Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. உண்மைதான்... உலகம் எங்கும் இவர்களால் பல்வேறு பிரச்சினைகள். எங்கும் இவர்களது சனத்தொகை அளவு கணக்கு இல்லாமல் எகிறிக் கொண்டுள்ளது. இங்குள்ள ஆஸ்பத்திரி... பிள்ளை பெறும் பகுதி 60% முஸ்லீம் பெண்களால் நிரம்பி இருக்கும்.
  2. நெத்தலி சாதாரண நாட்களில் என்ன விலை. நமக்கு... கணவாய், நண்டு என்றால்.. மூன்று தரம் சோறு போட்டு சாப்பிடுவேன். 😂
  3. முஸ்லீம் அமைச்சர் நியமிக்கப் படாததற்கு..முகநூலில் ஒரு இஸ்லாமியர்.... "கிடைக்க வேண்டியது... கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல், பிந்தி கிடைத்தால்... அது அரசாங்கம் தமக்கு போடும்.. பிச்சை" என்று சொன்னார். அவர்களுக்கு இனி கொடுத்தாலும் திருப்திப் பட மாட்டார்கள் போலுள்ளது. 😂
  4. இந்த... புட்டும் தேங்காய்ப்பூவும் கதை... இராசதுரை காலத்தில் இருந்து கேட்டு கிழக்கை பெருமளவு இழந்து விட்டோம்.
  5. அப்பா திருகோணமலையில் வேலை செய்த காலங்களில், விடுமுறைக்கு செல்வதுண்டு. அந்தக் கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக கரைக்கு வரும். அந்த வகையில்.. கிழக்கு கடற்கரையின் அச்சத்தை புரிந்து கொள்கின்றேன்.
  6. தனிக்காட்டு ராஜா... உங்களை மீண்டும், யாழ். களத்தில் காண்பது மகிழ்ச்சி. 🙂 தொடர்ந்து காணாமல் போகாமல், இடைக்கிடையாவது வந்து கொஞ்சம் எழுதுங்கள்.
  7. இது... மழை விட்டும், தூவானம் விடவில்லை என்ற மாதிரி... யாரோ ஒரு "அப்பிரண்டீஸ்" கஞ்சா வெறி முறியாமல், வாளை தூக்கி விலாசம் காட்ட வெளிக்கிட்டு, அம்பிட்டுப் போச்சுது என நினைக்கின்றேன்.
  8. நான் ஊரில் போய் இருந்தாலும்... இந்த மொக்கு மனிசி மாதிரி... காசை அலுமாரியில் அடுக்கி வைக்க மாட்டேன். எனது ஊர் அலுமாரியில்... ஒரு சோடி சாரமும், ஒரு சோடி கால் சட்டையும், இரண்டு சோடி சேர்ட் மட்டுமே இருக்கும். வளவுக்குள் கால் வைக்கிறவனின்... ஈரல் குலையை புடுங்கி எடுக்க, வீட்டுக்கு வெளியில்... இரண்டு அல்சேஷன் நாய் நிற்கும். 😂 🤣
  9. அந்த மனிசி... ஏன் அந்தக் காசை கொண்டு வீட்டு அலுமாரியில் வைத்தது. காத்தான்குடியையும்... சுவிஸ் போல ஒழுக்கமான இடம் என நினைத்து விட்டது போலுள்ளது. இவ்வளவு காலமும் சுவிஸில் வேலை செய்தும், உலக அறிவு... ஹ்ஹும். மனிசியின் 34 வருட உழைப்புக்கு நாமம் போட்டு விட்டார்கள்.
  10. சுவியர்... அளவுக்கு மிஞ்சிப் போனால், பாரளுமன்ற அமர்வுகளில் மாதக்கணக்கில் கலந்து கொள்ள முடியாமல் தடை செய்து விடுவார்கள். பிறகு... யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் நின்றுதான் பேட்டி கொடுக்க வேண்டும்.
  11. கோசான்... நல்ல பிள்ளை. நீங்களே திரியை ஆரம்பியுங்கள். தமிழ் மக்களின் நன்மை கருதி, கட்டாயம் அர்சுனாவிற்கு ஒரு திறந்த மடல் எழுத வேண்டியது... அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்... அந்தாள் விசர் கூத்தாட சந்தர்ப்பம் அதிகம். ஊரில் உள்ளவர்கள் அச்சம் காரணமாக அவரின் செய்கையை, கட்டுப்படுத்துவார்கள் என நான் நினைக்கவில்லை. அதனை ஊர் மக்கள் சார்பாக, யாழ். களத்தில் உள்ள நாம் தான் செய்ய வேண்டும். ஒருவரும் அவரின் செய்கையை விமர்சிக்காத பட்சத்தில்... அவர் தான் செய்வது சரி என்று நினைத்து தொடரவே செய்வார். ஆனபடியால்... அவருக்கு ஒரு திறந்த மடல் அவசியம்.
  12. நீங்கள், சொல்லுறதை பார்த்தால்... உப சபாநாயகர் என்பது, 99´வது இடத்திற்கு வரும் போல் உள்ளதே.
  13. அவர் என்னவாவது செய்யட்டும் என்று கடந்து போய் விட முடியாது. இவர் கோமாளிக் குத்து ஆடினால், இவர் நல்ல விடயங்களுக்கு குரல் கொடுக்கும் போது கூட... எடு படாமல் போய்விடும். வடக்கு மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர், பண்பானவராக இருக்க வேண்டும். அந்த மக்களின் மானத்தை காப்பாற்ற வேண்டும். பாராளுமன்றத்தில் கோமாளிக் கூத்து ஆடினால்... தமிழ்நாட்டின் செல்லூர் ராஜீவாகவோ, டெல்லியின் சுப்பிரமணியசாமியாகவோ மாற அதிக காலம் இல்லை.
  14. இவரின் கட்சியில் உள்ள மயூரன் சிறந்த தெரிவு. ஆனால்.... எம் இனத்தில், நல்லவர்களுக்கு காலம் இல்லையே. ஓ.... இது வேறை நடந்திருக்கா... 😡
  15. இவரை ஆரம்பத்தில் சாவகச்சேரியில், மன்னாரில் பாதிக்கப் பட்ட மக்களுக்காக போராட வெளிக்கிட்ட போது... தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வந்த, படித்த இளையவர் என நினைத்து பெருமைப் பட்டேன். ஆனால்... போகப் போக இவரின் கோமாளிக் கூத்துக்கள் அதிகரித்து விட்டது. ஓகே... இதுவரை தேர்தலுக்கு முன் நடந்தவை... தன்னை பிரபல்யமாக்கவும், வாக்கு வங்கியை அதிகரிக்கவும் செய்த தந்திரங்கள் என்று கடந்து போனாலும்... இனி... அவர் மக்களால் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதி. அந்த மக்களின் கௌரவத்தை இவர் காப்பாற்ற வேண்டும். இவர் செய்யும் ஒவ்வொரு தவறும்... ஒட்டு மொத்த வடக்கு மக்களை பாதிக்கும் என்பதை இவர் உணர்ந்து திருந்த வேண்டும். இல்லையேல் மாறாத அவமானத்தை தமிழ் இனம் சந்திக்கும்.
  16. எந்த எந்த இடத்தில்.. எப்படி நடக்க வேண்டும் என்ற அடிப்படை பண்பும் இல்லாத மனிதன்தான் அர்ச்சுனா. பாராளுமன்றத்தில் இருந்து அர்ச்சுனா அனுப்பிய இந்தக் காணொளியை பார்க்க உண்மையிலேயே கோபம்தான் வந்தது. இன்னும் எத்தனை கேவலங்களை செய்து மானத்தை வாங்கப் போகின்றாரோ அச்சமும் கூடவே உள்ளது. பேசாமல் தனது இடத்தை மயூரனுக்கு கொடுத்துவிட்டுப் போவது சிறப்பு.
  17. பிரதி சபாநாயகராக முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு! பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல ( Asoka Sapumal Ranwala) நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து 10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1409273
  18. இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி! இனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக மக்களின் அபிலாஷையாக இருந்த தேசிய ஐக்கியத்தை நாட்டில் கட்டியெழுப்புவதற்கான பாரிய சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது. நாட்டு மக்களுடனான உறவுகளை பாதிக்க தானும் அரசாங்கமும் இடமளிக்க மாட்டோம். இந்த ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தாங்கள் கட்டுப்பட்டு அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 10 ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வின் போதான தனது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23 ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளது. வறுமையை ஒழிப்பதற்கான முதல் படியாக ‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்தொகை கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ஆதரிக்கின்றோம். மேலும், எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றும், ஒக்டோபர் மாதம் முதல் அனைத்து ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளிலும் ரூ.3,000 சேர்க்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடாளுமன்றில் முன்மொழியப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1409323
  19. இப்பிடி தெரிந்திருந்தால்... நானும் பாரளுமன்றத்துக்கு போயிருப்பனே... - சுமந்திரன் மைண்ட் வாய்ஸ். - 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.