Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இந்தியா – பாக்கிஸ்தான் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன! அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு! இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான உடனடியான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனவும் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Athavan Newsஇந்தியா - பாக்கிஸ்தான் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன! அம...இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான உடனடியான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த...
  2. வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைக்க பிரித்தானியா நடவடிக்கை ! அதிக அளவிலான வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைத்துக்கொள்ளும் திட்டங்களை பிரித்தானிய அரசாங்கம் இன்று (11) அறிவித்துள்ளது. திறனாளர் விசாக்களை பட்டதாரிகள் செய்யும் வேலைகளுக்கு மட்டும் வழங்கி நிறுவனங்களில் உள்நாட்டு ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய திட்டங்களின் கீழ், திறனாளர் விசாக்கள் பட்டதாரிகளுக்கு மட்டும் வழங்கப்படுவதுடன் குறைவான திறன்கள் தேவைப்படும் தொழில் விசாக்கள் நாட்டின் தொழில்துறைச் செயல்பாட்டுக்கு முக்கியமானதாக விளங்கும் வேலைகளைச் செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் இதனை ஈடு செய்ய நிறுவனங்கள், பிரித்தானிய ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டங்கள் , நாளை (மே 12) வெளியிடப்படவுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சி அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1431611
  3. இதனை யூ ரியூப்பிலும் போட்டு இருப்பதை பார்க்கத்தான் சகிக்க முடியவில்லை. இந்த யூ ரியூப் கலாச்சாரம் மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதை நினைக்க அச்சமாக உள்ளது.
  4. இந்தியா அடியை வாங்கிக் கொண்டு பேசாமல் இருந்தாலும்… இந்த “யூ ரியூப்” காரனும், ரிவி காரனும்… இந்தியாவின் தர்ம சங்கடம் புரியாமல், கொழுத்திப் போட்டுக் கொண்டு இருப்பாங்களே. 🤣
  5. என்ன கொடுமை இது…. ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள், தலைவன் என்கிறார்கள்? எமது மக்கள் எங்கே போகின்றார்கள். 😡
  6. போரை…. நிறுத்தாமல், தொடர்ந்து முன்னெடுத்து செல்லும்…. இந்திய, பாகிஸ்தானிய இராணுவத்தினருக்கு பாராட்டுக்கள். 👏🏻💐👏🏻👍🏽😂
  7. நான் சும்மா… பகிடிக்கு கேட்டேன் ஏராளன். பண்டத்தரிப்பில்…. ஒரு பெண்ணை அவமானப் படுத்தியதற்காக ஒரு யூ ரியூப் காரனை கைது செய்து விளக்கமறியலில் வைத்தவர்கள் அல்லவா. அவரின் நிலைமை இப்போ என்ன? இன்னும்… உள்ளேயா, அல்லது வெளியே வந்து விட்டாரா?
  8. இந்த பொது மன்னிப்பில்… பிள்ளையானின் பெயரும் உள்ளதா. 😂
  9. டீச்சர் அம்மா, மாணவனுக்கு அடிக்கிறதே தப்பு. அதுவும் ஆண் உறுப்பில் அடிக்கிறதை… என்னவென்று சொல்வது.
  10. நான்கு நாட்களிலேயே… போர் செய்து களைத்து விட்டார்கள். நாங்கள் எவ்வித வளமும் இல்லாமல்…. கப்பல் படை, விமானப்படை என்று 30 வருடம் நடத்திய போரை நினைக்க பிரமிப்பாக உள்ளது.
  11. புலவர் இணைத்த காணொளியில் உள்ளதை ஒத்த கருத்தை, இரண்டு நாட்களுக்கு முன்பே பதிந்து இருந்தேன். 😂 ரபேல் விமானத்தை… பிரான்ஸ் இனி எப்படி விற்பது. 🤣
  12. இந்தப் படத்தை... தமிழில் தயாரித்தால், இம்சை அரசன் வடிவேலுவை நடிக்க விட வேண்டும். வசூல் அள்ளி குவிக்கும். 😂
  13. ஸ்ராலினின் அப்பா… 😎 கருணாநிதியே, வெறும் மூன்று மணித்தியால உண்ணாவிரதம் இருந்து இலங்கைப் போரை நிறுத்தியவர் எனும் போது…. ஸ்ராலினின் பேரணிக்கும், அந்தப் பவர் இருக்கும் தானே… 😂 தாய்…. எட்டடி பாய்ந்தால், குட்டி…. 16 அடி பாயுமாம். 🤣 உதய்ணா… வருங்காலத்தில் 32 அடி பாய்வார் எனும் போது, ஒரே பீதியாய் இருக்கு. 😁
  14. நாளைய இந்தியச் செய்திகள். 1) பயத்தில் பதுங்கிய பாகிஸ்தான். 2) பாகிஸ்தானை பந்தாடிய இந்திய இராணுவம். 3) இந்தியாவின் அடியை பார்த்து, உலக நாடுகள் பிரமிப்பு. 4) தாடி ஜீக்கு… உலகத் தலைவர்களிடம் இருந்து குவியும் பாராட்டு. 5) சமாதானப் புறாவை பறக்க விட்ட… தாடி ஜீயின் பெயர்…. நோபல் பரிசுக்கு அனுப்பி வைப்பு. வரும் கிழமை முழுக்க…. பல அலப்பறைகளை தாங்க வேண்டி இருக்கும். நாம எப்படி தாக்குப் பிடிக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை. 🤣
  15. இவ்வளவு கெதியாய் ஏன் போர் நிறுத்தம் வந்தது. வாங்கி வைத்த “பொப் கோன்” எல்லாம் வீணாய் போகப் போகுதே. 😂
  16. இதற்குள்... சினிமாக்காரர்களின் தொல்லை வேறு. 😂
  17. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1939446400145910 👈 மாணவி மன நோயாளி. மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜின் பொறுப்பற்ற பேச்சு. ஒரு கதைக்கு அப்படி வைத்துக் கொண்டாலும்.. ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யலாமா?
  18. @goshan_che பம்பலப்பிட்டியிலும் அந்தச் சிறுமி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் என்று மேலுள்ள செய்தியில் உள்ளது. நீங்கள் கூறிய ஊத்தைதான் இந்த வேலையையும் செய்திருக்கு போலுள்ளது. இந்த விறுத்தத்தில்... தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றார்கள் என்று, சி.ஐ.டி பொலிஸில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றார்.
  19. கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி! உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்த 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். சம்பவத்தை அடுத்து மே 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர், ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர். அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்கள் கொட்டாஞ்சேனை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலும், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகிலும், தனியார் வகுப்பு ஒன்றுக்கு அருகிலும் நடத்தப்பட்டன. இது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார். இந்த சம்பவம் குறித்த வழக்கு மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. https://athavannews.com/2025/1431527
  20. //தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதானல் , தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார்.// இலங்கையில் ஆளும் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலே.... என்ன அயோக்கியத்தனத்தையும் செய்து விட்டு, போலீசில் முறைப்பாடும் கொடுக்கலாம் என்று இருக்கும் போது.... பாதிக்கப்பட்டு, கல்வியை இழந்து... இடத்தை மாற்றி கல்வியை தொடர முற்பட் ட போதும், அதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் உயிரை இழந்தவர்களை நினைக்க பெரும் ஆத்திரமும், வேதனையும்தான் ஏற்படுகின்றது. இந்தப் பெண்ணை... ஆண் உறுப்பை காட்டி பாலியல் வக்கிரம் புரிந்த சங்கரன் என்ற உடுவில் வாத்தியாருக்கு, புத்தளத்திற்கு இடம் மாற்றி தண்டனை கொடுத்து இருக்கின்றார்களாம். கொடுமை.
  21. கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை தொடர்பில் தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் CID யில் முறைப்பாடு! கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்றையதினம் (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே தான் அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதானல் , தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார். கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் , அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர். பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் தனது மகள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431484
  22. தினவு எடுத்த.... கோவில் திருவிழாக் காரர்களால்.... மக்களுக்கு எவ்வளவு துன்பம். சென்ற கிழமை தாவடி கோவிலில் வெடி கொழுத்தும் போது.... தென்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை மிரண்டு... பொதுமக்களை தாக்கியதில் சிலர் காயமடைந்து, ஒரு பெண்ணிற்கு கால் அகற்ற வேண்டிய நிலை. இப்போ.... கோவில் திருவிழாவிற்கு... வான வேடிக்கை காட்டியதில் சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் எரிந்து நாசமாகி உள்ளது. எமது சமூகம் முட்டாள் வேலைகள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. இந்தக் காசுகளை வைத்து... சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்யப் பாருங்கள். கல்வி கொடுக்கலாம், நோயாளர்களை, முதியோர்களை பார்மரிக்கலாம் என்று எத்தனையோ வேலைகள் உள்ளது. அதை விட்டுட்டு... லூசு வேலைகள் செய்து கொண்டு இருக்காதீர்கள்.
  23. சரோஜா போல்ராஜ் உடனடியாக பதவி விலக வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவிப்பு! சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார். சரோஜா போல்ராஜ் சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் எனவும் எனவே அவர் இந்த அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு பொருத்தமற்றவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தற்போது பேசுபொருளாகியுள்ள கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் பெண்ணாக, தாயாக, ஆசிரியராக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரோஜா போல்ராஜ் பொறுப்பின்றி செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார் . மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான அவர் அமைச்சர் என்ற பொறுப்பிற்கும், அரசாங்கம் என்ற பொறுப்பிற்கும் அப்பால் செயற்பட்டுக் கொள்கின்றார் எனவும் துன்புறுத்தலுக்கு உள்ளான குறித்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என அமைச்சர் குறிப்பிடுதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, குறித்த மாணவி உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என்பதற்காக இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறுகின்றாரா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவதற்காக முயற்சித்த போது சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சியினர் எவரும் தனக்கு கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1431508

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.