Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. SMART CITY ஆக போகும் யாழ் நகர். யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று(14) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகஆக போகும் யாழ் நகர் யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (ளுஆயுசுவு ஊஐவுலு) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று(14) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால், இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட் நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் கொவிட் பெருந்தொற்று காராணமாக இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. யாழ் பல்கழைக்கழக மருத்துவ பீடத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த திட்டத்தை செயற்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது முன்வந்துள்ளதுடன், முன்கள ஆய்வுகளையும் நடத்தியுள்ளது. அதற்கமைய, கழிவு முகாமைத்துவம், சுத்தமான குடிநீர், தூய்மை, ஆரோக்கியமான உணவு, ஆரோக்கிய வாழ்வை கட்டியெழுப்பக்கூடிய சூழல் கட்டமைப்பு அடங்கலாக ஒன்பது பிரிவுகளின் கீழ் ஸ்மார்ட் நகர திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆளுநரின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இன்றைய தினம் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த செயற்பாட்டிற்கான முழுமையான திட்ட முன்மொழிவை சமர்பிக்குமாறு இதன்போது ஆளுநர் உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அத்துடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளூராட்சி திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். hண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால், இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட் நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் கொவிட் பெருந்தொற்று காராணமாக இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. யாழ் பல்கழைக்கழக மருத்துவ பீடத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த திட்டத்தை செயற்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது முன்வந்துள்ளதுடன், முன்கள ஆய்வுகளையும் நடத்தியுள்ளது. அதற்கமைய, கழிவு முகாமைத்துவம், சுத்தமான குடிநீர், தூய்மை, ஆரோக்கியமான உணவு, ஆரோக்கிய வாழ்வை கட்டியெழுப்பக்கூடிய சூழல் கட்டமைப்பு அடங்கலாக ஒன்பது பிரிவுகளின் கீழ் ஸ்மார்ட் நகர திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆளுநரின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இன்றைய தினம் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த செயற்பாட்டிற்கான முழுமையான திட்ட முன்மொழிவை சமர்பிக்குமாறு இதன்போது ஆளுநர் உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அத்துடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளூராட்சி திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். https://athavannews.com/2024/1388009
  2. இலங்கையின் மானத்தை காப்பாற்றியது மழை என்று தலைப்பு வர வேண்டும். - Siva Gopal - மழைவந்ததாலை தான் உங்கட மானம் கொஞ்சமாவது காப்பாற்ற பட்டது. இல்லையேல் கோமணத்மையே உ௫வி இ௫ப்பாங்கள் நேபாளி. - Thayaparan Mahalingam - ஆளாளுக்கு இலங்கையை அடித்து நொறுக்கிய நிலையில், நேபாளத்திற்கு அந்த வாய்ப்பு மழையால் தடைபட்டது. - Jagadeesh Ramya - Just to miss. நேபாளம் வெல்ல வேண்டிய match. Better luck next time Nepal❤️ - Kantharajah Vinojan - இலங்கை மானத்தைக் காப்பாற்றும் சூரியன் எப்.எம். - Subanesh Santhakumar - தலைப்பிலேயே நக்கல் பண்ணி இருக்கு. - Rathnam Kumaran - இன்று மழை குறிக்கிட்டது இதற்கு முன் நடந்த இரண்டு மெட்ச்ல யார் குறிக்கிட்டது??? - Mohamed Farhan -
  3. எனக்கு இந்த காமென்ஸ்சும் பிடித்து இருக்கு. நைசாக... இந்திய ஊழலை ஒரு பிடி பிடித்து இருக்கின்றார். 👇 🤣
  4. பலரும் இந்த மைதானத்தைப் பற்றி அறிய ஆர்வமாக இருப்பதால்... 👇 இணையத்தில் வந்த மேலதிக தகவல்களை கீழே தருகின்றேன். 👇 இது தான் சிறப்பான pitch bowling batting இரண்டுக்கும் பொருத்தமானதாக அமைந்திருந்தது. 200 ஓட்டங்களை பெறும் இந்திய pitch களை விட சிறப்பான போட்டி. அனைத்து அணிகளுக்கும் ஒரே தன்மை வாய்ந்ததாக காணப்பட்டது. - Thiru Yogi - இதை இந்தியாவில் இடிப்பதாக இருந்தால் எத்தனை உபிஸ்கள் இடிக்க விடாம முட்டு கொடுப்பாங்க தெரியுமா? மோடியையும் சேர்த்து திட்டியிருப்பாங்க. - Laksmipathi Maha - குவைத் தீவிபத்திற்கு மோடி தான் காரணம் என்று புலம்பும் வெறிபிடித்த உபிஸ்கள் இதை இடிப்பதற்கும் மோடி தான் காரணம் என்று சொல்வானுங்க. - Laksmipathi Maha - இது பந்துவீச்சாளர்களின் சொர்க்க பூமி இதை அளிக்கக்கூடாது. போற்றி பாதுகாக்க வேண்டும். மட்டையை ஒழுங்காக பிடிக்கத்... தெரியாவிட்டால் இந்த ஆடுகளத்தில் விளையாடவே முடியாது. நேர்த்தியாக மட்டை பிடிக்கத் தெரிந்தவன் மட்டுமே இங்கே விளையாட முடியும் இல்லையென்றால் டக் அவுட்டில் உட்கார்ந்து வேடிக்கைதான் பார்க்க வேண்டும். - Nsmamr Phirapu - எதுக்கும் ஒரு முறை ஆஸ்திரேலியாவையும் விளையாட வைத்தால் அவர்களின் மகிமையும் என்னவென்று தெரிந்து விடும். அப்புறமா நானும் வருகிறேன் இடிக்க. - Saravanan Sanmuganathan - ஆனா ஒன்று இங்கு பெரிய அணி சிறிய அணி என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கிய ஒரே மைதானம் எனக்கு தெரிந்து இதுதான் உள்ளூர் வெளியூர் பேட்டிங் பவுலிங் என்று எந்தவித பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் போட்டு தாக்கியது அளவுக்கு அதிகமான திறமை இருப்பவர்கள் மட்டுமே இதில் விளையாட முடியும் குறிப்பாக இந்தியாவில் லட்சுமணன் டிராவிட் மாதிரி ஆட்கள் தான் இந்த மைதானத்தில் விளையாட முடியும் இவர்களைத் தாண்டி சேவாக் மாதிரி பந்தை பார்த்து அதிரடியாக விளையாடுபவர்களும் நன்றாக விளையாடலாம் அதேபோல் இந்த மைதானத்தில் 20 ஓவர் போட்டி விளையாடுவதற்கு முன்னர் ஏதாவது ஒரு இடத்தில் ஐந்து டெஸ்ட் போட்டி விளையாடிவிட்டு வந்தால் தான் இந்த மைதானத்தில் 20 ஓவர் போட்டியில் பேட்டிங் நன்றாக பண்ண முடியும் இந்திய அணி வீரர்கள் சொதப்புவதற்கு காரணம் ஐபிஎல் விளையாடிவிட்டு வந்ததுதான் அங்கு தார் ரோடு வயதானத்தில் அதிரடியாக ஆடிவிட்டு இந்த மைதானத்தில் அதிரடியாக விளையாட முடியாது. - Micheal Mcheal - நல்ல பிட்ச். இரண்டு இன்னிங்ஸும் ஒரே மாதிரி இருக்கும் பிட்ச்கள் அதிசயமானவை. - குமரகுரு ருகுரமகு - மைதானத்தை ஏன் உடைக்க வேண்டும்? பிச்சை மாற்ற வேண்டியது தானே!!! 😄 - Mahindababu Ramanathan - மைதானம் அமைப்பது மிகவும் கடினமான வேலை அதை செய்யும் தொழிலாளிகளையும் அவர்களின் சிந்தனையும் நாம் அவர்கள் மதிக்க வேண்டும்.பணம் மதிப்பை அந்த நாடு புரிந்துகொள்ள வேண்டும்.அந்த நாட்டின் விளையாட்டு வளர்ச்சியையும் வீரர்களையும் உருவாக்க இந்த மைதானம் மிகவும் துணையாக இருக்கும்.உலகின் தலைசிறந்த வீரர்களை சோதனையும் அவர்களின் விளையாட்டுக்கு சுய பரி சோதனை செய்யதுகொள் என மறைமுகமா அவர்களுக்கு சவால் அளித்த மைதானம் இந்த மைதானத்தில் வீரர்கள் நன்றாக விளையாட்டு பயிற்சி செய்தால் உலகின் எந்த மைதானத்திலும் அந்த நாட்டு விளையாட்டு வீரர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்பதே எனது கருத்து. ஏற்குமா அந்த நாடு. - Rs Anbu - இங்குள்ள கட்டுமானங்கள் அனைத்தும் பிரித்து வேறு இடங்களுக்கு போய்விடும். அதனால் பெரிய நிதி இழப்பு ஏற்படாது. - Anand - இது ஒரு makeshift மைதானம். வெறும் முதல் உலககோப்பை போட்டிக்காக சற்று 100 நாட்கள் முன்னர் 3 மைதானங்களில் ஒன்றாக இந்த மைதானம் இறுதி செய்யப்பட்டது. இதில் இருக்கும் பிட்ச்கள் ஆஸ்திரேலியா வில் ட்ராப் இன் பிட்ச்களாக செய்யபட்டு கப்பல் மூலம் அமெரிக்கா கொண்டு வந்து நிறுவப்பட்டது. இங்கு இருக்கும் இருக்கைகள் தற்காலிக இருக்கைகள். லாஸ் வேகாஸ் ஃபார்முலா 1 போட்டிகள் நடக்கும் track இல் இருந்து கொண்டு வரப்பட்டவை மீண்டும் அங்கேயே சென்று நிறுவப்படும். - Salim Mohammed - இந்தியா vs பாகிஸ்தான் average ticket cost 96000,34k seats 34*96000=326கோடி போட்ட 250 கோடிக்கு ஒரு மேட்ச்லயே எடுத்துட்டாங்க மத்தது எல்லாமே profit தானே. - Chinraj Sham - அமெரிக்காவில் என்பதால் 250 கோடி. இதுவே இந்தியாவில் என்றால் 2500 கோடி ஆகி இருக்கும். 😂 - Aafiya Jaffer - எல்லாம் அமித்ஷா பையன் பாத்துக்குவான். 🤣 - Baburaj Balan -
  5. 13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா ! 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தால், இரத்தம் சிந்தியேனும் அந்த முயற்சியை முறியடிப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்து தொடர்பாக, இவ்வாறு கருத்து தெரிவித்த மேர்வின் சில்வா, நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு இரத்தம் சிந்த தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “சஜித் பிரேமதாச 13வது திருத்தச் சட்டத்தை வழங்குவோம் என வடக்கில் சஜித் கூறுகின்றார். 13 ஆவது திருத்தத்திலுள்ள எதனை அவர் வழங்கப் போகின்றார்? காணி அதிகாரங்களை அல்லது பொலிஸ் அதிகாரங்களை வழங்குகிறாரா, என்பதை அவர் தெளிவுபடுத்தவேண்டும். இந்த நாட்டில் வடக்கிற்கு தெற்கிற்கு என வெவ்வேறு அதிகாரங்கள் இருக்க முடியாது. பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்க வேண்டும். மாறாக மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நான் உயிரோடு இருக்கும் வரை அமுல்படுத்த விடமாட்டேன். அதையும் மீறி யாரேனும் 13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்களை வழங்கினால், இரத்தம் சிந்தியேனும் வீதியில் இறங்கி அந்த முயற்சியை முறியடிப்பேன். சஜித்தின் தந்தையான ரணசிங்க பிரேமதாச அதிகளவான ஆயுதங்களை புலிகளுக்கு வழங்கியிருந்தார். இதனால் நூற்றுக் கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். அது குறித்து நான் இங்கு பேசப் போவதில்லை” என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1387970
  6. போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்! உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார். அதாவது “ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெறத் தொடங்கவேண்டும்” எனவும் “நேட்டோவில் சேருவதற்கான திட்டங்களை உக்ரேன் கைவிடவேண்டும்” எனவும் அவர் தனது நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டால், உடனே போரை நிறுத்த உத்தரவிடுவதாகவும், பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாக்குறுதியளித்துள்ளார். உக்ரேன் – ரஷ்ய போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் பதிலடி கொடுப்பதால் போர் தொடர்ந்தும் நீடித்து வருகிறது. பாதுகாப்பிற்காக நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முயன்றமையினால், அந்த நாட்டின் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தது. நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு தாக்கப்படுமாக இருந்தால், நேட்டோ அமைப்பிலுள்ள ஏனைய நாடுகள் இராணுவ உதவி செய்ய வேண்டும் என்பதே நேட்டோ நாடுகளின் உடன்படிக்கையாகும். இந்நிலையிலேயே, உக்ரேனை நேட்டோவில் சேர விடாமல் தடுப்பதற்கு, ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி போர் நிறுத்தத்திற்கு இரண்டு நிபந்தனை விதித்துள்ளமை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தாலியில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு மற்றும் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1387973
  7. படத்தில் ஒரு யானைக்குட்டி பெரிதாகவும் மற்றையது மிகச் சிறிதாகவும் இருப்பதை பார்க்க.... ஆகக் குறைந்தது 50 கிலோ வித்தியாசம் இருக்கும் என நினைக்கின்றேன். மனிதரில் பிறக்கும் இரட்டை குழந்தைகளில் கூட... ஒருவர் ஆணாகவும், மற்றையவர் பெண்ணாகவும் பிறப்பது அரிதான விடயம் என கருதுகின்றேன். எனக்குத் தெரிந்த இரட்டையர்கள் பலரும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள்.
  8. நம்ம ஊர் மாதிரி…. தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன், அடாத்தாக நிரந்தர விகாரை கட்டுற மாதிரியான ரெக்னிக்கை இந்த விளையாட்டு மைதானத்தில், அமெரிக்கன் பின்பற்றி இருக்கலாம். சுளையாக 250 கோடி மிஞ்சி இருக்கும். 😂 🤣
  9. நியூயார்க் மைதானம் அழிக்கப்படுகிறது, இதுவே கடைசிப் போட்டி! மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படங்களுக்கு சில திரையரங்குகளில் இன்றோடு இப்படம் நிறைவடைகிறது என்று போஸ்டர் ஒட்டுவதைப் பார்த்திருப்போம்.. அதே போல இன்றோடு இம்மைதானம் அழிக்கப்படுகிறது என்பதை கேட்க சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. உலகக்கோப்பைக்காக மிகப்பிரம்மாண்டமாக மிக குறுகிய காலத்தில் கட்டப்பட்ட நியூயார்க் மைதானம் இன்றோடு விடைபெறுகிறது. இன்று இந்தியா - அமெரிக்கா ஆடும் ஆட்டமே இறுதி ஆட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமே 8 ஆட்டங்கள் தான். இந்த உலகக்கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய மைதானம் என்றால் இது தான். இம்மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 107 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 105 ரன்கள் மட்டுமே. 20 ஓவர் போட்டிகளுக்கு இது மிகவும் குறைவானது தான். இம்மைதானம் 8 ரன்களுக்கு 1 விக்கெட் வேண்டும் வேண்டும் என கேட்டு வாங்கிக் கொள்கிறதாம். ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை பலி வாங்கிவிட்டது. இம்மைதானத்தில் தப்பித்தவர்கள் என்றால் அது தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் தான். இந்தியா மட்டும் இங்கே தோல்வி பெற்றிருந்தால் மிகப்பெரிய சர்ச்சையே வெடித்திருக்கும். வெறும் 8 போட்டிகளோடு தனது ஆயுளை நிறைவு செய்யும் இம்மைதானம் உருவாக்க ஆன செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் 250 கோடி ரூபாய் மட்டுமே! MixtureMemes
  10. அனுரகுமார பிரித்தானியாவிற்கு விஜயம் : புலம்பெயர் தமிழ் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டம்! தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரித்தானியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டனில் நாளை நடைபெறவுள்ள இலங்கையர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரித்தானியாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே, லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாளர்கள், புலம்பெயர் அமைப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் அவர் நாடு திரும்பவுள்ளார். https://athavannews.com/2024/1387946
  11. உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் தொகையை வழங்க ஜி7 நாட்டு தலைவர்கள் ஒப்புதல்! ஜி 7 நாடுகளின் 50 ஆவது உச்சி மாநாடு நேற்று இத்தாலியில் அபுலியாவில் (Apulia) ஆரம்பமானது. உலகின் 7 முக்கிய முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் மற்றும் கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இதில் செயற்படுகின்றன. குறித்த மாநாட்டில் இம்முறை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரேன்(Ukraine) ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் துருக்கி(turkey) ஜனாதிபதி Recep Tayyip Erdoğan ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துக்கொண்டனர். இந்த மாநாட்டில் ரஷ்ய இறையாண்மை சொத்துக்களிலிருந்து உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் தொகைகளை வழங்க ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ரஷ்யாவுடனான போரில் உக்ரேனுக்கான ஒத்துழைப்புக்களை இரட்டிப்பாக்குதல், சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்பார்ப்புக்களுக்கு எதிராக ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபளித்தல் என்பன இந்த மாநாட்டின் இலக்கு என குறிப்பிடப்படுகின்றது. இதன்போது, 10 வருட இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்க்கி ஆகியோர் கைச்சாட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனின் பாதுபாப்பை பலப்படுத்துவதையும், உக்ரேனை நேட்டோ உறுப்பினர்களுடன் நெருக்கமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவுக்கும் – உக்ரேனுக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1387808
  12. ரஷ்ய இராணுவ சேவையில் இணைந்துகொண்ட இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு! ரஷ்ய இராணுவ சேவையில் இணைந்துகொண்ட இலங்கையர்கள் நாடு திரும்புவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளது. இந்தக் குழுவினர் சில நாட்கள் ரஷ்யாவில் தங்கவுள்ளதுடன், அந்த நாட்களில் உரிய அதிகாரிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கையர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, சுமார் 600 பேர் இணைந்துள்ளதாகவும், அவர்களில் சிலர் நாட்டுக்கு வர விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சில நாட்களுக்கு முன்னதாக ரஷ்யாவுக்குச் சென்ற நிலையில், இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1387765
  13. துமிலன் செல்வகுமாரனுக்கு பாராட்டுக்கள். ஊடகத்துறையில் அதுகும் பெருமை மிக்க “Stern Award“ பெறுவது சாதனையான விடயம். 👍🏽 பத்திரிகை ஆசிரியர் + எழுத்தாளர் துமிலனுக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். 💐
  14. “அடியாத ஆடு, படியாது இல்லையா…” என்று தமிழிசையை சொல்ல வைத்து விட்டார்கள். 😂 இந்தக் காணொளியை பலமுறை பார்த்து சிரித்தேன். 🤣
  15. அங்கஜன்… போன தேர்தலுக்கு நாமல் ராஜபக்சவுடன் கை கோர்த்து, திருநெல்வேலி சந்தை எல்லாம் கூட்டிக் கொண்டு திரிஞ்சவர்.
  16. வரலாற்றில் முதன்முறையாக பிக்குமாருக்கு புலமைப் பரிசில்! வரலாற்றில் முதன்முறையாக பிரிவெனா, சில்மாதா கல்வி நிலையங்களில் பயிலும் பிக்குமார்,பிக்குனிகள், மற்றும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். மாகாண ஆளுநர்களுடன் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” குறித்த புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல் முடிவடைந்ததையடுத்து புலமைப்பரிசில்கள் வழங்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும். க.பொ.த உயர் தரத்தில் தகவல் தொடர்பாடல், தொழிநுட்பம் பாடம் கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன”இவ்வாறு சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த அனைத்து புலமைப்பரிசில் கொடுப்பனவுகளுக்காகவும் வருடமொன்றுக்கு 5100 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும், அதற்கான முழுத் தொகையும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1387719

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.