Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 1) தமிழ் தேசிய மக்கள் முன்னணி. (கஜேந்திரன்ஸ்) 2) அனுர 3) தமிழரசு. (சுமந்திரன்ஸ்) 4) அர்ச்சுனா 5) பிள்ளையான். வடக்கு, கிழக்கில்.... சுமந்திரனின் தமிழரசு கட்சியை, சிங்களவன் முந்தி விட்டான். 😂
  2. எதற்கும், நிழலி... ரஞ்சன் ராமநாயக்கவின் செய்தியை கொண்டு வருவார் என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றேன். 🤣 # ரஞ்சன் ராமநாயக்க... வண்ணத்து பூச்சி ரணிலின் நண்பரா? 😂
  3. ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 9 ஆகக் குறைக்கத் தீர்மானம்! ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ள அந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் அங்கு தடை செய்யப்பட்டாலும், 28 வீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில், ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை 18 இல் இருந்து 9 ஆகக் குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஷியா பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிப்பதால் இந்த சட்ட திருத்தம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது எனவும் கூறப்படுகிறது. எனினும் இதற்கு அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.இந்த சட்டவரைபு நிறைவேற்றப்பட்டால் இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். கல்வி நடவடிக்கையை இடைநடுவில் நிறுத்த வேண்டிய நிலைமை பெண்களுக்கு ஏற்படும் என்றும் பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். இவ்வாறான எதிர்ப்புக்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பெண்ணின் திருமண வயதில் திருத்தங்கள் செய்துள்ள இந்த சட்டவரைபை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் ஈராக் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408336
  4. தேடி எடுத்து தந்தமைக்கு நன்றி ஏராளன். 👍 ஹிருணிக்காவைப் பற்றி இல்லை என்றாலும், ரஞ்சன் என்ன பேசி இருப்பார் என்று ஊகிக்க முடிகின்றது. 🙂
  5. அட... அது, கிசு கிசு விவகாரமா? 😍 @ஏராளன் அந்த விசயத்தை, யாழ் களத்தில் செய்தியாக கூட இணைக்கவில்லைப் போலுள்ளது. 😂 அதுதான்... என் கண்ணில் அந்த விவகாரம் எத்துப் படவில்லை. 🤣
  6. தவறுதலான தகவலை, கொடுத்தால்... ஜேர்மனியில் மன்னிப்பு கேட்பார்கள். 😂 அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றி விட்டது. 🤣
  7. போட்டி நிறைவு பெற... இன்னும் எட்டு மணித்தியாலங்கள் மட்டுமே உள்ளது. கலந்து கொள்ளாதவர்கள்.. உடனே கலந்து கொண்டு உங்கள் வாக்குகளை செலுத்தவும்.
  8. புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு! புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்களும் உள்ளடங்கலாக மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். https://athavannews.com/2024/1408295
  9. யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலவரம்! நாடாளுமன்றத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408316
  10. அந்தத் தொலைபேசி உரையாடல் என்ன என்று எங்களுக்கும் சொல்லுறது. 😂
  11. டாக்டர் கோபி சங்கருக்கு வாழ்த்துக்கள். அகில இலங்கை ரீதியில் தலைவராக தெரிவு செய்யப் பட்டமை, எமக்கும் பெருமை தரும் விடயம். இவர் @நிழலியின் நண்பர் என நினைக்கின்றேன்.
  12. பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படும் போதே.... கள்ளா... கள்ளா.... என்ற கோஷத்துடன் தானே, சுத்துமாத்து சுமந்திரன் தெரிவானவர். 😂
  13. ஒரு வாக்கு.. பிள்ளையானுக்கு, விழுந்திருக்கின்றது.
  14. தற்போதைய நிலவரப்படி... 75 ஆண்டுகள் பாரம்பரியமான தமிழரசு கட்சி, இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள... நேற்று முளைத்த டாக்டர் அர்ச்சுனாவின் கட்சியிடமும், சிங்கள இனவாத கட்சி என பெயர் எடுத்த அனுரவின் கட்சியிடமும் முக்கி, முனகிக் கொண்டுள்ளது. 😂 தமிழரசு கட்சியை, இந்த நிலைமைக்கு... கொண்டு வந்து விட்ட சம்பந்தன், சுமந்திரன் கொம்பனிக்கு கோடானு கோடி நன்றிகள். 🤣
  15. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. சரியா… 😂
  16. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய வாகனம் – 35 பேர் உயிரிழப்பு (காணொளி இணைப்பு) சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள மைதானத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் 43 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய சாரதி தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், இதன் காரணமாக விபத்து தொடர்பில் வாக்குமூலம் பெற முடியாமல் பொலிஸாரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1408264
  17. நான், அந்தத் தெரிவை கவனிக்கவில்லை. தகவலுக்கு நன்றி கோசான்.
  18. சங்கானை ஆட்கள் வந்து… சுழிபுரத்தில் குழப்பம் விளைவித்து இருப்பார்களோ… 😂 🤣
  19. ரசோதரன்… நீங்கள் கூறிய விளக்கம் எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதே.
  20. விசுகு… வாக்களிக்காமல் முடிவு தெரிய சந்தர்ப்பம் இல்லை. உங்களை அறியாமல் எதையோ கிளிக் பண்ணி விட்டீர்கள் போலுள்ளது. அனேகமாக… தமிழரசு அல்லது அர்ச்சுனா கட்சியாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.