Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அந்த துணிக்கடையில் ஒரு பெண் உள்ளே நுழைந்தார்.. "ஏங்க, வன்னியர் குழந்தைக்கு ட்ரெஸ் கிடைக்குமா..?? என்றார்... . "இருக்குமா, அந்த செக்‌ஷனுக்கு போங்க.." என்றார்... . என்னடா பெரியாரு மண்ணுக்கு வந்த சோதனைனு பீதியில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த என்னை கடைக்காரரே சமாதானப்படுத்தினார்... . அவங்க கேட்டது One Year, குழந்தைக்கு Dress, நீங்க ஒன்னும் பதறாதீங்க... . அப்பாடா.. . ஓ.. இது சாதி பிரச்சனையோன்னு பார்த்தேன்.. நல்ல வேளை இது மொழியை ஸ்டைலா பேசற குந்தானிகளால வந்த பிரச்சனை.. . 24 மணி நேரமும் நம்ம பதட்டத்துலயே வச்சுருக்கானுங்க.... Venkat Bvk
  2. இங்கு ஒரு கோவிலில் பூசகரே... மக்களின் ஆதரவுடன் தமிழில் பூசை செய்வோம் என முன் வந்த போது, கோவில் நிர்வாகத்தின் ஒரு பகுதி கோவிலை பூட்டி, திருவிழாவும் செய்ய விடாமல் பண்ணி விட்டார்கள். இவ்வளவிற்கும் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தமிழ் என்றவுடன் இவர்களுக்கு ஏன்... கசக்கின்றது என்று தெரியவில்லை. நல்லதொரு கட்டுரைக்கு நன்றி புத்தன்.
  3. நடை பெற இருந்ததாக அறிவிக்கப் பட்ட ... உள்ளூராட்சி தேர்தல் நேரமே, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சுமந்திரன் அறிவித்த போது... அதிலிருந்த ஏனைய கட்சிகள் வெளியேறி, அவர்கள் ஒரு அமைப்பாக போட்டியிட ஆயத்தமானார்கள். பின் உள்ளூராட்சி தேர்தல் தள்ளிப் போட்டமை வேறு விடயம். ஆனால்... பிரிந்த போன கட்சிகள் மீண்டும் ஒன்று சேரவே இல்லை. அப்போதே... தமிழ் தேசிய கூட்டடமைப்பையும், தமிழரசு கட்சியையும் பிளவு படுத்திய பெருமை சுமந்திரனையே சாரும். இது தெரியாத மாதிரி பலர் இன்னும்... மல்லாக்கப் படுத்து இருந்து கொண்டு துப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
  4. அதே... ஊரில் உள்ள அரச ஊழியர் பலரும், சங்கிற்கு வாக்களித்துள்ளதாக சொன்னார்கள்.
  5. சிங்களவர்களும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்! சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”தமிழ் பொது வேட்பாளர் தான் தமிழ் மக்களுக்கு தேவை. சங்கே தமிழர்களின் அடையாளம். அதனால் அனைத்து தமிழ் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் தமிழ் மக்களின் குரலை வலுப்படுத்தவேண்டும் முஸ்லீம் மக்களும் மதங்களை தாண்டி தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். அதேபோன்று மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். குறிப்பாக சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம்” இவ்வாறு மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398782
  6. தமிழ் பொதுவேட்பாளர் குறித்து தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சம் – அரியநேத்திரன்! தென்பகுதி வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளமையானது தமிழ் பொதுவேட்பாளர் குறித்து அவா்களிடத்தில் ஒருவித அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுவதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற நமக்காக நாம் பிரசாரப்பணிகளில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதன் பின்னர் தெற்கில் உள்ள பிரதான வேட்பாளர்கள் தெற்கில் பிரசாரங்களை முன்னெடுக்காமல் வடகிழக்கில் முகாமிட்டுவருகின்றனா். தமிழ் மக்களின் திரட்சி கண்டு அவர்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் வெற்றிபெறவேண்டும் என்று வடகிழக்கில் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கின்றார்கள். தென்பகுதியிலிருக்கு தென்பகுதி வேட்பாளர்கள் அங்கு பிரசாரம் செய்வதை காணமுடியவில்லை. அவர்கள் இப்போது வடகிழக்கில் முகாமிட்டுள்ளனர் என்றால் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் அவர்களுக்கு ஒரு அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் திரட்சியாக ஒற்றுமையாக இருக்கின்றார்கள். அவர்களை நாங்கள் இனி சிதறடிக்கமுடியாது என்று என்னை வேட்பாளராக நிறுத்திய பின்னர் அவர்கள் அச்சமடைகின்றார்கள்” என தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1398765
  7. ஏராளன், நீங்கள் கேட்ட ஆள்... சுமந்திரனின் ஆள் போலை இருக்கு. 😂 அதுதான்... சஜித்துக்கு வாக்கு போட்டிருக்கிறார். சுமந்திரனின் ஆளிடம் போய்... அரியநேத்திரனை பற்றி கேட்டால் தும்பு பறக்க பேசுவார்தானே... 🤣 அதே போல்... அரியநேத்திரனின் ஆளிடம் போய், சுமந்திரன் பற்றி கேட்டால் காதால் இரத்தம் வர பேசுவார்கள். 😂
  8. பாவம்... தனிமையில் இருந்த முதியவரின் மரணம் பரிதாபகரமானது. முதியோர் இல்லங்களின் முக்கியத்துவத்தை இந்த மரணம் உணர்த்துகின்றது.
  9. தமிழ் அரசுக் கட்சியின் இன்றைய கூட்டம்... சட்டை கிழியாமல், வேட்டி அவிழாமல், மண்டை உடையாமல்... அமைதியாக நடக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகின்றேன்.
  10. சுமந்திரன் தரப்பு... சஜித்தை ஆதரித்தது சஜித்துக்கே தெரியாதாம். 😂 தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் குழுவின் ஆதரவு, சிங்களப் பகுதிகளில் தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சஜித்துக்கு பீதி ஏற்பட்டிருக்கு. 🤣 அப்ப.. ரணிலை வெல்ல வைக்க... சுமந்திரனும், சாணக்கியனும் தீயாய் வேலை செய்கிறார்கள். சஜித்துடன் ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தாமல்... சுமந்திரன், சாணக்கியன் குரூப் அவருக்கு ஆதரவு கொடுக்கின்றது என்றால்... சமூக ஊடகங்களில் சொல்வது போல் ரணிலிடம் இருந்து சாணக்கியன் 60 கோடி ரூபாயும், சுமந்திரன் 55 கோடி ரூபாயும் பெற்றது உண்மைபோல் தெரிகின்றது.
  11. பூமியை மாசுப்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடம். பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது என்று நேச்சர் ஜர்னலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் 5-ல் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த நாடுகளில் முறையே 35 லட்சம் மற்றும் 34 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. உலகில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் பட்டியலில் சீனா 4-ம் இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்பு சீனா தான் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடாக இருந்தது. ஆனால் இப்போது அந்நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மையால் பிளாஸ்டிக் கழிவுகளை சீனா குறைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1398699
  12. யாகி சூறாவளி-60 பேர் உயிரிழப்பு! யாகி சூறாவளி காரணமாக வியட்நாமில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன இந்த ஆண்டு ஆசிய கண்டத்தை தாக்கும் மிக மோசமான சூறாவளி இதுவாகும் என்றும் இதன் விளைவாக வடக்கு வியட்நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன மேலும் நாட்டின் 12 மாநிலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், கரையோரப் பகுதியில் இருந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன https://athavannews.com/2024/1398754
  13. நாளையுடன்... தமிழரசு கட்சி, இரண்டாக பிரிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
  14. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
  15. “தென்னை மரத்துல ஒரு குத்து…பனை மரத்துல ஒரு குத்து” 😂 🤣
  16. கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு! கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், 4,860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அந்தக் காலப்பகுதியில் கேரள கஞ்சா, ஹாஷிஸ், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களையும் கடற்படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1398667
  17. நைஜீரியாவில் கொடூர விபத்து: 48 பேர் உயிரிழப்பு. நைஜீரியாவின், நைஜர் மாகாணம் அகெயி நகரில் நேற்றைய தினம் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி மீது பயணிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் குறித்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1398663
  18. ஒரு விருதை, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொடுத்திருக்கலாம். 😂
  19. மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு சிறப்பு விருதுகள்! உலக சுகாதார நிறுவனத்தினால் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார, தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று (7) கொழும்பில் இடம் பெற்றுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இருநுாறுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மாத்திரமே குறித்த விருதை வென்றுள்ளமை குறிப்படத்தக்கது. நிகழ்வில், இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் அலோகா சிங்கா, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398631
  20. பாராஒலிம்பிக்ஸ்: 29 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா. மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28-ம் திகதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், தொடரின் இறுதி நாளான இன்று இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார். இதன் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவினார். முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் பூஜா தகுதி பெறவில்லை இதன் மூலம் பாராஒலிம்பிக்ஸ் இந்தியாவின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது. பதக்க பட்டியலில் இந்தியா 6 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என்று 29 பதக்கத்துடன் 18-வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398625
  21. சுவியர்... இந்தப் படத்தைப் பதியும் போது, கந்தர்மட சந்தியில் பிரண்ட "டபிள் டேக்கருடன்" உங்களையும் நினைத்துத்தான் பதிந்தேன். 😂 யாழில் நாங்கள் அறிமுகமாக, பல வருடங்கள் முன்பே... இருவரும் அந்த விபத்தை அருகருகே நின்று பார்த்து இருக்கின்றோம் என்பது ஆச்சரியமான விடயம். 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.