Everything posted by தமிழ் சிறி
-
கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் 27ம் திகதி வரை விளக்கமறியலில். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையின் அவரை ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன் பினை மனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1444094
-
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுவது ஏன்?
அமித்ஷாவினால் தாக்கல் செய்யப்பட்ட பதவி பறிப்புச் சட்ட மூலம்- சீமான் ஆதரவு! இந்தியாவில் குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் பதவியை பறிக்க வழிவகை செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவினால் குறித்த சட்ட மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த புதிய சட்ட மூலத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்” மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவதே சிறந்த முடிவு. அப்போதுதான் நாடு சிறப்பாக செயற்பட முடியும் . நாட்டிற்கு இதுபோன்ற பல்வேறு மாறுதல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் அவசியமாகும்“ எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் மாநாடு நடைபெறும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2025/1444089
-
ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!
கல்முனையில்.... பூட்டிய கடைகளுடன் இணையத்தில் வந்த படத்தை நான் பார்த்து, சிலவேளை சாணக்கியன் சொன்ன படியால்... வியாபாரிகள் ஹர்த்தாலை முழுமையாக கடைப் பிடிக்கின்றார்கள் என நினைத்தேன். நீங்கள் கூறியதை பார்த்த பின்புதான் தெரிந்தது காலி ஏழு மணிக்கு எடுத்த சுத்துமாத்து படங்கள் அவை என்று. சுமந்திரன் எப்பவும் சுத்துமாத்து செய்து கொண்டே இருந்தால்... மக்களும் பொறுமையின் எல்லை தாண்டி, செமையாக வாங்கிக் கட்டுவார் என்பது நிச்சயம்.
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
நல்லூரானின் தேருக்கு அகவை 61 நல்லூர்க் கந்தசுவாமியார் இன்று ஏறிவந்த தேரின் வரலாறு! நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குப் புதிய தேர் ஒன்று செய்து முடிக்கவேண்டுமென்ற ஆவல் காலஞ்சென்ற அறங் காவலர் அவர்கள் மனதிற் குடிகொண்டது. புதிய தேர் உருவத்திலும் அமைப்பிலும் பழையதேரை ஒத்ததாயிருக்க வேண்டும் என்பது அறங்காவலரின் ஆசையாகும். இத்தகைய சித்திரத் தேரை அமைத்தற்குப் பல்லாற்றானும் திறமை வாய்ந்த சிற்பாச்சாரி திருவிடை மருதூர், இரா.கோவிந்தராஜா ஆச்சாரியரே என உணர்ந்த அறங்காவலர் அவர்கள் அதனை உருவாக்கும் பொறுப்பினை அவர்களிடமே ஒப்படைத்தார்கள். தேர்த் திருப்பணியும் நன்னாளில் ஆரம்ப மாயிற்று. திரு.இரா.கோவிந்தராஜா ஆச்சாரியவர்கள் தமக்கு உதவி புரிய நான்கு உதவியாளரை இந்தியாவிலிருந்தே கூட்டிக் கொண்டு வந்தார்கள். இவர்களுக்கு உள்ளூர்த் தொழிலாளர்களும் உதவி புரிந்தனர். ஒரு வருடத்துக்குள் புதிய தேர் உருவாயிற்று. புதிய சித்திரத் தேரினை ஒரு வருடத்துக்குள் உருவாக்கி வெள்ளோட்டத்தையும் நிறைவேற்றுவதில் கண்ணுங் கருத்து மாக இருந்தார் அறங்காவலர் குகஸ்ரீ ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். இவருக்குப் பின்னணியில் நின்று தேரின் உறுப்புக்கள் உருவாக்கப்படும்போதும் வர்ணங்கள் பூசப்படும் போதும் ஆலோசனை கூறி நேரடியாகக் கண்காணித்து வந்தவர் அறங்காவலரின் அருமைச் சகோதரர் குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். புதிய தேர் உருவாகுவதற்குத் தேவையான மரங்களை வவுனியாக் காட்டிலிருந்து தெரிந்தெடுத்து நல்லூருக்குக் கொண்டு வருவதில் வவுனியா முன்னால் உருவாகுவதற்குத் எம்.பி.திரு.செ. சுந்தரலிங்கம் அவர்கள் பேருதவி புரிந்தார்கள். அறங்காவலர் விடுத்த வேண்டுகோட் கிணங்கி முருக பக்தர்கள் மனமுவந்து தாராளமாகப் பண உதவி புரிந்தார்கள். ஆகவே அறங்காவலர், சிற்பாச்சாரியர், அன்பர் யாவரும் பக்தியுடன் இத்திருப்பணியில் ஈடுபட்டதன் பயனாகப் புதிய தேர் உருவாயிற்று. 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆந் திகதி புதிய தேரின் வெள்ளோட்டம் வெற்றியாக நிறைவேறியதைக் கண்டு அறங்காவலர் அவர்கள் அளப்பரும் மகிழ்ச்சியடைந்தார்கள். நல்லூர்க் கந்தனின் திருப்பணி அவன் அருளால் நிறைவேறியது கண்டு அவன் பொன்னார் திருவடிகளைத் திரிகரண சுத்தியுடன் தொழுதார்கள். தமது உள்ளத்தில் மேலிட்டு நின்ற ஆசை நிறைவேறியது கண்டு முருகனைத் தொழுது அதனை உருவாக்கிய சிற்பாச்சாரியருக்கும் உதவியாளருக்கும் சன்மானம் வழங்கி நிதி உதவிபுரிந்த அன்பர்களுக்கும் தம் நன்றியைச் செலுத்தினார்கள். இத்தேர் உருவாகுவதற்கு ஏறக்குறைய ஒன்றேகால் லட்சம் ரூபா பிடித்திருக்கும் எனக் கூறலாம். 1964ஆம் ஆண்டு ஆவணி மாதம் தேர்த்திருவிழாவிலன்று நல்லூர்க் கந்தன், இப்புதிய சித்திரத் தேரில் ஆரோகணித்துப் பவனிவந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தருளினார். ஆதாரம் - இலங்கையின் புராதன சைவாலயங்கள் நல்லூர் கந்தசுவாமி குல. சபாநாதன் குமரன் புத்தக இல்லம். Babu Babugi
-
கருத்து படங்கள்
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443995- பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!
பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு! தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய, பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ஜூலை 21 ஆம் திகதி கிரிபத்கொடையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞர் ஒருவர் T-56 ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர்கள் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தமை அம்பலமானது. அத்துடன் குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்கு வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த கைக்குண்டுகளை கொழும்புக்கு கொண்டு அவர்கள் வரத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கைக்குண்டுகளை மறைத்து வைத்திருந்த மூவரின் தகவல்களையும் புலனாய்வு பிரிவு தற்போது வெளிப்படுத்தியுள்ளது. குறித்த மூவர் பற்றிய தகவல் தெரிந்தால் 0718591966 அல்லது 0718596150 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு சந்தேக நபர்களின் விவரங்கள் ஜீவராசா சுஜீபன் (30 வயது) முகவரி – காந்தி நகர், நேரியக்குளம், வவுனியா, N.A. இலக்கம் – 950554215V இளங்கோ இசைவிதன் (வயது – 27) முகவரி – எண். 379, பிளாக் 03, மானிக் பண்ணை, செட்டிகுளம், N.H. இலக்கம் – 199836210402 மகேந்திரன் யோகராசா (வயது – 27) முகவரி – அராலி மேற்கு, வடுக்கோட்டை NIC இலக்கம் – 981633881V தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் OIC – பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071-8591966 OIC புலனாய்வுப் பிரிவு 071-8596150 https://athavannews.com/2025/1444048- தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?
தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..? தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. மாநாட்டு மேடையின் உச்சியில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது‘ என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்.இ விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில்,சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும், 40-க்கும் மேற்பட்ட போக்கஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும் போது, முதல் அடுக்கில் பவுன்சர்கள்,2-வது அடுக்கில் பொலிஸார் என இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ……. இந்நிலையில் இன்று காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வருகை தந்த தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொதிகள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளனர். மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொண்டர்கள் அமர்வதற்கு 60 பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மாநாட்டுக்கு வரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே உணவுப் பொதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக சார்பில் 2 ஆயிரம் தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 300 பெண் பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கான மருத்துவ மாணவர்கள் தற்போது வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …. இந்நிலையில் இந்த மாபெரும் மாநாட்டில் தன் மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என்று தவெகவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443978- காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!
காசா மீதான தாக்குதலில் முதல் கட்டங்களை ஆரம்பித்த இஸ்ரேல்! காசா நகரம் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்ட தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறுகிறது. தாக்குதலுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் படைகள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இதற்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாயன்று (20) ஒப்புதல் அளித்தார். குறித்த ஒப்புதல் இந்த வார இறுதியில் பாதுகாப்பு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 ரிசர்வ் படையினர் இந்த நடவடிக்கைக்காக பணியில் உள்ள வீரர்களை விடுவிப்பதற்காக அழைக்கப்படுவார்கள். இதனிடையே, இஸ்ரேலின் ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படுவதால், காசா நகரில் உள்ள இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேறி தெற்கு காசாவில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் பல நட்பு நாடுகள் அதன் திட்டத்தைக் கண்டித்துள்ளன. இதற்கிடையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) மேலும் இடம்பெயர்வு மற்றும் விரோதப் போக்கு தீவிரமடைதல் காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கு “ஏற்கனவே பேரழிவு தரும் சூழ்நிலையை மோசமாக்கும்” என்று கூறியது. கடந்த மாதம் ஹமாஸுடனான போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் குறித்து மறைமுகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கம் முழு காசா பகுதியையும் கைப்பற்றும் நோக்கத்தை அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443970- முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?
ஏராளன்… ஏற்கெனவே, சருமத்திற்கு பூசுகின்ற கிறீம் வகைகள் சிலவற்றை தலைமுடியில் இருந்துதான் தயாரிக்கின்றார்களாம். திருப்பதி, பழனி போன்ற கோவில்களில்… பக்தர்கள் மொட்டை அடிக்கும் முடிகள் எல்லாம் தொன் கணக்கில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. சில சொக்லேட்டுக்களில் கூட முடி கலந்துதான் தயாரிப்பு வேலை நடக்கின்றதாம்.- முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?
மயிர்.... சாப்பாட்டில் விழுந்து இருந்தாலே, முழுச் சாப்பாட்டையும் தூக்கி, குப்பைத் தொட்டியில் போடுகின்ற நாம்... அதே மயிரில் செய்த பற்பசையில்... காலையும், மாலையும் நன்றாக பல் தேய்த்து விளக்குகின்றோம். 😂 மயிருக்கு வந்த வாழ்வு.... காலம் செய்த கோலம். 🤣- ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!
- வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை
வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரம் அடைந்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் ஒருங்கிணைப்புடன் இயக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காரணத்தால் அங்கு ஒரு பாதாள உலகத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இந்த பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டாலும், அவை மிகவும் தீவிரமாக இருக்கவில்லை. இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு God father இருந்தமையே இதற்குக் காரணம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், பாதாள உலகத்திற்குப் பொறுப்பான அந்தந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறினார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் போது, தொடர்புடைய அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தப்பிறகு அவ்வாறு எந்தவொரு பாதாள குழுக்கழுடனும் டீல் அரசியல் செய்யவில்லை இதனால் அவர்களால் எதுவும் செய்யமுடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும் தற்போது பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே தொகுதிகள் பகிரப்பட்டதால் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1443954- ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!
சுமந்திரனுக்கு கொழும்பில்… சிங்கள சம்பந்திகளிடம் இருந்து வாக்குகள் விழுந்தாலும், பாராளுமன்றம் போகிற அளவுக்கு காணாதே. 😂 சுமந்திரன் இப்ப… அரசியல் அனாதை. 🤣- ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!
சுமந்திரனின்… ஹர்த்தால் எனும் கபட நாடகத்தை, தோல் உரித்துக் காட்டிய அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான கட்டுரை. சுமந்திரனின் ஹர்த்தால் தோல்வியின் மூலம்… தமிழ் மக்களிடம் தனக்கு ஆதரவு அறவே இல்லை என்பதும், வட மாகாண முதலமைச்சர் கனவும் தவிடு பொடியாகி… கவிண்டு கொட்டுண்டது. 😂 🤣- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
😂 🤣- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்களுடன் பயணித்த பேருந்து விபத்து; 71 பேர் உயிரிழப்பு!
நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்களுடன் பயணித்த பேருந்து விபத்து; 71 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆப்கானிஸ்தானில் ஈரானில் இருந்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. ஹெராத் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (19) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 71 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 17 சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர் என்று மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா முத்தகி (Ahmadullah Muttaqi) உறுதிபடுத்தியுள்ளார். குசாரா மாவட்டத்தில் உள்ள ஹெராத் நகருக்கு வெளியே உள்ள வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்தின் அதிக வேகம் மற்றும் சாரதியின் அலட்சியமே விபத்துக்கான காரணம் என ஹெராத் மாகாண பொலிஸார் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து ஈரானில் இருந்து திரும்பி தலைநகர் காபூல் நோக்கி ஆப்கானியர்களுடன் சென்று கொண்டிருந்ததா மாகாண ஆளுநர் செய்தித் தொடர்பாளர் முகமது யூசுப் சயீதி AFP செய்திச் சேவையிடம் கூறியுள்ளார். மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற கட்டாயப்படுத்தும் பிரச்சாரத்தை தெஹ்ரான் தொடங்கியுள்ளது. கடந்த மாதங்களில் ஈரானில் இருந்து ஒரு பெரிய அளவிலான ஆப்கானியர்கள் நாடு திரும்பியுள்ளனர். பல தசாப்த கால போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளில் இருந்து தப்பி ஓடிய மில்லியன் கணக்கான ஆப்கானியர்களுக்கு நீண்ட கால புகலிடமாகவுள்ள ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1443823- காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!
காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு! காசா நகரைக் கைப்பற்றுவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார். அதைச் செயல்படுத்த சுமார் 60,000 ரிசர்வ் வீரர்களை அழைக்கவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது அமைச்சு புதன்கிழமை (20) உறுதிப்படுத்தியது. இந்த உத்தரவுகள் உடனடியாக வழங்கப்படவில்லை, மாறாக பல கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டன. அவற்றுள் சுமார் 40,000-50,000 வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மற்றொரு கட்டத்தின் கீழும், 2026 பிப்ரவரி-மார்ச் இல் மூன்றாவது கட்டத்தின் கீழும் வீரர்கள் பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள். தற்போது பணியில் இருக்கும் பல வீரர்களுக்கான ரிசர்வ் கடமையை 30-40 நாட்கள் நீட்டிப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்த ரிசர்வ் வீரர்களின் எண்ணிக்கையை சுமார் 130,000 ஆகக் கொண்டுவரும். https://athavannews.com/2025/1443887- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.