Everything posted by தமிழ் சிறி
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
//தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதானல் , தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார்.// இலங்கையில் ஆளும் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலே.... என்ன அயோக்கியத்தனத்தையும் செய்து விட்டு, போலீசில் முறைப்பாடும் கொடுக்கலாம் என்று இருக்கும் போது.... பாதிக்கப்பட்டு, கல்வியை இழந்து... இடத்தை மாற்றி கல்வியை தொடர முற்பட் ட போதும், அதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் உயிரை இழந்தவர்களை நினைக்க பெரும் ஆத்திரமும், வேதனையும்தான் ஏற்படுகின்றது. இந்தப் பெண்ணை... ஆண் உறுப்பை காட்டி பாலியல் வக்கிரம் புரிந்த சங்கரன் என்ற உடுவில் வாத்தியாருக்கு, புத்தளத்திற்கு இடம் மாற்றி தண்டனை கொடுத்து இருக்கின்றார்களாம். கொடுமை.
-
கருத்து படங்கள்
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
😂 🤣- கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை தொடர்பில் தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் CID யில் முறைப்பாடு! கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்றையதினம் (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே தான் அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதானல் , தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் குறித்த நபர் கூறியுள்ளார். கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் , அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர். பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் தனது மகள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431484- வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்
தினவு எடுத்த.... கோவில் திருவிழாக் காரர்களால்.... மக்களுக்கு எவ்வளவு துன்பம். சென்ற கிழமை தாவடி கோவிலில் வெடி கொழுத்தும் போது.... தென்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை மிரண்டு... பொதுமக்களை தாக்கியதில் சிலர் காயமடைந்து, ஒரு பெண்ணிற்கு கால் அகற்ற வேண்டிய நிலை. இப்போ.... கோவில் திருவிழாவிற்கு... வான வேடிக்கை காட்டியதில் சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூடம் எரிந்து நாசமாகி உள்ளது. எமது சமூகம் முட்டாள் வேலைகள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. இந்தக் காசுகளை வைத்து... சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்யப் பாருங்கள். கல்வி கொடுக்கலாம், நோயாளர்களை, முதியோர்களை பார்மரிக்கலாம் என்று எத்தனையோ வேலைகள் உள்ளது. அதை விட்டுட்டு... லூசு வேலைகள் செய்து கொண்டு இருக்காதீர்கள்.- சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் - பிரதான எதிர்க்கட்சி வலியுறுத்தல்
சரோஜா போல்ராஜ் உடனடியாக பதவி விலக வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவிப்பு! சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார். சரோஜா போல்ராஜ் சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் எனவும் எனவே அவர் இந்த அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு பொருத்தமற்றவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தற்போது பேசுபொருளாகியுள்ள கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் பெண்ணாக, தாயாக, ஆசிரியராக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரோஜா போல்ராஜ் பொறுப்பின்றி செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார் . மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான அவர் அமைச்சர் என்ற பொறுப்பிற்கும், அரசாங்கம் என்ற பொறுப்பிற்கும் அப்பால் செயற்பட்டுக் கொள்கின்றார் எனவும் துன்புறுத்தலுக்கு உள்ளான குறித்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என அமைச்சர் குறிப்பிடுதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, குறித்த மாணவி உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என்பதற்காக இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறுகின்றாரா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவதற்காக முயற்சித்த போது சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சியினர் எவரும் தனக்கு கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1431508- இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வாங்கி தீர்மானம்!
இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வாங்கி தீர்மானம்! காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் மோசமான சேதத்தை சந்தித்துள்ளமையினால் உலக வங்கியிடம் கூடுதல் கடன் தொகையை கோர பாகிஸ்தான் ஆலோசித்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா அணுகியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு கடன் உதவி வழங்குதல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வாக்கெடுப்பு நடத்தியதுடன் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா, பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வழங்கப்படும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்குதான் பயன்படுத்தும் எனவும் இந்தியா கண்டனம் தெரிவித்தது. இதேவேளை, உலக வாங்கி விதிகளின்படி தீர்மானங்களுக்கு எதிர்த்து வாக்களிக்கும் (No Vote) செயல்முறை இல்லாததால், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்ய சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1431517- இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் !
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் ! இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃப்;ளே ஒஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் கோல்ட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஒரு வார காலத்துக்குப் பின்னர் இந்தியாவினால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை நடத்த முடியாவிட்டால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் குறித்த போட்டிகளை தங்களால் நடத்த முடியும் என ரிச்சட் கோல்ட் பரிந்துரை முன்வைத்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்தும் சாத்தியம் நிலவுவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1431519- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஊமை குத்தாக விழுந்திருக்குது போலை. 😂- சிரிக்கலாம் வாங்க
செத்தால் தானே சிக்கன். நீங்கள், உயிரோட ஓடித் திரிந்தால் கோழி. 😂- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
மே மாதம், எங்களுக்கு பெரு வலி தந்த மாதம். இப்போ... அந்த வலி தந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு... வலி கொடுக்கின்ற மாதமும் மே மாதம் தான். இலங்கையிலும் உலங்கு வானூர்தி விபத்தில், 6 சிங்களப் படையினர் கொல்லப் பட்டார்கள். காலம்... விசித்திரமானது. பழி வாங்க காத்திருக்கும்.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
😂 🤣- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
😂 🤣- ஜப்பானில் பிரபல பிரேசில் பெண் மரணம்; இலங்கையர் கைது
பிழை பிடிக்கிறதிலை எங்கடை ஆட்கள் விண்ணர். அப்ப... இவர்கள் போராடி இருக்க வேண்டியதுதானே. சேர்ந்து... கை கொடுக்கக் தெரியாது, கிழவிகள் மாதிரி... நொட்டையும், சொட்டையும் சொல்ல வந்து விடுவார்கள். கந்தையா... அண்ணை, வெள்ளிக்கிழமை.. இனி என்ரை வாயை கிளறாதேங்கோ. எனக்கு கெட்ட கோவம் வருகுது.- ஜப்பானில் பிரபல பிரேசில் பெண் மரணம்; இலங்கையர் கைது
தமிழருக்கு நாடு கிடைக்காமல் போனதற்கும்... ஒட்டுக்குழு, ஓணான் குழு தமிழர்தான் காரணம்.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா அனுப்பிய மற்றொரு இஸ்ரேலிய ட்ரோன் பாகிஸ்தானில் அழிக்கப்பட்டது. பாகிஸ்தானால் அழிக்கப்பட்ட இஸ்ரேலிய ட்ரோன்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 35 ஆகும்.- கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
- கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கொழும்பில் தமிழ் பாடசாலை மாணவியை தற்கொலைக்கு தூண்டிய ஆசாமி யார் ? புங்குடுதீவை சேர்ந்த எங்கள் தந்தையின் நெருங்கிய உறவினர் ராஜேஸ்வரி அம்மா. கொழும்பு மருதானை கப்பித்தாவத்தை பிள்ளையார் கோவிலின் அறங்காவலராகவும் நீண்டகாலமாக அவர் செயற்பட்டிருந்தோடு தான ,தர்மங்களை மேற்கொள்வதிலும் சிறந்தவர். மிகச் சிறந்த ஆங்கில ஆசிரியராக விளங்கிய ராஜேஸ்வரி அம்மையாருக்கு உடைமையான கொழும்பு 13 ல் அமைந்துள்ள ராஜேஸ்வரி கல்வி நிலையத்தினை முழுமையாக விழுங்கியவரே இந்த சிவா என்கிற நபர் . ராஜேஸ்வரி அம்மாவுக்கு ஒரு பெண் பிள்ளை மாத்திரமே இருந்ததால் இந்த நபர் வளர்ப்பு பிள்ளை போன்று பராமரிக்கப்பட்டிருந்தார். மகள் அவுஸ்ரேலியாவுக்கு சென்ற பின்னர் ராஜேஸ்வரி அம்மையாரின் முதுமையை பயன்படுத்தி கல்வி நிலையத்தின் உடைமைகள் கைமாற்றப்பட்டிருந்தன . ஊழலை ஒழிப்போம் , நல்லதொரு நாட்டை உருவாக்குவோம் என்று கூவிக்கொண்டு ஜனாதிபதி ஆகிய அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக இந்த நபர் நியமிக்கப்பட்டபோதே இத்தனை தமிழர்கள் அங்கு வாழக்கூடிய நிலையில் இவ்வாறான ஒரு ஆசாமியை ஜேவிபி தலைமை தெரிவு செய்தமை தொடர்பாக நான் பகிரங்கமாக விமர்சித்திருந்தேன். அத்தேர்தலில் திசைகாட்டி பாரிய வெற்றிகளை பெற்றிருந்த போதிலும் இந்நபர் படுதோல்வி அடைந்திருந்தார். இன்று உண்மை எல்லோருக்கும் தெரியவந்துள்ளது. இதேபோன்றுதான் யாழ் மாவட்டத்திலும் நாடாளுமன்ற தேர்தலிலும் , உள்ளூராட்சித் தேர்தலில் பெரும்பாலான சமூக விரோதிகள் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்கள் . அவர்களில் சிலர் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்திலும் இதே போன்றதொரு மோசடியான கல்வி நிலையத்தினை நடாத்திக்கொண்டு லயன்ஸ் கிளப்பை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவரே பேரினவாத கட்சியில் முக்கிய பதவிநிலையில் காணப்படுகின்றார். Kunalan Karunagaran- கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
கொட்டாஞ்சேனை மாணவியின் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வாதப்பிரதிவாதங்கள்! கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி, தற்கொலை சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது. கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் கொட்டாஞ்சேனை பிரத்தியேக வகுப்பின் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உயிரிழந்த மாணவியின் விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூர்ய பாராளுமன்றத்தில் குறிப்பிட்டபோது அதற்கு கருத்து வெளியிட்ட முஜிபுர் எம்.பி , இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரியவில்லை என்று சாடியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு 7, 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்கு இடப்படுவார்களா? என்று கேள்வியெழுப்பிய முஜிபுர் ரஹ்மான் , இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல எனவும் கூறியுள்ளார். இதேவேளை, மாணவியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பந்தப்படட ஆசிரியருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும் இந்த பிரச்சினையில் அரசியல் இலாபம் தேடக்கூடாதென சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நயக்கவும் இதன்போது கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியரை கைதுசெய்யுமாறு நேற்று கொட்டாஞ்சேனை உள்ளிட்ட சில இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர்கள் குழு ஒன்று கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431398- சீனாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த ஜெர்மன் பெண் கைது!
சீனாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த ஜெர்மன் பெண் கைது! ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளம்பெண்ணிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மடிக்கணினியின் கடவுச்சொல்லை பொலிஸாருக்கு வழங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சந்தேக நபரான இளம்பெண் சீனாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1431443- தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நடந்த கதி!
தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நடந்த கதி! தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரச அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டிகே, குற்றவாளியின் வாக்களிக்கும் உரிமை உட்பட அவரது சிவில் உரிமைகளை இரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் ரூ. 20,000 அபராதம் விதித்தார். ஒரு அரசு அதிகாரியாக, குற்றவாளி தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படக்கூடிய பெண்ணிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இந்த சம்பவம் 2025 மார்ச் 31, அன்று நடந்தது. அப்போது தேவையான நிதி உதவியை அங்கீகரிப்பதற்காக பாலியல் இலஞ்சம் கேட்டதாக அந்த அதிகாரி குற்றம் சாட்டப்பட்டார். அவர் அந்தப் பெண்ணை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார், அங்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். விரிவான விசாரணைக்குப் பின்னர், குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக மேல் நீதிமன்றம் தீர்ப்பினை அறிவித்தது. இதன் மூலம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1431447- எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்தது!
எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்தது! துபாயின் எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று நேற்றுபிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இரட்டை இயந்திரங்களை கொண்ட இந்த “ஏர் பஸ் ஏ350” AIR BUS A 350 விமானம், மேம்பட்ட தொழில்நுட்பங்களோடும் திறமைகளோடும் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணிகளுக்காக 312 ஆசனங்கள் காணப்படுவதுடன் அவற்றில் 32 வணிக வகுப்பு ஆசனங்களும் , 21 உயரிய வணிக வகுப்பு ஆசனங்களும், 259 பொருளாதார வகுப்பு ஆசனங்களும் அடங்குகின்றன. அத்துடன் விமானத்தின் ஐந்து திசைகளிலிருந்தும் கமராக்கள் உள்ளதுடன், கையடக்கத் தொலைபேசிகளை (மின்னேற்றம்) சார்ஜ் செய்யும் வசதியும், Wi-Fi தொழில்நுட்பமும் உள்ளமையினால் அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் வழியாக பயணிக்கும்போது தடை இல்லாத இணைய இணைப்பை வழங்கும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமானம் நீண்ட தூர பயணத்திற்கேற்றவாறு பெரிய குளியலறைகள் மற்றும் சிறந்த ஆசனங்களையும் கொண்டுள்ளது. எமிரேட்ஸ் விமான சேவையானது வாரத்திற்கு நான்கு முறை துபாயிலிருந்து இலங்கைக்கு சேவையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431416- இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
ஹெலிகொப்டர் விபத்து: இலங்கை விமானப்படையின் உத்தியோகப்பூர்வ அறிக்கை! சிறப்புப் படையினரின் வழக்கமான பயிற்சி பணிகளின் போது, இன்று காலை (09) மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ஹெலிகொப்டர் மோதியதில் ஆறு வீரர்கள் உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான விமானப்படையின் முழு அறிக்கை பின்வருமாறு: பாதுகாப்புப் படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்கான ஆர்ப்பாட்டத்தின் போது, எண் 7 ஸ்கொயர்னைச் சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது. விரிவான விசாரணையை நடத்துவதற்காக விமானப்படைத் தளபதி ஒன்பது பேர் கொண்ட சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆறு வீரர்கள் உயிரிழந்தனர் – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1431412- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமான நிலையில்! அணு ஆயுதம் ஏந்திய தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக மோசமான சண்டையில், மூன்றாவது நாளாக ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை (09) புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டின. கடந்த மாதம் இந்திய காஷ்மீரில் இந்து சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் “பயங்கரவாத முகாம்கள்” என்று கூறிய பல இடங்களை இந்தியா தாக்கியதிலிருந்து பழைய எதிரிகள் மோதிக் கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்தாலும், இரு நாடுகளும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்களை பரிமாறிக் கொண்டன. அன்றிலிருந்து பரஸ்பர ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஒருவருக்கொருவர் வான்வெளியில் செலுத்தியுள்ளன. வன்முறையில் சுமார் நாற்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளிலும் உள்ள எல்லைப் பகுதிகளை விட்டு கிராம மக்கள் வெளியேறிவிட்டனர், மேலும் பல நகரங்கள் மின் தடை, வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் பீதியடைந்துள்ளன. வியாழக்கிழமை (08) ஒரு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு, மின் விளக்குகள் அணைக்கப்பட்டதால், இந்தியா தனது மதிப்புமிக்க இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியை நிறுத்தியுள்ளது. அதேநேரம், பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த போட்டியை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பதாகவும் ஐ.பி.எல். நிர்வாகமும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் கூட்டாக அறிவித்தன. 1999 ஆம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வரையறுக்கப்பட்ட மோதலுக்குப் பின்னர் நடந்த மிக மோசமான சண்டை இதுவாகும். 1971 ஆம் ஆண்டு முழு அளவிலான போருக்குப் பின்னர் காஷ்மீருக்கு வெளியே உள்ள பாகிஸ்தானின் பிரதான நிலப்பகுதிகளில் உள்ள நகரங்களை இந்தியா முதன்முறையாக குறிவைத்த சந்தர்ப்பமும் இதுவாகும். காஷ்மீரில் உள்ள நாடுகளின் நடைமுறை எல்லையில் பாகிஸ்தான் படையினர் “ஏராளமான போர்நிறுத்த மீறல்களை” மேற்கொண்டுள்ளதாக இந்திய இராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த பகுதி இரு நாடுகளுக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது, ஆனால் இரு நாடுகளாலும் முழுமையாக உரிமை கோரப்படுகிறது. எனினும், இந்திய இராணுவ அறிக்கை “ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்துகிறது” என்றும், இந்திய காஷ்மீருக்குள் அல்லது நாட்டின் எல்லைக்கு அப்பால் உள்ள பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் எந்த “தாக்குதல் நடவடிக்கைகளையும்” மேற்கொள்ளவில்லை என்றும் பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் கூறினார். பாகிஸ்தான் காஷ்மீரில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்லையைத் தாண்டிய கடுமையான ஷெல் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கருத்துக்கான கோரிக்கைக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை. அமிர்தசரஸில் சைரன்கள் வியாழக்கிழமை (08) இரவு காஷ்மீரின் சம்பா பகுதியில் ஒரு “பெரிய ஊடுருவல் முயற்சி” “முறியடிக்கப்பட்டது” என்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை உரி பகுதியில் கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார். “உரி பகுதியில் நடந்த ஷெல் தாக்குதலில் பல வீடுகள் தீப்பிடித்து சேதமடைந்தன… இரவு நேர ஷெல் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார், மூன்று பேர் காயமடைந்தனர்” என்று அந்த அதிகாரி கூறினார். சீக்கியர்களால் போற்றப்படும் பொற்கோயில் அமைந்துள்ள இந்தியாவின் எல்லை நகரமான அமிர்தசரஸில் வெள்ளிக்கிழமை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சைரன்கள் ஒலித்தன, மேலும் குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். விமான நிலையம் மூடப்பட்டதிலிருந்து சுற்றுலாப் பயணிகள் சாலை வழியாக நகரத்தை விட்டு வெளியேறியதால் அங்குள்ள ஹோட்டல்களில் மக்கள் கூட்டம் கடுமையாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தது. இதன்போது ஜெய்ஷ்-இ-மொஹமட் (JM) உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏழு பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படை கொன்றதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளினதும் முன்னெச்சரிக்கை வெள்ளிக்கிழமை, குஜராத்தில் உள்ள பூஜ் உட்பட பிற எல்லைப் பகுதிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. அங்கு பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் வசிப்பவர்களை வெளியேற்ற சுற்றுலா பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் பாலைவன மாநிலமான ராஜஸ்தானின் பிகானேர் பகுதியில் பாடசாலைகள் மற்றும் பயிற்சி மையங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் வசிப்பவர்கள், மேலும் தொலைவில் சென்று உறவினர்களுடன் குடியேறவோ அல்லது அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தங்குமிடத்தைப் பயன்படுத்தவோ பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினர். பதற்றங்களை தணிக்க சர்வதேச அழைப்பு அமெரிக்கா முதல் சீனா வரை உலக வல்லரசுகள் இரு நாடுகளும் பதற்றங்களைத் தணிக்க வலியுறுத்தியுள்ளன. மேலும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை பதற்றத்தைத் தணிப்பதற்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார். சவுதி வெளிவிவகார அமைச்சர் அடெல் அல்-ஜுபைரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தானுக்குச் செல்ல உள்ளார் என்று பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வியாழக்கிழமை இந்தியாவில் இருந்த அல்-ஜுபைர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கரை சந்தித்தார். அவர் “பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்கொள்வது குறித்த இந்தியாவின் கண்ணோட்டங்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாக” கூறினார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா மொஹமட் ஆசிப் நாடாளுமன்றத்தில், இஸ்லாமாபாத் சவுதி அரேபியா, கட்டார் மற்றும் சீனாவுடன் நெருக்கடியை குறைப்பது குறித்து அன்றாடம் பேசி வருவதாக கூறினார். பின்னணி 1947 இல் காலனித்துவ பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, இந்து பெரும்பான்மை நாடான இந்தியாவும் இஸ்லாமிய பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாக மாறியதிலிருந்து, அவர்களுக்கு இடையேயான உறவு பதற்றத்தால் நிறைந்துள்ளது. முஸ்லிம் பெரும்பான்மை நாடான காஷ்மீர், விரோதத்தின் மையமாக இருந்து வருகிறது, மேலும் அவர்கள் அந்தப் பிராந்தியத்திற்காக தங்கள் மூன்று போர்களில் இரண்டை நடத்தியுள்ளனர். https://athavannews.com/2025/1431440- தெரிவானார் புதிய பாப்பரசர்
ஈழப்பிரியன்.... உங்களது படத்தையும், புதிய பாப்பரசரின் படத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்த்தபோது... உங்கள் முகத்தில் இளமையும், உற்சாகமும் தெரிகின்றது. ஆனபடியால்... பாப்பாரசருக்குப் பிறகுதான் நீங்கள். 😂 - ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.