Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சுவியர், காணொளி.... டக்கென்று முடிந்து விட்டது. 😂 🤣
  2. அது கிடக்கட்டும்…. யாழ்ப்பாணத்தில் அடுத்த விகாரை கட்ட இடம் பார்த்து விட்டீர்களா? 😂
  3. பார்த்தீனிய பரவல் என்பது சுமார் 60% மனித நடவடிக்கைகள் மூலமே இடம்பெறுகிறது. குறிப்பாக பார்த்தீனியம் காணப்படும் ஒரு நிலத்தை உழவு செய்த அதே உழவு இயந்திரத்தால் பார்த்தீனியம் அற்ற நிலத்தில் உழவு மேற்கொள்ளும் போது பார்த்தீனியம் இலகுவாக பரவல் அடைகிறது. ஒரு பார்த்தீனியம் செடியானது 10 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம் விதைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த பாரிய விதை இருப்பானதுதான் பார்த்தீனியம் ஒரு அபாயகரமான ஆக்கிரமிப்பு செடியாக அடையாளம் காணப்பட முதன்மை காரணமாகும். மிக நுண்ணிய மற்றும் எண்ணிக்கை அதிகமான விதைகள் என்பதால் விதைகள் முளைக்காமல் இருக்க விசிறப்படும் களை நாசினிகள் பார்த்தினிய முளைப்பை கட்டுப்படுத்துவதில்லை. பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதற்கான சரியான காலகட்டம் அது பூப்பதற்கு முந்தை பருவமே. அந்த பருவத்தில் அவற்றை பிடிங்கி அவ்விடத்தில் வைத்தே அழிப்பதுதான் மிகச்சிறந்த வழியாகும் பூக்காத செடியாயினும் வேருடன் பிடிங்கி வேறிடத்திற்கு கொண்டு செல்வதும் தவறாகும் வேர்களுடன் ஒட்டியிருக்கும் மண்ணில் ஏலவே விழுந்த விதைகள் நூற்றுக்கணக்கில் முளைக்காமல் ஒட்டியிருக்கும் இடமாற்றத்தின் போது அவை மண்ணில் விழுந்து செடியாக மாறும். மிக அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் அவற்றை கையாண்டமையினால் வந்து செல்லும் அனைத்து மக்களும் தங்களை அறியாமலே பார்த்தீனிய விதைகளை தங்கள் பாதங்களினாலும் பாதணிகளினாலும் காவிச்சென்று பார்த்தீனியம் அற்ற இடங்களில் அதை பரவலடைய வைக்கப்போகின்றனர். பார்த்தீனியம் அற்ற அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கு பார்த்தீனியம் செடிகளை கொண்டுவந்தமையே முதல் தவறு. -முகநூலில் இருந்து.-
  4. பார்த்தீனிய ஒழிப்பு என்ற பெயரில் கரைச்சி பிரதேச சபையால் மேற் கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றின் படி வேருடன் பிடுங்கி வந்து பிரதேச சபையில் ஒப்படைக்கப்படும் பார்த்தீனியம் செடிகளுக்கு கிலோ 200/- ரூபா வழங்கப்படும் என்பதற்கு இணங்க... ஒருவர், 47 கிலோ பார்த்தீனிய செடிகளை புடுங்கி வந்து, ஒன்பதாயிரத்து நாநூறு (9400) ரூபாவை பெற்றுக் கொண்டார் என சொல்கிறார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால்.... பார்த்தீனிய செடியின் விதைகள் உடையில் ஒட்டியும், காற்றில் பரவியும் முளைக்கக் கூடிய தன்மை உடையதாம். மேலே இவர்... தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் எவ்வித பாதுகாப்பும் இன்றி கட்டி வந்த பார்த்தீனிய செடியில் இருந்து விழுந்த விதைகள் எல்லா இடமும் பரவி இருக்கும் என்று பலர் அச்சப்படுகின்றார்கள். ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது... அதனைப் பற்றி தெரிந்தவர்களிடம் அறிந்து, அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து எடுப்பதுதான் சிறந்த செயற்பாடாக இருக்க முடியும்.
  5. யாழ். காணி விடுவிப்பு; நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்! யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்த கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர். தேசிய நல்லிணக்கச் செயல்முறையின் ஒரு பிரதான அங்கமாக காணப்படும் நிலம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளை விரைவுபடுத்துவதது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. எல்லை மீள் நிர்ணயத்தை இறுதி செய்தல், இழப்பீட்டுச் செயல்முறையை விரைவுபடுத்துதல், விடுவிப்பதற்கான நிலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்த்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. முக்கியமான பாதுகாப்பு உட்கட்டமைப்பு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு காணி உரிமையாளர்களுக்கு தங்கள் சொத்துக்களை மீண்டும் பயன்படுத்தவதை உறுதி செய்யும் வெளிப்படையான மற்றும் சமமான செயல்முறையின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த பல சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். https://athavannews.com/2025/1452652
  6. பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்! பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, குழுவின் அறிக்கை, பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்வதற்கும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை முன்மொழிவதற்கும் இந்தக் குழு அமைக்கப்பட்டதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு ஏப்ரல் 13 அன்று அறிவித்தது. பரந்த, உள்ளடக்கிய சீர்திருத்த செயல்முறையை உறுதி செய்வதற்காக, சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து உள்ளீடுகளையும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடமிருந்து கருத்துக்களையும் பெறுவதும் இந்தக் குழுவிற்குப் பணிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஏப்ரல் 11 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் போது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமையாகும் என்று அமைச்சர் நாணயக்கார மீண்டும் வலியுறுத்தினார். அறிமுகப்படுத்தப்படும் எந்தவொரு புதிய சட்டமும், சர்வதேச தரங்களுக்கு இணங்க, அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரங்களை நிலைநிறுத்தும் அதே வேளையில், சமகால உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் கடந்த கால அரசாங்கங்கள் உரிய விடாமுயற்சியுடன் செயல்படவில்லை என்றும், நியமிக்கப்பட்ட குழுவிற்கு குறுகிய காலத்திற்குள் சட்டத்தை இரத்து செய்வதற்கான தொடர்புடைய விடயங்களை உறுதியான முறையில் அடையாளம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452661
  7. மாலைத்தீவில் கைதான இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்! போதைப்பொருள் கடத்தலுடன் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அவர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர். மாலைத்தீவு கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் Avishka Putha என்ற படகு, அந் நாட்டு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோர காவல்படை அதிகாரிகளால் நவம்பர் 7 ஆம் திகதி தடுத்து நிறுத்தப்பட்டது. மாலைத்தீவு பொலிஸாரின் கூற்றுப்படி, படகில் 355 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் இருந்தது. அதில் இருந்த ஐந்து இலங்கை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாலைத்தீவு அதிகாரிகள் கடந்த 10 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட படகில் சிறப்பு சோதனை நடத்தினர். இந்த ஆய்வில் 24 மீன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 58.6 கிலோ ஹெரோயின் மற்றும் 297.3 கிலோ மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸார், மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் மாலைத்தீவு காவல்துறை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள். இந்த பறிமுதல் மாலைத்தீவு பிராந்திய நீரில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கண்டறிதல் என்று மாலைத்தீவு அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், சந்தேக நபர்களையும் போதைப்பொருள் கடத்தலையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மாலைத்தீவு சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருவதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. மாலைத்தீவு பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த விசாரணைகளைத் தொடங்குவதற்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் குழுவும் ஒரு சிறப்பு கடற்படைப் பிரிவும் ஏற்கனவே மாலைத்தீவுக்குச் சென்றுள்ளன. எனினும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாலைத்தீவு சென்ற இலங்கை பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப உள்ளனர். https://athavannews.com/2025/1452667
  8. காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்! கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியாசலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணாவின் கூற்றுப்படி, பன்னாலாவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தலா 2.2 கிலோ கிராம் எடை கொண்ட நிலையில் ஆரோக்கியத்துடன் பிறந்ததாகவும் அவர் உறுதிபடுத்தினார். இரட்டை குழந்தைகளும் அவற்றின் வயிற்றுப் பகுதியால் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று மாதங்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரிப்பு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. வைத்தியசாலைகளில் இரட்டையர்கள் பிறப்பு அசாதாரணமானது அல்ல என்றாலும், அண்மைய வரலாற்றில் கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட முதல் ஒட்டிப் பிறந்த இரட்டையர் பிறப்பு இதுவாகும். https://athavannews.com/2025/1452676
  9. யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிப்பு! யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது. இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் யூரோ 2028 கால்பந்தாட்டத்திற்கான டைனமிக் விலை நிர்ணயத்தைப் பயன்படுத்தி நுழைவு சீட்டுகள் விற்கப்படாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர். 2026 உலகக் கோப்பைக்காக FIFA போட்டியில் தேவையின் அடிப்படையில் மாறுபடும் விலை நிர்ணய முறை, ஏற்றுக்கொள்ளப்பட்டமையினால் அது ரசிகர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ள நிலையில் யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டியில் இந்த விலை முறை தவிர்க்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1452679
  10. குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்! பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கியமான தீர்ப்பு இன்று (13) வெளியாகவுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பங்களாதேஷ் தீ வைப்பு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களால் அதிர்ந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் கொந்தளிப்பான மற்றும் இரத்தக்களரியான மாணவர் தலைமையிலான போராட்டங்களை நினைவுபடுத்துகிறது. அண்மைய அரசியல் கொந்தளிப்பு டாக்காவில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தீ வைப்பு, பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் தலைநகரைத் தாண்டி காசிபூர் மற்றும் பிரம்மன்பாரியா போன்ற நகரங்களுக்கும் பரவியுள்ளதாக தி டெய்லி ஸ்டாரில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. வன்முறைக்கு அவாமி லீக் ஆதரவாளர்கள்தான் காரணம் என்று அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இன்று தலைநகர் டாக்கா ஒரு கோட்டையாக மாறியது, ஹசீனாவின் அவாமி லீக் டாக்கா ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்ததால், காவல்துறையினரும் பங்களாதேஷ் எல்லைக் காவல் படையினரும் (BGB) அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டனர். டாக்காவின் நுழைவு வாயில்களில் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, பொதுப் போக்குவரத்து முழுமையாகச் சரிபார்க்கப்படுகிறது. டாக்காவின் வழக்கமாக நெரிசல் மிகுந்த சாலைகள் இன்று காலை மிகவும் அமைதியாக இருந்ததாகவும், போக்குவரத்து வழக்கமான அளவை விட பாதிக்கும் குறைவாகக் குறைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தைச் (ICT) சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இது ஹசீனா மற்றும் அவரது உயர்மட்ட உதவியாளர்கள் மீதான மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் வழக்கில் தீர்ப்பை வழங்குவதற்கான திகதியை நிர்ணயிக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர், கொலை மற்றும் சதித்திட்டம் உட்பட டஜன் கணக்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். https://athavannews.com/2025/1452673
  11. பிக்குவும், பாதிரியாரும்... காய்ஞ்ச மாடு கம்பிலை விழுந்த மாதிரி.... சிறுவர், சிறுமியர், பெண்கள் எல்லோரையும் மேய்ந்து தள்ளி விடுவார்கள். அவர்கள் திருமணம் செய்யாமல் தனியே வசிப்பதால்... இந்த வியாதியை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி எல்லை மீறி விடுகின்றார்கள். 😂 ஐயரும் , மௌலவியும் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதால்... பாலியல் விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்கின்றார்கள். 👍 😜
  12. ஓரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார். அதை எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன். டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன். அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை. டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும் (இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது. டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான். டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது. மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான். அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன். உங்கள் அன்பு மகள், லிண்டா..! அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.. கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது.. துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார். அங்கு இவ்வாறு எழுதியிருந்தது: பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை. நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள். 😂 🤣
  13. பிக்குகளும், பாதிரியார்களும் தான்... பாலியல் வன்புணர்வு செய்வதில் கில்லாடிகள். அதற்குள் ஐயரையும், மௌலவியையும் ஏன் கோத்து விட்டுள்ளார்கள் என தெரியவில்லை.
  14. துருக்கி இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து – 20 பேர் உயிரிழப்பு. துருக்கி சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர் துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில் இருந்து புறப்பட்டது. துருக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்தனர். இந்நிலையில் ஜோர்ஜியா நாட்டின் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் மிட்புபணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜர்பைஜான்- ஜார்ஜியா எல்லையில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. விமானத்தில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை. அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சி-130 ராணுவ சரக்கு விமானங்கள் துருக்கியின் ஆயுதப் படைகளால் பணியாளர்களை கொண்டு செல்லவும் தளவாடங்களை கையாளுவதற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. https://athavannews.com/2025/1452588
  15. இங்கிலாந்தில் AI யால் உருவாக்கப்படும் படங்களை கண்டறிய புதிய நடவடிக்கை! இங்கிலாந்தில் AI-யால் உருவாக்கப்படும் துஷ்பிரயோரயோகங்களை சமாளிக்க இங்கிலாந்தின் புதிய சட்ட மூலம் உதவும் என கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. அதன்படி, AI மாதிரிகள் மூலம் உருவாக்கப்படும் போலி படங்களை அவை போலி என உறுதிப்படுத்துவதற்கும் அவற்றைச் சரிபார்ப்பதற்கும் இந்த புதிய விதிகள் உதவும் என கூறப்படுகிறது. AI-யால் உருவாக்கப்பட்ட விடயங்களை பயன்படுத்தும் குழந்தைகளை நிகழ்நிலையில் பாதுகாக்க இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலம் உதவுவதாக கூறப்படுகிறது. இதேவேளை, Internet Watch Foundation இன்டர்நெட் வாட்ச் ஃபவுண்டேஷன் (IWF) போன்ற நிறுவனங்களும், AI டெவலப்பர்களும், சட்டத்தை மீறாமல் அத்தகைய உள்ளடக்கத்தை அவதானித்து அதனை சோதனை செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1452604
  16. புதியதாக நியமிக்கப்பட்ட தொல்லியல் ஆலோசனைக் குழுவில், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த எந்த பிரதிநிதிகளும் இடம் பெறவில்லை.
  17. தலாவ பஸ் விபத்து-பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்! பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் சாரதி, எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தம்புத்தேகம நீதவான் கயாத்திரி ஹெட்டியாரச்சி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, விபத்துச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் நடத்துநரை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர், ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, விபத்தானது முதலாவது சந்தேகநபரான பஸ் சாரதியின் அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாகவே இடம்பெற்றது எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1452565
  18. விசேட சோதனையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் அறுவர் கைது! கிரிந்த பிரதேசத்தில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 300 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1452577
  19. செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு. மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று (11) இடம்பெற்றபோது அவரை அடையாளம் காணப்பட்டதையடுத்து எதிர்வரும் 24ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவரை கடந்த சனிக்கிழமை (08) ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறும் குறித்த தினத்தில் ஆள் அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு இடம்பெறும் என கட்டளையிட்டு உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தி அவருக்கு எதிராக முறைப்பாடு செய்த மூன்று பேரும் அடையாளம் காண்பித்ததையடுத்து நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் அதேவேளை இவ்வாறு கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல் நடித்து வந்துள்ளார். இவர் உயர்கல்வியை விஞ்ஞான பாடம் கற்றுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்து வந்த அவர் கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் திருமணம் முடித்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை தயாரித்து கொடுத்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை நீதவான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452549
  20. எப்படி இருந்த தமிழ் மாணவர் சமுதாயம், இப்படி நாசமாகி விட்டது.
  21. தோட்டா தரணிக்கு செவாலியர் விருது அறிவிப்பு. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது உலகின் பல பகுதிகளில் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விலங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்து வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கி வரும் இவ்விருதை தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு 1995ஆம் ஆண்டும் கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்குகிறார். அதே வளாகத்தில் கடந்த சில நாள்களாக தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவில் புகழ்பெற்ற கலை இயக்குநராக வலம் வருபவர் தோட்டா தரணி. இந்தியாவை தாண்டி ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழில் இவர் பணியாற்றிய நாயகன், இந்தியன், தளபதி, சந்திரமுகி, சிவாஜி, தசாவதாரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களின் கலை அமைப்புகள் தத்ரூபமாகவும் பிரம்மாண்டமாகவும் இடம்பெற்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. நாயகன் மற்றும் இந்தியன் படத்திற்காக தேசிய விருதை இவர் வென்றிருந்தார். மேலும் இவரது பணியை கௌரவித்து 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இந்திய அரசு கொடுத்தது. https://www.nakkheeran.in/cinema/thotta-tharani-to-get-chevalier-award-10648012
  22. 21 பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் தான் பங்கேற்கப்போவதில்லை – எஸ்.எம்.மரிக்கார். நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் அதில் தான் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்த்தரப்பினர் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளமைக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கட்சி என்ற ரீதியில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. நான் கட்சியின் முகாமைத்துவக்குழு உறுப்பினராகவும் செயற்படுகின்றேன்.மத்திய குழு உறுப்பினராகவும் உள்ளேன். எனக்கு தெரிந்தவரையில் 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தி பங்கேற்க போவதில்லை என்ற தீர்மானமே எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பின்னர் பேரணியில் பங்கேற்பதற்கு கட்சி ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டாலும் நான் அதில் பங்கேற்கமாட்டேன். நீதிமன்ற வழக்குகள் உள்ளவர்கள் அதேபோன்று விரைவில் சிறைக்கு செல்லும் நிலையில் உள்ள சிலருக்கு இந்த பேரணியை செய்வதற்கான அவசரம் உள்ளது.எமக்கு அவ்வாறு எந்த அவசரம் இல்லை. அவர்களின் தேவைக்கேற்றவாறு செயற்படுதற்கு நாம் தயாரில்லை. https://athavannews.com/2025/1452535

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.