Everything posted by தமிழ் சிறி
-
அதிசயக்குதிரை
நீர்முழ்கி கப்பலும், காரும் விபத்தை சந்திப்பது அதிசயம்தான். இனியும் இப்படியான விபத்து நடக்க சந்தர்ப்பமே இல்லை. 🤣
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை! கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8 க்கும் மேற்பட்ட பெண்களை காணொளி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை பொள்ளாச்சி பொலிஸார் முதலில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு மாநில அரசின் குற்றபுலனாய்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த 25 தொடக்கம் 28 வயதுக்கிடைப்பட்ட 05பேர் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு மேலும் 04பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் குறித்த வழக்கு மீதான விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்தனர். வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து நிகழ்நிலை மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்படும் என கடந்த 28ம் திகதி நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் , இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் கைதான 9 பேரும் குற்றாவாளிகள் என கோவை மகளீர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அவர்களுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். https://athavannews.com/2025/1431749
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா எதிர் பாகிஸ்தான்... புளுகு போட்டி. 😂 1. ஒரு நாட்டின் அணு ஆயுதக் கிடங்கின் அருகே துல்லியமாகத் தாக்குதல் நடத்திய ஒரே நாடு நாம் மட்டுமே 2. இந்த உலகிலே சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் போரை வென்ற முதல் நாடும் நாம் மட்டுமே. புதிய போர் யுக்தியை இவ்வுலகிற்குக் கற்றுக் கொடுத்துள்ளோம். 3. நாம் நமது மொத்த விமானங்களில் போரில் 2% மட்டுமே உபயோகித்துள்ளோம். 4. நமது மொத்த ஏவுகனைகளில் 7% மட்டுமே உபயோகித்துள்ளோம். 5. நாம் நமது வான் தற்காப்பு சாதனங்களை வைத்து பாக்கிஸ்தானின் 99.7% ஏவுகனைகள் மற்றும் ட்ரோன் வீழ்த்தியுள்ளோம். 6. பாக்கிஸ்தானின் 11 விமானத் தளங்களை முழுமையாகத் தகர்த்துள்ளோம். 7. நாம் நமது படை வீரர்களில் போருக்கு வெறும் 15% பேரை மட்டுமே பயண்படுத்தியுள்ளோம். 8. உலக யுத்த வரலாற்றிலேயே முதல் முறையாக 3 விலை மதிப்பில்லா இராணுவ வீரர்களை மட்டுமே இழந்துள்ளோம். 9. உலக யுத்த வரலாற்றிலேயே முதல் முறையாக யுத்தம் ஆரம்பித்த பின் இதுவரை நமது ஒரு இராணுவ வீரரைக் கூட பாக்கிஸ்தான் சிறை பிடிக்கவில்லை. 10. பாக்கிஸ்தான் இராணுவம் எவ்வளவு முயன்றும் கூட நமது எல்லைக்குள் நுழைய முடியவில்லை. 11. உலக யுத்த வரலாற்றில் முதல் முறையாக எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்பை 100% முற்றிலுமாக சரி செய்ய முடியாதளவிற்கு சேதப்படுத்திவிட்டோம். 12. 15 இடங்களில் அமைக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை தரைமட்டம் ஆக்கிவிட்டோம். 13. பாக்கிஸ்தான் தலை நகரமான இஸ்லாமாபாத்தை முதல் முறையாக மிக எளிமையாகத் தாக்கிவிட்டோம். 14. முதல் முறையாக ஒரு எல்லையில் போர் நடக்கும் போது மற்ற நாடுகளுடனான எல்லைகளை 100% பாதுகாத்துவிட்டோம். 15. முதல் முறையாக தற்சார்பு முறையில் இந்தியாவிலேயே தயாரான ஆயுதங்களைக் கொண்டே 78% தாக்குதல்களை நடத்தி நாம் தற்சார்பு நாடாகிவிட்டோம் என்பதை இந்த உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளோம். 16. அமெரிக்க சீன ஆயுதக் கட்டமைப்புகளை உடைத்து நொறுக்கியுள்ளோம். 17. சீன, துர்க்கிய, அமெரிக்க ஆயுதங்களை முழுமையாக அழித்து அவர்களது ஆயுத மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்துள்ளோம். 18. முதல்முறையாக எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் முழுமையாகப் போரில் வெற்றி பெற்றுள்ளோம். 19. INS விக்கிராந்தை நாம் வெறும் 8% மட்டுமே பயண்படுத்தியுள்ளோம். 20. 100% துல்லியமானத் தாக்குதல் நடத்தி நமது உளவுத்துறையின் 100% வெற்றியை பதிவு செய்துள்ளோம். 21. நாம் உதவி கேட்டோ போரை நிறுத்தக் கூறியோ எந்த நாட்டிடமும் கேட்கவில்லை. 22. போரை நிறுத்த சொல்லி வந்த அறிவுறைகளையும் கண்டு கொள்ளாமல் குப்பையில் வீசினோம். 23. முதல் முறையாக சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். 24. முதல்முறையாக இராஜாங்க ரீதியாக பாக்கிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். 25. பாக்கிஸ்தான் அணு ஆயுத நாடு என்ற பிம்பத்தைத் தகர்த்தெரிந்துள்ளோம். 26. பிரதமரோ இராணுவத் தளபதிகளோ எந்த இடத்திலும் அமெரிக்கா சீனா என கூறவில்லை. இதுவே அந்நாடுகளுக்குப் பெரிய அசிங்கம். இதற்கு எல்லாவற்ருக்கும் ஆதாரங்கள் செயள்கைக்கோள் படங்கள் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளோம். அதே வேளையில், 1. பாக்கிஸ்தான் தனது புருடாக்கள் எதற்கும் ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. 2. போரின் இரண்டாவது நாளிலேயே அமைதிப் பேச்சிவார்த்தை என அனத்த ஆரம்பித்துவிட்டது. 3. அனத்திப் பார்த்து எந்தப் பிரயோஜனமும் இல்லை எனத் தெரிந்ததும் நேரடியாக பாக்கிஸ்தான் DGMO போன் போட்டுக் காலில் விழுந்தான். 4. பத்தும் பத்தாததற்கு சீனா அமெரிக்கா, இங்கிலாந்து, துர்க்கி என உலக நாடுகளிடமும் கெஞ்சிக் கூத்தாடினான். 5. போர் முடிந்ததும் பாக்கிஸ்தான் பிரதமர் தனது உரையில் அமெரிக்காவிற்கு நன்றி, துர்க்கிக்கு நன்றி, சீனாவிற்கு நன்றி என நெஞ்சம் நக்கினான். இவ்வளவையும் பார்த்துவிட்டு பாக் பஃன்றிகளும் அங்க உள்ள பஃன்றிகளுக்கு மண்டி போடும் இங்குள்ள பஃன்றிகள் இந்தியா தோத்துவிட்டதா எழுதித் தீர்ப்பானுக. Sarathy Ravichandran · ######################## ####################### Mohmed Rizwan
-
நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
நாட்டில் உப்பு தட்டுப்பாடு! நாட்டில் உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாகவும் இதனால் சந்தையில் உப்பு தட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, 1 கிலோகிராம் உப்புப் பொதியை 450 முதல் 500 ரூபா வரையிலான விலையில் வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உப்பு விலை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேவையான சோதனை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1431716
-
ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
தன்னுயிரை தியாகம் செய்த தாயின் இறுதி கிரியை இன்று! தன்னுயிரை தியாகம் செய்து, தன்னுடைய பிள்ளையின் உயிரை காப்பாற்றிய அந்த தாயின் இறுதி கிரியை, இன்று (13) செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்லா பகுதியில் 11.05.2025 அன்று அதிகாலை 4.30க்கு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர், 45 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில், தனது 9 மாதங்களேயான மகளை, காப்பாற்றுவதற்கு பெரும் பாடுபட்ட தாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அந்த தாய், சேயுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அந்த தாய் உயிரிழந்தார். அவருடைய 9 மாதங்களேயான குழந்தை, பேராதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில், அந்த தாய், தந்தை மற்றும் 9 மாதங்களேயான குழந்தையுடன், தங்களுடைய ஏனைய நான்கு பிள்ளைகளும் சிக்கியுள்ளனர். காயமடைந்த நான்கு பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைனைச் சேர்ந்த இவர்கள், கண்டியிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். சம்பவத்தில் மரணமடைந்த, திரு,திருமதி காசிநாதன், தனலட்சுமி ஆகிய இருவரின் பூதவுடல்களும், கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைன் பொது மயானத்தில், செவ்வாய்க்கிழமை (13) மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. https://athavannews.com/2025/1431731
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஒரு வருடத்திற்கு 100 பிரமோஸ் ஏவுகணைகளை தயாரிக்க கூடிய ஆலையை லக்னோவில் இன்று திறந்து வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்..!! பாகிஸ்தானுக்கான... Future பிளானா இருக்குமோ. Sarathy Ravichandran
-
கருத்து படங்கள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
காசா... பணமா... சும்மா அடித்து விடுவதுதானே, கண்டுக்க கூடாது. இந்த உருட்டு... அடுத்த தேர்தலில் வெல்ல போதுமானது. இந்தியர்கள்... கண்ணை மூடிக் கொண்டு, மோடிக்கு வாக்களிப்பார்கள்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
- வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்
"தீ " சுமந்த மாதம், "மே"- வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்
08.05.2025. அன்று, அருகில் உள்ள ஆலயத் திருவிழாவின் போதான வான வேடிக்கை கொண்டாட்டத்தில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள எமது "பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் " தீப்பற்றி எரிவதற்கு முன்னான படங்கள். யாழ்.தர்மினி 12.05.2025- வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்
யாழில் வானவேடிக்கையால் பண்பாட்டு மலர்ச்சிக்கூடம் சிறுவர் அரங்கு தீயில். காணொளி: 👉 https://www.facebook.com/kiru.kirupan/videos/1316207322820085 👈 08.05.2025. அன்று, அருகில் உள்ள ஆலயத் திருவிழாவின் போதான வான வேடிக்கை கொண்டாட்டத்தில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள எமது "பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் " தீப்பற்றி எரிவதற்கு காரணமான வான வேடிக்கை. 2009 இறுதி யுத்தத்தின் போது தமிழ்த் தேசத்தில் இராணுவத்தினால் ஏவப்பட்ட கொத்துக் குண்டுகளுக்கு ஒப்பான அனுபவத்தை தந்தது. ஒன்றின் விலை 25.000 (இருபத்தைந்து ஆயிரம் என தெரிவிக்கப்படுகின்றது. ) யாழ்.தர்மினி 12.05.2025- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கலாம் வாங்க
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தகவலுக்கு நன்றி. நான் உண்மைப் படம் என நினைத்திருந்தேன்.- வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
நான் உள்ளுக்கு போய் பார்க்கவில்லை என்பதால், யாரார் உள்ளுக்கு இருக்கினம் என்று எனக்குத் தெரியாது. 😂 மேலதிக தகவல்: ஜே.வி.பி.ஐ ஆரம்பித்த தலைவர் ரோகண விஜேவீரவும் யாழ்ப்பாண சிறையில் தான், இருந்ததாக சொன்னார்கள்.- சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்! சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் அந்நிலையில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1431673- உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு வெசாக் தினத்தில் ஜனாதிபதி அழைப்பு!
- உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு வெசாக் தினத்தில் ஜனாதிபதி அழைப்பு!
உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு வெசாக் தினத்தில் ஜனாதிபதி அழைப்பு! புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான ஞானம் பெற்றது, இந்த புனித வெசாக் தினத்தில் ஆகும். அவர் அனைத்து துன்பங்களையும் தாங்கி, ஆயுள் முழுவதும் தன்னலமற்ற பக்தி செயல்கள் மூலம் புரிந்து கொள்ளப்பட்ட தர்மம், உலகில் வசிக்கும் அனைத்து மக்களின் ஆன்மீக நல்வாழ்விற்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. மதச் சூழலுக்குள் மனிதனின் ஆன்மீக வளர்ச்சியை வளர்ப்பதே புத்த பெருமானின் முக்கிய செய்தியாகும்.மேலும், ஒரு ஆட்சியாளர் நல்ல ஆட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையும் பௌத்த தத்துவம் குறிப்பிடுகிறது. “சப்பங் ரத்தங் சுகங் சேதி – ராஜாசே ஹோதி தம்மிகோ” ஒரு நாட்டின் முதல் குடிமகனாகிய ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று புத்த பெருமான் உபதேசித்துள்ளார். புத்தரின் போதனைகளின் பாதையை முன்மாதிரியாகக் கொண்டு,பொதுநலத்தில் சமத்துவம் மற்றும் சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கி “வளமான நாடு – அழகான வாழ்க்கை” பற்றிய இந்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக நாம் இன்னும் உறுதியாகவும் தைரியத்துடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறு இந்த புனிதமான வெசாக் தினத்தில் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார் புத்தரின் போதனைகள் உலக அமைதிக்கான ஆழமான செய்தியை தெரிவிப்பதோடு, அந்தப் போதனைகளை நடைமுறையில் புரிந்துகொண்டு, மெத்தா, கருணா, முதிதா, உபேக்ஷா ஆகிய நான்கு பிரஹ்ம விஹாரணங்களைப் பயன்படுத்தி செயல்படுவதன் மூலம், போரின் தீப்பிழம்புகளிலிருந்து விடுபட்ட அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் அவர் விடுத்துள்ள வாழ்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் https://athavannews.com/2025/1431654- கருத்து படங்கள்
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ட்றம்பு ஜீ.... 😂 🤣Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.