Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சிந்திக்க வைக்கும், அருமையான கருத்தோவியம். 😂
  2. மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, நேற்று (3) சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாகனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் செப்டம்பர் 24 அன்று தெரிவித்ததாகவும் கமகே மேலும் குறிப்பிட்டார். மேலும், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பயணிகள் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த நிலைமை மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1449531
  3. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்! இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகையானது 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்துள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கை பெற்ற கடன்கள் குறித்து குழு விசாரித்தபோது, கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பொதுக் கடன் மேலாண்மை அலுவலக அதிகாரிகள், 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 19.6 டிரில்லியன் ரூபாய் வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறினர். அனைத்து கடன் வாங்கும் செயல்முறைகளும் தற்போது அரச கடன் மேலாண்மை அலுவலகத்தால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன. நாட்டின் கடன் மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்த திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் முக்கியத்துவத்தையும் கோப் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதன்போது எடுத்துரைத்தார். https://athavannews.com/2025/1449528
  4. me இலங்கை 17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு! சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெர்னோனியா ஜெய்லானிகா, ( Vernonia zeylanica) நிஜெல்லா சாடிவா, (Nigella sativa) ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், (Hemidesmus indicus) லூகாஸ் ஜெய்லானிகா (Leucas zeylanica) மற்றும் ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா (Smilax glabra) ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மருந்துகளின் கலவையானது புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடும் என்று பேராசிரியர் சமீரா ஆர். சமரக்கோன் உள்ளிட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1449481
  5. ஆக மொத்தத்தில் நெத்தன்யாஹுவும், ஹமாஸும்.... ட்ரம்பின் ஆசையில் மண் அள்ளிப் போடப் போகிறார்கள் போலுள்ளது. 😂 அப்படி நோபல் பரிசு ட்ரம்பிற்கு கிடைக்காமல் போனால், ட்ரம்ப் தன்னிச்சையாக சில நாடுகளை சேர்த்துக் கொண்டு அமெரிக்க மேற்பார்வையில் (தற்போது ஐ.நா. சபை ஒப்புக்கு சப்பாணியாக உள்ளது போன்று) நோபல் பரிசிற்கு இணையான ஒரு சர்வதேச நிறுவனத்தை ஆரம்பித்து... தனக்கு சமாதானத்துக்குரிய 🥇 பரிசை பெற்றுக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை. 🎖️ 🙂 ஏனென்றால்... இது ட்ரம்பின் தனிப்பட்ட தன்மானப் பிரச்சினை. "தனது தோல்வியை... இலகுவில் ஜீரணிக்க முடியாத ட்ரம்ப்... "பேட்டை ரவுடி" மாதிரி எந்த அடி மட்டத்திற்கும் இறங்கி, "நாத்தல்" வேலை செய்யக் கூடியவர்தான் ட்ரம்ப்". 🤣
  6. ட்ரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு! ஹமாஸ், பணயக்கைதிகளை விடுவித்து ட்ரம்பின் திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் காசா அமைதி ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் பங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இது குறித்து இன்று அவர் எக்ஸில் பதிவிட்டுள்ளதாவது, காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கின்றன என்றார். மேலும், புது டெல்லியின் நீண்டகால நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். நீடித்ததுமத் நியாயமானதுமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். வர்த்தகப் பதற்றங்கள் காரணமாக அமெரிக்க – இந்திய உறவுகள் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் மோடியின் இந்த பதிவு வந்துள்ளது. வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உக்ரேனுடனான தொடர்ச்சியான போருக்கு மத்தியில் இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் தொடர்ந்து வாங்குவதைக் காரணம் காட்டி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கு 50% வரியை விதித்தார். இந்த வரிகள் இரு நாடுகளுக்கு இடையிலும் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வரும் நிலையில் இந்திய அதிகாரிகள் அவற்றை நியாயமற்றவை என்று கூறியுள்ளன. Athavan Newsட்ரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!ஹமாஸ், பணயக்கைதிகளை விடுவித்து ட்ரம்பின் திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் காசா அமைதி ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் பங்##################### ##################### இந்தியன்... சைக்கிள் காப்பிலை, தன்னுடை 50% வரியை குறைக்க... ட்ரம்பின் தலையில் கிலோ கணக்கில் ஐஸ் வைக்கிறான். 😂
  7. ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை! ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதிக்கும் வகையிலும், அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் முகநூல் பதிவுகளுக்காக துனிசியாவில் உள்ள நீதிமன்றம் 51 வயது நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அரசை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை அவமதித்தல் மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்காக சபர் சௌசென் என்ற நபர் இந்த தண்டனையை எதிர்கொண்டுள்ளார். இந்தப் பதிவுகள் வன்முறை, குழப்பத்தைத் தூண்டுவதாகவும், துனிசியாவின் தண்டனைச் சட்டம் மற்றும் சர்ச்சைக்குரிய 2022 சைபர் கிரைம் சட்டத்தை மீறுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர். 2021 ஜூலை சயீத் அனைத்து பிரிவுகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக பல நபர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. துனிசியாவின் தண்டனைச் சட்டத்தில் மரண தண்டனை இருந்தபோதிலும், சிவில் நீதிமன்றங்கள் எப்போதாவது மரண தண்டனைகளை வழங்கினாலும், 1991 இல் ஒரு தொடர் கொலையாளி தூக்கிலிடப்பட்டதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படவில்லை. https://athavannews.com/2025/1449521
  8. காசா பகுதியில் குண்டுவீச்சை உடன் நிறுத்தவும்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு! காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (03) இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார். 2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய சுமார் 2 வருடங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கத் திட்டத்தில் பணயக்கைதிகள் மற்றும் வேறு சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து ட்ரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பணயக்கைதிகளை விடுவித்து ஏனைய பாலஸ்தீனியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க ஹமாஸ் தயாராக இருப்பதாகவும், ஆனால் திட்டத்தின் ஏனைய அம்சங்களுக்காக பாலஸ்தீனியர்களிடையே மேலும் ஆலோசனைகளை கோருவதாகவும் கூறியது. ஹமாஸ் அறிக்கையை வரவேற்ற ட்ரம்ப், “அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்” என்று கூறினார். அத்துடன், காசா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும், அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்த நிலையில், ஹமாஸின் பதிலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ட்ரம்பின் காசா திட்டத்தின் முதல் கட்டத்தை “உடனடியாக செயல்படுத்த” இஸ்ரேல் தயாராகி வருவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் சிறிது நேரத்திற்குப் பின்னர், இஸ்ரேலிய ஊடகங்கள், நாட்டின் அரசியல் பிரிவு காசாவில் தாக்குதல் நடவடிக்கைகளைக் குறைக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக செய்தி வெளியிட்டன. எவ்வாறெனினும், ஹமாஸின் அறிக்கையில், அவர்கள் ஆயுதங்களை களைவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது ட்ரம்பின் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு முக்கிய இஸ்ரேலிய கோரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449500
  9. மற்றொரு பொலிஸ் அராஜகத்தால்… தமிழன் ஒருவன் அடித்துக் கொலை. நாட்டில் எத்தனையோ சிங்கள போதைப் பொருள் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும், துப்பாக்கிதாரிகளும், கொலைகாரர்களும் கைது செய்யப்பட்டு… நல்ல முறையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது…. அங்கு நிகழாத காவல் நிலைய கொலை… தமிழ்ப்பகுதியில் தமிழனை விசாரிக்கும் போது மட்டும் நிகழ்வது…. தமிழனை கேட்க நாதி இல்லாத அடிமை இனம் என்று நினைப்பதால் ஏற்படும் சிங்கள இனவெறி அன்றி வேறு காரணங்கள் இருக்கவே முடியாது. எமது சட்டத்தரணி அரசியல்வாதிகளுக்கு…. தமக்குள் புடுங்குப்பட நீதிமன்றம் போவார்களே தவிர, இதுகளுக்கு குரல் கொடுக்க நேரமும் , மனமும் இல்லை.
  10. அந்த மாணவி விளையாட்டுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்று இருந்தால்… மற்றைய மாணவிகள் அவரை பாராட்டி இருப்பது தான், நல்ல ஒரு பண்பாக இருந்திருக்கும். அதனை விடுத்து எரிச்சல், பொறாண்மை பட்டு… வெற்றி பெற்ற மாணவியை ஒதுக்கி வைத்தது எவ்விதத்திலும் நியாயம் அல்ல. இந்தப் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்து தற்கொலை வரை செல்ல முன்…. பாடசாலை அதிபரும், ஆசிரியர்களும், பெற்றோரும் அந்த மாணவிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்த அவசரகதியில் முன்வர வேண்டும்.
  11. ட்ரம்பின் உத்தரவை…. இஸ்ரேல் கணக்கில் எடுக்குமா? அப்படி எடுத்து… இஸ்ரேல் போரை நிறுத்தினால்… !!! ? எப்படியும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வாங்கியே தீருவேன் என்று பல வழிகளிலும் “அடாத்தாக அடம் பிடித்துக் கொண்டு நிற்கும் ட்றம்பிற்கு” நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புகள்!? உள்ளதாகவே தெரிகின்றது. அடுத்த மாதம் நவம்பரில்…. நோபல் பரிசு அறிவிப்பற்கான நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது. அது…. ட்றம்பிற்கு கிடைக்காவிட்டால், நோபல் பரிசு அறிவிக்கும் குழுவிற்கு அட்டமத்து சனி ஆரம்பம்தான். 😂 ட்றம்பிற்கு சமாதானத்துக்குரிய, நோபல் பரிசு கொடுத்தால்…. நோபல் பரிசுக்கு அவமானம். கொடுக்காமல் விட்டால்…. ட்றம்பிற்கு அவமானம். எப்படிப் பார்த்தாலும்… இன்னும் ஒரு மாதத்தில் நல்ல கூத்து ஒன்று இருக்கின்றது. 🤣
  12. எல்லாம் நமது தமிழ் அரசியல்வாதிகளின் நீண்டகால குறிக்கோள் அற்ற சிந்தனைகளாலும், அவர்களின் சுயநல அரசியல் நகர்வுகளாலும், தமது இனத்தின் நலன் கருதி ஒற்றுமையாக தமது குரலை சர்வதேசத்திற்கு ஆணித்தரமாக சொல்ல முன்வராமையாலும் ஏற்பட்ட விபரீதம் இது. இன்னும்… இந்தியா தீர்வு பெற்றுத் தரும் என்று, கிணத்துத் தவளை மாதிரி நம்பிக் கொண்டு இருக்கும் மர மண்டை அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு… தமிழ் இனத்தின் விடிவு என்பது எட்டாக்கனிதான். இத்துப்போன இவர்களை வைத்துக் கொண்டு இனி பிரயோசனம் இல்லை. ஈழத் தமிழ் இனம் மாற்றுவழிகளை யோசிக்க வேண்டும்.
  13. அப்படி என்ன பெரிய தொழில் செய்து… இவ்வளவு பணத்தை, இந்த இருபது வயதில் இன்பநிதி சம்பாதித்தார் என அறிய ஆவலாக உள்ளது. அது தெரிந்தால்… நாமும் இந்தக் குளிருக்குள் வருடக் கணக்கில் நின்று, கஸ்ரப்படுவதிலும் பார்க்க ஊருக்குச் சென்று செட்டில் ஆகி, இன்பநிதியைப் போல்… இன்பமாக வாழலாம். 😁 வீட்டில்… தங்க முட்டை இடும் வாத்து வளர்க்கின்றார்களோ.. தெரியவில்லை. 😂
  14. நம்மவருக்கு இலங்கையின் பிறப்பு அத்தாட்சி பத்திரம் இருந்தால் இரட்டை குடியுரிமை எடுப்பதில் பெரும் சிரமம் இருக்காது என கருதுகின்றேன். அது இல்லாத பட்சத்தில்…. ஒரு லட்சம் (100,000) அமெரிக்க டொலரை கட்டினால்தான் 5 வருட வதிவிட விசா கிடைக்கும். பத்து வருட வதிவிட விசாவிற்கு இரண்டு லட்சம் அமெரிக்க டொலர் கட்ட வேண்டுமாம். குறிப்பிட்ட பணத்திற்கு.. மட்டுப் படுத்தப் பட்ட வருடங்களிலேயே மேற்படி விசா வழங்கப் படுவதால் நம்மவர் ஆர்வம் காட்டுவார்களோ தெரியவில்லை.
  15. உலக வரலாற்றில் முதற் தடவையாக ஒரு 20 வயது இளைஞன் 104 கோடி பட்ஜட் படத்தை வாங்கி இந்தியா முழுவதும் வெளியிடுகின்றான். அதுவும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் பெருமையடைகின்றோம். இளவயதில் ஒரு பெரும் நிறுவனத்தை வழிநடத்தி வெற்றிவாகை சூடும் இன்பநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் நிறைவடைகின்றோம். Inuvaijur Mayuran புரிந்தவன் பிஸ்தா.
  16. மகா பிரபுவே வணக்கங்கள் பல.🙏🙂‍↕️ திருநெல்வேலிகாரன் ########################## எலி, ஏன்... ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என்று பார்த்தேன். இப்படிப் பட்டவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஒரு கட்சிக்கு சார்பானவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.
  17. மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்! மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயல் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் (2) காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக,மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துமன்னார் மாவட்டத்தை சேராத சில இளைஞர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் போராட்டக் காரர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், இதன்போது சிலர் தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுத்து நிறுத்தப்பட்ட இளைஞர்களிடம் போராட்டம் தொடர்பில் வினவப்பட்ட நிலையில்,” கும்பல் ஒன்று கூட்டம் ஒன்றை நடத்துவதற்காக தம்மை மல்லாவியில் இருந்து அழைத்து வந்ததாகவும், பணம்,உணவு மற்றும் ஏனைய செலவுகள் தாங்கள் பார்த்துக் கொள்வதாக தெரிவித்து போராட்ட களத்தில் எம்மை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றுவரும் காற்றாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட காற்றாலை நிறுவனம் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருவதாகவும் ,தாங்களாகவே கிராமங்களில் உள்ள இளைஞர் கழகங்களிடம் உதவி செய்வதாக கூறி கோரிக்கை கடிதங்களை பெற்று அவற்றை காற்றாலைக்கு ஆதரவு கடிதங்களை போல் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் உள்ளூர் இளைஞர் கழகங்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449363
  18. அத்து மீறிய ட்ரோன் ஊடுருலால் ஜெர்மன் விமான சேவை பாதிப்பு! ஜெர்மனின் மியூனிக் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (02) மாலை சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, 17 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், ஜெர்மன் நகரில் சுமார் 3,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன், மியூனிக் விமான நிலையம் மேலும் 15 விமானங்களை அருகிலுள்ள நகரங்களுக்கு திருப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மியூனிச்சில் தரையிறங்க வேண்டிய விமானங்களை ஸ்டட்கார்ட், நியூரம்பெர்க், வியன்னா மற்றும் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி அனுப்பி விடப்பட்டன. ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலந்து, ருமேனியா, லாத்வியா, எஸ்டோனியா மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அண்மையில் அத்து மீறிய ட்ரோன் நடவடிக்கைகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. https://athavannews.com/2025/1449435
  19. காணொளி: 👉 https://www.facebook.com/100081012193895/videos/762988353430117 👈 துக்கம், தொண்டையை அடைக்குது. 😂
  20. இந்த வார ஆனந்தவிகடனின் கட்டுரைக்கான கருத்தோவியம். ஆனந்தவிகடனில் வெளிவந்த இலங்கையின் மனித புதைகுழிகள் பற்றிய ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனின் கட்டுரைக்காக ஓவியர் காசிப்கான் வரைந்த ஓவியம். Inuvaijur Mayuran

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.