Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
- உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு! உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு இந்த திருத்தங்கள் வழங்குகின்றதுடன் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் முக்கிய நோக்கத்துடன் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அண்மையில் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1414845- தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு
ஆளே இல்லாத கடையில், யாருக்கு "ரீ" ஆற்றுகிறீகள். நீங்கள் கெட்ட கேட்டுக்கு, உங்களை யாரும் தேர்தலில் போட்டியிடச் சொல்லி கேட்டார்களா? வந்திட்டாங்கள் தாங்களும் ஒரு ஆட்கள் என்று. போய்.... உங்கடை ஆட்களுக்கு, மாறி, மாறி முதுகு சொறிஞ்சு கொண்டு இருங்கோ.- கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், தனது டிரக் வாகனத்தில் இஸ்லாமிய அரசுக் (ஐஎஸ்ஐஎஸ்) கொடியை பறக்கவிட்டபடி நியூ ஆர்லியன்ஸின் நெரிசலான பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளார். அமெரிக்க நகரத்தின் மிகவும் சுறுசுறுப்பான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான பிரெஞ்சு காலனியின் மையத்தில் உள்ள போர்பன் தெருவில் புதன்கிழமை (01) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அல்ல என்று விபரித்துள்ள அமெரிக்க புலனாய்வுப் பிரிவு (FBI) அது ஒரு பயங்கரவாதச் செயல் என்று கூறியுள்ளது. மக்கள் கூட்டத்தின் மீது டிரக் வாகன் மோதி விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அதனை செலுத்திய சாரதி தடுப்பி ஓட முயற்சித்த போது சட்ட அமுலாக்கத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால், இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும், சட்ட அமுலக்கா அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டினால் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வாளர்கள், சந்தேக நபர் 42 வயதான அமெரிக்க குடிமகன் என்றும், அண்டை மாநிலமான டெக்சாஸைச் சேர்ந்த ஷம்சுத்-தின் ஜப்பார் என்ற இராணுவ வீரர் என்றும் அடையாளம் கண்டு கொண்டனர். இந்த நிலையில், புத்தாண்டு தினத்தில் 15 பேரைக் கொன்ற நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் சந்தேக நபர் தனியாக செயல்படவில்லை என்று அமெரிக்க புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் ஒரு இஸ்லாமிய அரசுக் குழுவின் கொடியும், அருகிலேயே இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டனர். https://athavannews.com/2025/1414848- ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
இலங்கை அரச படையினரால், சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கும் நினைவஞ்சலிகள். 🙏- புத்தாண்டில் அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம்!
நானும் அவரைத்தான் நினைத்தேன். ஆனால்…. அவரில் கை வைத்தால், மகிந்த கோஷ்டி அதனை வைத்து அனுதாபம் தேடப் பார்க்கும்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி! இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அது மாத்திரமின்றி புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1414791- தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 179 பேர் பலி !
தென்கொரிய விமான விபத்து; கறுப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் பிரித்தெடுப்பு! கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பிரித்தெடுப்பதை புலனாய்வாளர்கள் முடித்துவிட்டதாக தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. காக்பிட் குரல் பதிவில் (cockpit voice recorder) இருந்து தரவு இப்போது ஆடியோ கோப்பாக மாற்றப்படும், அதே நேரத்தில் இரண்டாவது கருப்பு பெட்டி – ஒரு விமான தரவு பகுப்பாய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர். (காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆனது விமானிகளின் உரை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறையுடனான உரை, விமானத்தின் சுவிட்ச் மற்றும் விமான இஞ்சின் ஒலியென அனைத்தையும் பதிவு செய்கிறது.) இந்த தரவுகள் விமான விபத்துக்கு வழிவகுத்த முக்கியமான தருணங்களைப் பற்றிய மேம்பட்ட தகவல்களை வழங்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். தாய்லாந்திலிருந்து தென்கொரியாவுக்கு 181 பயணிகளை சுமந்து வந்த ஜெஜு ஏரின் 7C2216 விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் அடிப்பகுதி உரசியபடி சென்ற நிலையில், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி பலத்த வேகத்தில் சுற்றுச்சுவரில் மோதியது. இதனால் விமானம் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் மொத்தமாக 179 பேர் உயிரிழந்திருந்தனர். இது தென் கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்து ஆகும். https://athavannews.com/2025/1414797- இரசித்த.... புகைப்படங்கள்.
- விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்
விகாரைகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் அல்ல, விகாரை கட்டும் பணிகளில் ஈடுபட்டதற்காகவே, அவர்கள் நீக்கப் பட்டதாக செய்தியில் உள்ளது. இனி... விகாரை கட்டும் பணிகளிலும், தொய்வு ஏற்படப் போகுது. 🤣- மஹிந்த பிரபுக்கள் புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள்; பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது - சரத் பொன்சேகா
பொன்சேகாவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது... அலைகடல் என திரண்டு வந்த மக்கள் கூட்டம். 🤣- பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு சமூக வலைதளங்களில் களங்கம்; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
பாராளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சியின் சட்டத்தரணி பெயரும் நாமல் ராஜபக்ச போல் உள்ளது.- தும்புதடியினுள் போதைப்பொருளை மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் கைது
தகவலுக்கு நன்றி, ரிஷி.- புது வருட சிரிப்புகள்.
- கருத்து படங்கள்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டு சாதனை!
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டு சாதனை! இலங்கை வரலாற்றில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிகளவானோர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஆண்டாக 2024 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2022 இல் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு வேலைவாய்ப்புப் புறப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும், கடந்த 2019 முதல் 2024 வரையான ஆறு வருடங்களில் மொத்தம் 1.3 மில்லியன் பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு (77,546), ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு (51,550) சென்றுள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தென் கொரியா (7098), இஸ்ரேல் (9665), ஜப்பான் (8665) ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியும் 2024 இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது. நவம்பர் மாத இறுதியில் 6462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அது பதிவாகியுள்ளன. https://athavannews.com/2025/1414744- வருவாயில் இலங்கை சுங்கம் மைல்கல்!
வருவாயில் இலங்கை சுங்கம் மைல்கல்! இலங்கை சுங்கத்துறை கடந்த வருடம் 1.5 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார். இது ஒரு வருடத்தில் இலங்கை சுங்கத்தால் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாகும். அரசாங்கத்தின் வரிக் கொள்கை, இறக்குமதியின் அளவு அதிகரிப்பு மற்றும் சுங்க முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் வரி அறவீடு நடவடிக்கையின் வினைத்திறன் என்பன இதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1414760- 16 தரம், புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்.
16 தரம், புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க விண்வெளி வீராங்கணையான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார். கடந்த ஜூன் 5 விண்வெளிக்கு சென்ற அவர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார். அவர் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச விண்வெளி மையம் கூறும்போது, பூமிக்கு மேல் 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1414740- எக்ஸ் தளத்தில் பெயரை மாற்றிய எலோன் மஸ்க்!
எக்ஸ் தளத்தில் பெயரை மாற்றிய எலோன் மஸ்க்! உலகின் முன்னணி பில்லியனரான எலோன் மஸ்க், சமூக ஊடக தளமான எக்ஸில் தனது பெயரை செவ்வாயன்று (டிசம்பர் 31) “கெகியஸ் மாக்சிமஸ்” என்று மாற்றியமைத்துள்ளதுடன், சுயவிவரப் படத்தையும் புதுப்பித்துள்ளார். உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டுவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலோன் மஸ்க் விலைக்கு வாங்கினார். டுவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலோன் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்த நிலையில் அவர், தனது எக்ஸ் ஐடியின் பெயரை ‘கெகியஸ் மாக்சிமஸ்’ என்று மாற்றம் செய்துள்ளார். மேலும் தனது ஐடியின் முகப்பு படத்தையும் மாற்றி, பெபே தவளை மீமில் வரும் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்துள்ளார். தீவிர வலதுசாரி குழுக்களால் பயன்படுத்தப்படும் ஒரு நினைவுச்சின்னமான பெப்பே த ஃபிராக் என்ற கதாபாத்திரத்தை சித்தரிக்கும் அவரது புதிய சுயவிவரப் படத்திற்கான உடனடி விளக்கத்தை அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான எலோன் மஸ்க் வெளியிடவில்லை. அதே சமயம் இந்த மாற்றத்திற்கு பிறகு கெகியஸ் எனும் மீம் நாணயத்தின் மதிப்பு 500% அதிகரித்துள்ளது. இணையத்தில் வைரலாக மீம்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் மீம் நாணயங்கள் மின்னியல் வகையை சார்ந்தது ஆகும். 2000 ஆம் ஆண்டு வெளியான கிளாடியேட்டர் திரைப்படத்தின் நாயகனின் பெயர் மாக்சிமஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1414768- முடிவுக்கு வந்த ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம்!
முடிவுக்கு வந்த ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம்! உக்ரேனின் எரிவாயு போக்குவரத்து நிறுவனமான Naftogaz மற்றும் ரஷ்யாவின் Gazprom ஆகியவற்றுக்கு இடையேயான 05 ஆண்டு ஒப்பந்தம் காலாவதியான பின்னர், உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் 2025 புத்தாண்டு தினத்துடன் முடிவுக்கு வந்தது. இது ஐரோப்பிய எரிவாயு சந்தையில் மொஸ்கோவின் நீண்ட கால ஆதிக்கத்துக்கான முற்றுப்புள்ளியாக அமைந்தது. அதேநேரம், மாற்று வழியை தேடுவதன் மூலம் ரஷ்ய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் அதன் முயற்சியையும் இரட்டிப்பாக்கியது. மேற்கண்ட ஒப்பந்தமானது போரிடும் இரு நாடுகளுக்கிடையே 2019 ஆம் ஆண்டில் எட்டப்பட்டது. இது ரஷ்யாவின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியை உக்ரேன் வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு மலிவான விலைகளில் கொண்டு செல்வதற்கு அனுமதித்தது. இந்த ஒப்பந்தம் மிகவும் இலாபகரமானது, ரஷ்யாவுக்கு வருவாயிலும், உக்ரேனுக்கு போக்குவரத்து கட்டணத்திலும் பில்லியன்களை சேர்த்தது. இந்த நிலையில், ஒப்பந்தம் நிறைவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), “எங்கள் இரத்தத்தில் கூடுதல் பில்லியன்களை சம்பாதிக்க” ரஷ்யாவை அனுதிக்க மாட்டோம் என்றதுடன், ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்தார். ஐரோப்பாவிற்கான ரஷ்யாவின் பழமையான எரிவாயு வழியை நிறுத்துவது, 2014 இல் உக்ரேனிய கிரிமியன் தீபகற்பத்தை இணைத்ததில் தொடங்கி, கண்டத்துடன் ஒரு தசாப்த கால கொந்தளிப்பான உறவுகளை முடிவுக்குக் கொண்டுவருகிறது. 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது படையெடுத்ததில் இருந்து ரஷ்ய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அதன் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தி வருகிறது. பிரஸ்ஸல்ஸ் வெளியிட்ட புள்ளிவிவரங்கள், 2023 இல் மொத்த எரிவாயு இறக்குமதியில் 8% ரஷ்ய எரிவாயுவாக இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இதற்கு மாறாக, அந்த எண்ணிக்கை 2021 இல் 40% க்கு மேல் இருந்தது. பிரஸ்ஸல்ஸ் ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதியை கணிசமாகக் குறைத்த போதிலும், பல கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இன்னும் பெரும்பாலும் மொஸ்கோவை நம்பியுள்ளன. ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் இன்னும் பெருமளவிலான ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன, இது மொஸ்கோவிற்கு வருவாயில் சுமார் 5 பில்லியன் யூரோக்கள் ஆகும். இதேவேளை உக்ரேன் வழியான எரிவாயு விநியோக முடிவினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அல்லாத பிற ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த மால்டோவா கடுமையான இழப்புகளை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1414755- குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
தமிழரசு கட்சியின் உதவாக்கரை பேச்சாளர். 😂 🤣- இலங்கை குறித்த கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது - ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
ஒரு தரப்பை ஒதுக்கிவிட்டு பயணிக்கும் சமூகம் ஒருபோதும் வளர்ச்சியடையாது-ஜனாதிபதி! புதிய அரசியல் கலாசாரத்தின் ஆரம்பத்துடன்தான் இந்தப் புத்தாண்டு மலர்ந்துள்ளது. நாம் இந்த நாட்டை வளம் மிக்கதொரு நாடாக மாற்றியமைப்பதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். குடும்ப ஆட்சி, ஊழல், வீண் விரயங்கள், அதிகாரத் துஷ்பிரயோகம், மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்தையும் மக்கள் இன்று புறக்கணித்துள்ளார்கள். எமது பொருளாதாரம் கடந்த காலங்களில் வங்குரோத்து நிலைக்கு சென்றிருந்தது. கடந்தாண்டு இறுதி கட்டத்தில், வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது. இன்று பொருளாதாரம் சற்று ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனை இன்னும் பலப்படுத்தும் வகையில், செயற்பாடுகளை அரசாங்கம் என்ற வகையில் மேற்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். அத்தோடு, எமது நாட்டின் பாதுகாப்பையும் நாம் பலப்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு அருகம்பே பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால், எமது பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார்கள். நாம் படிப்படியாக சட்டத்தின் ஆட்சியை பலமாக்க வேண்டும். கடந்த காலங்களில் சட்டத்தின் ஆட்சி இல்லாத ஒரு நாடாகவே எமது நாடு காணப்பட்ட நிலையில் குற்றவாளிகள் சட்டத்திற்கு மேல் இருந்து தப்பித்திருந்தார்கள். அரசியல்வாதிகள் தங்கள் நினைத்தவாறு சட்டத்தை மாற்றி, அரசியலமைப்பை மீறினார்கள். எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றமே, அரசமைப்பை மீறியுள்ளார்கள் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலைமையை நாம் மாற்றியமைப்போம். அத்தோடு, ஊழல்- வீண் விரயங்களும் எமது நாட்டின் ஒரு நோயைப் போன்று பரவியுள்ளது.இதனை வேறோடு இல்லாதொழிக்க வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை எமக்காக வழங்கும். அரச அதிகாரிகளும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை சரியாக உணர்ந்து, கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன். நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.பொருளாதாரமானது ஒரு தரப்பிடம் மட்டும் குவிந்து இருந்தால், ஒருபோதும் வறுமையை இல்லாதொழிக்க முடியாது. இதனை ஒழிக்கும் வகையில் நாம் வரவு- செலவுத் திட்டத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இரண்டாவதாக நாட்டை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். மூன்றாவதான கீளின் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு அமைய அனைத்துத் துறைகளையும் தூய்மையாக்க வேண்டும். மேலும் எமது நாடு மிகவும் அழகானதொரு நாடாகும். ஆனால், இந்த அழகான நாட்டில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் யானை- மனிதன் மோதலில் 182 பேர் உயிரிழந்துள்ளார்கள்.2023 ஆம் ஆண்டில் 484 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன. இதுதான் நாட்டின் நிலைமை. வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினாலும் அதிகளவானோர் உயிரிழக்கின்றார்கள். எமது நாட்டு சொத்துக்களையும் மக்களையும் பாதுகாப்பதே கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதேநேரம், மக்களுக்கும் தங்களின் உயிரின் பெறுமதி தெரியாமல் உள்ளது. நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன். ஏனெனில், கடந்த ஆண்டு மட்டும் நீரில் முழ்கி 595 பேர் உயிரிழந்துள்ளார்கள். வாகன விபத்துக்களில் 2321 பேர் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார்கள். ஒரு நாளைக்கு 7 பேர் விபத்துக்களால் உயிரிழக்கிறார்கள். தங்களதும், பிறரின் உயிர் தொடர்பாகவும் மக்களுக்கு கவலை இல்லாமல் உள்ளது. இந்த சமூதாயத்தை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.அத்தோடு, மக்களுக்கு விஷமில்லாத உணவை வழங்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது. விசேட தேவையுடையவர்களையும் ஒதுக்கி விட்டு பயணிக்க முடியாது. ஒரு தரப்பை ஒதுக்கிவிட்டு பயணிக்கும் ஒரு சமூகம் ஒருபோதும் வளர்ச்சியடைந்த சமூகமாக வளர்ச்சியடையாது. அரச சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய பிரதான பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. தனிப்பட்ட சொத்துக்களை பாதுகாக்கும் அளவுக்கு அரச சொத்துக்களை இங்கு யாரும் பாதுகாப்பதில்லை என்றும் அரச சொத்துக்கள் இந்த தலைமுறைக்கு மட்டும் உரித்தானது கிடையாது. மாறாக இவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் செயற்பாட்டையும் கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தில் உள்ளடக்கியுள்ளோம். என்று நாம் கேட்டுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1414759- ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
“கிளீன் இந்தியா” எனும் திட்டம் சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட போது…. டெல்லி அரசியல்வாதிகளில் இருந்து, உள்ளூர் அரசியல்வாதி வரை…. விளக்குமாத்தைப் பிடித்து கூட்டுவது மாதிரி படம் பிடித்து பத்திரிகைகளில் பிரசுரித்து விளம்பரம் தேடிக் கொண்டார்கள். தமிழ் நாட்டில்….. உதயநிதி கூட, திடீரென்று பொதுக் கழிப்பிடத்துக்கு சென்று படம் எடுத்துப் போடும் வழக்கம் உடையவர்தான். அதே போல்… கேலிக் கூத்துக்களை செய்யாமல், சிங்கப்பூர் மாதிரி தெருவில் குப்பை போடுபவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். - ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.