Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நாடே தேடிய சந்தேகநபரை பிடிக்க உதவிய இறக்குவானையின் புதல்வி! பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் விதுஷாஞ்ஜனி (விது) இறக்குவானையில் பிறந்து இறக்குவானையில் கல்வி பயின்று இறக்குவானையின் புதல்வி. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் பொலிஸ் அதிகாரியான விது. அவரது சேவை குறித்து, பொலிஸ் சுற்றுலா பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் ஊடக அறிவித்துள்ளார். சர்வதேச சர்ச்சையை ஏற்படுத்தி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய தகவல்களை திரட்டி நடவடிக்கை எடுத்தது எமது இறக்குவானை புதல்வி விதுஷாஞ்ஜனி (விது). இது எமது இறக்குவானை மண்ணுக்கு பெருமை. முருகானந்தம், Suguna Suguna ஆகியோரின் அன்பு மகளே விதுஷாஞ்ஜனி (விது). பதிவு - சிரேஷ்ட ஊடகவியலாளர் Ranjan Arun Prasadh Malayaga Kuruvi
  2. காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈 அவர் ஓடிக் கொண்டு இருக்கும் ஆட்டோவின் வலது பக்க மேல் மூலையில், Navigation, Google Map போன்றவை பார்ப்பதற்காக பொருத்திய கைத்தொலைபேசியில்... சந்தேகத்துக்கு இடமான ஒருவர் வழி மறிக்கும் போது, உசாராகி வீடியோவை ஓட விட்டிருக்கலாம். மொத்தத்தில் இப்படியான இடங்களில் தனியே சுற்றுபவர்கள்... உசார் பேர்வழிகளாக இருப்பார்கள்.
  3. நாச்சிமார் கோவிலடி வில்லுப்பாட்டு இராஜன் (இராசு) தம்பையா இராஜன் அவர்கள் இன்று (18.11.2025) காலமானார். இவர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, பின்னர் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்சிலும் வசித்துள்ளார். இவர் நாடகங்களை இயக்கியுள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' மற்றும் கே. பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு' போன்ற நாடகங்களை இயக்கி மேடையேற்றியுள்ளார். யாழ் களமூடாக அறிமுகமான ஒருவர். ஒரு காலத்தில் ஈழத்திலும், ஐரோப்பா எங்கும் வில்லுப்பாட்டு நிகழ்வினூடாக கோலோச்சியவர். „மறுபக்கம்” என 2003 களில் நான் எழுதிய சிறுகதை ஒன்றை தொலைக்காட்சி நிகழ்வுக்காக வில்லுப்பாட்டாக செய்தவர். நினைவுகளில் என்றும் நிலைத்து நிற்பார். Inuvaijur Mayuran ########################################## ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி. 🙏
  4. மனிதர்களுடன் நெருக்கமாக உள்ள பிராணிகளில்... டொல்பின், நாய், பூனை போன்றவை முக்கியமானவை என நினைக்கின்றேன். யானை போன்ற மற்றைய விலங்குகள் மனிதர்களுடன் நெருக்கமாக பழகினாலும் சில நேரங்களில் ஆக்ரோசமாக மாறி விடும்.
  5. யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்! யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர் கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது, வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்றைய தினம் யாழ் .சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். யுத்தம் மற்றும் இதர பாதிப்புகளால் பாதிப்புற்று பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் வழமையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய, இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை அவயவங்கள் குறித்த 35 பேருக்கும் சென்னை ஸ்பாக் மிண்டா” நிறுவனத்தினூடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1453092
  6. அதுகளுக்கு என்ன... விசா எடுக்காமல், நாடு நாடாக சுத்தி திரியுதுகள். 🐋 🐬 🙂
  7. வெள்ளைக்காரிக்கு... அந்தரங்க உறுப்பை காட்டியவர், மொட்டை அடித்து... தனது முக அடையாளத்தை மாற்றியும் பயனில்லை!! கண்டு பிடித்து விட்டார்கள். 😂 குட் லக், நெக்ஸ்ட் ரைம்.
  8. இது பங்களாதேஷில் இல்லை...! நேற்று இரவு ஜனாதிபதி அனுர திசாநாயக்கவால் ஆனந்த விஜேபால மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கையின் ஆரிய பௌத்த மகன்கள்.. சீக்கிரம் குணமடையுங்கள் முதலாளி! Dulara Gunathilake திருகோணமலையில்... முதல் நாள், பொலிஸாரால் புத்தர் சிலை அகற்றப் பட்ட போது... ஏற்பட்ட தள்ளுமுள்ளில், தமக்கு பொலிஸார் அடித்து விட்டதாக கூறி... இரண்டு புத்த பிக்குகள் வைத்தியசாலையில் தாமாகவே போய் படுத்துக் கொண்டார்கள். அதற்கு, மேலுள்ள சிங்களவரும் வேறு சிங்களவர்களும் இனவாதத்தை தூண்டும் விதமாக கருத்துக்களை பகிர்ந்து வருவதில் ஒன்று உதாரணத்துக்கு மேலே உள்ளது.
  9. பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்! அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பது உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் போதுமான ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கல்வி அமைச்சு, தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கப் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் சில சங்கங்கள் விவாதங்களில் ஈடுபடாமல் புறக்கணித்தன என்றும் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சுச் செயலாளர் நளக்க கலுவெவ கூறுகையில், அனைத்துச் சங்கங்களையும் பலமுறை அழைத்தும் சில பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்காமல் விலகிச் சென்றதாகவும், இது தங்கள் தரப்பில் உள்ள குறைபாடு அல்ல என்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், 200,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் தனித்தனியாக விவாதிப்பது சாத்தியமில்லை என்ற போதிலும், மாகாண மற்றும் வலய மட்டங்களில் குறிப்பிடத்தக்க விகிதத்தில் ஆசிரியர்களுடன் இந்தச் சீர்திருத்தங்கள் குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். https://athavannews.com/2025/1453080
  10. இங்கிலாந்தில் ஆதரவை இழக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்! இங்கிலாந்து பிரதமர் (Keir Starmer ) கீர் ஸ்டார்மரின் தலைமை மற்றும் வரவிருக்கும் வரவு செலவு திட்டம் குறித்து இங்கிலாந்தில் அரசியல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது வாக்காளர்களின் விருப்பங்களை மீறியும் ஸ்டார்மர் அடுத்த 2029 ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொழில் கட்சியினரை வழிநடத்தப் போவதாக வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஸ்டார்மரை ஆதரித்த வாக்காளர்களில் சுமார் 23% பேர் அவர் தற்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் வரவுசெலவு திட்டம் மற்றும் மே மாதத் தேர்தல்கள் அவரது புகழுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும், பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில், கன்சர்வேடிவ் மற்றும் சீர்திருத்தக் கட்சிகளின் தலைவர்கள் வரவு செலவு திட்டம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து விமர்சனங்களைத் தயார் செய்துவருக்கின்றனர். குறிப்பாக, வரவிருக்கும் வரவு செலவு திட்டம் வருமான வரி விலக்குகளை முடக்குவது குறித்து பற்றி ஒரு கன்சர்வேடிவ் கட்சி தலைவர் எச்சரிக்கை விடுக்க உள்ளார். https://athavannews.com/2025/1453088
  11. இந்தியா….. முதுகில் குத்தும் நேர்மை அற்ற சகுனி நாடு. இந்த நாட்டால், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு என்றும் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்.
  12. ரேடியோவுக்குள்.... எப்படி பேசும் ஆள், உள்ளே போனார். நல்லது செய்தால், நல்லது நடக்கும். இப்ப தான் தெரியுது எவ்வளவு பொய் அது. வெத்தலை போட்டால்... கோழி கொத்தும். பணம், பதவி... படைத்தவன் பொய் சொல்ல மாட்டான். அவன் நல்லவன். பணக்காரர்களுக்கு தான்.... Sugar, B P நோய் எல்லாம் வரும். பொய் சொன்ன வாய்க்கு, போஜனம் கிடைக்காது. பல்லு விழுந்த உடனே... அதை மண்ணிலே புதைக்காமல் விட்டால், அது திரும்ப முளைக்காது. தப்பு செய்தால்... சாமி கண்ணை குத்தும். நான் உங்களை மட்டும் தான், love பண்ணுறேன். டிகிரி படித்தவுடன் வேலை கிடைத்து விடும் என்று நம்பியது. மழையும் வெயிலும் ஒரு சேர வந்தால்... யானைக்கும், பூனைக்கும் கல்யாணம் நடக்கும். எம். ஜி. ஆர். அணியும், கூலிங் கிளாஸ் வழியாக பார்த்தால்... "ஆண், பெண் அனைவரும் ஆடை இல்லாமல் தெரிவார்கள்!"
  13. மீண்டும் தனது இடத்தை வந்தடைந்த புத்த பெருமான். காணொளி: 👉 https://www.facebook.com/reel/1161565916114299 👈 ---------------------------------------------------------- நேற்று (16) பாதுகாப்பின் நிமிர்த்தமாக கொண்டு செல்லப்பட்ட கூறப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று (17) மதியம் அதே இடத்தில் நிறுவப்பட்டது. 15.11.2025 - இரவு குறித்த பகுதியில் கட்டுமானப் பொருட்கள் இரவோடு இரவாக இறக்கப்பட்டு பெயர்ப்பலகையும் நடப்பட்டது. 16.11.2025 - காலை புத்தர் சிலை வைப்பதற்கான வேலைகளும் கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. கட்டுமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்தும் கட்டுமானம் இடம்பெற்றது. இரவு புத்தர் சிலை வைக்கப்பட்டது. நள்ளிரவு புத்தர் சிலை அகற்றப்பட்டது (பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்டது) பலரினால் பலருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. பலரினால் உரிமை கோரப்பட்டன. 17.11.2025 - பாராளுமன்றில் புத்தர் சிலை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன. மீண்டும் புத்தர் சிலை வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் உறுதி வழங்கப்பட்டது. 12 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றது. மதியம் மீண்டும் பொலிஸாரினால் குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. ஜசிந்தன் அருண் அடங்காதமிழன்
  14. புத்தர் சிலையால் வந்த வில்லங்கம்! திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றைய தினம் மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த_விஜயபால, புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார். இன்று காலை நிலவரம் திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் அனுமதி பெறாது, சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளுக்கும் பௌத்த துறவிகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்துள்ள நிலையில் இன்று காலையும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. இதேவேளை இன்றையதினம் பிற்பகல் 12 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசாண் அக்மீமனவிற்கு எதிரான பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். நேற்று மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் அமைச்சரின் உத்தரவிற்கு அமைய நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது. முன்னதாக கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதும் நேற்று இரவு 8 மணி வரை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. பொலிசார் சிலையை அகற்றமுற்பட்டபோது பௌத்த பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் பொலிசாரையும் தாக்கியிருந்தனர். குறிப்பாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதன் பிரகாரமே பொலிஸாரினால் தற்காலிகமாக கட்டுமான பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் கட்டுமான பணிகளை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளைத் பொலிஸார் இன்று நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த பகுதியில் சட்ட அனுமதியற்ற சிற்றுண்டிச்சாலை தமது திணைக்களத்தால் உடைத்து அகற்றப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வளங்கள் திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கு அமைய கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் ஆனந்த விஜேயபால கீழ் கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார். இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்தோடு அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால், அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின்படியே செயற்பட வேண்டியுள்ளது. இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை தடுத்து நிறுத்தியதாக நேற்றிரவு தெரிவித்த அமைச்சர் இன்று சபையில் முரணாக கருத்து வெளியிட்டார். சபையில் சஜித் கேள்வி புனித பூமிவளாகத்திற்குள் புத்தர்சிலை வைப்பதை பொலிஸார் இன்று தீர்மானிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் இந்த சமூகத்தில் இனவாதம் தலைதூக்கும் நிலை ஏற்படும். நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் செயற்படும் குழுவினர் இந்த சம்பவத்தை ஒருகருவியாக பயன்படுத்த நேரிடும் இதனால் நாட்டினுள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும். ஏதேனும் பிரச்சினை இருந்தால். விடயத்துக்கு பொறுப்பாக மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் அதனை விடுத்து இரவோடு இரவாக பொலிஸார் அங்கு அனுப்பி ஒரு புனித பூமிக்குள் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பொலிஸார் எவ்வாறு தலையீடு செய்ய முடியும். யாருடை ஆணையின் பேரில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன? அரசாங்கத்திடம் நாம் ஒரு விடயத்தை தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். நாட்டில் சட்டங்கள் தொடர்பாக புரிதல் இல்லாவிடின் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். எனவே தற்போது சூடு பிடித்துள்ள இனவாத மதவாத தீப்பிழம்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நீதியை நிலைநாட்டுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். புனித பூமிக்குள் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பொலிஸார் எவ்வாறு தலையீடு செய்ய முடியும் – என்று சஜித் கேள்வி எழுப்பினார். சாணக்கியன் கடும் கண்டனம் திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட அவர்கள் பௌத்த இனத்தின் எந்தவொரு பௌத்த சின்னங்களும் அவர்களால் அழிக்கப்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டார். இன்றைய சபை அமர்வின்போது அவர் இது குறித்து கடும் தொனியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் – சுமந்திரன் அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. எனவே, அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிசாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1453006
  15. முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை! கடந்த ஆண்டு மாணவர் எழுச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ளது. ஹசீனா இல்லாத நிலையில் நடத்தப்பட்ட பல மாத கால விசாரணையைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆகஸ்ட் 5, அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்தபோது நாடுகடத்தப்பட்டு டெல்லியில் வசித்து வரும் 78 வயதான அவாமி லீக் கட்சித் தலைவர், வன்முறையைத் தூண்டுதல், போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவு பிறப்பித்தல் மற்றும் மாணவர்கள் தலைமையிலான கிளர்ச்சியின் போது அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம், ஒரு கொடிய அடக்குமுறையை ஏற்பாடு செய்வதில் ஹசீனாவின் பங்கை விவரித்தது. நிராயுதபாணியான மாணவர் போராட்டக்காரர்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தூண்டும் வகையில் உத்தரவுகளை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களை “அழிக்க” கொடிய ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நேரடி கட்டளைகளை அவர் பிறப்பித்ததாகவும் நீதிமன்றம் கண்டறிந்தது. கூடுதலாக, அரசுப் படைகளால் நடத்தப்பட்ட கொலைகள், சித்திரவதைகள், காணாமல் போதல்கள் மற்றும் தீ வைப்புகளுக்கும், அவரது நிர்வாகத்திற்குள் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கும் ஹசீனா பொறுப்பேற்றார். பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின்படி, கலவரத்தின் போது 1,400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஹசீனா இந்த புள்ளிவிவரங்களை மறுத்து, சுயாதீன விசாரணையைக் கோரியிருந்தார். https://athavannews.com/2025/1452968
  16. சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்! அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அன்றாடம் சுமார் 6,000 அனுமதிப் பத்திரங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. பற்றாக்குறையின் விளைவாக அண்மைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 350,000 சாரதி அனுமதிப் பத்திரங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அட்டை இருப்புக்கள் இப்போது கிடைத்துள்ளதால், அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் அனுமதிப் பத்திரங்களை விரைவாக அச்சிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேரஹெர பிரதான அலுவலகத்திற்கு மேலதிகமாக, தற்போது ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்களிலும் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குருணாகலிலும் விரைவில் அச்சிடும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், விண்ணப்பித்த 14 நாட்களுக்குள் புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. https://athavannews.com/2025/1452918
  17. பெண் சுற்றுலாப் பயணி மீதான பாலியல் வன்புணர்வு முயற்சி; சந்தேக நபர் கைது! அருகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அண்மைய நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சமூக ஊடக தளங்களில் பரவிய காணொளியில், இலங்கையில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணை சந்தேக நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது வெளிப்படுத்தப்பட்டது. அதன்படி, சந்தேக நபரை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடுவதற்காக இலங்கை பொலிஸார் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தனர். அதன்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (16) மாலை சந்தேக நபர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் களுவாஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார். ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, இந்த குற்றம் 2025.10.25 அன்று சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு எதிராக நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், சுற்றுலாப் பிரிவு, திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூட்டு நடவடிக்கையின் பின்னணியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரின் அடையாளத்தை மாற்றியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1452900
  18. ஸ்டாலின், அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி மற்றும் குஷ்பு ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு இன்று (17) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல் மின்னஞ்சல் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில், நடிகர்களான அஜித் குமார், அரவிந்த் சுவாமி மற்றும் குஷ்பு ஆகியோரின் இல்லத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் முதல்வர் மற்றும் நடிகர்களின் வெளிப்புற வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மிரட்டல் மின்னஞ்சலைப் பெற்ற பின்னர், பொலிஸார் அதிரடியாக செயல்பட்டு, மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் முழுமையாக சோதனை செய்தனர். எனினும், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. கடந்த மாதமும் ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இருப்பினும், விரிவான சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. ஒக்டோபர் 3 ஆம் திகதி பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகம் மற்றும் நடிகை த்ரிஷாவின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதற்கிடையில், ஒக்டோபர் 3 ஆம் திகதி, சென்னை விமான நிலைய முகாமையாளர் அலுவலகத்திற்கும் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்த மர்மமான மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலின்படி, விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளுக்குள் சக்திவாய்ந்த குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவை வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் அது ஒரு புரளியாகவும் மாறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452928
  19. சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு! சவூதி அரேபியாவின் முஃப்ரிஹாத் அருகே திங்கட்கிழமை (17) அதிகாலை மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 42 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பல பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசரகால குழுக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதிகாரிகள் இன்னும் உயிரிழப்புகளின் சரியான எண்ணிக்கையை சரிபார்த்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 24×7 கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. https://athavannews.com/2025/1452932

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.