Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தினமும்…. லூசுத்தனமான அறிக்கை விடுபவர்களில் சுமந்திரன் உங்கள் கண்ணில் படவில்லையா. அல்லது உங்கள் ஆளுக்கு வெள்ளை அடிக்க நினைத்து அவரை கருத்தோவியமாக வரைய மனம் இடம் கொடுக்கவில்லையா. சுமந்திரன் தானே…. ஶ்ரீதரனை தேர்தலில் போட்டியிடாமல் செய்ய, பல திருகுதாளங்கள் செய்து கொண்டு இருந்தவர். பிறகு ஏன்… அவரை இணைத்தவர்? துணிவு இருந்திருந்தால் ஶ்ரீதரனை நீக்கி இருக்கலாமே. ஶ்ரீதரன் இல்லாமல்… தேர்தலில் தமிழரசு கட்சி போட்டியிட்டால், தோல்வி வரும் என்ற பயம் சுமந்திரனுக்கு வந்து விட்டது என்பதே யதார்த்தம். இப்போ…. ஶ்ரீதரனின் செல்வாக்கில்…. சுமன் குளிர்காய நினைக்கின்றார் என்பதே உண்மை. நிஜம் கசக்கும்தான்… அதுக்காக உண்மைக்கு புறம்பானவற்றை எழுதியோ, வரைந்தோ கொண்டு இருந்தால்… உங்கள் மேல் மற்றவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விட சந்தர்ப்பங்கள் அதிகம்.
  2. சுமந்திரனும், சிறீதரனும் இப்ப சினேகிதமாம். இருக்கின்ற பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்று சினேகிதம் ஆகியுள்ளார்கள். பாராளுமன்ற தேர்தல் முடிவதற்குள் என்ன கூத்துகள் எல்லாம் பார்க்கப் போகின்றோமோ. வெட்கம் கெட்டவர்கள். படு பயங்கர சுயநலவாத கும்பல்கள். மக்களை பைத்தியக்காரர் என நினைத்துக் கொண்டு, தினமும் லூசுத்தனமான அறிக்கைகளை விட்டுக் கொண்டு திரிகிறார்கள். இவர்களை நம்பி பின்னால் போனவர்கள் பாடுதான், திண்டாட்டம். 😂 🤣
  3. அத்தனையும்… வரிக்கு, வரி மிக அருமையான கருத்து. நன்றி வளவன். 🙏
  4. சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு இப்ப எத்தினை வயசு. அவர் இளைஞரா? சுமந்திரன் தானே… இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று, பெரிய பருப்பு மாதிரி முந்தநாள் அறிக்கை விட்டுட்டு இப்ப விலகிச் சென்ற சார்ள்சை போட்டியிட பிடித்து இழுக்கின்றார். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாவிட்டால்…. பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அறிக்கை விட்டு, மோட்டு வேலை பார்க்க வேண்டும். பேசாமல் பொத்திக் கொண்டு இருந்திருக்கலாமே.
  5. 13’ ஐ அமுல் படுத்தச் சொல்லித்தானே…. சந்திரிகாவிடமும், மகிந்தவிடமும், மைத்திரியிடமும், கோத்தாவிடமும் சொல்லி களைத்துப் போய்… மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக… அனுரவிடம் சொல்கிறார்கள். இவ்வளவு பேரும் உங்கள் சொல்லை கேட்கவில்லை என்றால், உங்களை ஒரு மனிதனாகவே மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
  6. கபிதன்…. கெதியாக உங்கள் “Boss” மாரிடம் சொல்லி, அவர்களின் கை சுத்தம் என்று நிரூபிக்க சொல்லுங்கள். இல்லையேல்…. சுமந்திரனின் வல்வெட்டித்துறை சாராயக் கடையும், சாணக்கியனின் கல்லடி சாராயக்கடையும் உண்மையாகி விடும். சுமந்திரன், இவ்வளவு காலமும் மௌனமாக இருப்பதை பார்க்க…. ஆள் எக்கச் சக்கமாக மாட்டு பட்டுப் போனார் என்றே கருதுகின்றோம். 😂
  7. சமகால அரசியல் போக்கையும், தமிழ் அரசியல் தலைமையின் இரட்டை வேடத்தையும்… தோல் உரித்துக் காட்டிய அருமையான கவிதைக்கு நன்றி பசுவூர்கோபி.
  8. கோப்பாயில்…. மதுபானசாலையை திறந்தாலும், நீர்வேலி ஆட்கள்… கோப்பாய்க்கு போய் சாராயத்தை, வாங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் போராட்டம் நடத்தி இருக்கலாம். 😁
  9. நீங்கள், அவர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில்…. ஊகத்தின் அடிப்படையில் சொல்லாமல் அதற்குரிய ஆதாரத்தையும் இணைத்தால் நன்றாக இருக்குமே. நம்பகத் தன்மையான தகவல்களைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நீங்கள் ஒருவரின் பிரச்சார பீரங்கியாக இல்லாமல்…. நம்பகமான தகவலை தாருங்கள் ப்ளீஸ். பிற்குறிப்பு: வர இருக்கும் தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம் இதுவரை… ஒரு கட்சிக்கும் உத்தியோக பூர்வமாக சின்னத்தை ஒதுக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன்.
  10. ஶ்ரீதரன் தான் குற்றம் அற்றவர் என்று மறுப்பு தெரிவித்து விட்டார். விக்னேஸ்வரன் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார். சுத்துமாத்து கோஷ்டிகளான சுமந்திரனும், சாணக்கியனும் ஏன் இன்னும் பம்மிக் கொண்டு இருக்கின்றார்கள். அடுத்த சில நாட்களில்… இவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால்…. சுமந்திரன் எடுத்ததாக சொல்லப்படும் மூன்று மதுபானசாலை அனுமதிப் பத்திரமும், சாணக்கியன் எடுத்ததாக சொல்லப்படும் கல்லடியில் இயங்கும் மதுபான பத்திரமும் உண்மை என்றே கருதப்படும். பதுங்கிக் கொண்டு இருக்காமல், உண்மையை சொல்ல துணிவு இவர்களிடம் உள்ளதா என்பதே, பலரின் எதிர்பார்ப்பு. சீக்கிரம் வெளியே வாங்க.
  11. ஏராளன்… எந்தக் கட்சி பொதுவேட்பாளரின் சங்கு சின்னத்தை, தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பித்து மீண்டும் பெற்றது.
  12. சாத்தான்… நீங்கள் யாரை குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரியவில்லையே. அவர் பெயரின் முதல் எழுத்தை “கிசு கிசு” பாணியில் சொல்லவும். 😀
  13. நான் எங்கே என்று… அடித்தும் கேட்பாங்க, ஒன்றும் சொல்லிப் போடாதீங்க. 😂 🤣
  14. உன் இனத்தின் சார்பாக போனவன் பதவியை இழந்த பின்பும், விதியை மீறி, எதிரி சலுகை கொடுக்கின்றான் என்றால்… உன் இனத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றான் என்று அர்த்தம். தமிழரசு கட்சியில் உள்ளதுகள், அதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். டக்ளஸ் வெளிப்படையாக செய்வதை… இவர்கள், பின் கதவால் செய்கிறார்கள்.
  15. ஆம்… அனைவரின் பெயர்களையும் வெளியிட வேண்டும். அத்துடன்…. கேரள கஞ்சா, ஆப்கானிஸ்தான் அபின், பாகிஸ்தான் பான்பராக்…. போன்ற போதை வஸ்துக்களை கடத்தி காவல் துறையிடம் பிடிபடும் சமூக விரோதிகள் சார்பில்…. நீதிமன்றம் சென்று வாதடி, அவர்களை வெளியே எடுத்துவிடும் வக்கீல்களின் பெயர்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். 😂 🤣 முதலில்…. உங்கள் முதுகில் உள்ள ஊத்தையையும் கழுவுங்கள். மல்லாக்கப் படுத்திருந்து துப்பினால்.. அந்த அசிங்கம் உங்கள் முகத்தில் தான் விழும்? 🧐 தான்… அவசரப் பட்டு அறிக்கை விட்டு… தன்னை சுற்றவாளி என காட்ட அந்தரப் படுகிறார்…. லோயர். 🤣 கூட்டத்தில்…. குசு விட்டவன், முதலில் மற்றவர்களை நோக்கித்தான், கை காட்டுவானாம். 😂 😁
  16. வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழர் மரபுரிமை கட்சி. நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் 2024 ல் வன்னி தேர்தல் தொகுதியில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுபணத்தை தமிழர் மரபுரிமை கட்சியினர் இன்றைய தினம் (02) வவுனியா தேர்தல்கள் ஆனைக்குழுவில் செலுத்தியிருந்தனர் அக்கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் தலைமையில் குறித்த கட்டுபணம் செலுத்தப்பட்டிருந்தது பணத்தை செலுத்துய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் , தாங்கள் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்தீவில் சுயேட்சைக்குழுவாக போட்டியிட்டு பல பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சி என்றும், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இளம் சமூதாயத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான தளத்தை தாங்கள் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமது கட்சியானது வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2024/1402145
  17. சாத்தான்.... நான் சொல்வதை நினைவில் வைத்திருங்கள். பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையுடன், அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தலுக்கு மீண்டும் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடப் போகுது என்று சொல்லி, போனவர்களை மீண்டும் வெளியே அனுப்பி விடுவார். இது நிச்சயம் நடக்கும். மனது சுத்தம் இல்லாத மனிதன். வாயை திறந்தால்.... பொய்யும், பிரட்டும்தான் வெளியே வரும்.
  18. அன்னம்... பாலையும் ,தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். நான் சில மிருகக்காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா? என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார். எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன். ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, *அன்னம் என்பதற்கு* *அரிசிசாதம்* என்றும் ஒரு பொருள் உண்டே. *இதை* நாம் *சிந்திக்கவில்லையே* என்று யோசித்தேன். பிறகு கொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, என்ன *ஆச்சரியம்..!!* *பால்* முழுவதையும் *சாதம்* உறிஞ்சிக் கொண்டிருந்தது. *தெளிந்த நீர்* மட்டும் *சாதத்தைச்* சுற்றியிருந்த *இடத்தில்* வடிந்திருந்தது. உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது. சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன். *இதுதான்* அன்னம் *பாலையும்* தண்ணீரையும் *பிரிக்கும்* கதை. நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் *உங்கள்* வீட்டிலேயே *செய்து* பார்க்கலாம். மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, *அன்னம்* என்று தான் *சொன்னார்களே* தவிர, *அன்னப்பறவை* என்று ஒரு இடத்திலும் *சொல்லவில்லை.* அது *நாமாக* செய்து *கொண்ட* *கற்பனைதான்* என்று புலனாயிற்று. அன்னம் பாலையும் தண்ணீரையும் இப்படித்தான் பிரிக்கும் *என* தெரிந்து கொண்டேன். *படித்ததில் உணர்ந்தது.... Jino Sivaji
  19. யுத்தத்தால் மரணித்தோருக்கு நினைவு துாபி – ஜனாதிபதிக்கு அங்கஜன் கடிதம். யுத்தத்தால் மரணித்தோருக்கான நினைவுத் தூபியை அமைப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குறித்த கடிதத்தில்” யுத்தத்தினால் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் அனுபவித்த துன்பங்களை ஏற்று, அமைக்கப்படும் நினைவுத்தூபியானது முழு நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு நினைவேந்தலுக்கான அடையாளமாகவும் மாறும் எனவும் குறிப்பிட்டுளு்ளார். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் எனவும், இந்தச் சான்றிதழ்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களைத் தீர்க்க உதவுவதோடு, இழப்பீடு மற்றும் பிற வகையான ஆதரவை அணுகுவதற்கும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1402111

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.