Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. @மோகன் , @இணையவன் , @நிழலி , @nunaviIan ஆகியோரின் கவனத்திற்கு.. பாஞ்ச் அண்ணை இரண்டு மாதம் யாழ். களத்திற்கு வராமல் இருந்து விட்டு, இன்று யாழ். களத்திற்கு நுழைய முற்பட்ட போது, முடியாமல் உள்ளதாக தெரிவித்தார். அவருக்கு ஏற்பட்ட சிரமத்தை நிவர்த்தி செய்து உதவும்படி கேட்டுக் கொண்டார். நன்றி.
  2. 👉 https://www.facebook.com/100076314756096/videos/1035897674674669 👈 நல்ல காலம்.... ஒருவரும் பார்க்கவில்லை. 😂 🤣
  3. முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலில் அஞ்சலி செலுத்திய பேரறிவாளனின் தாயார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுதலைப்பெற்ற பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு வருகைத்தந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு சென்று நினைவேந்தலை முன்னெடுத்துள்ளார். வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் அவரின் வருகை முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக நிலம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொது அமைப்புக்கள், அரசியல் ஆதரவாளர்கள், பல்கலை மாணவர்களால்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுக்கஞ்சியும் பரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/perarivalan-s-mother-in-mullivaikkal-1747320473?fbclid=IwY2xjawKUE2RleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR5ekvh9qj4yHeEiz85VNssBcL79mBDigzH93Mb0o09tn287xFo9-65cBUj22Q_aem_2mgg81TRNsFUiB9GT6X0Yw
  4. இவன் செய்த கொலைகளுக்கு கண்ட இடத்தில் சுட்டுக் கொன்று இருக்க வேண்டும். இவனது வழக்கை இழுத்து அடித்தால்.... சட்டத்தின் ஓட்டைகளால் வெளியே வந்து, மீண்டும் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்வான். ரணில், மகிந்த இவனின் மேல் வைத்திருக்கும் அபிமானத்துக்கு... மீண்டும் அமைச்சராக வரக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு அனுரா... கட்சி சென்ற பாராளுமன்ற தேர்தலில் வென்ற போது, பிள்ளையான் தன்னை கைது செய்வார்கள் என்று கொஞ்சக் காலம் தலைமறைவாக இருந்தவன், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாகக் கூட அப்போது பேசப்பட்டது. பிறகு என்ன துணிவில் வெளியே வந்தார் என்று தெரியாவில்லை.
  5. டிக்டோக் நேரலையின் போது மெக்சிகன் பிரபலம் மீது துப்பாக்கி சூடு! அழகு மற்றும் ஒப்பனை தொடர்பான காணொளிகளுக்கு பெயர் பெற்ற சமூக ஊடகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க இளம் மெக்சிக்கன் பெண்ணொருவர் டிக்டோக் நேரடி ஒளிபரப்பின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். பாலின அடிப்படையிலான வன்முறை அதிகமாக உள்ள ஒரு நாட்டில் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. 23 வயதான வலேரியா மார்க்வெஸின் (Valeria Marquez) மரணம், பெண் கொலைக்கான நெறிமுறைகளின்படி விசாரிக்கப்படுவதாக மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாநில வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சபோபன் நகரில் செவ்வாய்க்கிழமை (13) மார்க்வெஸ் பணிபுரிந்த அழகு நிலையத்தில் ஒரு நபர் உள்ளே நுழைந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை முன்னெடுத்தார். இதனால், அவர் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், வழக்கறிஞர் அலுவலகம் எந்த சந்தேக நபரையும் அறிக்கையில் பெயரிடவில்லை. சம்பவத்திற்கு சில வினாடிகளுக்கு முன்பு, மார்க்வெஸ் தனது டிக்டோக் நேரடி ஒளிபரப்பில் ஒரு மேசையில் ஒரு பொம்மையை பிடித்துக் கொண்டு பின் தொடுநர்களுடன் தொடர்பில் இருந்தார். இதன்போது, அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக்கில் கிட்டத்தட்ட 200,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த மார்க்வெஸ், தான் இல்லாதபோது அழகு நிலையத்துக்கு யாரோ ஒருவர் “விலையுயர்ந்த பரிசை” வழங்க வந்ததாக நேரடி ஒளிபரப்பில் முன்னதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த கொலையானது ஒரு கும்பல் தாக்குதலா? அல்லது பெண்களுக்கு எதிரான மற்றுமோர் வன்முறை சம்பவமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் பெண் கொலை விகிதத்தில் நான்காவது இடத்தில் பராகுவே, உருகுவே மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளுடன் மெக்சிகோவும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான பொருளாதார ஆணையத்தின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டில் 100,000 பெண்களுக்கு 1.3 பேர் மட்டுமே பெண் கொலை விகிதத்தில் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நகரம் உட்பட மெக்சிகோவின் 32 மாநிலங்களில் கொலை விகிதத்தில் ஜாலிஸ்கோ ஆறாவது இடத்தில் உள்ளது. 2024 ஒக்டோபரில் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து அங்கு பெண் கொலை எண்ணிக்கை 906 ஆக பதிவாகியுள்ளதாக தரவு ஆலோசனை நிறுவனமான TResearch தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1432026
  6. அப்ப கோமாளியை... வைச்சு செய்யப் போறாங்கள். 😂 வாங்கிக் கட்டவேணும் என்று விதி... இருந்தால், நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. இதுக்கு, பரிகாரம் ஒண்டும் இல்லையோ. 🤣
  7. போதைப்பொருள் கடத்தல்; மூவருக்கு மரண தண்டனை! ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது. இவர்கள் மூவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 179 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலின் போது கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார். https://athavannews.com/2025/1432010
  8. வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது! யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்களும், சம்பந்தப்பட்ட குழுவை அழைத்து வர இந்த நாட்டிலிருந்து படகில் சென்றவர்கள் ஆவர். மேலும் விசாரணையில், மற்ற நால்வரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பயணம் செய்த ஒரு குழு என்பதும், அங்குள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து மீண்டும் அவர்கள் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். https://athavannews.com/2025/1431979
  9. ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் வெற்றிகரமாக நிறைவு! ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நேற்று (15) ஏலமிடப்பட்டன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதியால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்தப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமிற்காக வழங்கப்பட்டிருந்த 26 வாகனங்கள் இவ்வாறு ஏலமிடப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 17 வாகனங்கள் ஏலத்தில விற்பனை செய்யப்பட்டன. அதன்படி, BMW மோட்டார் வாகனம் 01, Ford Everest ரக வாகனம் 02, Hyundai Terracan ஜீப் 01, Land Rover Discovery வாகனங்கள் 02, Mitsubishi Montero ஜீப் 01, Nissan பெற்றல் ஜீப் 03, Nissan வகை கார்கள் 02, Porsche Cayenne ரக வாகனம் 01, SsangYong Rexton ஜீப் 05, LandCruiser Sahara வகை ஜீப் 01, V 08 வாகனங்கள் 06 மற்றும் மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பஸ் ஒன்றும் ஏலமிடப்பட்டிருந்தன. அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த வாகனங்களை கொள்வனவு செய்ய மிகப்பெரிய கேள்வி காணப்பட்டதுடன், வாகன விற்பனையின் மூலம் 200 மில்லியன் ரூபாவை மிஞ்சிய வருமானம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த சந்தர்ப்பத்தில் 108 வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1431995
  10. போர் நிறுத்தத்த‍ை தொடர இந்தியா – பாகிஸ்தான் இணக்கம். மே 10 அன்று இரு நாடுகளும் முடிவு செய்தபடி, எல்லை தாண்டிய அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான இடைநிறுத்தத்தை நீட்டிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன. தொடர்ச்சியான பதட்டங்களுக்கு மத்தியில், இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ஜெனரல்கள் (DGMOs) “நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை” தொடர வியாழக்கிழமை (15) பிற்பகுதியில் முடிவு செய்துள்ளனர். PTI செய்திச் சேவையின் அறிக்கையின்படி, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் டார், பாகிஸ்தான் DGMOs மேஜர் ஜெனரல் காஷிஃப் அப்துல்லா மற்றும் இந்திய DGMOs லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ஆகியோர் வியாழக்கிழமை ஒரு மெய்நிகர் சந்திப்பில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து மேற்கண்ட தீர்மானத்துக்கு வந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. எல்லைக்கு அருகிலுள்ள இராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியதை அடுத்து, ஒரு நாள் கழித்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன, அந்த தாக்குதலை இந்தியா முறியடித்தது. மூன்று நாட்கள் கடுமையான இராணுவ தாக்குதல்களுக்கு பின்னர், மே 10 அன்று பாகிஸ்தான் DGMOs தனது இந்தியப் பிரதிநிதியை அழைத்து எல்லை தாண்டிய அனைத்து வகையான துப்பாக்கிச் சூடுகளையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து, இரு நாடுகளும் இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ஒப்புக்கொண்டன. இருப்பினும், எல்லைக் கிராமங்களில் இருந்து கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான சில மணி நேரங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. https://athavannews.com/2025/1431982
  11. ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்! ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா? அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா? என்பதை அந்நாடே முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகின்றது. அத்துடன் அணு ஆயுத உற்பத்தியை நிறுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தொடர்ந்தும் ஈரானை எச்சரித்து வருகின்றது. இந்நிலையில் கட்டாரின் தலைநகரான தோஹாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வணிகத் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே ‘ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வது அல்லது வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது என இரண்டு தீர்வுகள் மட்டுமே அந்நாட்டுக்கு உள்ளன எனவும், பிரச்சினையை மிருகத்தனமான முறையில் அல்லாமல், புத்திசாலித்தனமான முறையில் தீர்க்கவே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1432005
  12. துருக்கியில் ஜெலென்ஸ்கியை சந்திக்க புட்டின் மறுப்பு! துருக்கியில் வியாழக்கிழமை (15) வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்திக்கும் சவாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்தார். அதற்கு பதிலாக இரண்டாம் நிலை குழுவை திட்டமிட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பினார். அதே நேரத்தில் உக்ரேன் ஜனாதிபதி தனது பாதுகாப்பு அமைச்சர் கியேவின் குழுவிற்கு தலைமை தாங்குவார் என்று கூறினார். 2022 மார்ச் மாதத்திற்கு பின்னர், இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தை இதுவாகும். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கும் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பு இல்லாமல் எந்த நடவடிக்கையும் இருக்காது என்று கூறியதால், ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கையை மேலும் குலைத்தார். பின்னர் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ அந்தக் கருத்தை எதிரொலிக்கும் வகையில் பேசினார். துருக்கிய ரிசார்ட்டான அன்டால்யாவில் செய்தியாளர்களிடம் அவர், இஸ்தான்புல்லில் நடைபெறும் உக்ரேன் பேச்சுவார்த்தைகளுக்கு வொஷிங்டன் “அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார். ரஷ்ய தூதுக்குழுவின் தலைவரான ஜனாதிபதி ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி, வெள்ளிக்கிழமை (16) இஸ்தான்புல்லில் அந் நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு (0700 GMT) விவாதங்களின் தொடக்கத்திற்கு உக்ரேனின் பிரதிநிதிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். இதனிடையே, புட்டின் கலந்து கொள்ளாமல் மொஸ்கோ “அலங்கார” அணியை அனுப்ப முடிவு செய்தது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷ்யத் தலைவர் தீவிரமாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று ஜெலென்ஸ்கி கூறினார். அதேநேரத்தில், பேச்சுவார்த்தைகளைச் சுற்றி “ஒரு நாடகத்தை” நடத்த உக்ரேன் முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. பேச்சுவார்த்தைக்காக இஸ்தான்புல்லுக்கும் செல்லப் போவதில்லை என்றும், போர் நிறுத்தம் குறித்து விவாதிப்பதே தனது குழுவின் பணி என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரேனின் தூதுக்குழு பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையில் இருக்கும் என்றும், அதில் அதன் உளவுத்துறை சேவைகளின் பிரதித் தலைவர்கள், இராணுவத்தின் பொதுப் பணியாளர்களின் பிரதித் தலைவர் மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும் ஜெலென்ஸ்கி பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் உடனடி, நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்தை ஆதரிக்கிறது, ஆனால் புட்டின் முதலில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க விரும்புவதாகக் கூறியுள்ளார், அங்கு அத்தகைய போர் நிறுத்தத்தின் விவரங்கள் விவாதிக்கப்படலாம். அதன் முழு அளவிலான படையெடுப்பிற்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, ரஷ்யா போர்க்களத்தில் வலுவான நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432002
  13. 👉 https://www.facebook.com/100004310980208/videos/1049120133767759 👈 ஹலால் முறையில் கக்கா போவது எப்படி? எப்படி கக்கா போறது என்றுகூட இஸ்லாம் மதத்தில் சொல்லி உள்ளார்கள்.
  14. அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். - கனடாவின் பிரம்டன் நகரபிதா பட்ரிக் பிரவுன்.-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.