Everything posted by தமிழ் சிறி
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மானிக்கத் திட்டம்!
பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மானிக்கத் திட்டம்! சுமார் 200 வருட கால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களே, உரிமை இல்லாத காணிகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தோட்ட மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு முழு உரிமை வழங்குவது தொடர்பாக கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சகல வசதிகளுடனும் குறித்த கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் எனவும் தோட்ட மக்களை சமூகமயப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1394432- பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
புதனன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படுவார் எனக் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1394440- கடவுச்சீட்டு தொடர்பான அதிரடி அறிவிப்பு!
கடவுச்சீட்டு தொடர்பான அதிரடி அறிவிப்பு! மூன்று வெவ்வேறு வர்ணங்களில் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கானவை என்ற அடிப்படையிலேயே 3 வர்ணங்களில் குறித்த கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1394430- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையே விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு – விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்றிரவு 7 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1394416 ################# ############### ################## ஜனாதிபதித் தேர்தல்: 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறிவிப்பு. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதற்கு இதுவரையில் 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. அந்தவகையில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி.லியககேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும், ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்ஸா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். மேலும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்தி ரத்ன, மற்றும் கே.கே.பியதாஸ ஆகியோரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1394423- இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் இலங்கை-இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை. இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் பிரபல பந்து வீச்சாளர் மதீச பத்திரன மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் விலகியுள்ளனர். உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர்கள் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு பதிலாக மொஹமட் ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. மேலும் குசல் ஜனித், பிரமோத் மதுஷான் மற்றும் ஜெஃப்ரி வென்டேசே ஆகியோரை இலங்கை ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (02) கொழும்பு ஆர் .பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394419- பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
மகிந்தவுக்கு….. தோல்வி பயம் வந்து விட்டது. 😂 மெல்ல பம்முகிறார். 🤣- ஜனாதிபதியாக அல்லது பிரதமராக இளம் தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவு செய்யப்படவேண்டும் என்பது எனது விருப்பம் - நாமல்
எலி, ஏன்…. ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது. 😂 இந்தப் பயல்… தகப்பன் மகிந்தவையும், சித்தப்பன் கோத்தாவையும் மிஞ்சி விட்டான். 🤣- வாழைச்சேனையில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!
அல்வாயன்… இப்படித்தான் நடக்கும் என்று, முன்பே கணித்த உங்களுக்கு பாராட்டுக்கள். 🙂 தொப்பிக்காரரின் சாதகத்தை, விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள். 😅 மௌலவி ஏன் துவக்கு வாங்கினவராம்… கொக்கு சுடவா…??? 😂 🤣- நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு!
தந்தை எவ்வழியோ… தனயனும் அவ்வழி. 😂 இனி…. சின்னவர் உதயனும் அவ்வழி. இது நம் தலைவிதி. 🤣- தமிழ் பொது வேட்பாளர் யார்? சசிகலா ரவிராஜ் அல்லது நீதிபதி. ம. இளஞ்செழியன்?
மேலுள்ள காணொளியின்.... ஆறாவது நிமிடத்தில், முக்கியமான தகவல் ஒன்றை சொல்கிறார் உன்னிப்பாக கேளுங்கள். 😂- நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு!
சென்ற மாதம்... இந்திய மீனவர்களை கைது செய்யப் போன போது... ஒரு ஸ்ரீலங்கா கடற்படை வீரர் மரணமானத்துக்கு பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்குமோ.- சிரிக்கலாம் வாங்க
பக்கத்து வீட்டு ஆன்ரி... பாத் ரூமில் டிரஸ் இல்லாம குளிச்சு கிட்டு இருந்தா . பக்கத்து வீட்டு பார்வை இல்லாத வாலிபன் அவள் வீட்டுக்குள் வந்து அழைப்பது கேட்டது. சரி , பார்வை இல்லாத பையன் தானேன்னு அப்படியே குளிச்ச கோலத்தில் வெளியே வந்து கேட்டாள். " என்ன தம்பி சாக்கெலட் எல்லாம் கொண்டு வந்து இருக்கே ? " அவன் சொன்னான்..... " எனக்கு பார்வை வந்துருச்சு ஆன்ரி, அதான்….” 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு!
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு! நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமற் போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்கள் குழுவொன்றை கைது செய்யச் சென்ற போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது நான்கு மீனவர்கள் கடலில் விழுந்துள்ளதாக அதில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1394350- கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பினத்தவரா? ட்ரம்ப் சர்ச்சை பேச்சு
கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பினத்தவரா? ட்ரம்ப் சர்ச்சை பேச்சு. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கவுள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எழுப்பியுள்ள கேள்வி உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் சிகாகோவில் அண்மையில் இடம்பெற்ற குடியரசு கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் ” கமலா ஹாரிஸ் ஆரம்பத்தில் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்ததாகவும், தற்போது தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி வருவதாகவும் விமர்சித்திருந்தார். அத்துடன் ” கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என்பது தெரியவில்லை எனவும் அவர் வெளிப்படையாக இல்லை எனவும்” குறிப்பிட்டுள்ளார். குறித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ”வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கமலா தன்னை எப்படி அடையாளப்படுத்துகிறார் என்பது குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை எனவும், அது அவரது சொந்த முடிவு எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ”கமலா ஹாரிஸ் மட்டுமே அவரது இனம் குறித்து பேச முடியும் எனவும், அவர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி என்பதால் அவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1394362- கருத்து படங்கள்
- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
- பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
- தமிழ் வேட்பாளர் – அடுத்த வார இறுதியில் அறிவிப்பு
தமிழ் வேட்பாளர் – அடுத்த வார இறுதியில் அறிவிப்பு. தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில், அடுத்த வாரம் அறிவிப்புக்கள் வெளியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அநேகமான தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. வேட்பாளராக நிறுத்த சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் ,அதுக்கென நியமிக்கப்பட்ட குழு ஆராய்ந்து வருகிறது. அடுத்த வாரமளவில் ஒருவரை தெரிவு செய்து அவரின் பெயரை அறிவிப்போம் என தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் இறுதி செய்யப்படும் என இவ்விடயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1394355- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணத்தைச் செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ. தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்ஷ, இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். இதேவேளை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் (7) வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394322- பலிக்கு பலி வாங்க துடிக்கும் ஈரான் – சமருக்கு தயாராகும் உலக நாடுகள்
பலிக்கு பலி வாங்க துடிக்கும் ஈரான் – சமருக்கு தயாராகும் உலக நாடுகள். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ஈரான் தலைவர் அலி கமெனி உத்தரவிட்டுள்ளார். ஈரானின் புதிய ஜனாதிபதி மசூட் பெஸஷ்கியனின் (Masoud Pezeshkian) பதவியேற்பு நிகழ்வு கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற நிலையில், இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மயில் ஹனியே (Ismail Haniyeh) கலந்து கொண்டிருந்தார். இதனையடுத்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த கட்டத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பொது மக்களின் சொத்துக்கள் இதனால் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தரப்பும் பொறுப்புக்கூறாத வகையில், இது சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தத் தாக்குதலை இஸ்ரேல் திட்டமிட்டு நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ஈரான் தலைவர் அலி கமெனி (Ali Khamenei), இதற்கெதிராக இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை நடத்துமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஈரான் மீது இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல் நடத்தினால் போரை விரிவுப்படுத்துமாறும், அதற்கேற்ப தயார் நிலையில் இருக்குமாறும் ஈரான் படைகளுக்கு கமெனி மேலும் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஈரான் பாதுகாப்புச் சபையை கூட்டிய அவர், போர் நடவடிக்கைகள் குறித்து படைப் பிரதானிகளுடன் கலந்துரையாடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஈரானின் பதில் தாக்குதல் எவ்வளவு வலிமையாக இருக்கும் என்று அறிவிக்க முடியாது என்றும் பொது மக்கள் பாதிக்கப்படாத வகையிலேயே இந்தத் தாக்குதல் கட்டமைக்கப்படும் என்றும் ஈரான் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலை கூட்டாக மேற்கொள்ள தனது நட்பு நாடுகளான ஏமன், சிரியாவுடன் தற்போது ஈரான் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டமைக்கு இஸ்ரேலே காரணம் என ஹமாஸ் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் இதுதொடர்பாக எந்தவொரு கருத்தையும் வெளியிடாமல் இருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தனது எதிரிகளை வெளிநாடுகளில் படுகொலை செய்த வரலாறு இஸ்ரேலுக்கு கடந்த காலங்களில் இருப்பதால், இஸ்ரேலே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கும் என்று சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1394358Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.