Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அன்னதானம்.... தேவாலயத்திலா, கோவிலிலா, மசூதியிலா அல்லது புத்த விகாரையிலா கொடுக்க நேர்த்தி வைத்துள்ளீர்கள். 😂
  2. இந்தப் பிக்குமார்... இனி இல்லை என்ற காவாலி, கழிசடைகள். முன்னைய அரசாங்கங்களிலும் இவர்கள் போதை வஸ்து பாவிக்கின்ற ஆட்கள்தான். ஆனால்... அவர்களை கைது செய்யாமல் சீராட்டி வைத்துக் கொண்டு இருந்தவர்கள். இப்போ... இவர்களை பாதுகாக்க எவரும் இல்லை. போதை வஸ்து பாவித்த பழக்கம், அவர்களை மீள விடுகுதில்லை. அதனால் கையும் களவுமாக அம்பிட்டு, கைது செய்யப்படுகின்றார்கள்.
  3. சுமந்திரனுக்கு... தமிழ்மக்கள் ஏற்கெனவே வேண்டாம் போ... என்று, ஓய்வு கொடுத்துத் தானே.... இருக்கின்றார்கள். 😂 இனி என்ன, ஓய்வாக இருக்கும்.
  4. யாழில் கடும் மழை.. இடிந்து விழுந்த சங்கிலியனின் மந்திரிமனை; புனரமைக்க விடாமல் தடுத்த தனிநபர்.! யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணம்.com
  5. நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்! உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. ‘BIRDS-X Dragonfly’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 அன்று நாசாவால் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ்-33 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், இலங்கை தனது முதல் சிறிய-செயற்கைக்கோளான ‘ராவணன்-1’ ஐ வெற்றிகரமாக ஏவியது. மேலும் 2022 ஆம் ஆண்டில், ஐந்து சர்வதேச கூட்டாளர்களை உள்ளடக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ‘கிட்சூன்’ செயற்கைக்கோள் ஏவப்பட்டது. அதன்படி, BIRDS-X டிராகன்ஃபிளை சிறிய செயற்கைக்கோள் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அதன் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் விண்வெளி தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. https://athavannews.com/2025/1447577
  6. போதை வஸ்து பொருட்களுடன் இரண்டு நாட்களில் ஐந்து பிக்கு கைது. இன்னும்.... எத்தனை பிக்குகள் தலைமறைவாக இருக்கிறதோ... அந்தப் புத்தனுக்குத்தான் வெளிச்சம்.
  7. ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது! ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன்போது அவரிடம் இருந்து 10.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் சேவையாற்றிய 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவருடன் கைதான ஏனைய இரண்டு பேரும் 29 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கைதான மூன்று சந்தேக நபர்களும் நேற்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மினுவாங்கொடையைச் சேர்ந்த “நேவி தினேஷ்” என்ற நபரால் இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1447589
  8. இதுவே ஒரு சிங்கள அரசன் சம்பந்தப் பட்ட தொல்லியல் பகுதியாக இருந்திருந்தால்... சிங்கள அரசு அந்தத் தனியாரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்குமா? மாறாக அவரை அதி உச்ச சட்டத்தை பாவித்து அந்த கட்டிடத்தை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும். தமிழ் அரசன் சம்பந்தப் பட்ட கட்டிடம் என்றபடியால்... சிங்கள அரசு எமக்கு "அம்புலிமாமா" கதை எல்லாம் சொல்லிக் கொண்டு உள்ளது. அதை நம்பவும் நம்மில் பலர் இருக்கின்றார்கள். அந்தக் கட்டிடத்தின் முக்கியத்துவத்தையும், நிலைமையையும் கருதி அரசும், தமிழ் அரசியல்வாதிகளும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவறி விட்டார்கள். இவர்களை காலம் மன்னிக்காது.
  9. தி.மு.க. தலைவர்கள் நூற்றாண்டு விழா மேடைக்கு செல்லும் பாதையில்... சிறுநீர் கழிக்கும் உடன்பிறப்பு. 😂 Arya S R Tvk
  10. தேரர்கள்... பாலியல் வன்முறையில் ஈடுபவதை விட, ஐஸ் (கிறீம்) பாவித்தே சாகட்டும்.
  11. மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை! இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலையில் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய் பிரச்சனை மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. தெருநாய் பிரச்சனையைக் கையாள உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. மேலும், இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தடுப்பூசி , கருத்தடை பணிகளை எல்லா மாநில அரசுகளும் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில்தான் உத்தரப் பிரதேச அரசு வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு மனிதனைக் காரணமின்றிக் கடித்தால் நாய்களுக்குத் தண்டனையாம். இதுபோல முதல் முறை நடந்தால் அந்த நாய்கள் 10 நாட்களுக்கு விலங்கு மையத்தில் வைக்கப்படுமாம். அதேநேரம் மீண்டும் அந்த நாய் காரணமில்லாமல் மனிதர்களைக் கடித்தால் வாழ்நாள் முழுவதும் அந்த நாய் அங்கேயே அடைக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்குச் சமம். அப்படிக் காப்பகத்தில் அடைக்கப்படும் நாய்கள் தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறதாம். யாராவது ஒருவர், அந்த நாயைத் தத்தெடுத்தால் மட்டுமே அது காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்படும். மீண்டும் நாயைத் தெருக்களில் விட மாட்டோம் என உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தால் மட்டுமே நாயை விடுதலை செய்வார்களாம். கோபத்தை கட்டுப்படுத்தமுடியாத நாய்களைக் கையாளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அம்மாநில முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜாத் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தெருநாய் கடி காரணமாக ஒருவர் ரேபிஸ் தடுப்பூசி பெற வந்தால், அந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நாய் விலங்குகள் மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுமாம். கால்நடை மையத்தில் நாய்கள் பரிசோதிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படாவிட்டால், கருத்தடை செய்யப்பட்டு பின்னர் 10 நாட்கள் அந்த நாயின் நடத்தை கண்காணிக்கப்படும் எனவும் விடுவிக்கப்படுவதற்கு முன்பு, அந்த நாய்க்கு மைக்ரோசிப் பொருத்தப்படும் எனவும் இதன் மூலம் நாயின் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும் எனவும் இந்திய மாநில கால்நடை அலுவலர் பிஜய் அம்ரித் ராஜ் தெரிவித்துள்ளார். அதே நாய் மீண்டும் மனிதனைக் காரணமின்றி இரண்டாவது முறை கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் மையத்திலேயே வைக்கப்படும் எனவும் நாய் காரணமில்லாமல் கடித்ததா.. இல்லை தற்காப்பிற்காகக் கடித்ததா என்பதைக் கால்நடை மருத்துவரைக் கொண்ட 3 பேர் கொண்ட குழு முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1447561
  12. இது எமது அடையாளம். அரசாங்கம் இதில் அக்கறை செலுத்தப் போவதில்லை. அரசுக்கு... இது அழிவதில் உள்ளூர சந்தோசம். நாம்தான் இதனை வருங்கால சந்ததிக்காக பாதுகாத்து கொடுக்க வேண்டும்.
  13. தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது! யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் இன்று பெய்த மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. https://athavannews.com/2025/1447545
  14. இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்! இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர், 25 பேருந்து டிப்போக்களை நவீனமயமாக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SLTB ஊழியர்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 750 புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SLTB ஒரு இலாபகரமான நிறுவனமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1447484
  15. இங்கிலாந்து சென்றடைந்தார் டெனால்ட் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்து சென்றடைந்துள்ளார். அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றின் கலவையாக இந்த விஜயம் அமைகிறது. செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க ஜனாதிபதி லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது, அவரை இங்கிலாந்தின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர். மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா புதன்கிழமை (17) லண்டனுக்கு அருகிலுள்ள வின்ட்சர் கோட்டைக்கு ஜனாதிபதி ட்ரம்ப்பையும், முதல் பெண்மணியையும் வரவேற்பார்கள். அங்கு அவர்கள் விருந்துபசாரத்தில் பங்கெடுப்பார்கள். அநேரம், வியாழக்கிழமை (18) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ட்ரம்பை அவரது அதிகாரப்பூர்வ நாட்டு இல்லமான செக்கர்ஸில் சந்திப்பார். இதன்போது, உக்ரேன் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் மசகு எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்தியா – சீனா மீதான வரிகளை உயர்த்துவதில் ஜி7 நாடுகளும் நேட்டோ உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் இதன்போது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1447479
  16. நீர் கூட அருந்தாமல்… உண்ணா நோன்பு இருந்த தியாக தீபம் திலீபனுக்கு, நினைவு வணக்கங்கள். 🙏
  17. இங்கும் பாடசாலை தொடங்கி விட்டது. விமானச் சீட்டின் விலையும் குறையும். பென்சன் எடுத்தவர்களும், பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளும் சுற்றுலா செல்ல உகந்த நேரம்.
  18. இது சுமார் 30 வருடங்களுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற பொறியியலாளர். அவர் திருமணம் செய்து கொள்ளாத கட்டை பிரமச்சாரி. அந்தக் குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களுடனும், உறவினர்களுடனும் எந்தவித தொடர்பும் இல்லை. தனியாக நடக்கப் போவது, கடைக்குப் போய் சமையல் பொருட்கள் வாங்கி தானே சமைத்து சாப்பிடுவது என்று… அவரின் ஓய்வு காலம் அமைதியாக போய்க் கொண்டு இருந்தது. நீண்ட நாட்களாக அவரை வெளியே ஒருவரும் காணவில்லை. அவரின் வீட்டு தபால் பெட்டி கடிதங்களாலும், விளம்பரங்களாலும் நிரம்பி வழிந்ததை கண்ட அயலவர்கள் காவல்துறைக்கு அறிவித்து… அவர்கள் வந்து பல வழிகளிலும் முயற்சித்து எந்தவித பதிலும் வீட்டிற்குள் இருந்து வராமல் போக, காவல்துறையினர் கதவை உடைத்துப் பார்த்த போது… வீட்டின் வரவேற்பறையில் உள்ள கதிரையில் தொலைக்காட்சி பார்த்த நிலையில் அவர் மூன்று மாதத்திற்கு முன்பே இறந்து விட்டார். மூன்று மாதமாக… இறந்த ஒருவருக்காக தொலைக்காட்சியும் ஓடிக் கொண்டு இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால்…. இறந்த அவரின் உடலில் இருந்து நாற்றம் எதுவும் வராததால் அயலவர்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இச் செய்தி அக்காலத்தில்… பிரபலமாக பேசப் பட்டது.
  19. யாழ்ப்பாண புகையிரத நிலையம். படம் எடுத்த ஆண்டு 1908. Francis P Welangoda
  20. சீனத் தூதுவர்.... மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சேனநாயக்க போன்ற முன்னாள் ஜனாதிபதிகளை சந்திக்க, இருப்புக் கொள்ள முடியாத இந்தியத் தூதுவர்... ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை மாதிரி, நாமலை சந்தித்து... தமது "அரிப்பை" போக்கியுள்ளார்.
  21. ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்! இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்தக் கடற்றொழிலாளர்களுக்கு, தலா 5 கோடி ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் தமிழகக் கடற்றொழிலாளர்களை, இலங்கை கடற்படை கைது செய்வதும், அபராதம் விதிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்றும் குறித்த மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை அரசின் இத்தகைய செயற்பாடுகளைத் தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது கடற்றொழிலாளர் சமூகத்தைக் கொந்தளிக்கச் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447347
  22. ஊழலை தடுக்க AI அமைச்சரை பணியமர்த்திய அல்பேனியா! அல்பேனியா அரசு உலகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சரை (AI Minister) பணியமர்த்தியுள்ளனர். AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சரின் பெயர் டியல்லா (Diella). அல்பேனியாவில் அதிகம் ஊழல் நடப்பதாக வந்த புகாரையடுத்து, ஊழலை தடுக்க அல்பேனியா பிரதமர் எடி ராமா (Edi Rama) செயல்படுத்தியிருக்கும் புதிய யோசனைதான் இந்த AI அமைச்சர். அமைச்சர் என்றால் ஏதாவது துறையை ஒதுக்க வேண்டும். அதனால் அரசு திட்டங்களை தனியாரிடம் கொடுத்து செயல்படுத்தும் பொது கொள்முதல் (Public Procurement) துறையை டியல்லாவிடம் ஒதுக்கியுள்ளனர். இதேவேளை, அல்பேனிய அரசின் ஒப்பந்தங்களை மதிப்பீடு செய்து அந்த துறை 100 சதவிகிதம் ஊழல் இல்லாமல் செயல்பட AI அமைச்சர் டியல்லா உதவி செய்வார் என பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால் இதில் எந்த அளவுக்கு மனித மேற்பார்வை இருக்கும் என பிரதமர் இன்னும் கூறவில்லை. டியல்லாவை அல்பேனிய அரசு பயன்படுத்துவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பே அல்பேனியாவின் டிஜிட்டல் சேவை தளங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை விண்ணப்பிப்பதற்கு மெய்நிகர் உதவியாளராக டியல்லா உதவி செய்திருக்கிறது என அல்பேனிய பிரதமர் கூறியிருக்கிறார். இந்நிலையில் இந்த AI அமைச்சர் யோசனை சட்டத்துக்கு எதிரானது எனவும் முட்டாள்தனமானது எனவும் அல்பேனியாவில் எதிர்கட்சியினர் கூறியுள்ளதுடன் AI அமைச்சர் குறித்து பல எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதை அல்பேனிய அரசு அதிகாரபூர்வமாக நியமிக்கவில்லை. இது ஒரு அடையாள நடவடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447407

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.