Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இதற்குள்... சினிமாக்காரர்களின் தொல்லை வேறு. 😂
  2. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1939446400145910 👈 மாணவி மன நோயாளி. மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜின் பொறுப்பற்ற பேச்சு. ஒரு கதைக்கு அப்படி வைத்துக் கொண்டாலும்.. ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யலாமா?
  3. @goshan_che பம்பலப்பிட்டியிலும் அந்தச் சிறுமி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் என்று மேலுள்ள செய்தியில் உள்ளது. நீங்கள் கூறிய ஊத்தைதான் இந்த வேலையையும் செய்திருக்கு போலுள்ளது. இந்த விறுத்தத்தில்... தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றார்கள் என்று, சி.ஐ.டி பொலிஸில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றார்.
  4. கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி! உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்த 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். சம்பவத்தை அடுத்து மே 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர், ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர். அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்கள் கொட்டாஞ்சேனை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலும், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகிலும், தனியார் வகுப்பு ஒன்றுக்கு அருகிலும் நடத்தப்பட்டன. இது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார். இந்த சம்பவம் குறித்த வழக்கு மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. https://athavannews.com/2025/1431527
  5. //தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதானல் , தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார்.// இலங்கையில் ஆளும் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலே.... என்ன அயோக்கியத்தனத்தையும் செய்து விட்டு, போலீசில் முறைப்பாடும் கொடுக்கலாம் என்று இருக்கும் போது.... பாதிக்கப்பட்டு, கல்வியை இழந்து... இடத்தை மாற்றி கல்வியை தொடர முற்பட் ட போதும், அதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் உயிரை இழந்தவர்களை நினைக்க பெரும் ஆத்திரமும், வேதனையும்தான் ஏற்படுகின்றது. இந்தப் பெண்ணை... ஆண் உறுப்பை காட்டி பாலியல் வக்கிரம் புரிந்த சங்கரன் என்ற உடுவில் வாத்தியாருக்கு, புத்தளத்திற்கு இடம் மாற்றி தண்டனை கொடுத்து இருக்கின்றார்களாம். கொடுமை.
  6. கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை தொடர்பில் தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் CID யில் முறைப்பாடு! கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்றையதினம் (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே தான் அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதானல் , தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார். கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் , அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர். பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் தனது மகள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431484
  7. தினவு எடுத்த.... கோவில் திருவிழாக் காரர்களால்.... மக்களுக்கு எவ்வளவு துன்பம். சென்ற கிழமை தாவடி கோவிலில் வெடி கொழுத்தும் போது.... தென்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை மிரண்டு... பொதுமக்களை தாக்கியதில் சிலர் காயமடைந்து, ஒரு பெண்ணிற்கு கால் அகற்ற வேண்டிய நிலை. இப்போ.... கோவில் திருவிழாவிற்கு... வான வேடிக்கை காட்டியதில் சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் எரிந்து நாசமாகி உள்ளது. எமது சமூகம் முட்டாள் வேலைகள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. இந்தக் காசுகளை வைத்து... சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்யப் பாருங்கள். கல்வி கொடுக்கலாம், நோயாளர்களை, முதியோர்களை பார்மரிக்கலாம் என்று எத்தனையோ வேலைகள் உள்ளது. அதை விட்டுட்டு... லூசு வேலைகள் செய்து கொண்டு இருக்காதீர்கள்.
  8. சரோஜா போல்ராஜ் உடனடியாக பதவி விலக வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவிப்பு! சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார். சரோஜா போல்ராஜ் சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் எனவும் எனவே அவர் இந்த அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு பொருத்தமற்றவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தற்போது பேசுபொருளாகியுள்ள கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் பெண்ணாக, தாயாக, ஆசிரியராக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரோஜா போல்ராஜ் பொறுப்பின்றி செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார் . மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான அவர் அமைச்சர் என்ற பொறுப்பிற்கும், அரசாங்கம் என்ற பொறுப்பிற்கும் அப்பால் செயற்பட்டுக் கொள்கின்றார் எனவும் துன்புறுத்தலுக்கு உள்ளான குறித்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என அமைச்சர் குறிப்பிடுதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, குறித்த மாணவி உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என்பதற்காக இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறுகின்றாரா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவதற்காக முயற்சித்த போது சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சியினர் எவரும் தனக்கு கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1431508
  9. இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வாங்கி தீர்மானம்! காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் மோசமான சேதத்தை சந்தித்துள்ளமையினால் உலக வங்கியிடம் கூடுதல் கடன் தொகையை கோர பாகிஸ்தான் ஆலோசித்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா அணுகியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு நடத்தியதுடன் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா, பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வழங்கப்படும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்குதான் பயன்படுத்தும் எனவும் இந்தியா கண்டனம் தெரிவித்தது. இதேவேளை, உலக வாங்கி விதிகளின்படி தீர்மானங்களுக்கு எதிர்த்து வாக்களிக்கும் (No Vote) செயல்முறை இல்லாததால், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்ய சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1431517
  10. இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் ! இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃப்;ளே ஒஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் கோல்ட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஒரு வார காலத்துக்குப் பின்னர் இந்தியாவினால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை நடத்த முடியாவிட்டால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் குறித்த போட்டிகளை தங்களால் நடத்த முடியும் என ரிச்சட் கோல்ட் பரிந்துரை முன்வைத்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தும் சாத்தியம் நிலவுவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1431519
  11. செத்தால் தானே சிக்கன். நீங்கள், உயிரோட ஓடித் திரிந்தால் கோழி. 😂
  12. மே மாதம், எங்களுக்கு பெரு வலி தந்த மாதம். இப்போ... அந்த வலி தந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு... வலி கொடுக்கின்ற மாதமும் மே மாதம் தான். இலங்கையிலும் உலங்கு வானூர்தி விபத்தில், 6 சிங்களப் படையினர் கொல்லப் பட்டார்கள். காலம்... விசித்திரமானது. பழி வாங்க காத்திருக்கும்.
  13. பிழை பிடிக்கிறதிலை எங்கடை ஆட்கள் விண்ணர். அப்ப... இவர்கள் போராடி இருக்க வேண்டியதுதானே. சேர்ந்து... கை கொடுக்கக் தெரியாது, கிழவிகள் மாதிரி... நொட்டையும், சொட்டையும் சொல்ல வந்து விடுவார்கள். கந்தையா... அண்ணை, வெள்ளிக்கிழமை.. இனி என்ரை வாயை கிளறாதேங்கோ. எனக்கு கெட்ட கோவம் வருகுது.
  14. தமிழருக்கு நாடு கிடைக்காமல் போனதற்கும்... ஒட்டுக்குழு, ஓணான் குழு தமிழர்தான் காரணம்.
  15. இந்தியா அனுப்பிய மற்றொரு இஸ்ரேலிய ட்ரோன் பாகிஸ்தானில் அழிக்கப்பட்டது. பாகிஸ்தானால் அழிக்கப்பட்ட இஸ்ரேலிய ட்ரோன்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 35 ஆகும்.
  16. கொழும்பில் தமிழ் பாடசாலை மாணவியை தற்கொலைக்கு தூண்டிய ஆசாமி யார் ? புங்குடுதீவை சேர்ந்த எங்கள் தந்தையின் நெருங்கிய உறவினர் ராஜேஸ்வரி அம்மா. கொழும்பு மருதானை கப்பித்தாவத்தை பிள்ளையார் கோவிலின் அறங்காவலராகவும் நீண்டகாலமாக அவர் செயற்பட்டிருந்தோடு தான ,தர்மங்களை மேற்கொள்வதிலும் சிறந்தவர். மிகச் சிறந்த ஆங்கில ஆசிரியராக விளங்கிய ராஜேஸ்வரி அம்மையாருக்கு உடைமையான கொழும்பு 13 ல் அமைந்துள்ள ராஜேஸ்வரி கல்வி நிலையத்தினை முழுமையாக விழுங்கியவரே இந்த சிவா என்கிற நபர் . ராஜேஸ்வரி அம்மாவுக்கு ஒரு பெண் பிள்ளை மாத்திரமே இருந்ததால் இந்த நபர் வளர்ப்பு பிள்ளை போன்று பராமரிக்கப்பட்டிருந்தார். மகள் அவுஸ்ரேலியாவுக்கு சென்ற பின்னர் ராஜேஸ்வரி அம்மையாரின் முதுமையை பயன்படுத்தி கல்வி நிலையத்தின் உடைமைகள் கைமாற்றப்பட்டிருந்தன . ஊழலை ஒழிப்போம் , நல்லதொரு நாட்டை உருவாக்குவோம் என்று கூவிக்கொண்டு ஜனாதிபதி ஆகிய அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக இந்த நபர் நியமிக்கப்பட்டபோதே இத்தனை தமிழர்கள் அங்கு வாழக்கூடிய நிலையில் இவ்வாறான ஒரு ஆசாமியை ஜேவிபி தலைமை தெரிவு செய்தமை தொடர்பாக நான் பகிரங்கமாக விமர்சித்திருந்தேன். அத்தேர்தலில் திசைகாட்டி பாரிய வெற்றிகளை பெற்றிருந்த போதிலும் இந்நபர் படுதோல்வி அடைந்திருந்தார். இன்று உண்மை எல்லோருக்கும் தெரியவந்துள்ளது. இதேபோன்றுதான் யாழ் மாவட்டத்திலும் நாடாளுமன்ற தேர்தலிலும் , உள்ளூராட்சித் தேர்தலில் பெரும்பாலான சமூக விரோதிகள் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்கள் . அவர்களில் சிலர் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்திலும் இதே போன்றதொரு மோசடியான கல்வி நிலையத்தினை நடாத்திக்கொண்டு லயன்ஸ் கிளப்பை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவரே பேரினவாத கட்சியில் முக்கிய பதவிநிலையில் காணப்படுகின்றார். Kunalan Karunagaran
  17. கொட்டாஞ்சேனை மாணவியின் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வாதப்பிரதிவாதங்கள்! கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி, தற்கொலை சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது. கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் கொட்டாஞ்சேனை பிரத்தியேக வகுப்பின் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உயிரிழந்த மாணவியின் விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூர்ய பாராளுமன்றத்தில் குறிப்பிட்டபோது அதற்கு கருத்து வெளியிட்ட முஜிபுர் எம்.பி , இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரியவில்லை என்று சாடியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு 7, 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்கு இடப்படுவார்களா? என்று கேள்வியெழுப்பிய முஜிபுர் ரஹ்மான் , இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல எனவும் கூறியுள்ளார். இதேவேளை, மாணவியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பந்தப்படட ஆசிரியருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும் இந்த பிரச்சினையில் அரசியல் இலாபம் தேடக்கூடாதென சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நயக்கவும் இதன்போது கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியரை கைதுசெய்யுமாறு நேற்று கொட்டாஞ்சேனை உள்ளிட்ட சில இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர்கள் குழு ஒன்று கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431398
  18. சீனாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த ஜெர்மன் பெண் கைது! ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளம்பெண்ணிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மடிக்கணினியின் கடவுச்சொல்லை பொலிஸாருக்கு வழங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சந்தேக நபரான இளம்பெண் சீனாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1431443
  19. தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நடந்த கதி! தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரச அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டிகே, குற்றவாளியின் வாக்களிக்கும் உரிமை உட்பட அவரது சிவில் உரிமைகளை இரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் ரூ. 20,000 அபராதம் விதித்தார். ஒரு அரசு அதிகாரியாக, குற்றவாளி தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படக்கூடிய பெண்ணிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இந்த சம்பவம் 2025 மார்ச் 31, அன்று நடந்தது. அப்போது தேவையான நிதி உதவியை அங்கீகரிப்பதற்காக பாலியல் இலஞ்சம் கேட்டதாக அந்த அதிகாரி குற்றம் சாட்டப்பட்டார். அவர் அந்தப் பெண்ணை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார், அங்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். விரிவான விசாரணைக்குப் பின்னர், குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக மேல் நீதிமன்றம் தீர்ப்பினை அறிவித்தது. இதன் மூலம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1431447

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.