Everything posted by தமிழ் சிறி
-
வாகன இறக்குமதி மூலம் ரூ.165 பில்லியன் வருவாய்!
வாகன இறக்குமதி மூலம் ரூ.165 பில்லியன் வருவாய்! அரசாங்கம் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இதுவரை வாகன இறக்குமதிகள் மூலம் மாத்திரம் சுமார் ரூ.165 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம், 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கை திணைக்களம் தாண்டிச் செல்லும் பாதையில் இருப்பதாகக் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருகோட கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை சுங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட வருவாய் இலக்கு ரூ. 2,115 பில்லியன் ஆகும். 2024 ஆம் ஆண்டில், எங்கள் இலக்கு ரூ. 1,533 பில்லியனாக இருந்தது. அதை நாங்கள் ரூ. 1,535 பில்லியனை ஈட்டுவதன் மூலம் தாண்டிவிட்டோம். இந்த ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதியில், நாங்கள் ஏற்கனவே ரூ. 900 பில்லியனை வருவாய் ஈட்டியுள்ளோம் என்றும் அவர் கூறினார். 2025 பெப்ரவரி 1 முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்தது. அதன் பின்னர், சுமார் 14,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது சுங்க வருவாயில் சுமார் ரூ. 165 பில்லியனை பங்களிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 450 பில்லியனை வருவாய் ஈட்டும் என்று திணைக்களம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். ஈரான்-இஸ்ரேல் மோதலின் தாக்கம் இலங்கைக்குள் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை கப்பல் போக்குவரத்து தாமதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார். https://athavannews.com/2025/1436397
-
வாகன விபத்துகளால் 2,000 பேர் உயிரிழப்பு!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளால் 2,000 பேர் உயிரிழப்பு! 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ” நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான வீதி விபத்துகள், தகுதியற்ற வாகனங்கள் மற்றும் ஒழுங்கற்ற சாரதிகளினாலேயே ஏற்படுவதாகத் தெரிவித்த அவர் ” 2025 ஜனவரி 1 முதல் ஜூன் 15 வரையான 6 மாதங்களில், உயிரிழப்புகளை ஏற்படுத்திய 1,133 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன எனவும், இதில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இது மிகவும் பேரழிவு தரும் சூழ்நிலையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை ” எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் வாகனங்களில் பொருத்தப்பட்ட தேவையற்ற உதிரி பாகங்கள் கட்டாயமாக அகற்றப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2025/1436370
-
85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்!
85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்! சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 85 சீனப் பிரஜைகள் இன்று (ஜூன் 20) காலை இலங்கையிலிருந்து சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நபர்கள் நாட்டில் வசிக்கும் போது உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் காவலில் வைக்கப்பட்டனர். உள்ளூர் நீதிமன்றங்களால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் வெலிசரவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதுடன், நாடு கடத்தலுக்காகவும் காத்திருந்தனர். இந்த நிலையில், ஐந்து பேருந்துகளில் கடும் பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழுவினர் இன்று காலை நாடு கடத்தப்பட்டனர். https://athavannews.com/2025/1436394
-
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்! கடந்த இரண்டு வாரங்களில் கட்டாரில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன. இது ஈரானிய தாக்குதல்களிலிருந்து சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெரிகிறது என்று செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது. ஜூன் 5 முதல் ஜூன் 19 வரை, பிளானட் லேப்ஸ் பிபிசியின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஒரு காலத்தில் நிரம்பியிருந்த அல் உதெய்ட் விமானத் தளத்தில் (அமெரிக்காவின் மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ நிறுவல்) பெரும்பாலும் விமானங்களால் காலியாக இருப்பதைக் காட்டுகிறது. ஜூன் 5 அன்று, C-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்கள் மற்றும் மேம்பட்ட உளவு விமானங்கள் உட்பட சுமார் 40 விமானங்கள் வெற்றுப் பார்வையில் நிறுத்தப்பட்டன. எனினும், ஜூன் 19 ஆம் திகதிக்குள் அவற்றில் மூன்று மட்டுமே எஞ்சியியுள்ளதை புகைப்படம் காட்டுகின்றது. இதற்கிடையில், கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை (19) மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது. பொது விமான கண்காணிப்பு தரவுகளின் AFP இன் பகுப்பாய்வு, ஜூன் 15 முதல் 18 வரை, KC-46A பெகாசஸ் மற்றும் KC-135 ஸ்ட்ராடோடேங்கர் விமானங்கள் உட்பட குறைந்தது 27 இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு பறந்தன என்பதைக் காட்டுகிறது. புதன்கிழமை பிற்பகுதியில், அந்த விமானங்களில் 25 விமானங்கள் இன்னும் ஐரோப்பாவில் இருந்தன, இரண்டு மட்டுமே அமெரிக்காவிற்குத் திரும்பியுள்ளன. இந்த எரிபொருள் நிரப்பும் விமானங்கள் நீண்ட தூர விமான நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் அமெரிக்கா நீட்டிக்கப்பட்ட பயணங்களுக்குத் தயாராகி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் கூறுகின்றது. அமெரிக்க படைகள் உஷார் நிலையில் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்கப் படைகள் உஷார் நிலையில் உள்ளன. மேலும், ஈரானிய பழிவாங்கலுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக இராணுவக் குடும்பங்கள் தாமாக முன்வந்து தளங்களை விட்டு வெளியேற விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதி முழுவதும் சுமார் 40,000 அமெரிக்க படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது வழக்கமாக 30,000 ஆக இருந்தது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான முந்தைய மோதல்களின் போதும், செங்கடலில் வணிக மற்றும் இராணுவக் கப்பல்கள் மீது ஹவுத்திகள் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியதன் போதும் ஒக்டோபரில் அந்த எண்ணிக்கை 43,000 ஆக உயர்ந்தது. மேலதிக படை நகர்வுகள் குறித்து பென்டகன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஈரானுடனான நிலைமை எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்து அமெரிக்கப் பணியாளர்கள் விரைவான மாற்றங்களுக்குத் தயாராக இருப்பதாக வலியுறுத்தியது. https://athavannews.com/2025/1436385
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
நிச்சயமாக... அடுத்த முறை சந்திப்போம் ஏராளன். ❤️
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
இரண்டு கிழமை இலங்கை பிரயாணத்தில்... நான்கு நாட்கள் கொழும்பு, பத்து நாட்கள் யாழ்ப்பாணம் என்று திட்டமிட்டிருந்தோம். யாழ்ப்பாணத்தில் நின்ற 10 நாட்களும் பெரும்பாலானவை கோவிலுக்கு சென்றதில் கழிந்தது. மனைவி ஏற்கனவே எல்லாக் கோவில்களுக்கும் வருவதாக நேர்த்தி வைத்திருந்ததால் அதனை, தட்டிக் கழிக்க முடியாமல் இருந்தது. மானிப்பாய் மருதடி விநாயகர், சண்டிலிப்பாய் சீரணி அம்மன் கோவில், அராலி அம்மன் கோவிலுக்கு செல்லும் போது உங்களை நினைத்தேன். @ஈழப்பிரியன் னும் அந்த நேரம் ஊரில் நின்றதாக அறிகின்றேன். ஆனாலும் நேரப் பற்றாக்குறை பல அலுவல்களை நிறைவேற்ற முடியாமல் செய்தமை கவலையான விடயம்.
-
யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்?
👉 https://www.facebook.com/watch?v=4124586927821777&locale=de_DE 👈 //பெற்றோல் பற்றாக் குறையினால்... இஸ்ரேலியர்கள் தங்களுக்குள் மோதல்.// அங்கேயே அடிபடுறானுங்க. எப்படியென்றாலும்...பெற்றோலுக்கு முதல் வரிசையில் நின்றது, யாழ்ப்பாணத்தான் தான். அதுக்குப் பிறகுதான் இஸ்ரேல்காரன். 🤣
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
மகிழ்ச்சி ஏராளன். 👍 உங்களது முகம் எனது மனதில் முன்பே பதிந்துள்ளதால் டக்கென்று கண்டு பிடிக்கக் கூடியதாக இருந்தது. 🙂
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
படத்தில்... சிவப்பு வாகனத்தில் இருப்பது நீங்களா ஏராளன்.
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
அப்ப.... சாராயம், கசிப்பு, கஞ்சா எல்லாம்... விட்டமின் சேர்ந்த பானங்களா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, திருவள்ளுவரே கள்ளு குடிக்கச் சொல்லி இருக்கின்றார். நீங்கள்.. வந்தேறி தெலுங்கர்களின் கதையை கேட்டு, கெட்டுப் போகாதீங்க. 🤣
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உலகப் பெரும் சண்டியர்கள் எல்லோரும், நேருக்கு நேர் மோதும் காலம் வெகு தொலைவில் இல்லைப் போல் உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டு... பெரும் உலக யுத்தம் வெடித்தால், முழுக் காரணமும் அமெரிக்காவையும், இஸ்ரேலையுமே சாரும்.
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
சிரித்துக் கொண்டு சொல்லும் பதிவுகளை... கேள்விக்கு உட்படுத்தக் கூடாது சார். 😂 அதை நம்பிக் கொண்டு போகின்றவர்கள், போகட்டும் என்று விடுங்க. இருந்தாலும்.... இந்த "ஊத்தை, கழிசடை வேலைகளை" சுமந்திரன் செய்யக் கூடிய ஆள் தான். 😎
-
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்!
இஸ்ரேலின் மிகப்பெரிய வைத்தியசாலையை குறிவைத்த ஈரானின் ஏவுகணைகள், இலங்கையரும் காயம்! தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவ மனையை இன்று வியாழக்கிழமை அதிகாலை ஈரானிய ஏவுகணை தாக்கியதில் சேதமடைந்துள்ளது. இதில் இலங்கை தாதி ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் நோயாளர்கள் பலர் காயம் என சொரோகா மருத்துவ மையத்தின் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் ஷ்லோமி கோடேஷ் தெரிவித்துள்ளார். இதேவேளை ‘குறித்த ஏவுகணை தாக்குதல் பொதுமக்கள் மீது இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு ஈரான் பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும், தெஹ்ரானில் உள்ளவர்களை நாங்கள் பெரும் விலையை செலுத்தச் செய்வோம்' என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார் என தகவல்! Vaanam.lk
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலின் மிகப்பெரிய வைத்தியசாலையை குறிவைத்த ஈரானின் ஏவுகணைகள், இலங்கையரும் காயம்! தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவ மனையை இன்று வியாழக்கிழமை அதிகாலை ஈரானிய ஏவுகணை தாக்கியதில் சேதமடைந்துள்ளது. இதில் இலங்கை தாதி ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் நோயாளர்கள் பலர் காயம் என சொரோகா மருத்துவ மையத்தின் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் ஷ்லோமி கோடேஷ் தெரிவித்துள்ளார். இதேவேளை ‘குறித்த ஏவுகணை தாக்குதல் பொதுமக்கள் மீது இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு ஈரான் பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும், தெஹ்ரானில் உள்ளவர்களை நாங்கள் பெரும் விலையை செலுத்தச் செய்வோம்' என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார் என தகவல்! Vaanam.lk
-
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்!
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்! இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பெண் பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல் அவிவில் உள்ள பீர்ஷெபா மருத்துவமனையில் தனது நோயாளிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது, மருத்துவமனைக்கு அருகில் ஏவுகணைத் தாக்குதலின் போது பராமரிப்பாளர் காயமடைந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த விடயத்தில் உதவ தூதரகத்திலிருந்து ஒரு குழு அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். ஈரானுடனான அதன் 7 நாள் மைல்கல்லை எட்டியபோது, தெஹ்ரான் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் டெல் அவிவ் மீது சுமார் 25 ஏவுகணைகளை சரமாரியாக வீசி பலரை காயப்படுத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதல்கள் பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனையையும், ஹோலோன் மற்றும் ராமத் கானில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளையும் நேரடியாகத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இதனால், பரவலான அழிவுகளும் பலர் காயமடைந்தும், உயிரிழந்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1436259
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டாம். அமெரிக்காவுக்கு, ரஷ்யா எச்சரிக்கை. AB Amam- பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை யாழ்ப்பாணத்தில், "ஜெற் விங்" இல் சந்தித்து... பிரதானமாக எதிர்வரும் மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் சம்பந்தமாக நீண்ட உரையாடலில் ஈடுபட்ட சுமந்திரன், இலங்கை அரசு செய்த கொலைகளை தண்டிக்காமல் விடுமாறு கேட்டார். 😂 🤣 யாழ்ப்பாணம்.com- ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்? மீன்பிடித் தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற தம் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசால் ஆண்டுதோறும் அமுல் படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில் வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக மீன்பிடி அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்கள் பின் நேற்று (18) ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களை விரட்டி அடித்ததாகவும், ஒரு சில படகில் இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்பார்த்த அளவு மீன் பிடிக்க முடியாததால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதே வேளை மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில்,இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்ததோடு, கடற் படையினரின் உதவியுடன் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436261- ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு!
ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு! வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள். அவற்றின் எண்ணிக்கை 58,947 என DMT ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு மேலதிகமாக, 7,500 கார்கள் மற்றும் 1,666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1436265- பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
கள்ளு குடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர். நான்... யாழ்ப்பாணத்தில் நின்ற போது, அந்த மண்ணில் பிறந்த எனக்கே... கள்ளுக் குடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வெள்ளைக்காரன் போய்... கள்ளு அடிப்பதை பார்க்க, பயங்கர எரிச்சலாக இருக்கிறது. 😂- கருத்து படங்கள்
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
- தாக்குதலுக்குள்ளான கொழும்பு மாநகர சபை உறுப்பினரை நேரில் சென்று பார்த்த சஜித்!
தாக்குதலுக்குள்ளான கொழும்பு மாநகர சபை உறுப்பினரை நேரில் சென்று பார்த்த சஜித்! தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் உலுவதுகே சந்தமாலியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (18) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார். ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சந்தமாலி, ஜூன் 16 அன்று கொழும்பின் புதிய மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் அவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர்கள் இருப்பதாக சண்டமாலி குற்றம் சாட்டியுள்ளார். எனினும், அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. https://athavannews.com/2025/1436213- மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர்
நான், தலைப்பை பார்த்துவிட்டு.... ஸ்ரீலங்காவில் வயிற்றுப் பிழைப்புக்காக... ஐஸ்கிறீம் விற்பவர்களை ஏன், கைது செய்கிறார்கள் என யோசித்தேன். அந்த ஐஸ் வேறை, இந்த ஐஸ் வேறை என்று.. பிறகுதான் புரிந்தது. 😂 - ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.