Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்! குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது இதேவேளை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428392
  2. சஜித் பிரேமதாச... ஒற்றைக்கண் சிவராசனை நினைவூட்டும் விதமாக, ஒற்றைக்கண் புலியின் படத்தை, நரேந்திர மோடிக்கு அன்பளிப்பு செய்ததற்கு விளக்கம் கேட்கப் போகிறார்கள் போலுள்ளது. 😂 ஒற்றைக்கண்... யானை, மான், குரங்கு, கழுகு, புறா எல்லாம் இருக்க, புலியை அன்பளிப்பு செய்தால்... கோவம் வரும்தானே. 🤣
  3. வெளிநாட்டு தலையீடு தேவையில்லை, உள்ளூர் பொறிமுறை மூலம் தீர்வை பெறுவோம் என்று ஐ.நா.வில் சொல்லி விட்டு வந்த சுமந்திரனும் அவரது கட்சியும்… இது சம்பந்தமாக என்ன செய்ய உத்தேசம்.
  4. அண்ணாமலையின் அதிரடி அரசியல், நயினார் நாகேந்திரனிடம் இராது என நினைக்கின்றேன். அமித்ஷாவின் ஆசைக்கு, ஒப்புக்கு சப்பாணியாக இருக்க வேண்டியதுதான். அடுத்த ஒரு வருடத்தில் பா.ஜ.க. விற்கு புதிய தலைவர் தெரிவு செய்ய வேண்டி வரும்.
  5. பா.ஜ.க. வுடன் கூட்டணி வைப்பதால், அ.தி.மு.க. விற்கு கிடைக்கின்ற வாக்கும் இல்லாமல் போகப் போகின்றது.
  6. நன்றாக இருக்கும் அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பத்தினரும், விசாரணைக்கு அழைத்ததும் உடனே மருத்தவமனையில் போய் சிகிச்சை பெறுவது ஏன்? அப்படி அவர்களுக்கு மட்டும் ஏற்படும் அந்த நோயின் பெயர் என்ன? யாருக்காவது தெரியுமா?😂 தோழர் பாலன்
  7. பாலஸ்தீனத்தை வரும் ஜூன் மாதத்தில் தனி நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ் திட்டம். நான் அதை ஒற்றுமைக்காகவோ, சிலரை மகிழ்விப்பதற்காகவோ செய்யவில்லை. ஒரு கட்டத்தில் அது நியாயமாக இருக்கும் என்பதால் அதனைச் செய்கிறேன் என்று அதிபர் இமானுவேல் மேக்ரான் தனியார் செய்தி முகமைக்கு பேட்டி. Sultanul Areef N
  8. உண்மையை ஒப்புக் கொண்ட பொன்முடிக்கு நன்றி. 👍 திராவிடத்தை பரப்ப... எத்தினை மதில் ஏறி, குதிக்க வேண்டி இருந்திருக்கு. 21´ம் பக்கத்திற்கு பிறந்தவர்கள்.
  9. பழங்காலத்தில் இதைத் தான் செய்து கொண்டு இருந்தார்கள். மீண்டும் பழங்காலத்திற்கு செல்வோம். இதுவே நல்லது
  10. குடும்பமே பலி! சீமென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகொப்டர் விபத்தில் பரிதாபமாக பலியாகினர். Simense நிறுவன CEO அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் வைத்து ஹெலிகொப்டர் விபத்தில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. விபத்துக்கு ஹெலிகொப்டரின் தொழினுட்ப பிழைகள் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. Vaanam.lk
  11. பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வாழிபாடு! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டார். இதேவேளை பிரதமர் ஆலயத்திற்கு வருகை தர விருந்த நிலையில் அதிகாலை வேளை ஆலய சூழலில், பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்த நிலையில் பலரும் விசனம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428362
  12. முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கு விசாரணைக்காகவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபை நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஆணையம் அவரிடம் விசாரிக்கும். பிரதமராக இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன், மாகாண சபை நிதியை நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பதைத் தடைசெய்து திறைசேரி செயலாளர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டதாக ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் தெரிவித்தார். இந்த முடிவு குறித்து அப்போது ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மற்றும் பிற மாகாணத் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் அத்தகைய வைப்புத்தொகை திரும்பப் பெறப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1428357
  13. ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு. கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜங்க அமைச்சர் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால நேற்று சபையில் தெரிவித்தார். படலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணை அறிக்கை மீதான நேற்றைய விவாதத்தின்போதே அவர் இத் தகவல்களை வழங்கினார். இதன்போது குறித்த தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த விசாரணையை தாம் ஒருபோதும் மூடி மறைக்கப் போவதில்லை எனவும், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேயபால மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1428306
  14. 26/11 மும்பை தாக்குதல்; தஹாவூர் ராணாக்கு 18 நாட்கள் தடுப்பு காவல்! அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை (Tahawwur Rana) 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் காவலில் வைக்க சிறப்பு டெல்லியின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் 20 நாட்கள் காவலில் வைக்கக் கோரியதை அடுத்து, சிறப்பு நீதிபதி சந்தர் ஜித் சிங் நேற்று (10) நள்ளிரவு இந்த உத்தரவினை பிறப்பித்தார். 2008 மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட 64 வயதான ராணா, விசேட விமானம் மூலமாக நேற்று மாலை 6.30 மணியளவில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்தை வந்தடைந்த அவரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கைது செய்தனர். அமெரிக்காவில் நீண்ட கால சட்ட நடைமுறையைத் தொடர்ந்து அவரது நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய-அமெரிக்கரான தஹாவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் மற்றும் 166 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற 2008 மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்தியாவில், ராணா மீது குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. https://athavannews.com/2025/1428317
  15. நியூயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்து! நியூயோர்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெலிகொப்டரில் பயணித்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஸ்பெயினைச் சேர்ந்தது என்றும் ஆறாவது நபர் விமானி என்றும் நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வியாழக்கிழமை (10) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1428323

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.