Everything posted by தமிழ் சிறி
-
மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய குகேஷ்!
மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய குகேஷ்! உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (கிளாசிக்கல்) சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னாள் உலக செம்பியனான நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 2,833 புள்ளிகளுடன் 1 ஆவது இடத்திலும், ஜப்பானின் ஹிகாரு நகமுரா 2,802 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் உலக செஸ் செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அத்துடன் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா 2,758 புள்ளிகளைப் பெற்று 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டொப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423691
-
மு.க.ஸ்டாலினுக்கு 72-வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து
மு.க.ஸ்டாலினுக்கு 72-வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு , தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர், எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். https://athavannews.com/2025/1423604
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்! இஸ்ரேல் ஒப்புதல். ரமலான் பண்டிகை காலத்தை முன்னிட்டு, காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தினை மேற்கொள்வது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின்(Steve Witkoff) முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. மேலும் மத விடுமுறை நாட்களில் பதட்டங்களைத் தணிப்பதே தற்காலிக போர்நிறுத்தத்தின் நோக்கம் எனவும்,இக்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பலர் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன் ரமலான் மாதத்தை வரவேற்கிறார்கள் எனவும், இதன்காரணமாகவே தற்காலிகப் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியாகும் தருவாயில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423698
-
14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்! டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகரும், உலகின் மிகப்பெரும் செல்வந்தருமான எலான் மஸ்க்கிற்கு 14ஆவதாகக் குழந்தையொன்று பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் கடந்த 2000-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது. அதன்பின் இத்தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்தன. பின்னர் தொடர்ந்து பிரபல நடிகை ரிலேவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் பாடகி கிரீம்சை திருமணம் செய்த எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். 3 மனைவிகளையும் பிரிந்த அவர், ஷிவோன் ஷில்லீஸ் என்பவரை திருமணம் செய்து அவர் மூலம் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதற்கிடையே சமீபத்தில் பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் எலான் மஸ்க்கிற்கும், தனக்கும் ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறு இருப்பினும் எலான் மஸ்க்-ஷிவோன் ஷில்லீஸ் தம்பதிக்கு 14-வது குழந்தை எப்போது பிறந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423680
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
அட…. மாகாணசபை முதல்வரின் உடுப்புத்தான், சுமந்திரனை தடுக்குதோ… 😂. நல்ல சாட்டு. 🤣
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
விக்னேஸ்வரனின் கலைக்கப் பட்ட வடக்கு மாகாணசபைக்கு மீண்டும் தேர்தல் நடத்த விடாமல், சுமந்திரன் அழுத்தம் தருவதாக மகிந்த ராஜபக்ச வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருந்தார். ஏனென்றால்… அப்போது தேர்தல் நடத்தினால்.. விக்னேஸ்வரன் மீண்டும் பெருமளவிலான வாக்குகளால் தெரிவு செய்யப் படுவார் என்று சுமந்திரன் அஞ்சியதே காரணம் என்று மக்களால் விமர்சிக்கப் பட்டார்.
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
இவர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதி… எந்த ஒரு தூர நோக்கும் அற்ற சுயநலக் கும்பல்கள். சொந்தப் புத்தி அறவே கிடையாது. எல்லாம்… சுமந்திரனின் கண் அசைவுக்கு ஆடும் பொம்மைகள். சுத்துமாத்து சுமந்திரன்… எப்படிப் பட்ட யோக்கியர் என்று, உலகுக்கே தெரியும். 😂
-
சத்தியலிங்கத்தின் முக்கிய நியமனத்தின் பின்னணி இரகசியங்கள் அம்பலம்
சுமந்திரன் அவசரமாக பாராளுமன்றத்துக்குள் செல்ல பல வழிகளில் காய் நகர்த்திக் கொண்டு இருக்கின்றார். அதில்…. சத்தியமூர்த்தியை விலக வைப்பது அல்லது ஶ்ரீதரனுக்கு மாகாணசபை முதல்வர் ஆசை காட்டி அவரை வெளியே அனுப்புவது. சுமந்திரனின் நயவஞ்சக வார்த்தையை நம்பி…. சத்தியமூர்த்தியோ, ஶ்ரீதரனோ… தமது பதவியை விட்டு வெளியேறினால்…. அது அவர்களின் அரசியல் தற்கொலைக்குச் சமன்.
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
விக்னேஸ்வரன் மாகாணசபை முதல்வராக இருந்த போது… சுமந்திரன்… மாகாணசபையிலுள்ள தனது ஆட்கள் மூலம் குடைச்சல் கொடுத்து, அவரை நிர்வாகம் செய்ய விடாமல், கடைசியில் வடக்கு மாகாண சபையையும் கலைக்க வைத்து, விக்னேஸ்வரனை அரசியல் அனாதை ஆக்கியவர்தான் சுமந்திரன். இப்போ…. ஶ்ரீதரனுக்கு, மாகாணசபை முதல்வர் ஆசை காட்டி, அவரை பாராளுமன்ற பதவியில் இருந்து விலக வைத்து… சுமந்திரன் பாராளுமன்றம் போவதுடன், ஶ்ரீதரனின் அரசியல் வாழ்க்கையையும் முடிவிற்கு கொண்டுவர சுமந்திரன் செய்யும்… ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தும் சூழ்ச்சியே இது. ஶ்ரீதரனை… மக்கள், பாராளுமன்றதுக்குத்தான் தெரிவு செய்தார்களே ஒழிய மாகாணசபைக்கு அல்ல. வேண்டுமென்றால்…. ஒரு பதவியும் இல்லாமல் இருக்கும் சுமந்திரன், மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆணையை (?) பெற்று முதல்வராக வரட்டும். அதுதான் முறையான செயல். நெடுகவும் சபை குழப்பி மாதிரி… மற்றவர்கள் இருக்கும் பதவியில் கண் வைத்து குடைச்சல் கொடுப்பதை இனியாவது நிறுத்தி, நேர்மையான அரசியல் செய்வதுதான் மனிதருக்கு அழகு.
-
தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி – 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்து சாதனை.
தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி – 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்து சாதனை. கொழுந்து பறிக்கும் போட்டியில முதலாம் இடத்தைப் பெற்ற தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்தே இச்சாதனையை படைத்துள்ளார். இவருக்கு தங்கப் பதக்கத்துடன் ரூபா 650,000 ரொக்கப் பரிசுடன் வர்ண தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 3வது தடவையாக ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியினால் கொழுந்து பறிக்கும் போட்டி இன்று (01) ரதல்ல பிரதேசத்தில் நடைபெற்று பின்னர் பரிசு வழங்கும் நிகழ்வு ரதல்ல விளையாட்டு மைதானத்தில நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரத அதிதியாக வேறலிஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. மொஹான் பண்டித்த கே மற்றும் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ரொஷான் ராஜதுரை அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கொழுந்து பறிக்கும் போட்டியில் ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியின், கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி, ஹொரண பெருந்தோட்ட பெருந்தோட்ட கம்பனி ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 60 தோட்டங்களைச் சேர்ந்த 50 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.. இவர்களுக்கு போட்டிக்காக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இற்றேரத்தில் தரமுள்ள அதிக கிலோ கொழுந்தை பறிப்பவர்களுக்கே முதல் 3 இடங்கள் வழங்கப்பட்டன. அதற்கமைய 3 பெருந்தோட்ட கம்பனிகளிலிருந்தும் வெண்கல பதக்கத்தை பெற்று 3 ஆம் இடத்தை, கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் M. மாரியாய், தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் வீரையா வனிதா மற்றும் ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் P. சந்ரலேகாவும் பெற்றுக் கொண்டனர். அத்தோடு வெள்ளி பதக்கத்தை பெற்று 2ஆம் இடத்தை, களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் சுப்பிரமணியம் கோமதி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் தர்மலிங்கம் பூமணி, ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் K. கவிதா ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். இப்போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கத்தை , கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் M. இந்திராகாந்தி,தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் எந்தனி இரேஷா ராஜலெட்சுமி, ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் சுகுமாறன் ராஜலெட்சுமி ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். Athavan Newsதேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி - 15 நிமிடங்களில் 8 kg க...கொழுந்து பறிக்கும் போட்டியில முதலாம் இடத்தைப் பெற்ற தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 15 நிமிடங்களில் 8 kg க...
-
மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
வெள்ளை மாளிகையில் ஜெலென்ஸ்கியுடன் டொனால்ட் டிரம்ப் நடத்திய சண்டை, அமெரிக்கா உக்ரைனை காலனியாக எப்படி நடத்துகிறது என்பதைக் காட்டுகிறது. சீனாவை பலவீனப்படுத்தவும், மீண்டும் தொழில்மயமாக்கவும் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்தை உருவாக்கவும், உக்ரைனின் அரிய பூமிகள் மற்றும் முக்கியமான தாதுக்களின் கட்டுப்பாட்டை டிரம்ப் கோருகிறார். டிரம்ப் $350 பில்லியன் ஊதியம் பெற விரும்புகிறார்: உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்கு.
-
மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
மூன்றாம் உலகப் போரில் தான் சூதாடுவதாக... டிரம்ப், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் கூறுகிறார்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- யாழ். செம்பியன்பற்று வடக்கில் இரவோடு இரவாக காடழிப்பு!
காட்டினை அழித்த சம்பந்தப் பட்ட நபர் மேல் உடனடியாக நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு... என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்.- மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
மோடி மாதிரி... "சிங், சக்" போட்டுக் கொண்டு இருக்கிறதுதான் நல்லது போல கிடக்கு.- பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா...
அர்ச்சுனா பதவி விலகினால், அதனை அவர் குழுவில் போட்டியிட்ட மயூரனுக்கு கொடுப்பதே சிறப்பு.- மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
//அமெரிக்கர்களின் எதிரியாக இருப்பதும் ஆபத்தானது, அமெரிக்காவின் கூட்டாளியாக இருப்பதும் ஆபத்தானது.// சரியாக சொன்னீர்கள். 👍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
வீதியில் வாகனங்களின் வேகத்தை படம் பிடிக்கும், ஒளிப்பட கருவியை... குப்பைவாளி மூடியால் மறைத்து.. பல வாகன ஓட்டிகளை காப்பாற்றிய உள்ளுர்வாசி ஒருவர். 😂- அதானி நிறுவனத்தின் எதிர்கால நிலைப்பாட்டை எழுத்து பூர்வமாக கோரியுள்ள அரசாங்கம்
அதானி நிறுவனத்தின் எதிர்கால நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாக கோரியுள்ள அரசாங்கம். மன்னாரில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களில் இத்திட்டத்தை தொடர பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்த நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு எரிசக்தி அமைச்சு அதானி நிறுவனத்திடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி, மன்னார் மற்றும் பூனரியில் உள்ள இரண்டு 484 மெகாவாட் (MW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலைகளை புதுப்பிக்க புதிய ஒப்பந்தங்களை கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த மாதம் குறைந்த கட்டணத்தை கோரியதை அடுத்து, இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து வெளியேறுவதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவித்தது. எனினும் இலங்கை அரசாங்கத்துடன் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், அவர்கள் விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்புக்கு தயாராகவுள்ளதாகவும் அதானி நிறுவனம் கூறியிருந்தது. இந்த நிலையிலேயே இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு இலங்கை அரசாங்கம் அதானி குழுமம் கோரியுள்ளது. https://athavannews.com/2025/1423622- 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – 60 வயது முதியவருக்கு 107 ஆண்டுகள் சிறை
11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – 60 வயது முதியவருக்கு 107 ஆண்டுகள் சிறை. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஈழவதிருத்தி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் என்ற மோகனன். 60 வயது முதியவரான இவர் 11 வயது சிறுவனை ஆள் இல்லாத நேரத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் அந்த சிறுவனை கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். இது தொடர்பான முறைப்பாட்டில் பொன்னானி பொலிஸார் தாமோதரனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு விசாரணை பொன்னானி விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் தாமோதரனுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 107 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி சுபிதா சிரக்கல் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் அவருக்கு ரூ.4.50லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அதனை செலுத்த தவறினால் தாமேதரன் மேலும் 6.5 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். https://athavannews.com/2025/1423625- ‘1,131,818 வழக்குகள் நிலுவையில் உள்ளன
ஆர்...குத்தினாலும், அரிசி ஆனால் சரி. 🤣 பின்னை... என்ன, 10 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகளை நிலுவையில் வைத்திருந்தால் ... வேறை வழி தெரியலையே... 😂- அதிசயக்குதிரை
சுவியர்... உங்கள் படத்தை.. கீழுள்ள @ஏராளன் னின், தலைப்பில் பதிந்துள்ளேன். 🙂- ஒரே இரவில் 7 கோள்கள் வானில் தெரியும் அதிசயம் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்?
பட உதவி: @suvy- ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின!
அது வேறை வாய்... இது நாறல் வாய்.- ‘1,131,818 வழக்குகள் நிலுவையில் உள்ளன
அளவுக்கு அதிகமாக உள்ள.... இராணுவத்திற்கு, நீதிபதி பயற்சி கொடுத்தது, புதிய நீதிமன்றங்களை திறந்து... தீர்ப்புகளை சட்டுபுட்டு என்று முடியுங்கப்பா. 😂 🤣 - யாழ். செம்பியன்பற்று வடக்கில் இரவோடு இரவாக காடழிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.