Everything posted by தமிழ் சிறி
-
கிழக்கில் மக்களின் பேராதரவுடன் இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக பூரண ஹர்த்தால் இடம்பெறுவதாக சாணக்கியன் அறிவிப்பு
- இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்
- ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – வழமைப் போன்று இயங்கும் யாழ். நகர்!
- ஹர்த்தால் வெற்றியே என்கிறார் சுமந்திரன்!
- பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
- 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து!
10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து! தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கொடிய எல்லை மோதலைத் தொடர்ந்து கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்புவதால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, வயதான மக்கள் தொகை மற்றும் சுருங்கி வரும் பணியாளர்கள் எண்ணிக்கை என்பவற்றினால் விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 3 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்புக்காக இலங்கையில் இருந்து 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். மேலும், முதல் கட்டத்தில் 10,000 பேர் தாய்லாந்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சர் பொங்காவின் ஜங்ருங்ருங்ராங்கிட் செய்தியாளர்களிடம் கூறினார். இது நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த மாதம் தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சினை, பல தசாப்தங்களில் மிக மோசமான சண்டையாக மாறியது. எல்லையின் இருபுறமும் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இப்போது ஒரு பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. மோதல் தொடங்குவதற்கு முன்பு, 520,000 க்கும் மேற்பட்ட கம்போடியர்கள் தாய்லாந்தில் பணிபுரிந்தனர். இது நாட்டின் வெளிநாட்டுப் பணியாளர்களில் 12 சதவீதமாகும் என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தில் பணிபுரியும் சுமார் 400,000 கம்போடியர்கள் மோதலின் போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கம்போடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தொழிலாளர்களின் முக்கிய ஆதாரமாக உருவெடுத்துள்ள இலங்கை, 2024 ஆம் ஆண்டில் சாதனை அளவில் 314,786 குடிமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடி பலரை வெளிநாடுகளுக்கு வேலை தேடத் தள்ளியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளே இலங்கையர்களின் முதன்மையான இடமாக அதில் உள்ளது. மேலும் பலர் தென் கொரியா மற்றும் ஜப்பானிலும் வேலை புரிகின்றனர். தெற்காசிய தீவு நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மிகப்பெரிய ஆதாரமாக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443783- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எத்தியோப்பியா ஒரு ஏழை நாடு. அங்கு போய் பிச்சை எடுத்த பாகிஸ்தானியர்கள்.- இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.
அண்மைக் காலமாக சிறிய ரக கார்கள் அதிகமாக விபத்துக்குள்ளாகுவதையும் பட்டா ரக கூடாரம் அடித்த சிறிய ரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகுவதையும் உயிர்ச்சேதம் உருவாகுவதையும் அவதானித்திருப்பீர்கள். இந்த விடயத்தினை கொஞ்சம் ஆழமாக அவதானித்தால் இன்னொரு விடயத்தினையும் புரிந்து கொள்வீர்கள். இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள் பல வீதியைவிட்டு விலத்தி கடலுக்குள் பாய்தல் , வீதியோரம் அடித்து விபத்துக்குள்ளாகுதல் , சிறிய பட்டா ரக மற்றும் சின்ன கண்டர் ரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகுதல் அதிகம் பதிவு செய்யப்படுகின்றது. இந்திய தயாரிப்பிலான இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் இந்த "சோப்பு டப்பா" என்று பலர் அழைக்கின்ற வலுக்குறைந்த சின்ன கார்கள் பல பாரம்/ எடை குறைந்தவை. ஒரு கார் அல்லது வாகனம் அதிக வேகத்தில் தெருவில் பிரயாணிக்கும் போது அது தெருவோடு ஒட்டி பற்றிபிடித்தவாறு செல்லகூடியவாறே பல பிரபல கார் நிறுவன கார் தயாரிப்புக்கள் இருக்கும். அதன் எடை அதிகமாக இருக்கும் எனவே அதன் நிறை புவியை நோக்கி அதன் புவியீர்ப்பு மையத்தினூடாக ஈர்க்கப்பட்டு அதிக வேகத்திலும் பாதையினை விட்டு விலகி செல்லாது தெருவில் பற்றி பிடித்தவாறு பயணிக்கும். ஆனால் இந்திய சோப்பு டப்பா போன்ற சின்ன கார்கள்( எந்த ரகம்-brand என்று உங்களுக்கே தெரியும்) அதிக எடை இல்லாதவை . அவற்றினால் மத்திய அளவான வேகத்திலேயே ( medium Speed) தெருவை பற்றிப்பிடித்தபடி பயணிக்க முடியும். அவை மணிக்கு 70-80 கிலோமீற்றர்(70km/hr - 80km/h) வேகத்தினை விட அதிக வேகத்தினை பெறும் போது அவற்றின் எடை குறைவு காரணமாக வளியோட்டடத்தில் அவை நிதானமிழந்து பறப்பது போன்ற உணர்வை பல சார்திகள் உணர்ந்திருக்கலாம். அதாவது எடைபோதாமை காரணமாக அதிக வேகத்தில் ஆடி அசைவது போல உணர்வீர்கள். உதாரணமாக எடை குறைந்த காட்போட் மிதமான காற்றில் சும்மா இருந்துவிட்டு காற்றோட்டம் அதிகரிக்க அவை காற்றின் திசைக்கேற்றது போல இழுத்து பறந்து செல்லப்படுதல் போன்ற நிகழ்வுகளை நினைத்து பாருங்கள். அதுபோல தான் இந்த இந்திய சிறிய வாகனங்கள் தம்மால் ஈடுகொடுக்கமுடியா வேகத்தினை அடையும் போது அவற்றின் எடை தெருவோடு சேர்ந்தியங்க முடியாமல் போக வளியோட்டத்தில் காற்றின் பக்கம் ஓர் பக்கம் இழுத்து செல்லப்படும். இதன்போது பாதையோரம் சென்று மோதலாம், அல்லது பாதையின் அருகே /எதிரே செல்லும் வாகனங்களுடன் மோதி விபத்தடையலாம். இதனால் பாரிய விபத்துக்களும் உயிர் சேதங்களும் ஏற்படும். அதுபோலவே இந்த பட்டாரக வாகனங்களும் . அவை சின்ன சின்ன பொருள் எற்றி இறக்க பயன்படுத்த சிறிய ரக கன்ரர் வாகனம் போல தயாரிக்கப்பட்டவை . அவற்றினை வாங்கி ஓடும் இளசுகளை தெருவில் பார்த்தால் ரொக்கற்று வேகத்தில் தான் ஓடுவார்கள். அந்த வாகனத்தின் எடை அதிக வேகத்தினை தாங்காத நிலை வரும் போது பாதையில் இருந்து விலகும்/ மோதும்/ தூக்கி வீசப்படும். இப்படி அதிக எடையற்ற வாகனங்கள் அதிக வேகத்தினை பெறும்போது மிதத்தல் நிலையினை அடைவதனால் அருகே / எதிரே இன்னொரு பெரிய டிப்பரோ / லொறியோ/ பேருந்தோ அதிக வேகத்தில் போகும் போது இந்த ரக வாகனக்கள் ஆட்டம் காணும், இழுத்து கொண்டு செல்வது போல் இருக்கும் அதை அனுபவித்தவர்கள் உணர்வீர்கள். அதோடு விஞ்ஞான ரீதியாக இன்னொன்று! இந்த பட்டா ரக சின்ன வாகனங்களை பயன்படுத்துவோரை பார்த்திருப்பீர்கள். அந்த வாகனம் தயாரித்து இறக்குமதி செய்து சந்தையில் விற்கும் தோற்றத்தில் யாரும் ஓடுவதில்லை(Original Appearance) பலர் வாங்கிய பின் பின்னுக்கு பெட்டி போல கூடாரங்களினை உலோகம் கொண்டு மேலதிக இணைப்புக்களினை பொருத்துவார்கள். இவை வாகனம் தயாரிக்கப்பட்டபோது வாகனத்தில் இருந்த "புவியீர்ப்பு மையத்தினை" (Gravitational point )வெகுவாக மாற்றியமைக்கும். உருவத்தினை மாற்றி அமைத்தபின் அவர்கள் அந்த வாகனத்தின் கொள்ளளவு தாங்குதிறனுக்கும் (carrier Capacity) அதிக எடையில் பொருட்களை ஏற்றிசெல்லும் போதும் வாகனத்தின் புவியீர்ப்பு மையம் வேறொறு இடத்துக்கு இடம்மாறுகிறது. இவற்றையெல்லாம் கணிக்காத அனுபவமில்லாத சாரதிகள் அதிக வேககத்தில் பிரயாணிக்கும் போது வாகனம் இழுத்து செல்லப்படும்/ மோதும்/ குடைசாயும் இவற்றால் பாரிய விபத்துக்கள் உண்டாகும். அதைவிட இன்னொன்று இந்த சிறிய கார்கள், பட்டா ரக வாகனங்கள் வளைவான பதைகளில் பயணிக்கும் போது சாரதி அதற்கேற்ற வகையில் வேகத்தினை கட்டுபடுத்தி சீராக வளைவில் திருப்ப வேண்டும். இல்லையேல் "மைய நீக்க விசையினால்" அது பாதையினை விட்டு விலத்தி மோதும், தூக்கி வீசப்படும், விபத்துக்குள்ளாகும். இன்றைய பல விபத்துக்களுக்கு பல அனுபவமில்லா இளைய வாகனவோட்டிகளும், பந்தா காட்டி முறுக்கி ஓடும் சாரதிகளும் , வாகனத்தின் விஞ்ஞான தன்மை அறியாத சாரதிகளும் கூடியதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதைவிட முன்னனுபவம் இல்லா தெருக்களில் அதிக வேகத்தில் ஓடும் போது திடீரென வளைவு வரும் போது அவர்களினால் வேகத்தினை கட்டுபடுத்த முடியாமல் விபத்தடைகின்றன. முன்னையகாலங்களில் வடக்குமக்கள் பலரும் யப்பான் ரக வாகனங்களினை விரும்பி வாங்கி தலைமுறை தலைமுறையாக பாவித்தமைக்குரிய காரணங்களில் ஒன்று நீண்டகாலம் பாவிக்கும் என்பதற்கப்பால் அவற்றின் எடை , அவற்றின் புவியீர்ப்பு மையம் எந்த வேகத்திற்கும் இடம்மாறமல் இருத்தல் போன்ற பல காரணங்கள் உண்டு. இதனால் அன்றிருந்த சீரில்லாத தெருக்களிலேயே லாவகமாக ஓட்டி சென்றார்கள். ஆக எல்லா விபத்துக்களிற்கும் பெரிய ரக வாகனங்களினை குறைகூறி அவர்களை பிடித்து அடிக்காமல் சிறிய ரக வாகனங்களின் விஞ்ஞான கோட்பாடுகள் மற்றும் சாரதிகளின் மிதவாத அனுபவமில்லா சாரத்தியம் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியமாகும். இது ஒரு வீதியில் பெண்பிள்ளை விபத்தடைந்தால் அது வாகனத்தினை செலுத்திய பெண்ணில் தான் பிழையாக இருந்தாலும் இடித்த மற்றைய ஆணின் மேல் தான் அனைவரும் வசைபாடிபேசுவார்கள் அதுபோல தான் இந்த சிறியரக பெரியரக வாகன மோதல் நிலைகளும் அமைகின்றன. ஆக எந்த வாகனமாக இருந்தாலும் அது துவிச்சக்கரவண்டியாக இருந்தாலும் ஏன் நடந்து பயணிப்பவராக இருந்தாலும் அனைவருமே அவதானத்துடனும் விழிப்புணர்வோடும் பொறுப்புணர்வோடும் பயணிப்பதனாலேயே எல்லா விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் கட்டுப்படுத்தலாம். மதுசுதன். 18.08.2025 நம்ம யாழ்ப்பாணம்- திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர்
திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர். திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளிக்க முன்வந்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க தொழில் அதிபர் ஒருவர் முன்வந்து இருப்பதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது ”தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார். இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 140 கோடியாகும். புதிதாக தொடங்கிய நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதால் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்து இருக்கிறார். தனது நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் முலம் அவருக்கு 7 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. எனவே அதில் ஒரு பங்கை ஏழுமலையானுக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக இருக்கிறார்” என்றார். எனினும், அந்த தொழில் அதிபர் யார் என்ற விவரத்தை வெளியிட சந்திரபாபு நாயுடு மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443765- முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!
🔴 ராஜபக்ஷ குடும்பத்தினரால் முன்னின்று நடாத்தப்பட்ட லொஹான் ரத்வத்தவின் இறுதிச்சடங்கு! சுகயீனம் காரணமாக மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதி சடங்கு நேற்று கண்டியில் நடைபெற்றது. இதன்போது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னின்று குறித்த இறுதிச்சடங்கை நடத்தி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Vaanam.lk- தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி. வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக தெற்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நிதி மோசடிகளுக்கான வழக்குகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆனால் வடக்கில் அவ்வாறு இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மாத்திரமே முன்னெடுப்பதாக, மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ” குறித்த விடயம் தொடர்பில் தனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தால் அல்லது சிஜடிக்கு முறைப்பாடு செய்திருந்தால் அது தொடர்பான விபரங்களை தன்னிடம் வழங்குமாரும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் லஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பது, சுயாதீனமாக இயங்குகின்ற ஆணைக்குழு எனவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வருவதில்லை எனவும், எனினும் இரண்டு நாட்களுக்குள் இதற்கான பதிலை தான் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1443671- கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி!
உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி! உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்றது. 15 ஆம் திகதி முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நேற்று வரை நடைபெற்றது. சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றுள்ளன. உலகில் மனித உருவ ரோபோக்கள் மட்டுமே பங்கேற்று நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும் . இந்த போட்டியில், கால்பந்து, குத்துச்சண்டை , ஜிம்னாஸ்டிக்ஸ், உள்ளிட்ட 26 விளையாட்டுக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443489- உலகை சுற்றிவரும் பயணத்திலுள்ள அவுஸ்திரேலிய 15 வயதான இளம் விமானி கொழும்பில் தரையிறங்கினார்!
உலகை சுற்றிவரும் பயணத்திலுள்ள அவுஸ்திரேலிய 15 வயதான இளம் விமானி கொழும்பில் தரையிறங்கினார்! உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரன் வாலர் (Byron Waller) கொழும்பில் பாதுகாப்பாக தரையிறங்கினார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை (CIAR) வந்தடைந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் ஊக்கத்துடன் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (17) பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததாக CIAR ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. பைரன் 45,000 கிலோ மீட்டர்கள், ஏழு கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் இரண்டு மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். https://athavannews.com/2025/1443495- பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
இன்று சுமந்திரன் மட்டுமே ஹர்த்தால் செய்துள்ளார் போலுள்ளது. அடுத்த போராட்டமாக… சுமந்திரன் 🔥 தீக்குளிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றார்கள். 😂- ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – வழமைப் போன்று இயங்கும் யாழ். நகர்!
சுமந்திரன்… தமிழ் மக்களிடம் மீண்டும் சாணியடி வாங்கிய தருணம். 💩 😂- கருத்து படங்கள்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரன் தன்னிச்சையாக விடுத்த இன்றைய ஹர்த்தால் அழைப்பை புறக்கணித்த வடபகுதி தமிழ்மக்கள், வளமை போல தமது அன்றாட வேலைகளில் ஈடுபட்டனர்.- ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
செலென்ஸ்கி… ஆப்பிழுத்த குரங்கின் நிலைமையில் உள்ளார்.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரனின் கர்த்தால்? - நிலாந்தன். சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். அவரைச் சுற்றியிருக்கும் யாருமே அவருக்கு கடந்த 15ஆம் திகதி மடுப் பெருநாள் என்பதைச் சொல்லவில்லையா? இது நல்லூர் திருவிழாக் காலம் என்பதைச் சொல்லவில்லையா? இந்த இரண்டு திருவிழாக்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் அவர்களை ஏற்றி இறக்க பேருந்துகள் ஓடும். குறிப்பாக மடுத் திருவிழாவுக்கு இந்துக்களும் போவார்கள். அது மத பேதமின்றி இன பேதமின்றி யாத்திரிகர்கள் வந்துகூடும் ஓராலயம். பெருநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்னரே யாத்திரிகர்கள் வரத்தொடங்கி விடுவார்கள். எனவே தொடர்ச்சியாக சில நாட்களுக்கு வடக்கிலிருந்து பேருந்துகள் ஓடும். இந்த விடயங்களை ஏன் சுமந்திரன் கவனத்தில் எடுக்கவில்லை? அவரைச் சுற்றியிருக்கும் யாருமே இதை அவருக்குச் செல்லவில்லையா? அல்லது தனது மக்களின் பண்பாட்டு பெருவிழாக்களைக் குறித்துச் சிந்திக்க முடியாத அளவுக்கு அவர் தன்னுடைய மக்களின் பண்பாட்டு இதயத்திலிருந்து புறத்தியாக நிற்கின்றாரா ? இது போன்ற பண்பாட்டு விடயங்களைச் சுட்டிக்காட்டுவதற்கு அவருக்கு அருகில் யாரும் இல்லையா? அல்லது அவர் யாரிடம் கேட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்? அல்லது அவர் முடிவெடுக்கும்பொழுது யாரிடமும் எதையும் கேட்பதில்லையா? அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி அல்ல. அவருடைய வார்த்தைகளில் சொன்னால் மக்களின் ஆணை அவருக்கு இல்லை. கட்சிக்குள்ளும் அவர் பதில் செயலாளர்தான். பதில்தான். ஆனால் அவர்தான் கட்சியின் முகமாக,கட்சியின் எல்லாமமாகத் தோன்றுகிறார். அண்மையில் அவர் வெளி நாடுகளுக்குப் போயிருந்தார். அங்கே அவர் ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாக அவருடைய அரசியல் எதிரிகள் கூறுகிறார்கள். வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு அவர் அவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அது தனிப்பட்ட பயணம் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆனால் அவர் ராஜதந்திரிகளைச் சந்தித்ததாகப் புலம்பெயர்ந்த தமிழர் தரப்புகள் கூறுகின்றன. அவை கூறுவது உண்மையாக இருந்தால்,அவர் கட்சியின் அனுமதியோடுதான் அச்சந்திப்புகளில் ஈடுபட்டாரா? அங்கே என்ன கதைக்கவேண்டும் என்பதனை கட்சி ஏற்கனவே கூடி முடிவெடுத்திருந்ததா? அவ்வாறான சந்திப்புகளில் என்ன கதைக்கப்பட்டது என்பதனை அவர் கட்சிக்குத் தெரிவித்தவரா? அதை அவர் மக்களுக்குக் கூறத் தேவையில்லையா? நடப்பு நிலைமைகளைப் பார்த்தால், அவர் யாரோடும் எதையும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. கடந்த 20 மாதங்களாக, அதாவது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது கட்சி ஆட்களாலேயே நிராகரிக்கப்பட்ட பின், அவருடைய நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால், ஏறக்குறைய மந்திரித்துவிட்ட சேவலைப் போல அவர் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். அடிக்கடி காணொளிகளில் வருகிறார். கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்துவது;கட்சியின் முகமாகத் தொடர்ந்தும் தோன்றுவது; கட்சியின் தீர்மானங்களைத் தானே எடுப்பது; மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது; எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக கட்சி தொடர்பான ராஜதந்திர நகர்வுகளை தானே முன்னெடுப்பது….இதைத்தான் கடந்த 20 மாதங்களாக அவர் செய்து வருகிறார். கட்சிக்குள் யாரும் அதை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. அவர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த விடயம் சரியானது. அதை மனோ கணேசனும் முஸ்லீம் தலைவர்களும் ஆதரித்துள்ளார்கள். . படையின் முகாம்கள் மக்கள் குடியிருப்புகள் மத்தியில் இருப்பதினால்தான் கடந்த வாரம் முல்லைதீவில் இடம்பெற்றது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக சுமந்திரன் கூறுகிறார். தமிழர் தாயகத்தில் படையினரை நீக்கக் கோரி தமிழ் மக்கள் போராட வேண்டும். அதில் சந்தேகம் இல்லை. அந்த இடத்தில் சுமந்திரன் சரி. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கடந்த 16ஆண்டுகளாக படைமய நீக்கம் முழுமையாக நிகழவில்லை. இலங்கையின் மொத்தப் படைக் கட்டமைப்பில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதி தமிழ் பகுதிகளில்தான் நிலை கொண்டிருக்கிறது என்று உத்தியோகப்பற்றற்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே படைமய நீக்கம் அவசியம். அதை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட வேண்டியதும் அவசியம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் பிரச்சினை எங்கே வருகிறது என்றால், அதற்காக கடையடைப்பு ஒரு பொருத்தமான போராட்டமா என்பதுதான். சுமந்திரனை எதிர்க்கும் பலரும் கடையடைப்பையும் எதிர்க்கிறார்கள். அது தவறு. அரசியலில் சில சமயம் பிழையான ஆட்கள் சரியான செயல்களைச் செய்வதுண்டு. கடையடைப்பு என்ற போராட்ட வடிவம் குறித்து கேள்விகளை எழுப்பலாம். வேறு போராட்ட வடிவங்களைக் குறித்துச் சிந்திக்கலாம். அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்திலும் அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் குறிப்பாக, ஐநாவின் கவனத்தை ஈர்க்கும்விதத்திலும் அதைவிடக் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்கள் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கும் “கோ குரூப்” நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கத்தக்க போராட்ட வடிவங்களைச் சிந்திக்கலாம். அரசாங்கத்துக்கு நோகத்தக்க விதத்தில் போராடுவது என்று சொன்னால் சம்பவம் நடந்த மாவட்டத்தில் ஒரு மக்கள் பேரெழுச்சியை ஒழுங்குபடுத்தலாம். அதை ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தலாம். இது முதலாவது. இரண்டாவதாக,அரசு அலுவலகங்களை முடக்கக்கூடிய விதத்தில் அரசு அலுவலகங்களைச் சுற்றி வளைக்கலாம். மூன்றாவதாக,ஐநாவில் முடிவெடுக்கும் நாடுகளின் தூதரகங்களின் முன்னாள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்யலாம். அந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் படைப்புத்திறன் மிக்கவைகளாக இருக்கவேண்டும். மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்த பொழுது நிகழ்த்தப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தைப் போல. எனவே இதுபோன்ற பல வழிகளிலும் அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்தில் போராடலாம். கடையடைப்பு அழைப்பவருக்கு இலகுவான ஒரு போராட்டம். மாறாக,கடைகளை மூடும் வியாபாரிகளுக்கும் பொதுப் போக்குவரத்தை நிறுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் அன்றாடம் காய்சிகளுக்கும் அன்றாடம் வேலை செய்பவர்களுக்கும் அதனால் இழப்பு ஏற்படும். அந்த இழப்பைக்கூட நாட்டுக்காக ஒருநாள் செய்யும் தியாகம் என்று நியாயப்படுத்த முடியும். ஆனால் கடையடைப்போ அல்லது பொது முடக்கமோ எதுவாக இருந்தாலும் அது அரசாங்கத்துக்கு நோக வேண்டும். அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விதத்தில் அழுத்தமாகப் போராட வேண்டும். அப்படிப்பார்த்தால் கடையடைப்பு அரசு அலுவலகங்களுக்கு நோகாது. ஏனென்றால் கடையை அடைத்தாலும் பொதுப் போக்குவரத்தை முடக்கினாலும் அரச அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும். ஏன் பாடசாலைகளே இயங்கும். ஆசிரியர்கள் வருவார்கள்; அதிபர்கள் வருவார்கள்; மாணவர்கள் மட்டும் வர மாட்டார்கள். நாளை, இரண்டாம் தவணை விடுமுறை முடிந்து பாடசாலைகள் மீண்டும் தொடங்குகின்றன. எனவே கடையடைப்பைவிட அழுத்தமான, கூர்மையான படைப்புத்திறன்மிக்க அறவழிப் போராட்டங்களை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதற்குக் கூடிக்கதைக்க வேண்டும். அதைவிட முக்கியமாக தமது சொந்த மக்களை நேசிக்க வேண்டும். தனது மக்களை விசுவாசிக்கும் எந்த ஒரு செயற்பாட்டாளருக்கும் போராட்டத்தின் வழி தானாகத் திறக்கும். அதிலும் குறிப்பாக உலகில் வெற்றி பெற்ற பெரும்பாலான எல்லா அறவழிப் போராட்டங்களும் சட்ட மறுப்புப் போராட்டங்கள்தான். சட்டத்தரணிகள் தங்களுடைய சட்டரீதியிலான சௌகரிய வலையத்துக்கள் நின்றுகொண்டு போராட முடியாது.சட்ட மறுப்பாகப் போராட சுமந்திரன் தயாரா? ஆனால் சுமந்திரனின் போராட்டத்தை விமர்சிப்பவர்கள் அவ்வாறு பார்க்கவில்லை. “அவர் மக்களுக்காகப் போராடவில்லை. அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காகப் போராடவில்லை. அல்லது படைமய நீக்கத்துக்காகப் போராடவில்லை. மாறாக கட்சிக்குள் தன் முதன்மையைப் பலப்படுத்தவும் தமிழ்த்தேசிய அரசியலில் தன்னுடைய இன்றியமையாமையை நிருபிப்பதற்கும் அவர் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்துகிறார்” என்றுதான் அவர்கள் விமர்சிக்கின்றார்கள். அவ்வாறு விமர்சிக்கத்தக்க விதத்தில்தான் அவருடைய நடவடிக்கைகளும் காணப்படுகின்றன.கடந்த வாரம் ஐநாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிவில் சமூகங்களோடு இணைந்து அந்தக் கடிதத்தைத் தயாரித்தது.அந்தக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை. அந்த முடிவைப் பெரும்பாலும் சுமந்திரனே எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது. அவர் சொன்னதைச் சிவஞானம் திரும்பிச் சொல்கிறார் என்றுதான் எல்லாரும் நம்புகிறார்கள். எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கு சுமந்திரன் தயாராக இருக்கவில்லை. அந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து முடிவெடுத்திருந்திருந்தால் இன்றைக்கு கடையடைப்பை அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு போராட்டத்தை எல்லாருமாகச் சேர்ந்து தரமாகச் செய்திருக்கலாம். அதற்குத் தமிழரசுக் கட்சியின் ஈகோ இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு சுமந்திரன் ஒவ்வொரு நாளும் காணொளியில் வந்து விளக்கம் கொடுக்கிறார்.அவர் தரும் விளக்கங்களில் முக்கியமானது, நாங்களே பெரிய கட்சி நாங்களே முதன்மைக் கட்சி எனவே நீங்கள் கடிதத்தை எழுதிவிட்டு எங்களை அதில் கையெழுத்துப் போடுமாறு கேட்க முடியாது என்ற பொருள்பட அமைந்துள்ள விளக்கந்தான். அதில் ஒரு பகுதி உண்மை. அவர்கள்தான் பெரிய கட்சி; அவர்கள்தான் முதன்மைக் கட்சி. அதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், கடந்த 16 ஆண்டுகளாக அவர்களே முதன்மைக் கட்சியாகவும் முடிவெடுக்கும் கட்சியாகவும் இருந்து தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? கடந்த 16 ஆண்டுகாலத் தமிழரசியலில் ஏற்பட்ட தேக்கங்கள்,தோல்விகள், பின்னடைவுகள் போன்ற எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமல்ல அனைத்துலக அளவில் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்களின் விவகாரம் மேலும் நீர்த்துப்போகக்கூடிய ஆபத்து தெரிகிறது. அதற்கும் தமிழரசுக் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். 2015இலிருந்து ஐநாவின் நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தை நோக்கி தமிழரசியலைச் செலுத்தியது முக்கியமாக சுமந்திரனும் சம்மந்திருந்தான்.அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று பின்னர் சுமந்திரன் சொன்னார். அது அவர்களுடைய தனிப்பட்ட தோல்வி அல்ல. இனத்தின் தோல்வி.இப்பொழுதும் ஐநாவை கையாளும் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் அணுகுமுறை வெளிப்படையாயானதாக, ஐக்கியமானதாக இல்லை.இதில் வரக்கூடிய தோல்விக்கு யார் பொறுப்புக் கூறுவது? கட்சி வேறுபாடுகளைத் தூக்கி ஓரத்தில் வைத்து விட்டு இனமாகத் திரள வேண்டிய விடயங்களில் அதாவது ஐநாவைக் கையாள்வது,படை நீக்கத்துக்காகப் போராடுவது போன்ற விடயங்களில் இனமாகத் திரள முடியாததற்கு யார் பொறுப்பு ?சுமந்திரன் பொறுப்பில்லையா? https://www.nillanthan.com/7654/#google_vignette- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற உண்ணாவிரத சாதனையை முறியடிக்கும் விதமாக… காலை 4 மணியிலிருந்து, காலை 8 மணிவரை ஹர்த்தால் நடைபெறும். Inuvaijur Mayuran- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு ஒன்று, @Paanch அண்ணைக்கு ஒன்று என, இரண்டு கேக் கொண்டு வாருங்கள். 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்