Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அலுவலகத்தில் பெண்களுடன் நெருங்கிய தொடர்பு; மூத்த இந்திய பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்! தனது அலுவலகத்தில் பெண்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து காவல் துறை தலைமை பணிப்பாளர் (DGP) அந்தஸ்துள்ள மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை கர்நாடக அரசு இன்று (20) பதவி நீக்கம் செய்தது. இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டவர் டிஜிபி ராமச்சந்திர ராவ் ஆவார். பொது அலுவலகத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் நடத்தை குறித்து அதிகரித்து வரும் சர்ச்சைகள் மற்றும் பொதுமக்களின் சீற்றத்திற்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சர்ச்சை கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அலுவலகத்தை எட்டியதும், அவர் திங்களன்று சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெற்றார். ஒரு நாள் கழித்து, அதாவது இன்று மாநில நிர்வாகம் மூத்த காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது. சர்ச்சைக்கு மத்தியில், இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்க ராமச்சந்திர ராவ் இந்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்தார். எனினும், அந்த சந்திப்பு அவரது இடைநீக்கத்தைத் தடுக்க முடியவில்லை. https://athavannews.com/2026/1460632
  2. ஐ.நா. சபைக்கு மாற்றாக புதிய அமைப்பை தொடங்கிய ட்ரம்ப்: ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக அழைப்பு. புதுடெல்லி: ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. போரால் பாதிக்கப்பட்ட காசா நகரை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஐ.நா. சபை பயனற்றது என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்த சூழலில் ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அவர் தொடங்கி உள்ளார். புதிய அமைப்பின் தலைவராக அதிபர் ட்ரம்ப் பொறுப்பேற்று உள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அப்போலோ குளோபல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ரோவன், இந்திய வம்சாவளியை சேர்ந்த உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ராபர்ட் கேப்ரியேல் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிய சர்வதேச அமைப்பில் உலக நாடுகள் நிரந்தர உறுப்பினராக சேரலாம். இதற்கு தலா ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்த புதிய அமைப்பு காசாவின் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடும். இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் ‘‘போர்டு ஆப் பீஸ்’’ அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி டேனியல் போர்டி கூறும்போது, “உலக விவகாரங்களில் தலையிட அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறுக்கு வழி’’ என்று குற்றம் சாட்டினார். https://www.hindutamil.in/news/world/president-trump-launched-new-organization-as-alternative-to-uno
  3. சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன். இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியூடான இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை மன்னாரில் இருந்து நாளை ஆரம்பிக்க உள்ளார். வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து,மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தனது பயணம் குறித்து தெளிவு படுத்தினார். இதன் போது இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சக்கர நாற்காலி யூடாக இலங்கை பூராகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும்,குறிப்பாக,இலங்கை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகள் மனிதாபினான உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் புலம் பெயர் உறவுகளும் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட உள்ளது. மேலும் இலங்கை மக்கள் அனைவரும் அனர்த்தத்தின் போது எவ்வித வேறுபாடுகள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இலங்கை நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், சமூக நல்லெண்ணத்தையும் நோக்காக கொண்டு குறித்த பயணம் ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலும் படித்த மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ளனர்.அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன் வைத்து குறித்த பயணம் மன்னாரில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.இலங்கை முழுவதும் சுமார் 1500 கிலோ மீற்றருக்கும் அதிகமான கடற்கரையோரமாக குறித்த பயணம் முன்னெடுக்கப்பட உள்ளது. எனவே மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து,மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது பயணத்தின் நோக்கத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460578
  4. கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை ! ஐரோப்பிய பங்காளிகள் மீது வரிகளை விதிப்பதில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தடுக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், வரிகள் தொடரப்பட்டால் பதிலடி நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பரந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான டென்மார்க், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து, பிரித்தானியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு வரிகளை அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க அனுமதிக்கும் வரை இந்த வரிகள் அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை (22) பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் அவசர உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இது தொடர்பான தீர்மானங்களைப் பற்றி விவாதிக்க உள்ளனர். https://athavannews.com/2026/1460542
  5. சீனா... தனது நாட்டில், அதிக முஸ்லீம்களை குடியேற்றினால்... குழந்தை பிறப்பு வீதம், சடாரென... ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும்.
  6. யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். அதன் போதே , 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் , 203 மாணவர்கள் காணப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து , அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மருத்துவபீடத்தினர் தெரிவிக்கையில், மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த யுவதியும் மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து , விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது https://athavannews.com/2026/1460463
  7. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்! கொள்கை உறுதிமொழி கண்காணிப்பு முயற்சியான வெரிட்டே ரிசர்ச்சின் “அனுர மீட்டர்” இன் அண்மைய புதுப்பிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கலவையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, 2025 நவம்பர் நிலவரப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 10 வாக்குறுதிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. அதே நேரத்தில் ஒன்பது வாக்குறுதிகளில் எந்த முன்னேற்றமும் பதிவு செய்யப்படவில்லை. ஒரு வாக்குறுதி தோல்வியுற்றதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. “அனுர மீட்டர்”, ஜனாதிபதியின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் இருந்து பெறப்பட்ட 30 முக்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது. இந்த மதிப்பீட்டில் 2026 தேசிய பட்ஜெட் வரையிலான முன்னேற்றங்கள் அடங்கும். டித்வா சூறாவளியின் தாக்கத்திற்கு முன்பே இந்தப் பகுப்பாய்வு முடிக்கப்பட்டது. கண்காணிக்கப்பட்ட வாக்குறுதிகள், அவற்றின் உயர் மட்ட பொது நலன் மற்றும் தேசிய முக்கியத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அவை பொருளாதார சீர்திருத்தம், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய கொள்கைப் பகுதிகளை உள்ளடக்கியது. தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை Manthri.lk பராமரிக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கண்காணித்த “மைத்ரி மீட்டர்” மற்றும் “கோட்டா மீட்டர்” போன்ற முந்தைய உறுதிமொழி கண்காணிப்பு திட்டங்களை அனுர மீட்டர் பின்பற்றுகிறது. தற்போது கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில், ஏழு வாக்குறுதிகள் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நம்பும் மேலதிக வாக்குறுதிகளை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கும் இந்த தளம் அழைப்பு விடுத்துள்ளது. Manthri.lk என்பது இலங்கையின் ஒரே நாடாளுமன்ற கண்காணிப்பு தளமாகும், மேலும் இது நாட்டின் மிகப்பெரிய சுயாதீன ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1460479
  8. ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து. 21 பேர் உயிரிழப்பு. தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. அதிவேக ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கத்து தண்டவாளத்தில் மோதியதாக ஸ்பெயினின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் ஹுயெல்வா நோக்கி எதிர்த் திசையில் பயணித்த மற்றொரு ரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. குறித்த விபத்தில் சுமார் 73 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நாடு பாரிய துக்கத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 300 க்கும் அதிகமான பயணிகள் அந்த ரயில்களில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் ஸ்பெயினின் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1460418
  9. வணக்கம் கல்யாணசுந்தரம். வருக. 🙏 உங்களை அன்புடன் வரவேற்பதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். 🙂
  10. உண்மையில்... தமிழரசு கட்சியை சிதைத்துக் கொண்டு இருக்கும், சுத்துமாத்து சுமந்திரனைத் தான் வெளியேற்ற வேண்டும். இந்த, நரகத்தின் முள்ளு தமிழரசு கட்சியில் இருந்தால், இன்னும் பல தோல்விகளை பாரம்பரியமான தமிழரசு கட்சி சந்திக்க வேண்டி வரும். பல தோல்விகளை சந்தித்த சுமந்திரனை... உடனே, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்.
  11. அந்தம்மாவுக்கு "அல்வா"தான் கிடைக்கப் போகுது போலை.
  12. வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன். “முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள். ஆனால் முதன்முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்..” இது, அனுர யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியது. அவர் அவருடைய பேச்சின் போக்கில் வடக்கு,யாழ்ப்பாணம் போன்ற வார்த்தைகளை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி விளங்காமல் கதைத்துவிட்டுப் போகிறார் என்று எடுத்துக் கொள்வதா?அல்லது அரசாங்கம் திட்டமிட்டு வடக்கில் தன் கவனத்தைக் குவிக்கிறது என்பதனை இது காட்டுகிறது என்று எடுத்துக்கொள்வதா? ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் வடக்கிற்கு மிகக்குறுகிய காலத்தில் அதிக தடவை விஜயம் செய்த ஒரே ஜனாதிபதி அனுரதான்.அப்படித்தான் அவருடைய அமைச்சர்களும். அரசாங்கம் வடக்கை நோக்கி தன்னுடைய முழுக் கவனத்தையும் குவிப்பதை இது காட்டுகிறது. இது இயல்பானது அல்ல. ஒப்பிட்டுப் பார்த்தால் இதே அளவு கவனக்குவிப்பு கிழக்கில் இல்லை.வடக்கின் விவகாரங்களைக் கையாள்வதற்கு என்று அமைச்சர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.பெரும்பாலான அமைச்சர்கள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள்.அமைச்சர்கள் அல்லது அரச பிரதானிகள் கலந்துகொள்ளும் அரச நிகழ்வுகள் அடிக்கடி வடக்கில் நடக்கின்றன.இவை யாவும் அரசாங்கம் வடக்கை நோக்கி அதன் கவனத்தைத் திட்டமிட்டுக் குவிக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன. “பார்க்காத,பழகாத எங்களை நம்பினீர்கள்.உங்களை நாங்கள் கைவிட மாட்டோம்” இதுவும் யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் ஜனாதிபதி கூறிய வார்த்தைகள்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதனை அது காட்டுகிறது.அந்த வெற்றியை தொடர்ந்து தக்கவைப்பதற்கும்,அடுத்த மாகாண சபையில் அந்த வெற்றியை மேலும் விஸ்தரிப்பதற்கும் திட்டமிட்டு அரசாங்கம் தன் முழுக் கவனத்தையும் வடக்கின் மீது குவிக்கின்றது. அண்மையில் உத்தியோகப்பற்றற்ற விதமாக கிராமமட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி,தேசிய மக்கள் சக்திக்கு கிட்டத்தட்ட முப்பது விகிதமான வாக்கு வங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக கைபேசி செயலிகளின் கைதிகளாகக் காணப்படும் தலைமுறையினர் மத்தியில் அனுரவுக்கு அதிகம் ஆதரவு காணப்படுகிறது. அந்த ஆதரவைத் தக்கவைக்கும் விதத்தில் அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணியானது அனுரவை தொடர்ந்தும் தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் கதாநாயகராகக் கட்டியெழுப்பி வருகிறது. தற்பொழுது அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் “பிரஜா சக்தி” என்ற கிராமமட்ட செயல்திட்டமும் அரசாங்கம் அதன் வாக்கு வங்கியை வளர்க்கும் நோக்கிலானது என்று சந்தேகிக்கப்படுகிறது.இதுதொடர்பாக அண்மையில் சுமந்திரன் ஒரு காணொளியில் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார். அரசாங்கம் அதன் அரச வளங்களை பயன்படுத்தி கிராம மட்டத்தில் பிரஜா சக்தி என்ற கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.ஆனால் அக்கட்டமைப்பு இறுதியிலும் இறுதியாக தேசிய மக்கள் சக்தி என்ற கட்சிக்கு சேவகம் செய்கின்ற,அந்தக் கட்சியின் ஆதரவுத் தளத்தைக் கட்டிஎழுப்புகின்ற ஒன்றுதான் என்று அண்மையில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன், நல்லூர் திவ்யஜீவன சங்க மண்டபத்தில் ஆற்றிய உரை ஒன்றில் தெரிவித்திருந்தார். இது ஏறக்குறைய மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்,பசில் ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட அரச கட்டமைப்புகளைப் போன்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட ஏழு வெவ்வேறு அரசு அலுவலர்கள், அரச சேவை என்ற பெயரில் தாமரை மொட்டுக் கட்சிக்காக கிராம மட்டங்களில் வேலை செய்தார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. அரச வளங்களைப் பயன்படுத்தி, அரச செலவில், அரச காரியம் என்ற போர்வையில், அவர்கள் கட்சி வேலையைச் செய்தார்கள். கட்சியைக் கட்டியெழுப்ப முயற்சித்தார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தியும் அத்தகைய நோக்கத்தைக் கொண்டது என்று தமிழ்க் காட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதாவது அரசாங்கம் வடக்கில் அதன் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டு உழைக்கின்றது.இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டி வரலாம் என்று அவர்களுக்குத் தெரிகிறது.தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படும் வாய்ப்புகள் குறைவு என்பதையும் அவர்கள் ஊகிக்கின்றார்கள். குறிப்பாக,உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி இரண்டாக நிற்கின்றது. கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளும் பகிரங்கமாக ஒருவர் மற்றவரைத் தாக்கி விமர்சித்து வருகின்றன.அரசியலமைப்பு பேரவையில் சிறீதரன் அரசாங்கத்திற்கு ஆதரவாக எட்டு தடவைகள் வாக்களித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மைகள் உண்டு. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஒரு படைப்பிரதானியை நியமிக்க அரசாங்க முயற்சித்தபோது அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்பதும் உண்மை என்று தெரிகிறது. அதுதொடர்பாக அவர் பகிரங்கமாக தன்னிலை விளக்கம் எதையும் இதுவரை தரவில்லை.தனக்கு எதிராக எழுதும் ஊடகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவுந் தெரியவில்லை. ஆனால் இந்த விடயத்தை குவிமயப்படுத்தி சிறீதரனை கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் மதிப்பிறக்கம் செய்யும் வேலைகளை சுமந்திரன் அணி மிகவும் கச்சிதமாகச் செய்துவருகிறது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சிறீதரன் செயற்படுகிறார் என்று சொன்னால் அதற்கு எதிராக கட்சி உரிய ஒழுங்காற்று நடவடிக்கையை எடுக்கலாம். அது கட்சி விவகாரம். அதனை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதுதொடர்பான விடயங்களை ஊடகவியலாளர்களைக் கூட்டிப் பகிரங்கமாகக் கதைக்கவேண்டிய தேவை என்ன? கட்சி விவகாரத்தை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். கட்சிக்குள்ளேயே ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.அதைச் செய்யாமல் கட்சிக்கு வெளியே ஊடகங்கள் மத்தியில் அதைச்சொல்ல வேண்டிய தேவை ஏன் வந்தது? ஏனென்றால், கட்சி ஒரு கட்டமைப்பாக பலமாக இல்லை என்பதைத்தான் அது காட்டுகிறது.வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால், வெல்லலாம் என்ற நம்பிக்கையில்தான் பலரும் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது கட்சி உயர் மட்டத்தோடும் முரண்படாமல் விசுவாசத்தை வெளிக்காட்டாமல் தந்திரமாக நடந்து கொள்கிறார்கள்.வெல்லக்கூடிய குதிரை என்ற ஒரே ஒரு பலம்தான் இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு உண்டு.ஆனால் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் கூர்மையடைந்தால், அது கட்சியைப் பாதிக்கும்.இப்போதுள்ள நிலைமைகளின்படி,சுமந்திரன் சிறீதரனை பெருமளவுக்கு கிளிநொச்சிக்குள்ளே முடக்கி விட்டார். ஆனால் கிளிநொச்சியில் சிறீரனின் இடத்தை நிரப்ப வேறு யாரும் கட்சிக்குள் இல்லை. அதுமட்டுமல்ல சிறுதரனை தோற்கடிக்கும் முயற்சியில் கட்சி மேலும் பலவீனமடையும் வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன.மாகாண சபைத் தேர்தல் நடந்தால் அதில் தமிழரசுக் கட்சியின் வெற்றியின் பருமனை அது நிச்சயமாகப் பாதிக்கும். தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி இவ்வாறு தானே தனக்குள் பிடுங்குபடுவது, தனக்கு அதிகரித்த வெற்றி வாய்ப்புகளைத் திறந்து விட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது.அதனால்தான் தமது கிராமமட்டக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதன் முலமும் வடக்கை குவிமயப்படுத்தித் திட்டமிட்டு உழைப்பதன் மூலமும் வடமாகாண சபையில் பலமான வெற்றி வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள். வடக்கை வெற்றிகொண்டால் கிழக்கு தானாக விழுந்து விடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தமிழ்த் தேசிய கோரிக்கையின் தலை வடக்கில்தான் இருக்கிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.எனவே தலையை நசுக்கி விட்டால், தமிழ்த் தேசியக் கோரிக்கை வலுவிழந்து விடும் என்றும் அவர்கள் நம்பக்கூடும். அந்த நோக்கத்தோடுதான் அவர்கள் வடக்கை குவிமயப்படுத்தி உழைக்கிறார்கள். இது சில தசாப்தங்களுக்கு முன்பு அதாவது 1980களின் தொடக்கத்தில் ஜெயவர்த்தன தமிழ்த் தேசியக் கோரிக்கையை தோற்கடிப்பதற்கு வகுத்த திட்டத்தின் மறுவளமான வியூகந்தான். தமிழ் மக்களின் தாயகத்தை துண்டித்து விட்டால் தமிழீழக் கோரிக்கை தோல்வி அடைந்து விடும் என்று ஜெயவர்த்தன நம்பினார்.அதற்கு கிழக்கை,திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் பலவீனப்படுத்துவது, வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசங்களைத் திட்டமிட்ட குடியேற்றங்களின்மூலம் சிங்களபௌத்த மையப்படுத்துவது, அதன் மூலம் வடக்கைத் தனிமைப்படுத்துவது. கிழக்கை இழந்தால் அதாவது தாயகம் துண்டிக்கப்பட்டால், தாயகத்தின் ஒரு பகுதி வெற்றி கொள்ளப்பட்டு விட்டால், தாயகக் கோரிக்கை தோல்வி அடைந்து விடும்.அது இறுதியிலும் இறுதியாக தமிழ்த் தேசிய அரசியலையும் தோற்கடித்துவிடும். முதலாம் கட்ட ஈழப்போரில் இந்த வியூகத்தை வைத்துத்தான் ஜெயவர்த்தன படை நடவடிக்கைகளையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் முன்னெடுத்தார்.இந்த வியூகத்தில் கிழக்கை வெற்றிகொள்வதே முதல் இலக்காக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களின் பின் தேசிய மக்கள் சக்தியானது அந்த வியூகத்தை மறுவளமாகப் பயன்படுத்துகின்றது. வடக்கை வெற்றி கொண்டால் கிழக்குத் தானாக விழுந்துவிடும். தமிழ்த் தேசியக் கோரிக்கை பலமிழந்து விடும் என்று தேசிய மக்கள் சக்தி திட்டமிடுகின்றதா?அந்த அடிப்படையில்தான் வடக்கை நோக்கி ஜனாதிபதி அடிக்கடி வருகிறாரா? தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகளை வடக்கின் கோரிக்கைகளாகச் சுருக்கிக் கூறுவதும் அதனால்தானா? இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருந்த வடக்குக்கிழக்கை,ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி. இப்பொழுது கேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது,அந்த வியூகத்தின் இறுதிக்கட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கை நோக்கி உழைக்கின்றதா? உட்கட்சிச் சண்டைகளை ஊடகங்கள் முன் பகிரங்கமாக விவாதிக்கும் தமிழரசுக் கட்சியும் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த ஆபத்தை அதற்குரிய முழுப் பரிமாணத்தோடு விளங்கி வைத்திருக்கின்றனவா? https://athavannews.com/2026/1460334
  13. ‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா! இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைய நாட்களாக வடகடல் பகுதி வழமையை விட அதிக குளிராகக் காணப்படுகிறது. இந்த மாற்றமானது இலங்கையின் ஒட்டுமொத்த வானிலைப் பாங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. வடக்கிலிருந்து ஆரம்பிக்கும் இந்தக் குளிர்ந்த நீர், கிழக்குக் கரையோரம் வழியாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படும். இந்த நீரோட்டத்தின் காரணமாக, தெற்குப் பகுதியில் நிலவும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது குறைக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. ‘டித்வா’ (Ditwah) புயல் மறைந்ததைத் தொடர்ந்து, நிலப்பரப்பில் பதிவாகும் வெப்பநிலையில் பெரும் மாற்றங்கள் தென்படுகின்றன. காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றாகும் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1460367
  14. ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது! கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துவடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்து வந்த நபரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 16 ஆம் திகதி இரவு ஜிந்துப்பிட்டி 125தோட்ட பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் புர்கா அணிந்திருந்தமை சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தது இந்தத் துப்பாக்கிச் பிரயோகத்தில் படுகாயமடைந்த கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சம்பவத்தில் 4 வயதுடைய சிறுவனும், மற்றும் 3 வயதுடைய சிறுமியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஜிந்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்துவந்த நபர் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் விளைவே தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது திட்டமிடப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பழனி ரொமேஷினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். https://athavannews.com/2026/1460384
  15. 11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு! 11 பயணிகளுடன் நேற்றையதினம் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, குறித்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன் மலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, விமானத்தின் சிதைவுகள் மீட்கப்பட்ட போதிலும், அதில் பயணித்தவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் அவர்களைத் தேடி இந்தோனேசிய அதிகாரிகள் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ATR 42-500 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சகத்திற்குச் சொந்தமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் மக்காசர் நகருக்கு அருகாமையில் குறித்த விமானம் நேற்று (17) மாயமான போது அதில் 11 பேர் இருந்துள்ளனர். https://athavannews.com/2026/1460373
  16. அட… சுத்துமாத்து சுமந்திரன். 😂 🤣
  17. ஆண்கள்.... நான்கு போத்தல்களும், பெண்கள்... இரண்டு போத்தல்களும் தவறாமல் வாங்குவார்கள். 😂 அதனால்... நமது வியாபாரம் நட்டம் இல்லாமல், ஓஹோ... என்று ஓடுது. 🤣
  18. யாயினி, மெசினின்... டிசைன், ரெக்னிக் எல்லாம் என்னுடையது. 😂 தயாரிப்பு, நிர்வாகம் எல்லாம் வேறு ஒருவருடையது. 🤣 வாடிக்கையாளர்.... வேறை யார்? நீங்கள் தான். 😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.