தான் எண்டு அறிஞ்சு என்னைத் தனிமைப்படுத்தினேன். இல்லைசேர் இப்ப அவ எண்டவன் தன்டை நிலைமையைச் சொன்னான். அண்டைக்கு இரவு டிப்பரோட அடிபட்டு சாக இருந்தவன் , இப்ப உயிர் தப்பினாலும் நானும் படுத்த படுக்கை , செலவளிக்க சொத்துமில்லை, சேர்த்து வைச்ச சொந்தங்கள் உறங்கு நிலை விதைகளாய் முள்ளிவாய்க்காலில போட்டுது. கட்டினதால விழுதாய் வந்த முளை கையில, பஸ்ஸுக்கு நிக்கேக்க பாவப்பட்ட ஒரு ஓட்டோக்காரன் உதவிக்கரம் நீட்ட அவள் பற்றிக்கொண்டால் நீரில் மூழ்கும் போது கிடைத்த துரும்பு மாதிரி எண்டதை அறிஞ்சன். ஓடம் கவிண்டு நீரில் மூழ்க , உள்நீச்சலோ எதிர் நீச்சலோ தெரியாமல் தண்ணியில் நிக்க கூட திராணியற்று தத்தளித்து, கைச்சுமையுடன் நிண்டவளுக்கு அந்தக்கை ஓரு அபயக்கையாக அதை இறுக்கவே பற்றிக்கொண்டாள் எண்டதையும் சொன்னான். ஓட்டோவில் வந்து கடைசி நாட்களில் ஆஸபத்திரியில் அவனையும் பாத்து தேவையானதை எல்லாம் எனக்கு வாங்கி குடுக்கக காசும், கையில இருந்த பிள்ளைக்கும் பாலும் சாப்பாடும் கிடைக்க , எல்லோர் பசியும் தீரத்தொடங்கினது எண்டது பிறகு தான் வடிவாய் விளங்கிச்சிது. அதுவே சில மாசத்தில நிரந்தரமானது எண்டதை குற்றமாச் சொல்லாமல் யதார்த்தம் அறிந்து சொன்னான். “போன கிழமையும் கண்டனான் அவனோட ஓட்டோவில போனவள் பிள்ளையையும் கொண்டு, பிள்ளையும் சிரிச்சுக்கொண்டு இருந்தது . இரண்டு பேரும் ஆளை ஆள் கண்டனாங்கள் , கண்டிட்டு ….”அவன் சொல்லி முடிக்கேல்லை. “இப்ப நான்கொஞ்சம் பிடிச்சுப் பிடிச்சு நடப்பன், கக்கூசுக்கு தான் குந்தி எழும்ப முடியாது , கதிரையில ஓட்டையை போட்டு சமாளிக்கிறன். சேர் அந்த மூத்திரக்குழாய் மாத்திறது தான் பிரச்சசினை , இதை அப்பிடியே எடுத்தால் என்ன” எண்டு கேட்டவனின் விரக்தியை உணர்ந்து , அதைப்போக்க , தம்பி நடக்கத்தொடங்கின படியால் இதுகும் கொஞ்சம் முன்னேற்றம் வரும் எண்டு ஒரு தெய்வ நம்பிக்கையோடு சொன்னன். “சரி சேர் இப்ப திருப்பியும் ஆட்டோ ஓடுற படியால் காசு வருது , தனி ஆள் தானே செலவில்லை” எண்ட படி கைத் தடியை மெல்லவும் நம்பிக்கையை உறுதியாயும் ஊண்டி நடக்கத் தொடங்கினான். அம்புலிமாமாவில வாற வேதாளம் கதைக் கேள்வி எனக்கும் வந்திச்சுது ? “இதில் யார் செய்தது குற்றம்“ எண்டு. விடை தெரியாமல் நான் யோசிக்க , எங்கயோ தூர ஒரு கோயிலில போட்ட loud speaker , “ யாரொடு நோகேன் யார்க்கெடுத்துரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால் “ எண்டு பாடத் தொடங்கிச்சுது Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
உண்மை, ஆனால் அதே நேரம், தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றார் என்று சொல்கின்ற, போலிகா தலைவரின் மகள் தான் என்று சொல்கின்ற கூட்டத்துடன் அவரும் இருக்கின்றார் என்பது தான் வேதனையான விடயம். வயது முதிர்ச்சியால், ஆட்டுவித்தவர்களின் பொய்களை நம்பித் தான் அவ்வாறு சொன்னார் / சொல்கின்றார் என்று சிலர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
திராவிடத்தை கடுமையாக எதிர்க்கும் நா.க வில் இருந்து விலகிச் சென்ற சிலர், திமுக வில் இணைந்து, திராவிட சிந்தாந்தத்தை போற்றி வருவது போன்றது தான் மன்சூர் அலிகானும் ஈழத் தமிழர்களை நாசம் செய்த செய்த காங்கிரஸை நா.க வில் இருக்கும் வரைக்கும் எதிர்த்து விட்டு, இன்று அதே காங்கிரசில் சேர்ந்து அவர்களைப் போற்றுகின்றார்... அதுவும் சோனியாவின் மகள் பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றார். இந்திய, தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கையில் இன்றிருக்கும் தமிழ் கட்சிகளும் ஒரே குட்டைக்குள் ஊறிக் கிடக்கும் கட்சிகள். இவற்றில் இது நல்லது, அது நல்லது என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.
-
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
அரங்கம் செய்திகள் தளத்தில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் புலி எதிர்ப்புக் காச்சாலால் மீகவும் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் போலுள்ளது. புலிகளி பாசிச வாதிகளாக மீண்டும் மீண்டும் நிறுவ முற்படுகின்றவர்களின் கூடாரமாக இந்த தளம் உள்ளது போல. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளை கொன்றது மிகவும் தவறான விடயம் என்பதை மறுப்பதற்கில்லை (முப்படைகளின் தளபதியாக இருந்த சனாதிபதிகள் மீதான தாக்குதல் இந்த வகையில் வராது). அதே நேரம், இவ்வாறானவை இடம்பெற்றிராத, புலிகள் களத்தில் நீக்கப்பட்ட இந்த 15 வருடங்களில், தமக்கு (தமிழர்களுக்கு) அரசியல் ரீதியிலான, நியாயமான தீர்வு அவசியமே இல்லை எனும் அளவுக்கு தமிழர்களாலே மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மிழ் தேசிய பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த காச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுப்பதாக இருந்த அனைத்து தீர்வுகளும் தமிழர் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குபனவையாகவே இருந்தன. அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்தங்களும் சிங்கள அரசு தன்னை பலப்படுத்த எடுத்த கால அவகாசங்களே ஆகும். இதற்கு சமாந்தரமாக புலிகளும் தம்மை பலப்படுத்தவே இவற்றினை பயன்படுத்தி இருந்தனர். எனவே இருதரப்புமே நேர்மையாக இதில் நடந்து கொள்ளாத போது, வெறுமனே தலைவரையும், புலிகளையும் மட்டும் குற்றம் சாட்டி நிற்கின்றது இந்த கட்டுரை. உலகில் புலிகளையும் தலைவரையும் தவிர, சிங்கள அரசின் கபடத்தை முற்றாக புரிந்து வைத்திருந்த ஒரு அமைப்போ தலைமையோ உலகில் இல்லை. இந்திய பார்ப்பனிய அரசு ஒவ்வொரு முறையும் மூக்குடைபடும் இடமும் இதுதான். புலி நீக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல். ஒற்றை அரசை ஏற்று, போடும் பிச்சையை வரமாக நினைத்து வழிபடும் அரசியல். நீண்ட காலத்தில் தமிழர்கள் தம் அனைத்து அடையாளங்களையும் துறக்க வைக்கும் அரசியல். இதை வலியுறுத்தும் எந்த தரப்பும், எந்த கட்டுரையும் தமிழர்களின் நியாயமான இருப்பையும், அவர்களுக்கான தீர்வையும் நிராகரிக்கும் தரப்பை சார்ந்தவை. பி.கு: நான் சிகப்பு புள்ளியை குத்தியது, கிருபன் இதனை இங்கு இணைத்தமைக்கு அல்ல. மாறாக, கட்டுரை சொல்லும் அரசியலுக்கு எதிராக
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3 ஆம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4 ஆம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3 ஆம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் முதலாம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2 ஆம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 2 ஆம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3 ஆம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) முதலாம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 2 ஆம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) முதலாம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 3 ஆம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) முதலாம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3 ஆம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) முதலாம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 3 ஆம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) முதலாம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2 ஆம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) முதலாம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2 ஆம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) முதலாம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2 ஆம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 5% - 6% 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 5 இலட்சத்துக்கும் அதிகமாக 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 - ஒரு இடத்திலும் வெல்லாது 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? ஒரு இடத்திலும் வெல்லாது 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஒரு இடத்திலும் வெல்லாது 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஒரு இடத்திலும் வெல்லாது 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? இக் கட்சி தமிழகத்தில் போட்டியிடுகின்றதா? ஓம் எனில் ஒரு தொகுதியிலும் தமிழகத்தில் வெல்லாது 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 1 - ஒரு இடத்தில் 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 - ஒரு இடத்திலும் 2 ஆம் இடத்தினைப் பிடிக்காது 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 - ஒரு இடத்திலும் வெல்லாது 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 - ஒரு இடத்திலும் வெல்லாது 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டியிடும் அனைத்து 39 தொகுதிகளிலும் 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 தொகுதிகளிலும் 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 - ஒருவரும் இல்லை 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டியிடும் 10 தொகுதிகளிலும்வெற்றி பெறுவார்கள் 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 - ஒரு இடத்திலும் வெல்லாது 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 - ஒரு இடத்திலும் வெல்லாது
-
அப்பா உடனே வாங்கோ.
வாழ்த்துகள்!!!
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர் பிணையில் வந்து வெளியில் இருப்பதை விட, உள்ளேயே இருப்பது தான் அவருக்கு பாதுகாப்பாக அமையும். இப்படியான மாணவ வீசாவில் வந்து பெரும் குற்றம் இழைத்தவர்கள், தண்டனை காலம் முடிந்த பின், மீண்டும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என நினைக்கின்றே. அது வரைக்கும் இவரை எந்த வீசாவில் வைத்து இருப்பார்கள்? அல்லது நாடு கடத்துவார்களா?
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
துபாய்: வெள்ள நீரில் மிதந்த விமான நிலையம்
டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர். பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
யாழ்ப்பாணம் போய் வந்தவரை அப்படியே கொஞ்சம் யாழ் பக்கமும் வரச் சொல்லுங்கள். யாழ்ப்பாணத்தை விட யாழ் கொஞ்சம் கிட்ட என்று சொல்லவும்.
-
மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!
அண்மையில், தன் இறப்பு குறித்து, தான் இறக்கப் போவதாக அண்மையில் ஒரு YouTube காணொளியில் தெரிவித்து இருந்தார். தான் கனவு கண்டதாகவும், அந்தக் கனவில் தான் இறந்து போவதாகவும், அப்போது ஒரு பாடல் ஒலித்தது எனவும், அந்த பாடலை முடிந்தளவு ஞாபகப்படுத்தி பாடி இருந்தார். ஏழை எளிய மக்களுக்கு பல நல்ல உதவிகள் சேவைகள் செய்த ஒருவர் இவர். சிங்கள மக்கள் இவரையும் நிராகரித்து மகிந்த கட்சிக்கு வாக்களித்து இவரை தோற்கடித்து இருந்தனர்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும் இருந்தும், வேறு எதனை எதிர்பார்க்கப் போகின்றீர்கள்" என்றே. இதனால் என்ன பயன்? போர்க் குற்ற விசாரணை எல்லாம் நடக்குமா? எனக் கேட்டால், கண்டிப்பாக இல்லை. ஆனால், ஆகக் குறைந்தது ஒரு சிலருக்காவது, இலங்கை எனும் சொர்க்க புரியில், ஒரு இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்றதா என கேள்விகளாவது மனசில் எழும். நீங்கள் யாழ்ப்பாணம் போனால், வெளி நாட்டில் இருந்து வந்தவர் என்று அவர்கள் புரிந்து கொண்டால், முச்சக்கர சாரதியில் இருந்து தின்னவேலி சந்தையில் காய்கறி விற்பவர் வரைக்கும் நன்றாக ஏமாற்றுவார். கேள்வி கேட்டால், போருக்கு பயந்து ஓடிப் போனவர் தானே என்றும் சிலர் நக்கலடிப்பர்.
-
பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
அண்ணர் என்னைப் போன்று ஏகபத்தினி விரதன் என்பதால், கட்டாயம் கால்களைத் தான் நீண்ட நேரம் களைத்து போகாமல் இருக்க தயார் செய்து இருப்பார்.