Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இவர்... வருகின்றாரா அல்லது போகின்றாரா. 😂
  2. காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1426776825241648 👈 உடற்பயிற்சி செய்யும்... ரசனி.
  3. வடக்கு & கிழக்கு மாகாணங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 10% மட்டுமே பங்களிப்பு வழங்குகின்றன. அதில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்குமே சொந்தமானவை. வடக்கு-கிழக்கு தமிழர்கள் நமது நாட்டுப் பொருளாதாரத்தில் வழங்கும் பங்களிப்பு மிகக் குறைவாகும். வடக்கு கிழக்கில் தமிழர்கள் ஹர்த்தால் நடத்துவதால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எந்தப் பாதிப்பையும் கொடுக்கப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறுறதாலதான் இந்த ஹர்த்தால் என்று உருளுறீங்களே. ஐக்கிய நாடுகள் சபை என்பது எவ்வளவு பெரிய டம்மிப் பீஸ் என்று இப்ப காஸால நடக்குற அழிவைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியுறல்லயா? வர்த்தக சங்கங்கள் ஹர்த்தால் அன்றைக்கு கடைய முடிடுவானுகள். கடைகள்ல இருக்கிற பொருள் அன்றைக்கு விற்காட்டி அடுத்த நாள் விற்கலாம். ஆனால் அந்தக் கடைகள்ல வேலை செய்யுற ஆட்களுக்கு அன்றைய நாள் சம்பளம் கிடைக்காது. அதே மாதிரி தினக்கூலி வேலை செய்யுற எவருக்குமே அன்றைய நாள் வருமானம் கிடையாது. வடக்கு கிழக்கில் இருக்குறதுல 50%க்கு மேற்பட்ட மக்கள் தினக்கூலிகள்தான். ஒவ்வொருத்தனுக்கும் கட்ட வேண்டிய லீசிங் காசு, லோன் காசு, வட்டிக் காசு, சேமிக்க வேண்டிய காசு என்று எல்லாத்துலயும் துண்டு விழும். அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றால் மக்களை ஒன்றாகத் திரட்டி பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் பண்ணுங்க. ஆர்ப்பாட்டம் பண்ண விரும்புறவன் வருவான். அதுல மக்கள் ஆதரவு உங்களுக்கு எந்த அளவு இருக்குது எண்டு தெரியும். இதுவரைக்கும் பல ஹர்த்தால்கள் நடத்தியிருக்கிறீங்க, அதனால ஏதாவது பயன் வந்திருக்குதா? அத விட்டுப்போட்டு Elite குரூப் நீங்க எல்லாம் ஹர்த்தால் என்ற பெயர்ல ஒருநாள் லீவு போட்டு குடும்பத்தோட இருக்கிறதுக்கு எதுக்கு தினக்கூலிகள் பாதிக்கப்படனும்? உண்மை உரைகல்
  4. குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் சத்திர சிகிச்சை நிபுணர் அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று காலை 11.00 க்கு கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். Shanmuganathan Piratheepan Theepan
  5. ஆடி மாசம் முடிந்தது. இனி புது மாப்பிளைகள்... மனைவியை தாய் வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு போகலாம். 😂
  6. நல்லாட்சி (?) அரசாங்கம் பதவியிலிருந்த போது யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் இராணுவத்தினரின் அழுத்தத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார் அதாவது உயர் கல்வி நிறுவனமொன்றின் தலைவர் ஒருவரை தன் எண்ணத்திற்கேற்ப இராணுவம் பதவி நீக்கியிருந்தது இந்நிலையில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் தான் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் . குறித்த வழக்கின் போது அப்போதைய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் உயர் நீதிமன்றிற்கு வழங்கிய சத்தியக் கூற்றில் 'தமிழமுதம்' என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டமை, தமிழ் அரசியல் கோரிக்கைகள் உள்ளடங்கிய நினைவு தூபி அமைக்கப்படுவதை தடுக்கத் தவறியமை ஆகியன தொடர்பில் இராணுவப் புலனாய்வு தனக்களித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறியிருந்தார். இந்த மோசமான விளக்கத்தையும் ஏற்று உயர் நீதிமன்றம் பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவி நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுவை விசாரணை கூட இன்றி தள்ளுபடி செய்திருந்தது எந்த குற்றமும் செய்யாத துணைவேந்தரான தன்னை இராணுவ மேலாதிக்கம் பதவி நீக்கம் செய்தமை , அதனை ஏற்று தன் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை உட்பட்ட மன அழுத்தங்களால் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் மாரடைப்பினால் இறந்து போயிருந்தார் ஆனால் நல்லாட்சி அரசங்கத்தில் அதிகாரமிக்கவர்களாகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் உட்பட எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவமேலாதிக்கம் குறித்து ஒரு மூச்சு கண்டனம் தானும் விடவில்லை. மாறாக திரு சுமந்திரன் உட்பட எங்கள் பாராளமன்ற உறுப்பினர்களே இராணுவத்தை மக்கள் மத்தியில் இயல்பாக்கம் (normalisation of the military) செய்யும் வேலையை செய்தார்கள் இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கேவின் பங்காளிகளாக உயர் கல்வி அமைச்சராகவிருந்த திரு ரவூப் ஹக்கீம் முதல் அமைச்சராகவிருந்த திரு மனோ கணேசன் யாருமே இராணுவ அதிகாரத்தின் அத்துமீறல்கள் குறித்தோ இராணுவமயமாக்கல் குறித்தோ ஒரு போதும் பேசவில்லை இது போதாதென்று நல்லாட்சியில் எங்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் அதிகாரமிக்கவர்களாகவிருந்த போது தான் நாவற்குழி காணாமல்போனோர் ஆட்கொணர்வு வழக்கின் விசாரணையின் போது நீதிமன்ற வளாகத்தில் வைத்தே மனுதாரர்கள் , அவர்களின் சட்டத்தரணிகளை அச்சுறுத்துமளவிற்கு எல்லை மீறியிருந்தது ஆனால் எல்லா அக்கிரமங்கள் போதும் எங்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் மிக மௌனமாகவே கடந்து இராணுவமயமாக்கலை இயல்பாக்க துணை போனார்கள் இங்கே இராணுவமயமாக்கலை எதிர்ப்பது ஓர் அரசியல் சித்தாந்த நிலைப்பாடக மட்டும் இருக்க முடியாது இது சமூகத்தின் இருத்தல் (existentialist) பிரச்சனை. தனி நபர்களின், சமூகத்தின் கூட்டு உளவியல் எதிர்காலம் தொடர்பான பிரச்சனை. ஆனால் சாதாரண மக்கள் (கேப்பாப்பிலவு. இரணைதீவு, காணாமல் போனோர் உறவுகள் இன்னும் வேறு பல) துணிந்து இராணுவத்திற்கு எதிராகப் போரிட தேர்தல் அரசியலால் பதவிக்கு வந்தோர் இராணுவமயமாக்கலை இயல்பாக்க துணை போனார்கள் இப்போது எந்தவித அதிகாரமும் அற்ற நிலையில் இருக்கும் எமது அரசியல் வாதிகள் இப்போதாவது தங்களின் நடவடிக்கைகளால் மக்களுக்கு சோர்வை கொடுக்காமல் இருக்க நேர்மையாக முயற்சிக்க வேண்டும். இனமொன்றின் குரல்
  7. மனித உரிமைகள் ஆணையாளருடைய இறுதி செய்யப்படாத அறிக்கை! நிலாந்தன். மனித உரிமைகள் ஆணையாளருடைய திருத்தப்படாத அறிக்கையின் முதல் வடிவம் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டதை போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கம் அந்த அறிக்கையில் உண்டு. மூன்று இனங்களுடையதும் ஆணையைப் பெற்று வந்திருக்கும் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் “இறந்த காலத்தில் இருந்து உடைத்துக்கொண்டு வருவதற்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்த வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு ஐநாவிடம் இருப்பதாகத் தெரிகிறது. அது ஐநாவின் எதிர்பார்ப்புத்தான். நிச்சயமாக யதார்த்தமல்ல. இது ஏறக்குறைய 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் வந்த நிலைமையை நினைவுபடுத்துவது.2015 ஆட்சி மாற்றத்தின் போதும் மூவினங்களும் இணைந்து ரணில் மைத்திரி அரசாங்கத்தை கொண்டு வந்தன.எனவே புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை கொடுக்கும் நோக்கத்தோடு ஜெனிவா கூட்டத்தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதுவரையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை அரசாங்கங்களுக்கு எதிரானவை.எனவே இலங்கை அரசாங்கங்களும் அதன் நட்பு நாடுகளும் அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துவந்தன. ஆனால் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான ,அதாவது நிலை மாறு கால நீதிக்கான தீர்மானம் எனப்படுவது இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் அது.அந்த தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் நிலைமாறு கால நீதியை இலங்கைத் தீவில் ஸ்தாபிப்பதற்கு ஒப்புக்கொண்டது. அதைவிட முக்கியமாக தமிழ்த் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாக மாறி அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக உழைத்தது. இது பழைய கதை. இப்பொழுது அதே கதை திரும்பி வருகிறது. ஆனால் அரசாங்கம் வித்தியாசமானது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பகை நிலைக்கு தள்ளாத விதத்தில் மீண்டும் ஐநா மனித உரிமைகள் பேரவை நகர்வுகளை முன்னெடுப்பதாக தெரிகிறது. இது அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போனபோது ஊகிக்கப்பட்டது.அவர் தன்னுடைய இலங்கைப் பயணத்தின் முடிவில் தெரிவித்த கருத்துக்களில் இருந்து அதை உணரக்கூடியதாக இருந்தது. இப்பொழுது அவருடைய வருகைக்குப் பின்னரான திருத்தப்படாத அறிக்கை வெளிவந்திருக்கிறது.அந்த அறிக்கையின்படி புதிய அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஐநாவிடம் இருப்பது தெரிகிறது. அந்த அடிப்படையில்தான் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரிலும் முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதனை இப்பொழுதே ஊகிக்கத்தக்கதாக உள்ளது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம் ரில்க்கோ விருந்தினர் விடுதியில் நடந்த சந்திப்பின்போது அதாவது ஐநாவுக்கு கடிதம் எழுதுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பின்போது இது சுட்டிக்காட்டப்பட்டது. ஐநா பல விடயங்களை ஏற்கனவே இறுதி செய்து விட்டது. அதன்படி புதிய அரசாங்கத்திற்கு வாய்ப்புகளை வழங்கும் நோக்கம் ஐநாவிடம் உண்டு என்ற விளக்கம் அந்த சந்திப்பில் இருந்தது. ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பதனால் அதற்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஐநா சிந்திக்கின்றதா?ஆனால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கைகள் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் முழுமையாக பொறுப்பு கூறவில்லை என்பதுதான் அது.அவ்வாறு இலங்கையின் சிங்கள பௌத்த அரசாங்கங்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்புக் கூறத் தவறியிருக்கும் ஒரு வரலாற்று பின்னணியில், புதிய அரசாங்கம் மட்டும் பொறுப்பு கூறும் என்று ஐநா எப்படி எதிர்பார்க்கலாம்? ஏற்கனவே 2015 இல் இருந்து 18 வரையிலும் ரணில் மைத்திரி அரசாங்கம் பொறுப்புக் கூறும் என்று ஐநா எதிர்பார்த்தது. ஆனால் அந்த அரசாங்கத்தின் தமிழ்ப் பங்காளியாக இருந்து பொறுப்பு கூறுவதற்காக உழைத்த சுமந்திரன் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளின் பின் வவுனியாவில் வைத்துச் சொன்னார்.அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று. அதாவது ஆட்சி மாற்றத்தின் மூலம் அரசு கட்டமைப்பில் மாற்றம் வரும் என்ற கருதுகோள்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சுமந்திரன் கூறுகிறார் அது தோல்வியுற்ற பரிசோதனை என்று. இப்பொழுது அதே தோல்விகண்ட பரிசோதனையை மற்றொரு புதிய அரசாங்கத்தோடு இணைந்து முன்னெடுக்க ஐநா தயாராகி வருகிறதா? ஏற்கனவே ரணில் மைத்திரி அரசாங்கத்துக்கு அதாவது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஐ நா வாய்ப்புகளை வழங்கியது.ஆனால் அந்த வாய்ப்புகளை நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே தோற்கடித்தார். இப்பொழுது மீண்டும் ஒரு தடவை தேசிய மக்கள் சக்திக்கு ஐநா வாய்ப்பை வழங்கக் கூடுமா? நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிய ஒரு பின்னணிக்குள்தான் 46/1 தீர்மானம் 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.அத் தீர்மானத்தின் பிரகாரம் ஸ்ரீலங்காவை பொறுப்புக் கூற வைப்பதற்கான அலுவலகம் என்ற பெயரில் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.அதேசமயம்,அந்த அலுவலகம் அமைந்திருக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் பொறுப்பதிகாரியான மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கைக்கு வர விசா வழங்கப்பட்டதால் அவர் அண்மையில் இங்கு வந்து சென்றிருக்கிறார். இப்படித்தான் இருக்கிறது ஐநா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் எப்படி நிறைவேற்றுகிறது மதிக்கிறது என்று அனுபவம்.இப்படிப்பட்டதோர் பின்னணியில் புதிய அரசாங்கத்துக்கு ஐநா வாய்ப்புகளை வழங்க கூடுமா? கடந்த 16 ஆண்டு கால ஐநா அனுபவத்தை தொகுத்து பார்க்கும் பொழுது தெளிவாக ஒரு சித்திரம் கிடைக்கின்றது. அதன்படி இலங்கையை எதிர் நிலைக்குத் தள்ளும் விதத்தில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ அல்லது இலங்கையை பாதிக்கக்கூடிய அழுத்தங்களை பிரயோகிப்பதற்கோ ஐநா தயார் இல்லை. மாறாக ஆட்சி மாற்றங்களின் போது ஏற்படக்கூடிய புதிய வாய்ப்புகளை கையாண்டு எப்படி புதிய இலங்கை அரசாங்கத்தை ஐநாவின் பொறுப்புக்கூறும் செய்முறைக்கு கடப்பாடு உடையதாக மாற்றலாம் என்றுதான் ஐநா முயற்சித்து வருகின்றது. அதாவது ஆட்சி மாற்றங்களின் மூலம் தமக்கு சாதகமான அரசியல் சூழல்கள் உருவாக்கும் பொழுது அவற்றைக் கையாள்வது. 2015-லும் அதைத்தான் செய்தார்கள்.இப்பொழுது 2025லும் அதைத்தான் செய்ய முயற்சிக்கின்றார்களா? அதாவது அரசாங்கங்கள் மாறும் பொழுது பொறுப்பு கூறுவதற்கான வாய்ப்புகள் மாறும் என்று ஐநா நம்புகிறதா? மேற்கு நாடுகள் நம்புகின்றனவா? ஆனால் இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறாமை என்பது அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் அல்ல. அது சிங்கள பௌத்த அரசுக் கொள்கை. தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல யார் அங்கே பொறுப்பில் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூற மாட்டார்கள். பொறுப்புக் கூறுமாறு மூன்றாவது தரப்பு ஒன்று கடுமையான பயன் பொருத்தமான அழுத்தங்களைப் பிரயோகித்தால் தவிர சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்றைக்குமே முழுமையாகப் பொறுப்புக் கூறாது. இப்போது இருக்கும் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் முழு அளவுக்கு பொறுப்பு கூறாது என்பதற்கு இரண்டு நடைமுறை உதாரணங்களைக் காட்டலாம். முதலாவது, அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு அசோசியேட்டட் நியூஸ் பிரஸ் ஊடகத்துக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறியது. “பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையை கண்டறிவதற்குத்தான் விரும்புகிறார்கள். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கவில்லை” என்ற பொருள்பட அந்த பேட்டியில் அவர் கூறுகிறார்.அதாவது அவர் குற்றவாளிகளைத் தண்டிக்க மாட்டார். இதைத்தான் முன்னைய அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த விஜய்தாச ராஜபக்சவும் வேறு வார்த்தைகளில் சொன்னார். நீதி விசாரணையும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் சமாந்தரமாகச் செல்ல முடியாது என்று. இரண்டாவது எடுத்துக்காட்டு, அனுரவின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த ஐநா கூட்டத் தொடரில் என்ன சொன்னார் என்பது. அங்கே அவர் பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்துப் பேசியிருந்தார். ஏன் அதிகம் போவான்? ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய திருத்தப்படாத அறிக்கையிலும் இலங்கை என்னென்ன விடயங்களில் ஐநா தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஐநா தீர்மானங்களில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளாத, ஐநாவில் இயங்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தைச் சேர்ந்தவர்களை இலங்கைக்குள் வரவிடாத ஓர் அரசியல் ராஜதந்திரப் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று ஐநா கருதுகின்றதா? ஐநா இந்த விடயத்தில் தன்னை பெருக்கடிக்கு உள்ளாக்காது என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தெரிகிறது.உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைப் பலப்படுத்தலாம் என்ற கருத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கொண்டிருப்பது தனக்குச் சாதகமானது என்று அனுர கருதுகிறார்.எனவே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு எப்படி அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கலாம் என்றுதான் அவர் சிந்திக்கின்றார். ஏறக்குறைய ரணில் சிந்தித்தது போல. அந்த அடிப்படையில் தான் செம்மணி விவகாரத்தை அரசாங்கம் கையாண்டு வருகிறது. மேலும் ஊழலுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் ஐநாவின் ஆர்வத்தை தூண்டக்கூடியவை. முன்னாள் கடற்படை தளபதி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் உள்நாட்டு நீதியின் மதிப்பை கூட்டும் முயற்சிகள்தான்.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் படைப்பிரதானிகளுக்கு எதிராகவும் எதுவரை போகலாம் என்பதில் அரசாங்கத்துக்கு வரையறைகள் உண்டு. சிங்கள பௌத்த உயர் குழாமானது ஒரு கட்டத்துக்கு மேல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை நகர விடாது. அதுபோலவே யுத்த வெற்றி நாயகர்கள் ஆகிய படைத்தரப்பையும் ஒரு கட்டத்துக்கு மேல் விசாரிக்க விடாது. அப்படி விசாரித்தாலும் தண்டிப்பதற்கு அனுரவே தயாராக இல்லை. எனவே பொறுப்புக் கூறல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ன செய்யலாம் என்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. கடந்த 16 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் அதைத் தொகுத்துக் கண்டுபிடிப்பது ஐநாவுக்கு கடினமான விடயம் அல்ல. ஆனாலும் ஐநா இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழும் பொழுது குறிப்பாக புதிய அரசாங்கம் ஐநாவை அனுசரித்துப் போவதான ஒரு தோற்றத்தை காட்டும் பொழுது அந்த அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஏன்? புதிய அரசாங்கம் ஏதாவது மாற்றத்தை காட்டும்; பொறுப்புக் கூறும் என்ற நம்பிக்கையினாலா? எதிர்பார்ப்பினாலா? இரண்டுமே இல்லை. முழுக்க முழுக்க புவிசார் அரசியல் நிலைப்பாடு அது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வர இருந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இதயமாக கருதப்படுபவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா சீனாவுக்கு போயிருந்தார். சீன சார்பு இடதுசாரி மரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது இலகுவாக சீனாவின் செல்வாக்குக்குள் விழுந்து விடலாம் என்ற பயம் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்ததும் வடக்குக்கு முதலில் வந்த தூதுவர் சீன தூதுவர்தான்.தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி வழங்கிய ஆதரவை அவர் சிலாகித்துப் பாராட்டி இருந்தார். எனவே சீனா தெளிவான செய்தியை ஐநாவுக்கும் இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஏற்கனவே வழங்கி விட்டது. சீனாவை நோக்கி இலகுவாகச் சாயக்கூடிய, சீன இடது சாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசாங்கத்தை அதிகம் பகை நிலைக்குத் தள்ளக் கூடாது என்று மேற்கும் ஐநாவும் இந்தியாவும் சிந்திக்கின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் நிர்பந்தித்தால் தேசிய மக்கள் சக்தி சீனாவை நோக்கி அதிகமாகப் போய்விடும். எனவே ஐநா இலங்கை அரசாங்கத்தை பொறுப்பு கூறுமாறு நிர்பந்தித்தால்,நெருக்கினால் சீனா இலங்கை அரசாங்கத்தைத் தத்தெடுத்து விடும் என்ற பயம் அவர்களுக்கு உண்டு. இதுதான் பிரச்சினை. இதுதான் பிரதான காரணம். பொறுப்புக் கூறலை இலங்கை அரசுக் கட்டமைப்பின் தலைக்கு மேல் நிரந்தரமாகத் தொங்கும் ஒரு கத்தி போல வைத்திருப்பதன் மூலம், ஏற்கனவே சீனாவின் செல்வாக்கு வலையத்துக்குள் சென்றுவிட்ட இச்சிறிய தீவின் மீது தமது பிடியை உறுதிப்படுத்துவதுதான் மேற்கத்திய,ஐ நா வியூகங்களின் நோக்கம். இந்தியாவின் நோக்கமும் அதுதான். இப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் இந்த இடத்தில் தேசிய மக்கள் சக்தி அல்ல எந்த புரட்சிகரமான அரசாங்கம் வந்தாலும் இதுதான் நடக்கும். அதாவது பொறுப்பு கூறல் என்ற விடயம் ஒரு ராஜதந்திரக் கருவியாக மாறிவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை. https://athavannews.com/2025/1443298
  8. நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்! நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. நேற்றையதினம் நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவில் ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில் , பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் , தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர். அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை, நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் , வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. https://athavannews.com/2025/1443294
  9. இந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்னும்… ஶ்ரீலங்காவிலா சுற்றித் திரிகிறார். 😂
  10. போரின் ஆரம்பத்திலேயே… உக்ரைனுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள் என்று, ஒரு சில யாழ் கள உறுப்பினர்கள் தீர்க்கதரிசனமாக முற்கூட்டியே கூறியதையும் பொருட்படுத்தாமல், உக்ரேனுக்கு கொம்பு சீவி விட்டவர்கள் இப்போ… எந்த பதுங்கு குழிக்குள் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.
  11. 💐 நினைவஞ்சலி 💐 யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் சிறந்த சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றி, அமைதியான பண்பும், அர்ப்பணிப்பும், அன்பும் கொண்டிருந்த யாழ். இந்துவின் பெருமைமிகு மைந்தர், வைத்தியர் வெங்கடாசலம் சுதர்சன் அண்ணா அவர்கள், சுகயீனம் காரணமாக எம்மை விட்டு பிரிந்துச் சென்றார். மருத்துவத் துறையில் தமது ஆற்றலும் அறிவும் முழுமையாக அர்ப்பணித்து, நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் காக்கக் காரணமாக இருந்து, சமூகத்தின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த அன்னாரின் திடீர் பிரிவு எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரின் இனிய நினைவுகள் என்றும் எம்முடன் நிலைத்திருக்கும். இறைவன் அன்னாரின் ஆன்மாவை சாந்தியடைய அருள்புரிவானாக. துயருற்ற குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், எமது இதயபூர்வமான அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏 ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏 Yarl Gulan
  12. அது என்ன... சிவப்பு வெல்வெட் கேக்? ஒரு நாளும் அதை கண்ணால் கண்டதுமில்லை, உண்டதுமில்லை. ஒரு து துண்டு, அனுப்பி விடுங்க ப்ளீஸ். 😂
  13. இப்படியான இளமரணங்களுக்கு எமது சமுதாயமும் சேர்ந்து தான் பொறுப்பெடுக்க வேண்டும். தங்களை கவனிப்பதற்கு முதல் மற்றவர்களை கவனிப்பதற்கு எமது சமூகம், குடும்பம் போன்றவற்றால் பிள்ளைகள் வடிவமைக்கப்படுகிறார்கள். அதுதான் சரியெனவும் தொடர்ந்து கதைத்து பப்பாவில் ஏத்துவதால் பிள்ளைகளும் நல்லபிள்ளை எண்டால் தன்னை கவனியாமல் மற்றவர்களை பார்ப்பதென நினைத்துக்கொள்கிறார்கள், அவ்வாறு வடிவமைக்கப்படுகிறார்கள். நம்மாக்கள் தங்களை தாங்களே கவனிப்பது பிழையெனவும் நினைத்துக்கொள்கிறார்கள். தங்களை கவனிப்பதை விடுத்து மற்ற அனைவரையும் பார்ப்பதற்காகவே மறைமுகமாக குடும்பங்களால் வடிவமைக்கப்படுகிறோம். யாரும் இறந்தால் அவர் அவரை வடிவாய் பார்த்தவர், அவவை வடிவா பார்த்தவர் என்பதில் ஆரம்பிக்கிறது இப்படியான Design கள். சுயம், சுயசிந்தனை,சுயமரியாதை, சுயநலன். இதுகளை மறந்து மற்றவர்களுக்காகவே Design செய்யப்படுகிறோம். கடவுளை வெளியில் தேடுவது போல் எங்களை நாங்களே கவனிப்பதில் இருந்து விலகி நாடு, தமிழ், வீடு, தொழில் போன்றவற்றை வளர்த்து கொள்வதற்காக வடிவமைக்கப்படுகிறோம். எல்லாவற்றிற்கும் முதல் எங்களை நாங்களே கவனிக்க வேண்டும் என்பதை செய்வதில்லை. அதை பார்த்து கொண்டிருக்கும் பிள்ளைகளும் அதே போல் வந்து விடுகிறார்கள். அதுதான் சரியென கற்பிக்கப்படுகிறார்கள். அல்லது மற்றவர்களை பார்ப்பதற்காக தங்களை கவனியாமல், தங்களை வளர்த்து கொள்ளாமல் குடும்பபங்களை இளவயதில் தொழில்களால் பொறுப்பெடுப்பதால் தொடர்ந்தும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். தங்களை தாங்களே கவனியாததால் அவர்களை கவனிப்பதற்கு சேர்ந்து இருப்பவர் முறியவேண்டிவரும். அல்லது போராடவேண்டிவரும். தங்களை தாங்களே கவனியாததால் நேற்று இறந்த வைத்தியர் போன்ற இளமரணங்களை நமது சமுதாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆழ்ந்த அநுதாபங்கள். முகப்புத்தகம் முழுக்க இப்படி ஓர் மரணத்திற்காக அழுததை கவனிக்க கூடியதாக இருந்தது. மாறி வடிவமைத்திருந்தால் தானும் வாழ்ந்து தொடர்ந்து சமூகத்திற்காகவும் சேவையாற்றியிருக்கலாம். ஆக்கம் : Kalichelvi Paskaran உண்மை உரைகல்
  14. நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு. 🙏 இலங்கையின் மிக உயரமான அசையும் கட்டுமானம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பறம். ஆங்கிலேயரின் குறிப்பேடுகளில் தகவல் லண்டன் அருங்காட்சியகத்தில் ஆவணங்கள். நல்லூரானின் சப்பறம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே கட்டப்பட்டு வருகின்றது. அக்காலத்தில் இலங்கையின் உயரமான அசையும் கட்டுமானம் என்று ஆங்கிலேயர்களின் குறிப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளது. அக் குறிப்பேடுகள் இப்போதும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன. ஒருமுறை வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் தர்மகத்தா வைத்திலிங்க செட்டியாரும் அவரது மனைவியும் நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறத் திருவிழாவிற்கு வருகை தந்திருந்தனர். அப்போது வைத்திலிங்கச் செட்டியாரின் மனைவி செட்டியாரிடம் ஒரு குறுணி வேலுக்கு இந்தளவு பெரிய சப்பறம் தேவையா? என்று கேட்டுள்ளார். இருவரும் திருவிழா முடிந்து வீட்டுக்கு சென்று தூங்கும் போது இருவர் கனவிலும் சிறிய வேல் மிகப் பிரமாண்டமாக சப்பறத்திற்கு மேலாக வானளாவ காட்சி கொடுத்ததாம். மறுநாள் நல்லூர் ஆலய அறங்காவலர் ரகுநாத மாப்பாண முதலியாரைச் சந்தித்து விடயத்தை சொல்லி சப்பறத் திருவிழா உபயத்தை தமக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க ரகுநாதரால் வைத்திலிங்கச் செட்டியாருக்கு சப்பற திருவிழா உபயம் வழங்கப்பட்டது. அதற்கு பிரதிபலனாக ஏராளமான நிலபுலங்களை எழுதிவைத்ததோடு முருகனை அலங்காரம் செய்வதற்கு ஏராளமான தங்க நகைகளை காணிக்கையாக வைத்திலிங்கச் செட்டியார் கொடுத்தார். அதன்பின் மிக நீண்டகாலம் வைத்திலிங்க செட்டியார் பெயரிலேயே சப்பறத் திருவிழா நடைபெற்று வந்தது. ஆரம்பகாலத்தில் நல்லூர் சப்பறம் நூற்று முப்பது அடியாக கட்டப்பட்டதாக குறிப்புக்கள் உண்டு. 1977 ம் ஆண்டு சப்பறம் முறிந்தது. அதன் பின்னர் சப்பறத்தின் உயரம் நூறு அடிகளாக குறைக்கப்பட்டது. 1983ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாகவும் நல்லூர் வீதி மாற்றியமைத்தமை காரணமாகவும் யாழ்ப்பாணக் கோட்டை சண்டை காரணமாக சில வருடங்கள் சப்பறம் இழுக்கவில்லை. அதன் பின்னர் 1999 ம் ஆண்டு மீண்டும் பெரிய சப்பறம் இழுக்கப்பட்டது. பின் வீதியின் அகலம் போதாததால் சப்பறப் படல்கள் குறைக்கப்பட்டு சப்பறத்தின் உயரம் 80 அடியாக குறைக்கப்பட்டது. பழைய சப்பறச் சகடை பழுதடைந்ததன் காரணமாக 2021 ம் ஆண்டு புதிய சப்பறச் சகடை செய்யப்பட்டது. வேல் பெருமானுடைய ழுழுத் தோற்றத்தையும் சப்பறத்தின் மேல் பகுதியில் உள்ள கண்ணாடியில் காணமுடியும். கீழே உள்ள ஓவியம் ஆங்கிலேயர் காலத்தில் கைகளால் வரையப்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பறத்தின் பென்சில் ஓவியம். தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது. நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத் திருவிழா எதிர்வரும் 20.08.2025 புதன்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதி - வீர செங்குந்தர் மரபு Babu Babugi
  15. ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் இணக்கப்பாடின்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரை நிறுத்துவதற்காக இச் சந்திப்பு அலாஸ்காவின் ஆங்கரேஜிலுள்ள எல்ம்ஹர்ஸ்ட் – ரிச்சர்ட்சன் கூட்டு இராணுவ தளத்தில் இடம்பெற்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது இரு உலக வல்லரசுகளும் சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடியிருந்த நிலையில் எவ்வித உடன்படிக்கைகளும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எந்த பொது அறிக்கையையும் இரண்டு நாடுகளும் வெளியிடவில்லை. இதேவேளை, இந்த முக்கியமான சந்திப்புக்குப் பின்னர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்த போதிலும், இரண்டு ஜனாதிபதிகளும் எவ்வித அறிவிப்புகளை வௌியிடாமல் வௌியேறியிருந்தனர். எவ்வாறாயினும் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், உக்ரைன் ஜனாதிபதியும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐரோப்பிய தலைவர்களும் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு தமது வலுவான ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.google.com/inputtools/try/
  16. "போர் முடிவது செலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது" உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வருவது ஜெலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். உக்ரைனில் அமைதியை கொண்டுவர விரும்புவதாக புதின் கூறியிருந்த நிலையில், டிரம்ப் கருத்து. Thanthi TV ஆஹா... பந்து இப்ப, செலென்ஸ்கியின் கையில். 😂
  17. "போர் முடிவது செலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது" உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வருவது ஜெலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். உக்ரைனில் அமைதியை கொண்டுவர விரும்புவதாக புதின் கூறியிருந்த நிலையில், டிரம்ப் கருத்து. Thanthi TV ஆஹா... பந்து இப்ப, செலென்ஸ்கியின் கையில். 😂
  18. 🔴 “No deel but progress has been made” யுக்ரைன் மீதான யுத்தம் குறித்தான அலஸ்கா பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு பேசும்போது “ஒப்பந்தங்கள் எதுவும் செய்துக்கொள்ளப்படவில்லை ஆனால் முன்னேற்றம் ஏற்பட்டது” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். 6 வருடங்களின் பின்னர் இந்த வரலாற்று சந்திப்பு அமெரிக்க - ரஷ்ய ஜனாதிபதிகளிடையே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.