Everything posted by தமிழ் சிறி
-
இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!
இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்! இலங்கை முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பெருமளவிலான சேதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில் அவர், மனித உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த கடினமான காலகட்டத்தில் ரஷ்யா இலங்கையுடன் துணை நிற்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தனது அனுதாபங்களையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்கவை புட்டின் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் – என்றும் குறிப்பிட்டுள்ளார். அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட இலங்கையில் பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த செய்தி வந்துள்ளது. https://athavannews.com/2025/1454770
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
அது… பாட்டி இல்லை. அப்பா. 😂 பாட்டியை… போன கிழமை, பூனை பிடிச்சுக் கொண்டு போட்டுது. 🤣- சிரிக்கலாம் வாங்க
- கருத்து படங்கள்
- மோசமான வானிலை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு
மோசமான வானிலை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு. தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in Athavan News) இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1454076- இரசித்த.... புகைப்படங்கள்.
- தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!
தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- சபையில் ரவிகரன் MP வாழ்த்து! தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு இந்த உயரிய சபையில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான துரைராசா ரவிகரன், “ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று, தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று” என்ற பாடல் வரிகளையும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (26) அன்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்தன , போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததது, காணி அபகரிப்புக்களும் இல்லை, எனவே, தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்ததது, நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலாவக்கூடிய நிலையிருந்தது. தாயகப் பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்றுப் பாதுகாப்பாக வாழ்ந்தனர். எனவேதான் தமிழ் மக்கள் மேதகுவை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்ககாலமாகவும் போற்றுகின்றனர். அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று (நேற்று) பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகுவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://athavannews.com/2025/1453959- தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!
தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து! ஈழ தமிழ் தேசத்தின் தலைவரும் உலக தமிழர்களின் தலைவருமான தலைவர் பிரபாகரனுக்கு 72 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தனது சபை விவாதத்தை ஆரம்பித்தார். https://athavannews.com/2025/1453961- கருத்து படங்கள்
- இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை!
இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை! தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ளன. இது குறித்து ஆப்கான் டைம்ஸ் தனது எக்ஸ் பதிவில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் “கொலை செய்யப்பட்டார்” என்ற ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் தொடங்கின. எனினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சரிபார்க்கப்படாதவை – எந்த நம்பகமான நிறுவனத்தாலும் அல்லது துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான் கானின் குடும்பத்தினர் சிறையில் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியான சிறிது நேரத்திலேயே இந்த வதந்திகள் வந்துள்ளன. அடியாலா சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட அவரது சகோதரிகள், அவரைச் சந்திக்கக் கோரி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் – நோரீன், அலீமா மற்றும் உஸ்மா – அரசியல் தலைவர் அடியாலா சிறைக்குள் “கொடூரமாக தாக்கப்பட்டதாக” குற்றம் சாட்டினர், அங்கு அவர் அடிக்கடி சிறை அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு அளித்துள்ளனர். 72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு 2023 முதல் சிறையில் உள்ளார். Athavan Newsஇம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை!தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்- ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!
ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்! ஹொங்கொங்கில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தானது புதன்கிழமை (26) இரவு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 44 பேர் உயிரிழந்ததுடன், 279 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் இன்னும் தீப்பரவிய உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்களை மீட்டு வருகின்றனர். நியூ டெரிட்டரிஸின் புறநகர்ப் பகுதியான தாய் போ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு கட்டிடங்களில் புதன்கிழமை பிற்பகல் இந்த தீ விபத்து தொடங்கியது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (27) காலை வரை, தீ இன்னும் அணைக்கப்படவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்தன. அதேநேரம், தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர். பலியான 44 பேரில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனர்த்தத்தின் பின்னர் குறைந்தது 62 பேர் காயமடைந்தனர், பலர் தீக்காயம் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டனர். இதனிடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதன்கிழமை, தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1453973- பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
மேற்கு… என்றுதான் உண்மையை சொல்லியிருக்கு. இப்போது, எந்த ஊடகமும் நடுநிலையான செய்திகளை வெளியிடுவது இல்லை.- காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
வளர்ப்பு அப்பிடி. தாய், தகப்பனுக்கு பாராட்டுக்கள். 😂 கு.சா. ஒரு கிழமைக்கு இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார். 🤣- பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி!
பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி! பெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்து, பின்னர் ஆன்லைன் நட்பை வளர்த்துக் கொண்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் நட்பு வளர்ந்த பின்னர், 24 வயதான இலங்கை மாணவி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான நம்பிக்கையை மாணவி பெற்றதால், அவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் உரையாடலைத் தொடங்கினர். இந்த வீடியோ அழைப்புகளின் போது, தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோக்களை குற்றம் சாட்டப்பட்டவர் தனது அனுமதியின்றி ரகசியமாக பதிவு செய்ததாக இலங்கை மாணவி தனது பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளார். தனது தனிப்பட்ட வீடியோக்களை எடுத்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு ஈடாக பணம் கோரியுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக பெங்களூரு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2025/1453940- பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
2026´ம் ஆண்டில்... உலகையே ஆளும் சக்தி கொண்டவராக மாற இருக்கும், விளாடிமிர் புட்டின் அவர்களுக்கு முற் கூட்டிய வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
- எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙏 ❤️- காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
மீண்டும்... அகில இலங்கை தலைப்பு செய்தியாக, சாவகச்சேரியான்ஸ். @குமாரசாமி எங்கிருந்தாலும், உடனடியாக மேடைக்கு வரவும்.- காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
இணையவழி முதலீட்டுக்காக காதலனின் வீட்டில் நகை திருடிய யுவதி கைது! சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமண நாள் குறிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக காதலி காதலனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காதலனின் தாயார் வைத்திருந்த தாலிக்கொடி உட்பட சுமார் 8 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போனதாக, 17 ஆம் திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், கிளிநொச்சியிலிருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே அந்த நகைகளைத் திருடியது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு குறித்த யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும், மீதமுள்ள நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ததாகவும் விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவர் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்ட ஒரு நபரின் ஆலோசனையில் இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை 27 இலட்சம் ரூபாய் செலுத்தியதும், மேலும் பணம் செலுத்துவதற்காகவே காதலன் வீட்டில் நகை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1453908- கருத்து படங்கள்
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
நேத்து ராத்திரி யம்மா… தூக்கம் போச்சுடி யம்மா….. 😂 🤣- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
கரட் சாப்பிட்டால், கண் தெரியும். முருங்கைக்காய் சாப்பிட்டால்…….. 😂 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரணிலுக்கு... ரவுசர் தைக்கின்ற, ரெய்லர்... யார் என்று அறிய ஆவல். 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
- கருத்து படங்கள்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.