Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு! அமெரிக்காவின் மிக உயர்ந்த பழமைவாத ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரமுகர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பராகவும் இருந்த சார்லி கிர்க் (Charlie Kirk) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 31 வயதான கிர்க் புதன்கிழமை (10) உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடந்து ஆறு மணி நேரத்திற்குப் பின்னரும் அதிகாரிகள் இன்னும் ஒரு சந்தேக நபரைகூட பகிரங்கமாக அடையாளம் காணவில்லை. எந்த சந்தேக நபரும் காவலில் இல்லை என்று சட்ட அமுலாக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் தெரிவித்துள்ளது. 18 வயதில் அவர் நிறுவிய “Turning Point USA” அமைப்பு – இப்போது நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு விரிவடைந்துள்ளது – இது தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. கிர்க்கின் அதிர்ச்சியூட்டும் மரணத்தை அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “மாபெரும், மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் இறந்துவிட்டார். அமெரிக்காவில் சார்லியை விட வேறு யாரும் இளைஞர்களின் இதயத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறி இரங்கல் தெரிவித்தார். https://athavannews.com/2025/1446727
  2. கருத்தடை பண்ணிய நாயை இலகுவில் கண்டு பிடிக்க, காதில் ஓட்டை போடுகிறார்கள் என்பதால்... ஒரு முறை கருத்தடை பண்ணிய நாயை மீண்டும் கொண்டு போக முடியாது. சுவியர்... மேலே நான் பகிடிக்கு எழுதினேன். சீரியசாக எடுக்காதீர்கள். 😂
  3. இந்த வருடம் மே மாதத்தில் டிரம்பிற்கு 1.2 டிரில்லியன் டாலர்களை அள்ளி வழங்கியது கத்தார். அதுமட்டுமா 400 மில்லியன் டாலர் பெருமதியான அதி சொகுசு போயிங் 747-8 விமானத்தை அந்த பைத்தியத்திற்கு பரிசாக வழங்கியது. அதற்கு பரிசாக இன்று, தோஹா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ட்ரம்பின் அனுமதியோடு அவனது மேற்பாரவையில் சிறப்பாக இடம் பெற்றது. உண்மை உரைகல்
  4. அடுத்த முறை கொலிடேக்கு, ஊருக்கு வரும் போது... முதல் வேலையாக உங்கள் வீட்டு பெட்டை நாயை பிடித்து, கருத்தடை ஆபரேஷன் பண்ணி விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கிறது. இப்ப சந்தோசமா ஏராளன். 😂
  5. நாயை.... கடிக்காமல் பிடிக்க, ஒரு ரெக்னிக் இருக்குது. 😂 அந்த ரெக்னிக்கை பாவித்து பிடித்தால்... வாலை ஆட்டிக் கொண்டு சாதுவாக நிற்கும். 🤣
  6. ஸ்க்றீன் ஷொட் எடுத்து வைக்கப் போகிறோம் என்பதை @தனிக்காட்டு ராஜா கேள்விப்பட்டால் அடுத்த ஆறு மாதத்துக்கு இந்தப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார். 😂
  7. காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=24805456195728930 👈 👉யாழில் பாரிய ஒரு விசித்திர விபத்து! CCTV_காணொளி‼️‼️‼️ மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து! யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்....வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நம்ம யாழ்ப்பாணம்
  8. யாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம்! யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில் இன்று காலை 8 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முச்சக்கர வண்டியொன்று வீதியில் வைத்து திரும்ப முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த துவிச்சக்கர வண்டி மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் நான்கு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsயாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5...யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். யாழ்https://www.facebook.com/Athavannews/videos/1138292688361845
  9. ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு! நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது. அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது. ஒரு காலத்தில் எங்களை போலவே நீங்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். இதனாலேயே நம்மை போன்றவர்கள் என எண்ணி வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். அத்துடன், இன்று வரை எங்களுக்காக மரணித்த ஒருவரை கடவுள் என நாடாளுமன்றத்தில் கூறிய ஒரே தமிழ் அரசியல்வாதி நான் மட்டுமே. வடக்கு கிழக்கில் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இன்றுவரை எடுக்கப்படவில்லை. யாரும் அதற்காக கைது செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தீர்கள். வன்முறைகளை நாம் விரும்புவதில்லை. உங்களுடைய கட்சியை சேர்ந்த நால்வர், அரகலய காலத்தில் நாடாளுமன்றத்தை எரிக்குமாறு கூறினார்கள். ஆனால், நீங்கள் இன்று நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட வாகனங்களிலேயே பயணிக்கின்றனர். நாங்கள் கடவுச்சீட்டு அலுவலகம் கேட்கவில்லை, கிரிக்கட் மைதானம் கேட்கவில்லை. மாறாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையே கேட்டோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பில் நான் ஜெனீவா சென்று முறையிடுவேன். அதன் பின்னர் நாட்டிற்கு வந்தவுடன் என்னை கைது செய்வதாயின் கைது செய்யுங்கள். ஆனால், நான் என்றாவது ஒரு நாள் சிங்கள மக்கள் வாழும் ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுவேன். அப்போது உங்கள் கட்சியில் எத்தனை குழந்தைகள் மீதம் இருக்கிறது என்பதை பார்ப்போம்”இவ்வாறு இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446688
  10. ஒரு பெட்டை நாயை பிடித்துக் கொடுத்தால்... 600 ரூபாய் என்பது, நல்ல காசு. நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன். 😂
  11. நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்! நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர் போராட்டங்கள், நாட்டின் அரசியல் அமைப்பில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு நடவடிக்கையாக, ‘ஜென் Z’ போராட்டம் எனப்படும் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் வீதிகளில் குதித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் நாகு சிறையை உடைத்து கைதிகளை வெளியேற்றினர். முதல் கட்டமாக சுமார் 2,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மற்றொரு பகுதியில் இருந்த 1,500 கைதிகளும் சிறையிலிருந்து வெளியேறினர். பொலிஸார் தங்கள் இடங்களை விட்டு விலகியதால், கைதிகள் எளிதில் வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலவரங்களின் பின்னணியில், முன்னாள் துணைப் பிரதமரும் ராஷ்டிரிய சுவதந்திரக் கட்சி தலைவருமான ரபி லாமிச்சானே விடுவிக்கப்பட்டார். அவர் விடுதலையானதும் மக்களிடம் உரையாற்றி, ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டுமென வலியுறுத்தினார். இதன் பின்னர், கடும் அழுத்தத்திற்கு இடமான நேபாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி ராஜினாமா செய்தார். மேலும், லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன் மூலம் நேபாள அரசியல் நிலைமை மேலும் அலைக்கழிக்கப்படுகிறது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும். கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் தர வேண்டும். அனைத்து கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க வேண்டும். அரசியல் தலைவர்களுக்கு ஓய்வு வயது நிர்ணயிக்க வேண்டும். தப்பியோடிய கைதிகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446667
  12. குருவியை விட மீன் பெரிசாக இருக்குது. சாவின் விளிம்பில்... குருவி என்று வர வேண்டும். 🤣
  13. அப்பிடியே…. பக்கிங்ஹாம் அரண்மனையிலும் சொரியாரின் சாரி… பெரியாரின் போட்டோவை மாட்டி விட்டிருக்கலாம். 😂
  14. இந்திய ஜனாதிபதியே ஒரு வேலைக்கு ஆகாத பல்லு புடுங்கின பாம்பு. அதுக்கு ஒரு துணை ஜனாதிபதி இப்ப முக்கியம் தேவைதான். 😂
  15. கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்! கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு ஒன்று இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இதவேளை இந்த நிகழ்வில் பேசிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் சேவைக்குள் நீதியான அதிகாரிகள் குழுவை உருவாக்குவதே தனது முதன்மையான நோக்கம் என்று கூறினார். https://athavannews.com/2025/1446603
  16. வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்! கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பத்து பேரையும் புலியை பிடிக்க அமைத்த கூண்டில் கிராம மக்கள் அடைத்துள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வனத்துறை அதிகாரிகளை மீட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே வனப்பகுதியில் கடினமான சூழலில் பணிபுரியும் வனத்துறையினர் மீதான இந்த செயல், அவர்களது மன உறுதி, பணி சூழலை பாதிக்கும் என்று விமர்சனம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446606
  17. இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்! இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரேன் போரில், ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றது. இந்த நிலையில், இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அந்தவகையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அழுத்தம் தர இந்திய மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் எனவும் குறிப்பாக சீனாவுக்கு 100% வரி, இந்தியாவுக்கு அதிகபட்ச வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446609
  18. கட்டாரில் ஹமாஷ் தலைவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்; ட்ரம்ப் அதிருப்தி! செவ்வாயன்று கட்டார் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி ஹமாஸின் அரசியல் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் முயன்றதுடன், மத்திய கிழக்கில் அதன் இராணுவ நடவடிக்கையை அதிகரித்தது. தாக்குதல் குறித்து பதிலளித்துள்ள வொஷிங்டன், இது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களை முன்னேற்றாத ஒருதலைப்பட்ச தாக்குதல் என்று விவரித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதலினால் தான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், புதன்கிழமை (10) இந்த விவகாரம் குறித்து முழு அறிக்கையை வெளியிடுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸைத் தாக்குவது ஒரு தகுதியான இலக்காகக் கருதுவதாக ட்ரம்ப் கூறினார். ஆனால் இந்தத் தாக்குதல் வளைகுடா அரபு நாட்டில் நடந்ததைக் கண்டு அவர் வருத்தப்பட்டார். கட்டார் வொஷிங்டனின் முக்கிய நேட்டோ அல்லாத நட்பு நாடாகும், பாலஸ்தீன இஸ்லாமியக் குழு நீண்ட காலமாக அதன் அரசியல் தளத்தை அங்கு கொண்டுள்ளது. இதனிடையே தாக்குதல் குறித்து வருத்தம் வெளியிட்டுள்ள கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான், வான்வழித் தாக்குதல்கள் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கட்டார் மத்தியஸ்தம் செய்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்யும் என்று கூறினார். இந்தத் தாக்குதலுக்கு சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளையும், கிட்டத்தட்ட இரண்டு வருட கால மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண ட்ரம்பின் முயற்சியையும் இது தடம் புரளச் செய்யும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டார் அமெரிக்காவின் பாதுகாப்புப் பங்காளியாகும். மேலும் மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான அல்-உதெய்த் விமானத் தளத்தை நடத்துகிறது. காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்தராகச் செயல்பட்டது. ஹமாஸின் நாடுகடத்தப்பட்ட காசா தலைவரும் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளருமான கலீல் அல்-ஹய்யாவின் மகன் உட்பட, தனது ஐந்து உறுப்பினர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியது. தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்பு அமெரிக்க இராணுவத்திடமிருந்து தாக்குதல் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை வந்தது என்று அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். எனினும், அமெரிக்க இராணுவத்திற்குத் தெரிவித்தது இஸ்ரேல்தானா என்று அவர் கூறவில்லை. https://athavannews.com/2025/1446590
  19. எந்த உணவகம் என்று பெயரை வெளியிட, வீரகேசரி ஏன் பஞ்சிப் படுகின்றது. முஸ்லீம் உணவகம் என்றால்… வீரகேசரி பம்மிக் கொண்டு, விழுங்காமல் நலுங்காமல் செய்தி வெளியிடுவது ஒரு வகை பயபக்தி என நினைக்கின்றேன். 🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.