Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மற்றவர்களின் காணியை பிடிக்கும் போது, படைப்பிரிவு என்ன ஆவணத்தை வைத்திருந்து பிடித்தது.
  2. வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழ்த் தலைவர்தானே… அவரை ஏன் அழைக்கவில்லை. சுமந்திரன், சிவஞானம் எல்லாத்துக்கும் அழைப்பு கொடுக்கும் போது… அர்ச்சுனாவுக்கு என்ன குறை. அர்ச்சுனா… போயிருந்தால்… இவர்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு இருப்பார்.
  3. 4 நாள் பயணமா இலங்கைக்குப் போயிட்டு வந்தேன். கிரிக்கெட் டீம்ல தொடங்கி பொருளாதாரம் வரைக்கும் சமீபமா பலத்த அடி வாங்கிருந்தாலும் இயற்கை இந்த பூமிய இன்னும் கைவிடல. அவ்ளோ இதமான ஒரு நாடு இலங்கை. ஏர்போர்ட்ல இறங்கி கண்டிக்கு போற முதல் நாள் பயணத்துல இலங்கையும் தாயமும் ஒண்ணுன்னு புரிஞ்சது. ரெண்டுலயும் ஒரு டர்ன் அடிச்சா ஒரு மலை வருது. எந்தப் பக்கம் திரும்பினாலும் அழகு. டக்குன்னு கண்ண மூடிட்டு ஒரு க்ளிக் செஞ்சு வர்ற ஃபோட்டோவ வால்பேப்பரா வைச்சுக்கலாம். அப்படியொரு அழகு. கண்டிக்கு போற வழியெல்லாம் நிறைய அழகு கிராமங்கள். 20-25 கிராம, சிறு நகரங்கள கடந்திருப்போம். அதுல கவனிச்சது என்னன்னா, பெரும்பாலும் 40 வயதுக்கு மேல & 18 வயசுக்கு குறைவான ஆட்களே அந்த ஊர்ல இருக்காங்க. 18-25ல ஆட்கள் கண்ணுலயே படல. அதே கொழும்பு, கண்டி, காலில அவங்கள நிறைய பாக்க முடியுது. இது நிஜமான அவதானிப்புன்னா இலங்கை மாதிரி ஒரு நாட்டுக்கு இது ஒரு முக்கிய அபாயச்சங்குன்னு தோணுது. ஊரு நிறைய இருக்கிற அளவுக்கு பேருங்க நிறைய இல்லை போல. காலேஜ், கடைன்னு நான் பாத்த பேருல 90% இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பேருதான். மகானம, ரனதுங்க, ஜெய்வர்த்தனன்னு பழக்கப்பட்ட பேருங்க. தினத்தந்தில கிரிக்கெட் ஸ்கோர்போர்ட் பாக்குற காலத்துல அவங்கதான் பேர இப்படி முடிஞ்சும் முடியாம எழுதுறாங்கன்னு நினைச்சேன். ம்ஹூம். அங்க இருக்கிற போர்டுலயும் இப்படித்தான். மாத்துற, அல்ல, வாறிய, போறிய…ந்னு தான் பேரே இருக்கு. தமிழ்நாட்டுல ஒவ்வொரு 160கிமீக்கு ஒரு பெரிய நகரம் இருக்கும். சென்னைல இருந்து கிளம்பினா 160 கிமீல விழுப்புறம். அப்புறம் திருச்சி. அப்புறம் மதுரை. இலங்கைல அப்படி இல்ல. ஒரு ஊர் வந்தா அடுத்த 2 நிமிஷத்துல இன்னொரு ஊரு, அடுத்த 2 நிமிஷத்துல இன்னொரு ஊரு. ஆனா அந்த சீரிஸ் முடிஞ்சா அடுத்த ஊர் வர ரொம்ப தூரம் போகணும். தேசிய நெடுஞ்சாலைலாம் கம்மி. எல்லா NH ம் ரெண்டு பக்கமும் மூடப்பட்ட, பாதுகாப்பான சாலைகள். எல்லா சாலையும் ஸ்மூத்தா, நல்லாவே இருக்கு. ஆனா திடீர் திடீர்ன்னு ஹைவேவ மூடி ஊருக்குள்ள போகச் சொல்லிடறாங்க. என்னன்னு கேட்டா கரப்ஷனால முடிக்காம கிடக்கிற புராஜெக்ட்ன்னு சொல்றாங்க. மொழி மட்டுமில்ல, சாலைகளும் முடியாம தான் கிடக்கு இலங்கைல.லோக்கல் ரோடுலாம் அகலம் கம்மிதான். ஆனா கவனிச்ச வரைக்கும் குண்டு, குழிகள் இல்ல. ஹைதராபாத் பிட்ச் மாதிரி இருக்கு. இலங்கை கார் மாடல் எல்லாம் ஒரு தினுசா இருக்கு. சின்ன சைஸ் கார்னாலும் பெரிய சைஸ் டிக்கி இருக்கு. சுற்றுலா நாடுன்றதால லக்கேஜு வைக்க இடம் கொடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன். நம்ம ஊருல காரோட நீளம் தான் வரியை நிர்ணயிக்குது. இலங்கைல அப்படி இல்ல போல. Honda fitந்னு ஒரு மாடல் கார்ல போனோம். நல்ல லாரி கணக்கா நீளம் இருக்கு. உள்ள ஏறி உக்காந்தா மாருதி ஸென் கணக்கா அகலம் இருக்கு. நம்ம ஊர் காருங்க பெருசா கண்ணுல படல. அட, அது ஹேரியர்ன்னு பாத்தா அந்த நாட்டுல அது டொயொட்டா ஹேரியராம். சாப்பாடுலாம் குறை சொல்ல ஒண்ணும் இல்ல. நம்ம ஊருல வெங்காயம் அதிகமா போட்டு ஆம்லெட், பெப்பர் தூக்கலா ஹாஃபாயில்னு சொல்வோம்ல. அங்க எல்லாமே பில் அதிகமா போட்டுதான் செய்றாங்க. ரோட்டுக்கடைல கூட ஃப்ரைஸ் நம்ம ஊரு ரூ 600-700 சொல்றாங்க. சாப்பாடு மட்டுமில்ல. அங்க எல்லாமே டூயல் சிஸ்டம் தான். லோக்கல் ஒண்ணு, ஃபாரினர்ஸ்க்கு ஒண்ணு. கோயில்ல செருப்பு விடுறதுல இருந்து 250 மீட்டர் உயரமான லோட்டஸ் டவர் வரைக்கும் நமக்கு 10 மடங்கு விலைதான். மக்கள் பெரும்பாலும் நல்லவங்களா தெரிஞ்சாங்க. சுற்றுலா இடத்துக்கு அது ரொம்ப முக்கியம். ஆனா ஒண்ணு… பெங்களூருல இருக்கிற கன்னட மக்கள் 90% பேருக்கு தமிழ் தெரியும். மலேஷியால கூட அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா இலங்கைல நாங்க பேசின சிங்களர்கள் யாருக்கும் தமிழ் சுத்தமா தெரில. இதுக்கு பின்னாடியும் பல விஷயம் இருக்கு. கொழும்பு நகரம் மட்டும் இன்ஃப்ராஸ்டிரக்சர்ல துபாய் ரேஞ்சுக்கு இருக்கு. டிராஃபிக் போலீஸ கண்டா அலறுறாங்க. குக்கிராமத்துல கூட ஹெல்மெட் கட்டாயம். எல்லோரும் போட்டுக்கிறாங்க. அரவிந்த டி சில்வா ஒரு மாதிரி ஹெல்மெட் போடுவார்ல்ல. அப்படிலாம் ஏமாத்தாம நல்லா கவர் பண்ணி போடுறாங்க. ஸீப்ரா கிராஸீங்க மதிக்கிறாங்க. அழகா சிரிக்கிறாங்க. ஆனா ஃபாரினர்ன்னு தெரிஞ்சா ‘தொண்டைல ஆப்ரேஷன்… ஆயிர ரூபா கொடு’ந்னு மாறிடறாங்க. இன்னொரு தடவை இலங்கை போகணும். ஏன்னா இந்த தடவ கவர் பண்ணது தென் இலங்கையதான். வடக்கு பக்கம் தான் நாம் போக ஆசைப்படுற இலங்கை இருக்கு.
  4. களவும் கற்று மற. என் பால்யத்தில் நடந்த சில சுவாரஸ்ய திருட்டுகளைப் பற்றியே இப்பதிவு. முதன் முதலில் வீட்டில் திருடிய அனைவருக்கும், நம் அம்மா காசு வைத்திருக்கும் கடுகு டப்பா ஏடிஎம்களை, எந்த பாஸ்வேர்டும் இன்றி திறந்து திருடியதோ அல்லது அசட்டையாக தொங்கும் அப்பாவின் சட்டைப் பைகளில் இருந்து பணம் எடுத்ததோ தான் முதல் திருட்டாக இருந்திருக்கும்! முதல் வெளிநாட்டுப் பயணமே அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு என்பது போல நானும் என் தம்பி பாலுவும் முதலில் திருடியது வீட்டு பீரோவின் லாக்கரில் இருந்து!அப்பாவின் தொழில் ஓட்டல் என்பதால் அன்றைய கலெக்‌ஷன்கள் நோட்டுக்கட்டுகளாக பீரோ லாக்கரில் குடியேறும். மறுநாள் வங்கியில் செலுத்தப்படும். கடை கேஷியர் ஒரு முறை அப்பாவிடம் 'அண்ணா பேங்கில் நாம செலுத்திய ரூபாய் கட்டுகளில் 2கட்டுளில் ஒவ்வொரு நோட்டு குறையுதுன்னு சொன்னாங்கண்ணா' என்னும் ஒரு சொல்லை வேதமாக பிடித்துக் கொண்டோம்! அதாவது எத்தனை கட்டுகள் இருந்தாலும் ரேண்டமாக ஏதாவது 2 கட்டில் இருந்து 1 நோட்டை மட்டும் உருவிக்கொள்வது! ஆரம்பத்தில் ₹10 & ₹20 கட்டுகளில் இருந்து தலா ஒவ்வொரு நோட்டு உருவிக் கொள்வோம். அப்போது முப்பது ரூபாய் இருந்தால் 10 நபர்கள் தியேட்டருக்கு போய் பாக்ஸ் டிக்கெட் எடுத்து படம் பார்க்கலாம் (₹1.75 ஒரு டிக்கெட்) 5நண்பர்களோடு நாங்க ஏழுபேர் போவோம் மீதி காசுக்கு அவ்ளோ ஸ்நாக்ஸ்! ஆரம்பத்தில் படு ஜாலியாக இருந்தது! உதயகீதம் படத்தில் கவுண்டமணி மரத்துக்கு மரம் உண்டியல் வைத்தது போல தினசரி திருடியதால் வீட்டில் யார் யார் மீதோ சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தனர்! 'நாம ஏன் 20 &10 என சில்லறையா திருட வேண்டும் நேரடியா ₹50 அல்லது ₹100க்கு போலாமே.! தினசரி திருட வேண்டாம் 3 நாளைக்கு ஒரு முறை திருடினாலே போதும் அல்லவா' என்றான் என் இளவல்! சரின்னேன்!! என்ன சிக்கல்ன்னா 30ரூபாயை ஈசியாக செலவழிக்க முடிந்த எங்களால் 100 ரூபாயை செலவழிக்க முடியவில்லை டிரவுசர் பைகளில் சில்லரை நிரம்பி நாங்கள் நடக்கும் போதெல்லாம் ஜல் ஜல்னு கொலுசொலி கேட்டது! ₹100 திருடி செலவழிக்கத் தெரியாமல் 50 கோலி குண்டுகள் 10 பம்பரங்கள் என சின்னம்மா’ போல வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கத் துவங்கினோம். எங்கள் வீட்டுக் கூரையின் கீழ் விளிம்பு சுவர் ஒன்று இருக்கு! வீட்டின் சைடு வழி சந்தில் ஏறி மிச்ச சில்லரைகளை அங்கு ஒளித்து வைக்க, அது வீட்டில் எலிகள் நடமாடும் எட்டுவழிச் சாலை என்பதை யூகிக்க மறந்தோம், எலிகள் ஓடியதில் கூரையில் நாங்கள் ஒளித்து வைத்திருந்த சில்லரைகள் வீட்டிற்குள் மழையாகப் பொழிந்தது! என்னடா! கொடுக்குற தெய்வம் கூரையை பிய்ச்சுகிட்டு கொடுக்குது என்று வியந்து, பிறகு அதிர்ந்து மண்டையை பிச்சிகிட்டு யோசித்து, வீட்டிற்குள் எங்கள் சொத்தான பம்பரம் கோலி போன்றவற்றின் வரவை மோப்பம் பிடித்து வருமான வரித்துறை போல பொறி வைக்க, 5வது 100 ரூபாயை திருடும் போது கையும் களவுமாக பிடிபட்டோம். கிரி படத்தில் வடிவேலு சொல்லுவது போல ஒரு 3மணிநேரம் அவய்ங்களால எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடிக்க அடி பொறுக்காது நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு சடாரென்று அன்றே திருந்தி நல்லவனானோம்! இச்சம்பவம் நடைபெற்று ஒரு வருடத்திற்கு பின்பு வீட்டில் புதிய ₹5 நோட்டு ஒன்று கீழே கிடந்தது! அதற்கு நேர் மேல எங்கள் கைக்கு எட்டாத உயரத்தில்அப்பாவின் சட்டை காற்றில் அசைந்து கொண்டிருந்தது, பரபரவென அதை எடுத்துக் கொண்டு அப்பாவிடம் ஓடினோம் ‘அப்பா இது உங்க சட்டைக்கு கீழே கிடந்தது இந்தாங்க என்று தந்தோம்! அப்பா சட்டென எங்கள் முகத்தை சில நொடிகள் உற்றுப்பார்த்தார். 'சரி சரி நீங்க ரெண்டு பேரும் உங்க செலவுக்கு வச்சுக்கோ' என்றார்! எவ்வளவுன்னாலும் கேட்டு வாங்கிக்கோ ஆனா திருடவே திருடாதே’ என்று அன்றைக்கு அப்பா சொல்லாமல் சொல்லிக் கொடுத்தது இப்போ வரைக்கும் நாங்க ஃபாலோ பண்றோம். நன்றி தகப்பரே! வெங்கடேஷ் ஆறுமுகம்
  5. இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்! இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7 பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் ”இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும் எனவும், பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் தான் அனுதாபம் தெரிவிப்பதாகவும், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் தனக்கு நன்கு தெரிந்தவர்கள் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இச்சந்திப்பின் மூலம், ”ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும், தனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் தமிழர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1427606
  6. பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு! இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கௌரவிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தினால் பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ஸ்ரீலங்கா மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது. வெளிநாடு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும். உலகளாவிய நட்புகளை அங்கீகரிப்பதற்காக சிறப்பாக நிறுவப்பட்ட இந்த பதக்கம்,இந்தியா-இலங்கை உறவுகளின் ஆழத்தையும் அரவணைப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இதேவேளை பிரதமர் குறித்த விருதினைப் பெற்றுக் கொண்ட பின்னர், செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் ஒன்றைக் கூறி தனது நன்றியை தெரிவித்தார். குறித்த திருக்குறளின் பொருளானது ” நட்பு கொள்வது போன்ற அரிய செயல் வேறு எதுவும் இல்லை எனவும், அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றுமில்லை என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தமையை அவர் இங்கு நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது X தளத்தில் தமிழ் மொழி மூலம் பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவானது தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மித்ர விபூஷண பதக்கத்தின் சிறப்பம்சங்கள் தர்ம சக்கரம் இரு நாடுகளின் கலாச்சார மரபுகளை வடிவமைத்த பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தை குறிக்கிறது. அரிசி கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடங்கு பானையான பொன் கலசம், செழிப்பு மற்றும் புதுப்பித்தலை குறிக்கிறது. நவரத்தினம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த நட்பைக் குறிக்கிறது, இது தூய தாமரை இதழ்களால் சூழப்பட்ட ஒரு பூகோளத்திற்குள் சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரியனும் சந்திரனும் இந்த உறவின் காலமற்ற தன்மையை மேலும் பிரதிபலிக்கின்றன, இது பண்டைய வரலாற்றிலிருந்து எல்லையற்ற எதிர்காலம் வரை நீண்டுள்ளது. இந்த விருது, பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமைத்துவத்திற்கும், பிராந்திய ஒத்துழைப்புஇ கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் ஆன்மீக ராஜதந்திரத்திற்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பிற்கும் ஒரு ஒளிரும் அஞ்சலியாக நிற்கிறது. பிராந்தியம் முழுவதும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தை வளர்ப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. https://athavannews.com/2025/1427588
  7. ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
  8. இந்திய-இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்! இந்தியா-இலங்கை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரசு விழா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது வலுசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணி இணையவழியாகத் தொடங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427580
  9. இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு’ Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிஇ குதிரைப்படையை முன்னிலையாக கொண்டு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய பிரதமர் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் பிரமுகர்களுக்கான கௌவரத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் அரச நிகழ்வில்இ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்இ வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட இரு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1427522
  10. பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்! 3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை வரவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது. 1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது. அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை என்று அவர் தெரிவித்தார். அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது. இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது. கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். மாண்புமிகு ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு. நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும். போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1427487
  11. இலத்திரனியல் வாகன இறக்குமதியில் மோசடி! வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தின் அடிப்படையில் முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் 2022 மே 01ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் கூடி ஆராய்ந்தபோதே இந்த விடயம் தெரியவந்தது. இவ்வாறு வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் நிதிச் சுத்திகரிப்பு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இது விடயத்தில் முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளையும் ஆராய்ந்துபார்க்கும்போது இது தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் 1077 வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 77 அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய கணக்காய்வாளர் நாயகம், 640 அனுமதிப்பத்திரங்களுக்காக இரண்டு பிரதான நிறுவனங்கள் வசதிகளை வழங்கும் இறக்குமதியாளர்களாகச் செயற்பட்டிருப்பதாகவும் குழுவுக்குத் தெரியப்படுத்தினார். இதன் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்குவது என்ற போர்வையில் வணிகம் இடம்பெற்றுள்ளமை வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1427519
  12. இந்திய- இலங்கை தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். இதன்போது இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதோடு பல்வேறு பட்ட ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1427570
  13. கடந்த பல வருடங்களாக வழமையாக சொல்லும்... 13'ம் திருத்த சட்டத்தையும் நிறைவேற்றச் சொல்லி, ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொல்லுங்கப்பா. 😂
  14. இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு! இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழைச் சேர்ந்த இரு மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் பிடிக்காகக் கடலுக்கு சென்ற இரு இலங்கை மீனவர்களும் படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் , இராமநாதபுரத்தை அண்டிய கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் , இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் . அதனை அடுத்து புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 யாழ்ப்பாண மீனவர்களையும் இந்திய அரசாங்கம் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த மீனவர்கள் இருவரும் மிக விரைவில் விமான மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1427583
  15. கொழும்பில் மோடிக்காக திரையிடப்பட்ட சுந்தரகாண்ட நாடகம். இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு, ராமாயண இலக்கியத்தின் சுந்தர காண்டத்தில் உள்ள சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தான் கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை கண்டுகளித்தேன். இதனை ஏற்பாடு செய்த பொம்மலாட்ட சங்கத்தினருக்கும், அவர்களின் ஆர்வத்திற்கும் வீரியத்திற்கும் எனது பாராட்டுகள். அத்தோடு கொழும்பில் தன்னை வரவேற்ற இந்திய சமூகத்தினரின் அற்புதமான வரவேற்புக்கு மழை எந்தத் தடையாகவும் இருக்கவில்லை.அவர்களின் அரவணைப்பு மற்றும் உற்சாகத்தால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன் அவர்களுக்கும் நன்றி” என கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி தனது இலங்கை பயணத்தின் போது கொழும்பில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கும் நிலையில், அங்கு வந்தடைந்த இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் இந்திய சமூகத்தினரிடமிருந்து அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை இந்திய புலம்பெயர்ந்தோர் வரவேற்றனர். பிரதமர் மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியக் கொடிகளை ஏந்திய மக்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அவர் ஹோட்டலில் இந்திய புலம்பெயர்ந்த உறுப்பினர்களுடன் கைகுலுக்கி உரையாடுவதைக் காண முடிந்தது. https://athavannews.com/2025/1427559
  16. தமிழ்... அரச மொழி என்பது எல்லாம்... வாக்குகளை பெற மட்டுமே. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்... இப்ப நவ துவாரத்தையும் மூடிக் கொண்டு இருப்பார்களே.
  17. நியாயம்... நான் சரியாகவே விளங்கியுள்ளேன். சிலவேளை நான் எழுதியதில் பொருள் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். செய்தியின் படி குருக்களுக்கு பாம்பு கடித்தது இரவு 9 மணியிருக்கும் என நினைக்கின்றேன். அவரை வற்புறுத்தி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றது நள்ளிரவு 1 மணி. குருக்கள் அதற்கிடையில் நான்கு மணித்தியாலத்தை... பாம்பை பிடித்து போத்தலில் அடைப்பதையும், பாம்பின் விசத்தை இல்லாது செய்யும் வித்தையும் தெரியும் என்று தேவையில்லாமல் நேரத்தை வீணாக்கி உள்ளார். அதனாலேயே... குருக்களின் அதிகப் பிரசங்கித்தனம் என்று குறிப்பிட்டேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.