Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
- தென்னிலங்கைக்காகக் காத்திருப்பது! நிலாந்தன்.
தென்னிலங்கைக்காகக் காத்திருப்பது! நிலாந்தன். தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை தீர்மானிக்கும் சக்தியாக வரக்கூடிய வாய்ப்பு ஜனாதிபதித் தேர்தலில் உண்டு என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தூதரகங்களுடான சந்திப்புகளின் போது தமிழ் அரசியல்வாதிகளுக்கு அது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த தென்னிலங்கை வேட்பாளர் வெற்றி வாய்ப்புகளை அதிகமாகக் கொண்டிருப்பார் என்று ஒரு எதிர்பார்ப்பு. நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்கவும் அப்படித்தான் நம்புகிறார் போலும். தென்னிலங்கையை யார் ஆள்வது என்பதனை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் ஒரு அரசியல் சூழல் இந்த முறை மட்டும்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதல்ல. கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் அது ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்த யாப்புச் சதிப் புரட்சியின் போதும் அப்படி ஒரு நிலைமை காணப்பட்டது. யாப்புச் சதிப் புரட்சியில் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தது தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள்தான். அவ்வாறு சிறிய தேசிய இனங்கள் ஒரு பெரிய தேசிய இனத்தின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் நிலை வரக்கூடாது என்று ராஜபக்சங்கள் நன்கு திட்டமிட்டு உழைத்ததன் விளைவுதான் அதையடுத்து வந்த ஜனாதிபதி தேர்தலில் அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பம் பெற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆகும். எனினும் மறுபடியும் இப்பொழுது,ஜனாதிபதியைத் தமிழ் மக்கள் தீர்மானிக்கும் ஒரு கட்டம் வந்திருக்கின்றதா? அப்படியென்றால் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும்? அல்லது தமிழ் மக்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படும் தேர்தல் களத்தில் தென்னிலங்கை வேட்பாளர்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும்? தமிழ் மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்கள் தங்களை நோக்கி மேலும் இறங்கி வரும் விதத்தில் தம்மை மேலும் பலப்படுத்த வேண்டும். அதே சமயம்,தென்னிலங்கை வேட்பாளர்கள் தமிழ் மக்களை நோக்கி இறங்கி வர வேண்டும். அதற்குப் பின்வரும் காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, அதுதான் பெரிய இனம். ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கும் இனம். அரசுடைய தரப்பு. எனவே அதுதான் முதலில் அரசற்ற தரப்பை நோக்கி வரவேண்டும். இரண்டாவது,அதுதான் ஒடுக்கிய இனம். கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்களை ஒடுக்கியதும் இன அழிப்பு செய்ததும் அவர்கள்தான். எனவே அதற்குரிய பரிகாரமாக அவர்கள்தான் இறங்கி வர வேண்டும். சாதாரணமாக ஒரு வியாபாரத்தில் பேரம் என்று வரும் பொழுது யாருடைய உதவி தேவைப்படுகிறதோ அவர்களை நோக்கி உதவி கேட்கும் தரப்புத்தான் இறங்கி வர வேண்டும். எனவே தென்னிலங்கை வேட்பாளர்கள்தான் தமிழ் மக்களை நோக்கி இறங்கி வந்து தாங்கள் என்ன தர முடியும் என்பதனை தெளிவாகக் கூற வேண்டும்.அண்மை வாரங்களாக தென்னிலங்கை வேட்பாளர்கள் தமிழ் அரசியல்வாதிகளை வீடு வரை வந்து சந்திக்கின்றார்கள்.இக்கட்டுரை எழுதப்படுகையில் ரணில் யாழ்ப்பாணத்தில் நிற்கிறார். ஆனால் அவ்வாறு தமிழர்களை நோக்கி வரும் யாருமே தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையூட்டும் வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்பதுதான் இலங்கைதீவின் துயரம்.தாங்கள் எதைத் தர முடியும் என்பதனை அவர்கள் வெளிப்படையாக முதலில் கூற வேண்டும். கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் உடன்படிக்கைகள் முறிக்கப்பட்ட அனுபவம் தமிழ் மக்களுக்கு உண்டு. அவ்வாறு உடன்படிக்கைகள் முறிக்கப்படும் பொழுதெல்லாம் முதற் பலியாவது தமிழ் மக்கள்தான். அதுமட்டுமல்ல இலங்கைத் தீவில் இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளில் பெரும்பாலானவற்றை முதலில் குழப்பியது தென்னிலங்கைத் தரப்புகள்தான். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் மட்டும்தான் சமாதான முயற்சிகள் சில தமிழ்த் தரப்பால் குழப்பப்பட்டன என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு.ஆனால் அதற்கு முன்னும் பின்னும் சமாதான முயற்சிகளைக் குழப்பியது முழுக்க முழுக்க அரசு தரப்புதான். கடந்த 2015ல் ஆட்சி மாற்றத்தின் பொழுது தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களித்தார்கள். ஆனால் மைத்திரி தனக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு துரோகம் செய்தார். தென்னிலங்கை தரப்புக்களால் ஏமாற்றப்பட்ட ஆகப்பிந்திய அனுபவம் அது. இந்த அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், யாருக்கு தமிழ் மக்கள் தேவையோ அவர்கள் தமிழ் மக்களை நோக்கி இறங்கி வரட்டும். அவர்கள் தாங்கள் தமிழ் மக்களுக்கு எதைத் தரக்கூடும் என்பதனை முதலில் வெளிப்படையாக மேசையில் வைக்கட்டும். அதன்பின் மூன்றாவது தரப்புக்களின் மேற்பார்வையோடு ஒரு உடன்படிக்கைக்கு தயாரா என்பதை தெரியப்படுத்தட்டும். நிச்சயமாக எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் அதற்குத் தயாராக இருக்க மாட்டார். மனோ கணேசன் சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சிகள் வைத்துக் கூறியதுபோல தமிழ் மக்களோடு ஓர் உடன்பாட்டுக்கு வரும் தென்னிலங்கை வேட்பாளர் 100 தமிழ் வாக்குகளைப் பெறலாம். ஆனால் அவர் தெற்கில் ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்பதுதான் இப்பொழுதும் இலங்கைத் தீவின் மிகக் குரூரமான அரசியல் யதார்த்தம். இலங்கைத் தீவில் இதுவரையிலுமான எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்கு முறைகள் தொடர்பில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதில்லை. குறைந்தபட்சம் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வெளிப்படையாக அஞ்சலி செலுத்தியதும் இல்லை. முள்ளிவாய்க்காலில்,நினைவிடத்தில் ஒரு பூவைக்கூட வைக்காத அரசியல்வாதிகள். சில ஆண்டுகளுக்கு முன் தெற்கில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை முன்னடத்திய அமைப்புகள் அவ்வாறு அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. அவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது தேர்தல் கேட்கின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களின் தோழமைத் தரப்புகள். ஆனால் பெரும்பான்மைக்குள் சிறுபான்மை. அண்மையில் காலமாகிய விக்கிரமபாகு கருணாரத்தினவைப் போல அவர்களும் பெரும்பான்மைக்குள் சிறுபான்மை. அவர்களில் சில தரப்புகள் இப்பொழுது உருவாக்கியிருக்கும் தேர்தல் கூட்டுக்கள் தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்கவேண்டிய கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.ஆனால் அந்தத் தன்னெழுச்சிப் போராட்டங்களை ஆதரித்த தமிழ் அரசியல்வாதிகள் எவருமே அத்தகைய தரப்புகளோடு இதுவரையிலும் எந்த ஒரு உடன்படிக்கைக்கும் வந்ததாகத் தெரியவில்லை.மாறாக ஒப்பீட்டுளவில் வெற்றி பெறக்கூடிய பிரதான தென்னிலங்கை வேட்பாளர்கள் எப்பொழுது தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவார்கள் என்று காத்திருப்பதாகவே தோன்றுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சம்பந்தரும் இவ்வாறுதான் காலத்தைக் கடத்தினார். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அந்தக் கட்சி இப்பொழுது இரண்டாக உடைந்து நிற்கிறது.ஒரு பகுதி தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றது. இன்னொரு பகுதி தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. ஆனால் தேர்தல் அறிக்கைகளுக்காக காத்திருக்கும் பகுதி தெளிவாக முன்வந்து பொது வேட்பாளரை எதிர்க்கின்றது. கட்சி என்ன முடிவை எடுத்தாலும் தான் தனது முடிவில் உறுதியாக இருக்கப் போவதாக பகிரங்கமாக அறிவிக்கின்றது. அதாவது கட்சியின் உத்தியோகபூர்வ முடிவை மீறுவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றது. ஆனால் கட்சியோ முடிவெடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது உள்ளதில் பெரிய கட்சி முடிவெடுக்க முடியாத ஒரு நிலை.மேலும் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கும் ஒரு நிலை. மற்றொரு கட்சி பரிஸ்கரிக்கின்றது. ஏழு கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை முன்வைக்கின்றன. இந்நிலையில் தென்னிலங்கை வேட்பாளர்கள் யாரோடு பேச வருவார்கள்? யார் தங்களை பலசாலிகளாகக் கட்டி எழுப்புகின்றார்களோ, யாரோடு தமிழ் மக்கள் நிற்கின்றார்களோ, யார் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்களிப்பு அலையை தோற்றுவிக்கப் போகிறார்களோ, அவர்கள்தான் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். அதன் பொருள் தமிழ் பொது வேட்பாளர் தென்னிலங்கை வேட்பாளர்களோடு இரண்டாவது விருப்பது தெரிவு வாக்குக் குறித்துப் பேரம் பேசுவார் என்பதல்ல. https://athavannews.com/2024/1394656- எமது ஆட்சியின் கீழ் திருட்டுக்கு இடமில்லை – எதிர்கட்சி தலைவர்
எமது ஆட்சியின் கீழ் திருட்டுக்கு இடமில்லை – எதிர்கட்சி தலைவர். எமது அரசாங்கத்தின் கீழ் திருட்டுக்கு இடமில்லை எனவும் அவ்வாறானவர்களை மன்னிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (03) நடைபெற்ற ரணவிரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு போர்வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திருட்டு, மோசடி, பொய், நிதிப் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றும் வேலைத்திட்டத்தின் முன்னோடிகளாக மாறுமாறு கூறினார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், திருடர்களைப் பிடிக்கவும், திருடர்களை விரட்டவும், திருடப்பட்ட பொருட்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் பாரிய மனிதாபிமானப் பணியின் ஒரு அங்கமாக மாறுவதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார். https://athavannews.com/2024/1394644- அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – ஜனாதிபதி
அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – ஜனாதிபதி. இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த 4 வருடங்களாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டிருப்பதால் தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும், அதனால் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேந்நு நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். “செழிப்பான எதிர்காலத்திற்கான பயணம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் ஒருபோதும் மறக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். நிதிப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் இவ்வருடம் நிதி ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசிரியர் சேவையில் புதியவர்களை இணைத்துக் கொள்வதற்கு அடுத்த வருடம் மேலதிக நிதியை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். சுயதொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு நிவாரணத்துடன் கூடிய கடன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் இணைந்து இளைஞர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இளைஞர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு சாதகமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி அவர்களின் தகவல்களை கேட்டறிந்துகொண்டதோடு சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இளைஞரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் அனுபவத்தைப் பொருட்படுத்தாமல் தனியார் துறை தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யுமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுப்பதாகவும் உறுதியளித்தார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுரேன் ராகவன், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1394641- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
😂 🤣- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ஆட்டை வெட்டுவதற்கு முன், ஆட்டிடமே அனுமதி கேட்கும் தேர்தல் இது. 😂 அ- லெனின்- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
வாத்து... குஞ்சாக இருக்கும் போது பிடித்து தின்னுறது. அது வளர்ந்தவுடன் ஏறி இருன்னு சவாரி விடுறது. பூனையாரே... இது என்ன விளையாட்டு. 😂- வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது
வைத்தியர் அர்ச்சுனா கைது – 7 ஆம் திகதி வரை விளக்கமறியல். மன்னார் வைத்தியசாலைக்குய் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனா விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனவை மன்னார் நீதவான் நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வைத்தியர் அர்சுனாவை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறி நேற்றைய தினம் மாலை மன்னாருக்கு வைத்தியர் அர்ச்சுனா சென்றிருந்தார். மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர், அங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று இறப்பு தொட்பான விளக்கத்தைக் கேட்டிருந்தார். அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள், விதிமுறைகளை மீறி வைத்தியசாலைக்குள் நுழைய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். பின்னர் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றதை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். இந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மன்னார் வைத்தியர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று காலை வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் எடுப்பதற்காக வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394616- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனா கைது – 7 ஆம் திகதி வரை விளக்கமறியல். மன்னார் வைத்தியசாலைக்குய் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனா விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனவை மன்னார் நீதவான் நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வைத்தியர் அர்சுனாவை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறி நேற்றைய தினம் மாலை மன்னாருக்கு வைத்தியர் அர்ச்சுனா சென்றிருந்தார். மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர், அங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று இறப்பு தொட்பான விளக்கத்தைக் கேட்டிருந்தார். அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள், விதிமுறைகளை மீறி வைத்தியசாலைக்குள் நுழைய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். பின்னர் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றதை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். இந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மன்னார் வைத்தியர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று காலை வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் எடுப்பதற்காக வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394616- ஜனாதிபதி இன்று யாழுக்கு விஜயம்
மருதரை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🥰- இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
முஸ்லிம் என்பது மதமே தவிர, மொழி அல்ல. ஒரு தமிழ் பேசும் வீரன் இறங்கினார் என்பதே... தமிழ் பேசும் ரசிகர்களுக்கு பெருமை கிரிக்கெட் ரசிகன்டா. Muthusamy Navaraja- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் டொக்டருக்கு நல்லதொரு கடிதம் எழுதி இருக்கிறார். முடிந்தால் படியுங்கள், பின் தெளியுங்கள். Prashanthan Navaratnam ############# ################ ############## ############### டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி. 11.07.2024 அன்புச் சகோதரா! வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். அப் பிரார்த்தனை உங்களுக்கானது மட்டுமன்று, சாவகச்சேரி மக்களின் நலம்வேண்டியும், யாழ்ப்பாண வைத்தியத்துறையின் நலம் வேண்டியுமாம். யாரும் எதிர்பாராத நிலையில், பெரியதொரு புரட்சியைத் தனிமனிதராய்ச்;; செய்து முடித்திருக்கிறீர்கள். உங்களின் துணிவிற்கு என் வாழ்த்துக்கள்! நீங்கள் வாய் திறந்து உண்மையை உரைத்த பிறகுதான், நம் மண்ணில் வைத்தியத் துறையினர் சிலர் செய்யும், அட்டூழியங்கள் பற்றி அறிய முடிந்தது. எத்தனை இழிவுகள் ! நினைக்கவே மனம் கூசுகிறது. வெளிப்படையாய் இத்தனை உண்மைகளை நீங்கள் பேசிய பிறகும், மேலிடம் உங்களை அகற்றப் பாடுபடுகிறதே அன்றி, நீங்கள் சொன்னது பற்றி ஆராய முன்வருவதாய்த் தெரியவில்லை. அதிலிருந்தே, நடந்த பாவங்களின் வேர், எதுவரை சென்றிருக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆசிரியம், வைத்தியம் என்னும் இரண்டு துறைகளும், தொழில்கள் அன்றாம். அவை தொண்டுகள்! அதனால்த்தான் இவ்விரு துறை சார்ந்தாரையும், தேவை முடிந்த பின்பும் மக்கள் வணங்கி நிற்கின்றனர். அத் தூய துறையில் இருந்து கொண்டு அதனையும் தொழிலாக்கி, பணம் தேட முனைந்த சில ஈனர்களின் இழிவை, உங்களது நெஞ்சத்துணிவால் உலகிற்கு வெளிப்படுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்! உங்களை மரியாதைக் குறைவாய்த் திட்டியும், ஏன் அடித்தும்கூட, பலர் செய்த மிரட்டல்களையெல்லாம் துச்சமென ஊதித்தள்ளி, அநியாயத்திற்கு எதிராய் நிமிர்ந்து நின்ற உங்களது துணிவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். எத்தனை மிரட்டல்கள். எத்தனை தூற்றுதல்கள். எத்தனை எதிர்ப்புக்கள். அத்தனையையும் கடந்து ஆச்சரியப்படுத்துகிறீர்கள். வியப்பாய் இருக்கிறது! உண்மையின் வலிமை மெல்லப்பரவி, மக்கள் மனங்களில் படர்ந்து, அவர்களையும் கொதித்தெழ வைத்ததும், உங்களின் பின்னால் கூட வைத்ததும், அதிசயமேயாம்! ஆனாலும் பல தீய கரங்கள் ஒன்றிணைந்து, உங்களை ஒருவிதமாய் அவ்விடத்தை விட்டு அகற்றிவிட்டன. உங்களது இச் செயல்களால் நான் மகிழ்ச்சியடைகிறேன். போருக்குப் பின்னான யாழ்ப்பாணத்தில் ஒழுக்கம் குறைந்துவிட்டது என்று, பலரும் ‘வெற்று’ ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்த ஒழுக்கயீன வெள்ளத்துக்கும், சத்தியத்தால் அணைகட்ட முடியும் எனக்காட்டியது, நீங்கள் அடைந்த முதல் வெற்றி. எவரது தூண்டுதலும் இன்றி, ஒரு தனி மனிதனுக்காய் இத்தனை மக்கள் கொதித்தெழுந்த வரலாற்றுச் சாதனை, உங்களுக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி. இயக்கங்களால்கூட இந்தச் சாதனையைச் செய்யமுடியாமல் போயிற்று என்றுதான் சொல்வேன். அவர்கள் பின்னால் இருந்த ஆயுத பலமும், அதிகார சக்திகளும் உங்களின் செயல்களுக்குப் பின்னால் இருந்திருக்கவில்லை. அதனால்தான் அச்; சாதனையை வரலாற்றுச் சாதனை என்கின்றேன். மணிக்கணக்கில் பேசப்படும் உண்மைகளை விட, நிமிடக்கணக்கில் நடைமுறைப்படுத்தப்படும் உண்மைகள் மேலானவை என நிரூபித்து விட்டீர்கள். அதற்காகவும் எனது வாழ்த்துக்கள்! நண்பனே! உங்களை எதிரிகள் பதவியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டாலும் நீங்கள், அவர்களின் தலைகளின்மேல் ‘அறம்’ என்னும் கூர்வாளைத் தொங்கும்படி செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறீர்கள். மக்களை மாக்களாக நினைந்து, தம் இஷ்டப்படி இனி அவர்களால் நடக்கமுடியாது. அவர்களின் செயல்களை மக்களின் ஆயிரம் கண்கள் இனிக் கண்காணிக்கப் போகின்றன. திருந்த விருப்பப்படாவிட்டாலும், அவர்கள் திருந்துவதற்கான வழியை வகுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறீர்கள். அந்த வகையில் உங்களது போராட்டம் வெற்றியாகத்தான் முடிந்திருக்கிறது. அறம் நோக்கிப் போராடத் தலைப்பட்டால் அவர்களின் பின்னால் மக்கள் தானாக அணி சேர்வார்கள்; என்ற உண்மையை மிகத் தெளிவாக நிலைநிறுத்தி விட்டீர்கள். இது நம் அரசியலாளர்களுக்கும் ஒரு பாடமாகட்டும்! டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் பேராதனை, 26.07.2024 நண்பா! நான் உங்களுக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தின் மேற் பகுதியை அப்படியே இடையில் விட்டுவிட்டு இலண்டன் செல்ல வேண்டி வந்து விட்டது. பயணத்தால் வந்து, அக் கடிதத்தை முடித்து வெளியிடலாம் என நினைந்திருந்தேன். திரும்பி வந்து பார்த்தால் நிதானமாகத் தொடங்கிய உங்கள் செயல்கள் ‘தறிகெட்டுப’; போய்க்; கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. அதிர்ச்சியடைந்தேன்!. நல்லகாலம் கடிதத்தின் அந்த முதற் பகுதியை, வெளியிடாமல் சென்றதை நினைந்து உள்ளுர மகிழ்ந்து கொண்டேன். மக்கள் தந்த உற்சாகத்தால் தடுமாறிப் போனீர்களோ? அல்லது உங்களது இயல்பே இதுதானோ? தெரியவில்லை. வரவரத் தேவையற்ற அறிக்கைகளை நாளுக்குநாள் வெளிப்படுத்தி உங்களது மதிப்பை முடிந்தளவு குறைத்து வருகிறீர்கள். ‘யூடியூபைத’; திறந்தாலே உங்களது சிரித்த (இளித்த) முகத்துடன் கூடிய ஓர் செய்தி தினந்தினம் காத்திருக்கிறது.- இது தேவைதானா? ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதனை மறந்து போகாதீர்கள்!. எங்கள் மண்ணில் தொடங்கப்படுகிற போராட்டங்கள் எல்லாம், நெறிப்படுத்துவார் இன்றி வீழ்ந்து போவதுதான் விதியோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. தற்போது தொடர்கிற உங்களது முயற்சிகளெல்லாம் சத்தியத்திற்கான போராட்டமாகத் தெரியவில்லை. அவை உங்களை நீங்களே ஓர் ‘ஹீரோ’ வாக்க முயலும் முயற்சியாகவே தெரிகின்றன. உங்களைப் பற்றி நீங்களே பெருமையாக அலட்டிக் கொள்ளும் விடயங்கள் கேட்பவர்களை வெட்கப்பட வைப்பதோடு அல்லாமல், உங்கள் தனி மனித ஒழுக்கத்தைப் பற்றியும் ஐயப்பட வைக்கின்றன. செய்திப் பசியோடு திரிகின்ற ஊடகநிறுவனங்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ள, நக்கலும், நையாண்டியுமாய் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், அவற்றுக்கு நீங்கள் வழங்கும் பேட்டிகளால் பலருக்கும் உங்களது மனநிலை பற்றிய ஓர் ஐயப்பாடு தோன்றியிருக்கிறது. உங்களை “ஹீரோ”வாக்க நினைந்து, அநீயாயத்திற்கு “கொமேடியன்” ஆகிப் போய் நிற்கிறீர்கள். உங்களுக்காகக் குரல் கொடுக்க முன்வந்த மக்கள் இன்று நாணித் தலைகுனிந்து நிற்கின்றனர். வீரியத்தைவிடக் காரியம்தான் முக்கியமானது என்பார்கள். தற்போதைய உங்களது செயல்களிலோ காரியத்தை விட வீரியம் தான் மேல் ஓங்கி நிற்கிறது. எதிரிகளுக்கு எதிரான தற்போதைய உங்களது சில செயல்களில், தேவையற்ற பரபரப்பும், பகைமூட்டிப் பார்க்கும் செயலும், வெற்றிக்காக, எல்லைகள் கடந்து செல்ல முயலும் தன்மையும், தலை தூக்கி இருப்பது தெளிவாய்த் தெரிகிறது. எதிரிகளைப் பகை வயப்படுத்துவதை விட, அவர்களை அறவயப்படுத்துவதே சிறந்தது. இப்போது உங்களுக்கு அந்த நோக்கம் இருப்பதாய்த் தெரியவில்லை. நீங்கள் உண்மை நோக்கிப் போராடுபவரானால், உங்களது செயல்களில் இத்தனை தடுமாற்றங்கள் வர நியாயமில்லை. நோக்கம் மட்டுமல்ல, செயலும் சரியாக இருக்கவேண்டும் என, நினைப்பவர்கள் தான் தமிழர்கள். அண்மையில் வெளிவந்த, ‘அரசியலில் குதிப்பேன்!’; என்ற உங்களது அறிக்கையிலிருந்து உங்கள் செயல்கள் மட்டுமல்ல, நோக்கமும் தவறென்றே நினைக்க வேண்டியிருக்கின்றது. அதிசயமாய் நிகழ்ந்த ஓர் அற்புத எழுச்சியை, உங்களது புகழ் விருப்புக்காக இழந்து போனீர்கள். வருத்தப்படுகிறேன். வலிமையானவர்களின் பிழைகளை வெளிப்படுத்தக்கூடாது என்ற கட்சியைச் சேர்ந்தவனல்ல நான். ஆனால் மக்கள் மன்று, வெளிப்படுத்துபவர்களின் தூய்மையையும் மனதில் கொண்டுதான், வெளிப்படுத்தப்படும் விடயங்களை ஏற்கும் என்பது நிச்சயம். அபூர்வமாகக் கிடைத்த ஓர் நல்ல வாய்ப்பை இழந்து நிற்கிறீர்கள். உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” இலங்கை ஜெயராஜ் Kambavarithy Ilankai Jeyaraj- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
இன்னுமா... இந்த உலகம் நம்பளை நம்புது. 😂 ஆமா... அது, அவங்க விதி. 🤣- மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம் : புகைப்படங்கள் இணைப்பு
மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம். இதிகாச சிறப்பு பெற்ற கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக மக்கள் அலைக்கு மத்தியில், அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வெளிவீதி பஞ்சமுக விநாயர் தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று பெண்கள்,ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர். தேர் உற்சவத்தின்போது இரண்டு பருந்துகள் தேரினை வலம்வந்த காட்சி அற்புத காட்சியாக இங்கு பதிவுசெய்யப்பட்டது. இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது. அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக்கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றுசிறப்பு காணப்படுகின்றது. இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளத்தில் நடைபெறவுள்ளது. https://athavannews.com/2024/1394568- கருத்து படங்கள்
- அதிசயக்குதிரை
அமெரிக்காவில் இருந்து பிள்ளை அனுப்பிய முந்திரி பருப்பு என்று… கிழவி சொல்லும் போதே, பொலிஸ்காரன் உசாராகி இருக்க வேணும். 😂 ஹ்ம்ம்…. விதி. 🤣- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சிங்களவன் திருந்தி விட்டான் போலை இருக்கு. 😂 தேர்தலுக்கு முன்னர் செய்தால்… குடியா முழுகிப் போகும். 🤣- பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
- கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது!
கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது! வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். https://battinaatham.net/?p=76246Important Information
By using this site, you agree to our Terms of Use.
- பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.