Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இந்திய தலைநகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய தலைநகர் புது டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். செங்கோட்டை மற்றும் குதுப் மினார் போன்ற அடையாளச் சின்னங்களுக்கு அருகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்தப் பகுதிகளில் அதிகளாவன பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மேம்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-நஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகிய நிலையில் ஜம்மு-காஷ்மீரின் மேற்கு எல்லையில் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் ததாக்குதல்களை பாக்கிஸ்தான் நடத்தியதுடன் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431373
  2. ரஷ்யா – உக்ரேன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு. அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் ரஷ்யா- உக்ரேன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். “அமெரிக்க ஜனாதிபதியாக , ஐரோப்பியர்களுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் அமைதியைக் கொண்டுவர தான் உறுதியாக இருப்பதாகவும், அது ஒரு நீடித்த அமைதியாக இருக்கும் என்றும் ட்ரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரேன் இந்த நிமிடமே தயாராக இருப்பதாகத் ட்ரம்ப்பிடம் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமையன்று (மே 8) அமெரிக்க ஜனாதிபதியுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது செலன்ஸ்கி அவ்வாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துடன் தொடங்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது தயார்நிலையை ரஷ்யா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் செலன்ஸ்கி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விருப்பம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431437
  3. இலங்கையர் என்று வீரகேசரி சொன்ன படியால்… அவர் சிங்களவராகத்தான் இருப்பார். தமிழர் என்றால்… அவரின் பெயர், ஊர், விலாசம் எல்லாம் தந்து இருப்பார்கள்.
  4. முன்னாள் ஜனாதிபதியின் 23 வெளிநாட்டு பயணங்களுக்கு பாரிய செலவு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 1.27 பில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சரின் கூற்றுப்படி, முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க 2022 இல் 4 வெளிநாட்டுப் பயணங்களையும், 2023 இல் 14 வெளிநாட்டுப் பயணங்களையும், 2024 இல் மேலும் 5 வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டார். 2022 ஆம் ஆண்டில் 63 மாநில அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்றதாகவும், 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 252 மாநில அதிகாரிகள் பங்கேற்றதாகவும், 2024 ஆம் ஆண்டில் 111 மாநில அதிகாரிகள் சுற்றுப்பயணங்களில் பங்கேற்றதாகவும் அவர் மேலும் கூறினார். ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளாத, ஆனால் அரச அதிகாரிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட 19 வெளிநாட்டு விஜயங்களுக்கு மொத்தம் ரூ.19.8 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1431305
  5. கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப்பாக தேர்வு! கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் இவர் ஆவார். அவர் போப் லியோ XIV என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப் லியோ XIV ஆக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு உலகம் முழுவதும் நம்பிக்கையுடன் கூடிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான நாடுகளின் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 69 வயதான ரொபர்ட் பிரீவோஸ்ட், செயிண்ட் பீட்டர் சிம்மாசனத்தின் 267 ஆவது தலைவராக இருப்பார். போப் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்கர் இவர்தான். எனினும், அவர் பெருவில் ஒரு மிஷனரியாக பல ஆண்டுகள் கழித்ததன் காரணமாக, அங்கு பிஷப்பாக மாறுவதற்கு முன்பு லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு கார்டினலாகக் கருதப்படுகிறார். ஸ்பானிஷ் மற்றும் பிராங்கோ-இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு 1955 இல் சிகாகோவில் பிறந்த பிரீவோஸ்ட், பலிபீடப் பையனாகப் பணியாற்றினார். 1982 இல் பாதிரியாராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் பெருவுக்குச் சென்றாலும், அவர் தனது சொந்த நகரத்தில் ஒரு போதகராகவும், ஒரு முன்னோடியாகவும் பணியாற்ற அமெரிக்காவிற்குத் தொடர்ந்து திரும்பி வந்தார். அவர் பெருவியன் குடியுரிமை பெற்றவர், மேலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுடன் பணியாற்றிய மற்றும் தொடர்புகளை பேண உதவிய ஒரு நபராக அன்புடன் நினைவுகூரப்படுகிறார். அவர் உள்ளூர் திருச்சபை போதகராகவும், வடமேற்கு பெருவில் உள்ள ட்ருஜிலோவில் உள்ள ஒரு செமினரியில் ஆசிரியராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றினார். லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஆயர்களுக்கான டிகாஸ்டரியின் தலைமைப் பொறுப்பாளராக அவர் வகித்த உயர் பதவி காரணமாக அவர் கார்டினல்களுக்கு நன்கு அறியப்பட்டவர். இந்த அமைப்பு ஆயர்களைத் தேர்ந்தெடுத்து மேற்பார்வையிடும் முக்கியமான பணியைக் கொண்டுள்ளது. 2023 ஜனவரியில் அதே நேரத்தில் அவர் பேராயரானார். மேலும் சில மாதங்களுக்குள் பிரான்சிஸ் அவரை ஒரு கார்டினலாக ஆக்கினார். தன்னை கத்தோலிக்க திருச் சபையின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்காக சக கார்டினல்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இத்தாலியன், ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் மொழிகளில் பேசினார். மறைந்த போப் பிரான்சிஸைப் பற்றியும் அவர் அன்புடன் பேசினார், மேலும் கூட்டத்தை ஜெபத்தில் வழிநடத்தி முடித்தார். சிஸ்டைன் தேவாலயத்தின் மேல் உள்ள புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறிய பின்னர் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் தோன்றினார். இது உள்ளே இருந்த 133 கார்டினல்கள் ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கிறது. https://athavannews.com/2025/1431327
  6. சீனாக்காரனின் வில்லுப்பாட்டு நல்லாய் இருக்கு, 😂 அவனும்… எங்களைப் போல் இந்தியா மீது, பயங்கர கடுப்பில் இருக்கின்றான். 🤣
  7. நிச்சயமாக அவர் ஒரு வெள்ளைத் தோலுடையவராகத்தான் தான் இருப்பார். வத்திக்கானிலும் நிறவெறி உள்ளது என்பது, கசப்பான உண்மை. பாப்பரசர் தெரிவை... ஒவ்வொரு கண்டமாக, சுழற்சி முறையில் கொண்டு வர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
  8. அட... இஞ்ச பார்றா.... யாருக்கு, யார் எச்சரிக்கை விடுக்கிறது. இவங்களின் காமெடி தாங்க முடியவில்லை.
  9. ஏராளன்.... எங்களிடம் இனி இழக்க எதுவும் இல்லை. நாங்கள் இந்தியனுக்கு நல்லெண்ணம் காண்பித்தாலும், அவன் எம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆதலால், கிடைக்கும் சந்தர்ப்பங்களில்.... இந்தியனை துகில் உரிந்து விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
  10. அதிலை 5 பரலோகம் போட்டுதாம். இவர்கள்... இஸ்ரேல், ரஷ்யா மாதிரி தொடர்ந்து தாக்கிக் கொண்டு இருக்கலாம் என்று நினைத்து இருப்பார்கள். பாகிஸ்தான் ஏற்கெனவே எல்லாவற்றையும் எதிர்பார்த்து நிர்மூலமாக்கி விட்டார்கள். இனி இந்தியா... தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் வெளியில் நடமாட வேண்டும்.
  11. பிளடி... அன்ரி இண்டியன், சேம் சைட் கோல் போட்டிருக்கிறான்.
  12. இந்தியன் தேவையில்லாமல் செய்த வேலையாலை... ரபேல் விமானத்தின்ரை பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி , அதன் விற்பனை விலையையையும் பாதியாக குறைத்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஒரு நாளும்... இந்தியனுக்கு ஆயுதம் விற்கக் கூடாது. பாவம் பிரான்ஸ். உள்ளதையும் கெடுத்தானாம்... நொள்ளைக் கண்ணன். 😂
  13. காணொளி. 👉 https://www.facebook.com/watch?v=1798746520691915 👈 தாவடி - ஆலயத்திற்கு கொண்டு வந்த யானை மிதித்து பக்தர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள ஆலயத்தில் நேற்றைய தினம் மஞ்ச உற்சவம் இடம் பெற்றுள்ளது. இதன்போது தெற்கில் இருந்து யானை கொண்டு வரப்பட்டு மஞ்சத்தின் முன்பாக அழைத்து வரப்பட்டுள்ளது. மஞ்சம் முன்பாக தீப்பந்தங்களை எடுத்துச் சென்ற சமயம் யானை மிரண்டதில் இரு பெண்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்.com உங்களுக்கு பணம் மிஞ்சினால், அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். யானையை கொண்டு வந்து பகட்டுக் காட்டி... இருக்கின்ற மக்களை கொலை செய்யாதீர்கள்.
  14. இந்தியப் பயங்கரவாதிகளுக்கு... பாகிஸ்தான் மற்றைய முஸ்லீம் நாடுகளுடனும், சீனாவுடனும் இணைந்து... தலை நிமிர முடியாத அளவிற்கு தாக்குதல் நடத்த வேண்டும். அதற்காக வட இந்தியாவில் 10 அணு குண்டை போட்டாலும் குற்றம் இல்லை. இந்த உலகத்தில்.... இனி இந்தியா என்ற உதவாக்கரை நாடே இருக்கப் படாது.
  15. இந்தியா என்றுமே.... நேர்மையான முறையில், போரை நடத்தியது இல்லை. முதுகில் குத்தும் நாடு இந்தியா... என்பதனை, ஈழப் போரின் போது நேரில் கண்டு கொண்டோம். பாகிஸ்தானில்... பயங்கர வாதிகள் கொலை என்று சொல்லி, அப்பாவி மக்களைத்தான் கொன்று இருப்பார்கள். இந்திய ஊடகங்களும்... அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சொல்வதில்லை. ஏனென்றால்.... அவர்களை ஏற்கெனவே விலைக்கு வாங்கி, வாயை அடைத்து வைத்து இருக்கின்றார்கள். ஆனால்... உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்றும், ஊடக சுதந்திரம் என்றும்... பொய்க்கு மேல் பொய் சொல்லி... மக்களையும் அடி முட்டாள்களாக்கி உள்ளார்கள். கொரோனாவுக்கு.... வீதியில் நின்று ஒலி எழுப்பினால், கொரோனா போய் விடும் என்று... முழு நாடும் வீதியில் நின்று பைத்தியம் ஆடிய மக்கள் உள்ள நாடு அது.
  16. இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு! இந்தியாவில் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது. இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலம் மீது பாகிஸ்தான் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. காஷ்மீரின் பாரமுல்லா, உரி பூஞ்ச் பகுதிகளில் கனரக பீரங்கிகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், ரஜோரி, மெந்தார் உள்ளிட்ட நகரங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், இதற்கு இந்திய ஆயுதப்படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. எல்லையில் இருந்து ஏறக்குறைய 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லாகூரில் இராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில், லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பிரிவான எச்.கியூ.-9 தாக்கி அழிக்கப்பட்டது. பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பாகிஸ்தானின் முயற்சியையும் இந்தியா முறியடித்து உள்ளது. இதேபோன்று டிரோன்களை கொண்டு தாக்க முயன்ற அந்நாட்டு முயற்சியையும் இந்திய ராணுவம் முறியடித்து உள்ளது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்கள் தகர்க்கப்பட்டன. வான் தடுப்பு பிரிவையும் இந்தியா தாக்கி அழித்தது. காலையில் இருந்து இந்தியாவின் இந்த பதிலடி தொடர்ந்து வருகிறது. இதில்,ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் உள்ளிட்ட 15 நகரங்களை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப்பின் ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் ஆகிய நகரங்களிலும், காஷ்மீரின் ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட் உள்ளிட்ட நகரங்களிலும் தாக்குதலை பாகிஸ்தான் தீவிரப்படுத்திய நிலையில், அதனை இந்தியா முறியடித்து உள்ளது. இந்தியா மீது இதுவரை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இதுவரை 3 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், ஒப்ரேஷன் சிந்தூர் தொடர்ந்து வருகிறது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1431308 ################################### இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன. 😂
  17. மாணவி அம்ஷியின் மரணம் தொடர்பில் அரசியிடம் நீதி கோரிய மனோ கணேசன்! டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ‘ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதபோராளிளோ, கலககாரர்களோ அல்ல, அநீதியை தட்டிக்கேட்க வந்தவர்கள் எனவும் மனோ கணேசன் தெரிவித்துத்துள்ளார். அத்துடன் மாணவி படித்த தனியார் கல்வி நிலையத்தின் நிறுவனர் உங்கள் கட்சி சார்ந்தவர் எனவும், இதனால் தான் மக்களுக்கு சந்தேகம் வருகின்றது எனவும், எனவே அரசியல் அழுத்தமில்லாத நீதியான விசாரணை வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் குறித்த விடயம் தொடர்பில் அரசு ஒரு விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். Athavan Newsமாணவி அம்ஷியின் மரணம் தொடர்பில் அரசியிடம் நீதி கோரிய மனோ...டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கண...
  18. கொழும்பில் பாடசாலை மாணவி மரணம்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை! கொழும்பில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாடசாலை அதிபரை விளக்கம் கேட்டு வரவழைத்ததாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது, மேலும் அது கிடைத்தவுடன் தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது. அதேநேரம், தற்போது மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவிக்கு நீதி கோரி, பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல மகளிர் பாடசாலையின் முன் இன்று (08) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலையின் ஆண் ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர். குற்றவாளியைப் பாதுகாத்ததாக குறித்த பாடசாலையின் அதிபர் மீதும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன், அவருக்கு எதிரான அதிருப்தியை வெளியிட்டனர். கொழும்பின் பம்பலப்பிட்டியில் உள்ள டூப்ளிகேஷன் வீதியை போராட்டக்காரர்கள் பாடசாலைக்கு முன்னால் மறித்துக்கொண்டிருந்ததால், பொலிஸார், கலவரத் தடுப்பு காவல்துறை அதிகாரிகளை அந்த இடத்திற்கு அனுப்பினர். குறித்த மாணவியின் மரணத்திற்கு பின்னர் ஊடகங்களிலும் பேசிய அவரது பெற்றோர், பம்பலப்பிட்டியில் உள்ள அவரது முன்னாள் பாடசாலை ஆண் ஆசிரியர் ஒருவரால் தமது மகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். மேலும், அந்தச் சிறுமி இறப்பதற்கு முன்பு, ஒரு தனியார் கல்வி நிலையத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. https://athavannews.com/2025/1431297
  19. 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவிப்பு! பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு ஒரே இரவில் 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றுள் ஒன்று கிழக்கு நகரமான லாகூருக்கு அருகிலுள்ள ஒரு இராணுவ இலக்கைத் தாக்கியது. இதனால் வீரர்கள் இழப்புக்களை சந்தித்ததாகவும், காயமடைந்ததாகவும் பாகிஸ்தானிய அதிகாரிகள் வியாழக்கிழமை (08)தெரிவித்தனர். ஒரு நாள் முன்பு பாகிஸ்தான் இடங்களில் இந்திய ஏவுகணைத் தாக்குதல்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 31 பொது மக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இதற்கிடையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இரு நாடுகளின் அதிக இராணுவமயமாக்கப்பட்ட எல்லைக்கு அருகிலுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை இந்தியா வெளியேற்றியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்றதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. அவர்களில் பெரும்பாலோர் இந்திய இந்து சுற்றுலாப் பயணிகள். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது, ஆனால் இஸ்லாமாபாத் அதை மறுத்துள்ளது. பாகிஸ்தானில் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் கூறுகையில், இந்திய ஆளில்லா விமானம் லாகூர் அருகே இரவு முழுவதும் நான்கு வீரர்களைக் காயப்படுத்தியது மற்றும் ஒரு இராணுவ இலக்கை ஓரளவு சேதப்படுத்தியது. அதே நேரத்தில் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்த 12 இந்திய ஆளில்லா விமானங்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. தாக்குதல் குறித்து அவர் மேலும் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. தெற்கு சிந்து மாகாணத்தில், மக்கள் வசிக்கும் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் இடிபாடுகள் விழுந்ததில் ஒரு குடிமகன் உயிரிழந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்று அவர் மேலும் கூறினார். இந்திய அதிகாரிகள் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. லாகூரில், இந்திய எல்லையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு விமானநிலையமான வால்டன் விமான நிலையம் அருகே ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தானிய காவல்துறை அதிகாரி மொஹமட் ரிஸ்வான் தெரிவித்தார். இந்த விமானநிலையத்தில் இராணுவ நிலைகளும் உள்ளன. பஞ்சாப் மாகாணத்தின் பிற நகரங்களிலும் இரண்டு கூடுதல் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் தலைநகரம் லாகூர் ஆகும். பஞ்சாபின் சக்வால் மாவட்டத்தில், விவசாய நிலத்திற்குள் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மாவட்ட காவல்துறைத் தலைவர் குலாம் மொஹியுதீன் அது யாருடைய ட்ரோன் என்று கூறவில்லை. அதிகாரிகள் ட்ரோனின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து விசாரித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1431284

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.