Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார். அதன்படி, ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்த நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றிருந்தார். இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார். இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று (22) இரவு முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சிறைச்சாலையை அடைந்த போதிலும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444334
  2. அசின்…. இந்திய குடியுரிமை என்ற படியால், அவரை கைது செய்வதில் சிக்கல் வரலாம். 😂 🤣
  3. •யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து வையுங்க உள்ளே😂 மிஸ்டர் கிளீன் அல்லது திருவாளர் பரிசுத்தம் என்று அழைக்கப்படும் ரணில் அவர்கள் இப்போது மாட்டியிருப்பது பட்டலந்தை முகாம் கொலைகளுக்காக அல்ல. மாறாக மக்கள் பணம் 150 லட்சம் ரூபாவை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியமைக்காகவே. இத்தனை நாளும் தன்னை ஒரு கறை படியாத தூய அரசியல்வாதியாக நடித்து வந்தவரின் ஒரு முகம் இன்று தோலுரிக்கப்பட்டுள்ளது. தெரிந்ததே இவ்வளவு என்றால் தெரியாமல் எவ்வளவு சுருட்டியிருப்பார் இந்த யோக்கியன்? இங்கு வேடிக்கை என்னவென்றால் இது ஒரு அரசியல் பழி வாங்கல் என்று நாமல் ராஜபக்சா கண்ணீர் வடிக்கிறார். ஏனெனில் அடுத்து தன்னையும் கைது செய்து இந்திய நடிகைக்கு கொடுத்த பணம் குறித்து விசாரணை செய்வார்களோ என்ற அச்சம் அவருக்கு.😂 அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சுருட்டி வைத்திருக்கும் மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும். தோழர் பாலன்
  4. காலம் - 13 நவம்பர் 1989 இடம் - பட்டலந்தை வதைமுகாம் விஜயவீரா- என்னை சட்டப்படி நீதிமன்றில் நிறுத்துங்கள். நான் என் கருத்தை அங்கு கூறுகின்றேன். ரணில் - சட்டமாவது மயிராவது. உனது தோழர்கள் 60ஆயிரம் பேரை எப்படி கொன்று புதைத்தோமோ அதேபோன்று உன்னையும் கொல்லப் போகின்றோம். விஜயவீரா- இதற்குரிய பதிலை என் தோழர்கள் ஒருநாள் தருவார்கள். காலம் - 22 ஆகஸ்டு 2025 இடம் - கொழும்பு நீதிமன்றம். அரசு பணத்தை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கிறார். மிஸ்டர் கிளீன் அவர்களின் உண்மை முகம் நாட்டு மக்களுக்கு இனங் காட்டப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர்கள் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அவருக்கு நீரிழிவு நோய், மனைவிக்கு புற்றுநோய் எனவே பிணையில் விடுதலை செய்யுங்கள் என மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளுக்கு பதவியில் இருக்கும்போது எந்த நோயும் இருப்பதில்லை. ஊழல் வழக்கில் கைது செய்தவுடன் எல்லா நோயும் வந்துவிடுகின்றன. செய்தி – பிணை மறுக்கப்பட்டு ரணில் சிறை செல்கிறார். விஜயவீராவின் தோழர்கள் உரிய பதிலை ரணிலுக்கு வழங்கியுள்ளனர். பாராட்டுகள். இது மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். தோழர் பாலன்
  5. ஆடடிச்சு அழகாகக் கழுவியெடுத்து அரிஞ்சு வைப்போம் ஓரமாக ஆறாகப் பாய்ந்த ஆட்டின் இரத்தத்திலே அருமையாகச் சுண்டிவைப்போம் ஆட்டுத்தலை பிளந்து அற்புதமாகப் பிரட்டியெடுப்போம் ஆட்டுக்கறி சமைத்து அயல் அண்டையார் சூழ ஆகா! ஓகோவெனப் புகழ்ந்து அகம் நிறைய உண்ணுவோம் 😂 Sinnarajah Shanmuganathan ############################ ######################### ஆட்டுக்கறியும்... ஆட்டக்காரியும் குழைச்சு வெளுக்க குடுத்து வைக்கவேணும் 😂 Sinnarajah Shanmuganathan
  6. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 26 ஆம் திகதி வரை விளக்கமறியல்! இன்று மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1444328
  7. ஆஹா.... இந்தப் படங்களைப் பார்க்க அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. 👍 மகிந்த, கோத்தா.... ஆகியோர், "உச்சா" போகும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 😂
  8. சுத்துமாத்து சுமந்திரன்.... தனது பின்கதவு ஆருயிர் நண்பர் ரணில் சிறை செல்வதை இட்டு, ஹர்த்தால் செய்யவில்லையா. 😂 அல்லது ஏற்கெனவே அறிவித்த ஹர்த்தாலில் வாங்கிய மரண அடியில் இருந்து இருந்து இன்னும் மீளவில்லையோ. 🤣
  9. இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார். 😂 🤣 Anusha Nadarajah
  10. ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்! குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முன்நிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444292
  11. பாதுகாப்புப்படையினரின் அத்துமீறல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்கள் பாதுகாப்புப்படையினரால் மேற்கொள்ளப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக வடக்கில் இனங்காணப்பட்டுள்ள, மனிதப்புதைகுழிகள் தொடர்பாக, நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை இலங்கைக்கு வழங்கவேண்டுமென சர்வதேச நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை மீறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னரான, கடந்த ஒரு வருடகாலத்தில் முறையற்ற விதத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் நீதிக்கான சாத்தியப்பாடுகள் இன்னமும் பின்னடைவான நிலையிலேயே உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது, கடந்த சில தசாப்தகாலங்களில் இலங்கையில் சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழும் இந்த அச்சுறுத்தல்கள், குறையவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2025/1444285
  12. நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு! நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”” குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல. குற்றம் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444246
  13. பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இரத்து செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார். இது குறித்து மேலும் உரையாற்றிய அவர், அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திற்குள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நாங்கள் நியமித்தோம். இந்தக் குழு பலமுறை கூடி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களைச் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தொடர்புடைய திருத்தங்கள் தொடர்பான பணிகள் நிறைவடையும். அதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பது குறித்த வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டம் அடுத்த மாதம் இரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். https://athavannews.com/2025/1444219
  14. ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது. அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு அவர் ஜனாதிபதியாக பணியாற்றியபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடையது. குற்றப் புலனாய்வுப் பிரிவில் இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னரே 76 வயதான முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி மக்கள் எழுச்சியைத் தூண்டிய வேளையில் அவரது முன்னோடி கோத்தபய ராஜபக்ஷ தப்பி ஓடி, பதவி விலகி தொடர்ந்து 2022 முதல் 2024 வரை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பணியாற்றினார். வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீண்டும் பொருளாதார மீட்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவியதற்காக அவர் பரவலாகப் பாராட்டப்பட்டார். 1990 ஆம் ஆண்டு முதல் ஆறு தனித்தனி சந்தர்ப்பங்களில் அவர் பிரதமராகப் பணியாற்றினார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 23 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான செலவு 600 மில்லியன் ரூபாவுக்கும் ($2 மில்லியன்; £1.4 மில்லியன்) அதிகம் என மதிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட கைது, 2023 ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த G77 உச்சிமாநாட்டிலிருந்து ரணில் விக்ரமசிங்க திரும்பி வரும் வழியில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தனி நிகழ்வுடன் தொடர்புடையது என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில், அவரும் அவரது மனைவியும் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிஐடியின் தகவலின்படி, லண்டன் பயணத்தினால் அரசாங்கத்திற்கு சுமார் ரூ. 16.9 மில்லியன் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரை புலனாய்வாளர்கள் விசாரித்திருந்தனர். எவ்வாறெனினும், ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது. https://athavannews.com/2025/1444228
  15. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக, 30 துப்பாக்கிகள் மீட்பு! யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ ஏ ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 ரி 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுத மீட்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1444233
  16. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா! வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அத்தோடு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைகின்றன. நாளைய தினம் சனிக்கிழமை மாலை முருகப் பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444272
  17. கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை! இலங்கைக்கு தாரைவார்க்கப்படடுள்ள கச்சதீவினை மீட்டு தருமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். தமிழ் நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டிருந்தனர். நேற்றைய மாநாட்டில் விஜய் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்கள் தெரிவித்து இருந்த நிலையில், இலங்கை தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுவதாகவும் எனவே இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு தருமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விடயம் தற்போது இலங்கையில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444182
  18. தெருநாய்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தீர்ப்பை மாற்றியமைத்த இந்திய உயர் நீதிமன்றம்! தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (22) மாற்றியமைத்தது. அதன்படி, தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பின்னர் தெருநாய்களை அதே இடங்களுக்கு மீண்டும் விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அனைத்து மாநிலங்கள் மற்றும் நகராட்சி பிரதேசங்களுக்கும் பொருந்தும் வகையில், இந்தியா முழுவதும் இந்த விடயத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவு ரேபிஸ் (விசர்) நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்குப் பொருந்தாது என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதேநேரம், நாய்களுக்கு பொதுவில் உணவளிக்க அனுமதிக்கப்படாது என்றும், தெருநாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரத்யேக இடத்தை உருவாக்க நகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் உள்ள வீதிகள் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றுமாறு கடந்த ஆகஸ்ட் 11 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது. ஆகஸ்ட் 11 அன்று உயர் நீதிமன்றம், தெருநாய்களை கருத்தடை செய்த பின்னர் அவற்றின் வாழ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவரக்கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவுக்கு எதிரான சீற்றத்திற்கு மத்தியில், ஆகஸ்ட் 14 அன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவை ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444193
  19. திறமையான படப்பிடிப்பாளர் Ingaran Sivashanthan .👍 படப்பிடிப்பு: Ingaran Sivashanthan
  20. மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை! யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பமாகும். அத்துடன், 165 மில்லியன் ரூபா செலவில் யாழ். கொழும்புத் துறையிலுள்ள துறைமுகத்தையும் நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத குறைப்பாடு காணப்படுகின்றது. வாழைச்சேனை துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். ஏனெனில் ஒலுவில் துறைமுகம் இன்று செயல் இழந்து காணப்படுகின்றது. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வின்றி கட்ட வேண்டும் என்பதற்காகவே குறித்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழைச்சேனை துறைமுகத்தை நோக்கியே மீனவர்கள் படையெடுத்து வருகின்றனர். எனவே, வாழைச்சேனை துறைமுகத்தை மேலும் விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும். இதற்காக 1, 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார், பேசாலையில் இறங்குத்துறையை அமைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேசாலையில் வாழும் மக்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் குறைப்பாடுகளை தீர்த்து, பேசாலையிலும் துறைமுகமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யாழ். குருநகர் பகுதியில் இறங்குத்துறைமுகமொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது. இப்பணி முடிந்த பின்னர் நிதி ஒதுக்கப்படும்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444114
  21. 📌👉சனங்களை திரட்டுவதில் யாழ்ப்பாணத்தில் நல்லூரான்தான் அரசன். ❤️🙏🙏🙏🌹🙏🙏🙏❤️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.