Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும்.... தங்களுடைய ஆட்கள் இறந்ததற்கு அனுதாபமோ, கண்டனமோ தெரிவிக்க முடியாத... தொண்டையில்... முள்ளு சிக்கின மாதிரியான வலு இக்கட்டான நிலைமை. 😂 "ஊமை குத்து" என்று இதைத்தான் சொல்வார்கள். 🤣 ஜேர்மனியில் காணொளி தெரிகின்றது நுணா. ஒலி மட்டும் கேட்கவில்லை.
  2. தெரியாத கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால்... கூச்சப் படாமல் கேளுங்கள். 😂 உங்களுக்கு விரிவான விளக்கம் தர காத்திருக்கின்றோம். 🤣
  3. 72 பேர் வேணும் என்றால், நோவை பார்க்க ஏலாதுதானே. 😃 நோவுக்கு... Pain relief குளிசைகள் போட்டு சமாளிக்க ஏலாதா. 😂 பத்து நாள் தானே... பக்கெண்டு போயிடும். 🤣
  4. ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நடத்தை தொடர்பில் விசாரணை. ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் கேள்விக்குரிய நடத்தை மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் அரசியல் நியமனங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். போகொல்லாகம தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும், குறுகிய காலத்தில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு நபரையும் அரசாங்கம் பாதுகாக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1406407
  5. 2024 நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய தினம் தவிர, எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் 1, மற்றும் 4 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேற்கண்ட தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1406438
  6. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியில் அமித் ஷா – கனடா குற்றச்சாட்டு! கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனேடிய அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அரசாங்கம் கனடாவின் முந்தைய குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்து வந்த நிலையில் இந்தக் கருத்து வந்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் படி, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மற்றும் மிரட்டல் அச்சுறுத்தலின் பின்னணியில் அமித் ஷா இருப்பதாக கனேடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் செவ்வாயன்று (29) நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் பெயரை சூளுரைத்தார் என்றும் தி வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சு இது குறித்து இன்னும் பதில் அறிக்கை வெளியிடவில்லை. சீக்கிய பிரிவினைவாதிகள் காலிஸ்தான் எனப்படும் சுதந்திர தாயகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று கோருகின்றனர். இது தொடர்பில் 1980கள் மற்றும் 1990களில் இந்தியாவில் நடந்த கிளர்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2023 ஆம் ஆண்டு கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதர்களை கனடா ஒக்டோபர் நடுப்பகுதியில் வெளியேற்றியது. கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற இந்தியாவும் உத்தரவிட்டது. ஜூன் 2023 இல் இந்தியாவால் காலிஸ்தானி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட கனேடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில், இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா அக்டோபர் 13 அன்று கனடாவால் “ஆர்வமுள்ள நபர்” என்று அறிவிக்கப்பட்டார். https://athavannews.com/2024/1406465
  7. ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு! வடகொரியா சுமார் 10,000 இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியுள்ளதாக திங்கட்கிழமை (28) அமெரிக்கா தெரிவித்துள்ளது. பென்டகனின் அண்மைய மதிப்பீடு ரஷ்யாவில் 3,000 வட கொரிய பணியாளர்கள் என்ற அதன் முந்தைய மதிப்பீட்டை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. உக்ரேனுடனான போரில் இவர்கள் கிழக்கு ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டலாம், இது ரஷ்ய படைகளை வலுப்படுத்தும் என்றும் பென்டகன் கூறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நடவடிக்கையை மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார். இதேவேளை வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், ரஷ்யாவிற்கு வீரர்கள் அனுப்பப்படுவது பற்றிய ஊடக அறிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் பியோங்யாங் அத்தகைய நடவடிக்கையை எடுத்திருந்தால், அது சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் என்று தான் நம்புவதாக கூறினார். https://athavannews.com/2024/1406382
  8. இது, "வந்தால்.... சுல்தான், போனால்.... பக்கிரி" தியரி.
  9. இனியும் காலம் கடந்து விடவில்லை. ”சுன்னத்து” செய்து விட்டு மதம் மாறலாம். 😂 நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை. உங்களுடைய பெயர்…. “காதர் 57” 🤣
  10. மேலே... 72 இளம் கன்னிகள் காத்திருக்கின்றார்கள் என்று சொன்னால் கசக்கவா செய்யும். தாராளமாக உயிரை விடலாம்.
  11. புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா! ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா செவ்வாய்க்கிழமை (29) அதன் அடுத்த தலைவரை அறிவித்தது. AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, நைம் காசிம் (Naim Qassem) ஹெஸ்புல்லாவின் புதிய தலைவராக இருப்பார். செப்டம்பர் மாத இறுதியில் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலால் நஸ்ரலே கொல்லப்பட்டார். லெபனான் மீதான இஸ்ரேலில் அண்மைய தாக்குதல்களில் பல மூத்த ஹெஸ்பொல்லா அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். https://athavannews.com/2024/1406353
  12. அப்படி போடு அருவாளை.... இந்தத் தேர்தலுடன்.. சுத்துமாத்து சுமந்திரனை வெளியேற்றி, தமிழரசுக் கட்சிக்கு, மஞ்சள் தண்ணி தெளித்து தூய்மைப் படுத்த வேண்டும். தந்தை செல்வா... உன்னத நோக்கத்திற்காக ஆரம்பித்த கட்சியை... சுமந்திரன், இனியும் சின்னா பின்னா படுத்துவதை அனுமதிக்க முடியாது. விருப்பம் என்றால், அவர் புது கட்சியை ஆரம்பித்து, தனது சுத்துமாத்தை தொடரலாம். வைத்தியர் அர்ச்சுனா, மேயர் மணிவண்ணன், K.V. தவராசா, அடைக்கலநாதன், சித்தார்த்தன், முன்னாள் விடுதலைப் போராளிகள் என்று ஒவ்வொருவரும் தமது கொள்கைக்கு ஏற்ற மாதிரி தனிக்கட்சி ஆரம்பிக்கும் திறமையும், துணிவும் உள்ள போது... சுமந்திரன்... வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாமல்... மற்றவனின் கட்சியில் அடாத்தாக ஒட்டிக் கொண்டு இருந்து.. அலப்பறை பண்ணுவது பைத்தியக்காரத்தனம். "கறையான் புற்று எடுக்க... கருநாகம் புகுந்த மாதிரி", சுமந்திரன் தமிழரசு கட்சியில் இனியும் இருப்பதை அனுமதிக்க முடியாது. தமிழரசு கட்சியில் இருந்து... சுமந்திரன் உடனடியாக, அடித்து விரட்டப் பட வேண்டிய ஆள்.
  13. எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை – கருத்தை புறக்கணித்தார் விஜித ஹேரத். சமூக ஊடகங்களில் ஏனைய நாடுகளிடம் பணம் பெற்றதாகவும் , புதிய நாணயத்தாள்களை அச்சிட்டதாகவும் வெளியிட்ட கருத்தை அமைச்சரவை முழுமையாக புறக்கணித்துள்ளது. இன்று நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். புதிய அமைச்சரவை அமைக்கப்பெற்றதில் இருந்து எந்த நாட்டில் இருந்தும் கடனை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் , நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் நாணயத்தாள்கள் அச்சிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1406281
  14. இந்தச் செய்தியை கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது கந்தப்பு. விஜய்… தனது அரசியல் பிரவேசத்தின் முக்கியமான தமிழ்த்தாய் வாழ்த்திற்கும், கழகப் பாடலை எழுதவும் ஈழத்து கலைஞர்களை பயன் படுத்திக் கொண்டமை எமக்கு பெருமை சேர்க்கும் விடயம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.