Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்! மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த போக்குவரத்தில் ஈடுபட்ட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த துறவிகளில் மூன்று வெளிநாட்டு துறவிகளும் நான்கு இலங்கை துறவிகளும் அடங்குவதாக பன்சியகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர். இந்த விபத்து நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது கேபிள் காரில் 13 பிக்குகள் இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வன மடத்தில் தற்போது பல வெளிநாட்டு துறவிகள் வசித்து வருவதாகவும் ஊடகப் பிரிவு கூறுகிறது. துறவிகள் கேபிள் காரில் ஏறி மலை உச்சியில் உள்ள தியான பீடங்களுக்கு செல்ல புறப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பன்சியாகம போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1448454
  2. உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்! உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இதேவேளை, மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்க்கவும், நல்ல இசையைக் கேட்கவும், கடற்கரைகளுக்குச் செல்லவும், கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்பதால், இந்த விஷயத்தைப் பற்றி தான் ஒரு முறை பிரதமருக்கு நினைவூட்டினேன், என்று அவர் கூறினார். இந்த ஒதுக்கீடு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1448480
  3. ஹ்ம்ம்... நல்ல ஒரு கண்ணியமான பதவி கிடைத்தும், அதனை காப்பாற்றத் தெரியாத முட்டாள் நீதிபதி. ஆமா.... இவர் தமிழா, சிங்களமா, முஸ்லீமா, பறங்கியா.... 😂 இப்போதான்... பார்த்தேன். தமிழ் பெண்மணியாம்.
  4. தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் விஜய்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், தமிழக அரசியல்வாதிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது பா.ஜ.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளை தனது அரசியல் எதிரிகளாக சுட்டிக்காட்டி உரையாற்றினார். சமீபத்தில் மதுரையில் நடந்த இரண்டாவது மாநாட்டிலும் அவர் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்தார். இதன் தொடர்ச்சியாக, “உங்கள் விஜய் நான் வரேன்” என்ற கோஷத்துடன் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் அண்மையில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் நடிகர் விஜய் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் . நடிகர் விஜயை Instagram இல் 1.46 கோடிபேரும் Facebook க்கில் 77 லட்சம் பேரும் X தளத்தில் 55 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அந்தவகையில் சராசரியாக 93 லட்சம் பேர் விஜயை பின்தொடர்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. அதே சமயம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மொத்தமாக 30 லட்சம் பேரும் எடப்பாடி பழனிசாமியை 2.95 லட்சம் பேரும் , அண்ணாமலையை 10.25 லட்சம் பேரும் , உதயநிதி ஸ்டாலினை மொத்தம் 16.25 லட்சம் பேரும் பின்தொடர்கவதாகத் தெரிய வந்துள்ளது. எவ்வாறு இருப்பினும்சமூகவலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பது அரசியல் ஆதரவு அல்லது வாக்குகள் என்பதைக் குறிக்காது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு Instagram-இல் 9.75 கோடி பின்தொடர்பவர்கள் இருக்க, கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதைவிட அதிகமான 27.3 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். அதுபோல, விஜய்க்கும் அவரது திரை உலகப் புகழ் காரணமாக உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம் உள்ளதால், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448457
  5. விஷயலச்சுமிக்கு, சமூக ஊடகங்களில் பேட்டி கொடுக்க... பின்னுக்கு நின்று கதை, வசனம், டைரக்‌ஷன் செய்யிற ஆட்களுக்கும், விசயலச்சுமிக்கு வெள்ளை அடிக்கிற ஆட்களுக்கும்…. வேலையில்லா திண்டாட்டம்தான். அய்யோ பாவம். இனி… மூடிக் கொண்டு இருக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றம் சொல்லிப் போட்டுது. 😂
  6. ஆமா…. வருகின்ற வெள்ளிக்கிழமை, “ஜும்மா தொழுகை” முடிந்த பின்…. வீதியில் இறங்கி கதறுவதை பொறுத்துத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். 😂
  7. அந்தக் கடைசிப் பந்தி அருமை. 👍🏽 வல்லரசுகளுக்கு இது… விளங்க கனகாலம் எடுக்கும் அல்லது கண்ணை மூடிக் கொண்டு, பால் குடித்த பூனையின் நிலைமைதான்.
  8. இலங்கை முஸ்லீம்களுக்கு இது இனிப்பான செய்தி அல்ல. 😂
  9. தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் – வெளியான அதிர்ச்சி தகவல்! ஹம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21ஆம் திகதியன்று இரண்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குடவெல்ல, மாவெல்ல ஆகிய கடற்கரைகளில் தரையிறக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன் பின்னர் குறித்த போதைப்பொருள் அங்கிருந்து, கடற்கரைக்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிறிய ரக பாரவூர்தியில் ஏற்றப்பட்டு, சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மாவெல்ல கடற்கரையிலிருந்து சீனிமோதர வீட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற குழுவினர், அந்த வீட்டில் மது அருந்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடலங்களுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக, தங்காலை – சீனிமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மூன்று சிறிய ரக பாரவூர்த்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 705 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, குறித்த போதைப்பொருள் கையிருப்பின் சந்தை மதிப்பு, சுமார் 988 கோடி ரூபா என்றும் பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த கண்டுபிடிப்பு தரைப்பகுதியில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பாரியளவிலான போதைப்பொருள் தொகையாக பொலிசார் வரையறுத்துள்ளனர். https://athavannews.com/2025/1448426
  10. அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல் பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty) குறைக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8,000 பேர் பங்கேற்ற ஆய்வில், தாங்களே சுயமாக ஒரு பணியைச் செய்யும்போது பங்கேற்பாளர்களின் நேர்மை 95% ஆக இருந்ததாகவும், அதே பணியை AI உதவியுடன் செய்யும்போது நேர்மை 75% ஆகக் குறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், AI மீது அதிகம் சார்ந்திருக்கும் சூழலில் பொய் பேசும் பழக்கம் கூடும் என்பதையும், ஒழுக்கப்பாட்டில் (integrity) குறைபாடு தோன்றும் அபாயமும் அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் ஏற்படக்கூடிய நேர்மைச் சவால்கள் மற்றும் ஒழுக்கக் குறைபாடுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதோடு, AI-ஐ பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவும், தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்படவும் வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448416
  11. கருணாநிதி.... நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்த ராஜாத்தியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தும் போது, ராஜாத்தி... (மேலே படத்தில் உள்ள) செந்தாமரை என்பவரின் மனைவி. ராஜாத்தி தனது கையை விட்டுப் போனதை.... தாங்க முடியாமல் மீண்டும் இணைந்து வாழ செந்தாமரை எவ்வளவோ முயற்சித்தும்.... கருணாநிதி தனது ரவுடியிச செல்வாக்கை வைத்து... ராஜாத்தியை நிரந்தரமாக தனதாக்கிக் கொண்டார். ராஜாத்தியின் மகள் தான்... கனிமொழி. கோசான்..... நாங்கள் எல்லாம், கருணாநிதியின் வாழ்க்கை சரித்திரத்தை கரைத்து குடித்து விட்டுத்தான்... யாழ்.களத்திலேயே இணைந்தனாங்கள். இராஜாத்தி... இன்னொருத்தரின் மனைவி அல்ல என்று கருணாநிதிக்கு வெள்ளை அடிக்கிற கதை, கம்பி கட்டுற கதை போன்ற பொய் செய்தி எல்லாத்தையும் @Kandiah57 அண்ணை போன்ற ஆட்களுக்கு சொன்னால் அவர்கள் நம்பலாம். ஆனால் எங்களிடம் உங்கள் பருப்பு வேகவே, வேகாது. 😂 செந்தாமரை... பின்னாளில், தமிழ் திரையுலகத்தில் பிரபலமாக பேசப் பட்ட குணசித்திர நடிகர் ஆவார். ஸ்ராலின் அவர்கள்... தனது தந்தை செய்த அருவருப்பான செயலுக்கு பிராயச்சித்தம் செய்யும் விதமாக... தனது மகளுக்கு செந்தாமரை என பெயர் சூட்டியுள்ளார் என்றே கருத இடம் உள்ளது. ஆக.... கருணாநிதியின் குடும்பத்தில்... உதயநிதியின் சகோதரியாக இப்போதும் செந்தாமரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். 🙂
  12. இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு! 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 6.61% வலுவான அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று EDB ஒரு அறிக்கையை வெளியிட்டு கூறுகிறது. 2025 ஆகஸ்ட் மாதம் மாத்திரம் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. இது 2024 ஆகஸ்ட் மாதத்தை விட ஆண்டுக்கு ஆண்டு 2.57% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த செயல்திறன் இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்தப்பட்ட உத்திகளின் செயல்திறனையும் எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1448332
  13. கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக் கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார். அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்பு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் கோரிக்கையின் பேரில் அதற்கு ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும், தமது கைபேசியில், “கொக்கேய்னை ஐ என்ற குறியீட்டு பெயராக பயன்படுத்தியதையும், அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், தன்னிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளையும் பொலிஸார் ஏற்கனவே மீட்டுள்ளதாகவும், தற்போது தன்னிடம் இன்னும் ஒரு துப்பாக்கி மட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1448286
  14. தங்காலை போதைப்பொருள் விவகாரம்; காணி உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு! தங்காலையில் அண்மையில் ஒரு தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான மரண சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, 705 கிலோ கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த போதைப்பொருள்கள் காணப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய ஒரு விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இதேவ‍ேளை, தங்காலை சீனிமோதர பகுதியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மர்மமான முறையில் இறந்த மூன்று பேரின் உடல்களின் பிரேத பரிசோதனையில், அவர்கள் ஹெரோயின் மற்றும் பீர் கலவையை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைகளை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார நடத்தினார். இறந்தவர் ஹெரோயின் மற்றும் பீர் கலவையை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக இதன்போது தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1448304
  15. ரகசா புயலின் கோரத்தாண்டவம்; தாய்வானில் 14 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டின் உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான ரகசா, புதன்கிழமை (24) ஹொங்கொங்கை வலிமையான காற்று மற்றும் பலத்த மழையால் தாக்கியது. அதேநேரத்தில், தயாவானலில் உள்ள ஏரி ஒன்றின் தடுப்பு சுவர் உடைந்ததால் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 124 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரகசா என்ற சூப்பர் சூறாவளி தீவை பலத்த மழையுடன் தாக்கி கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரகசா சூறாவளி திங்கள்கிழமை முதல் தாய்வானை நோக்கி நகர்ந்து தெற்கு சீன கடற்கரையை நோக்கி நகர்கிறது. ரகசா புயல் பலத்த காற்று மற்றும் மழையுடன் நெருங்கி வருவதால், ஹொங்கொங் மற்றும் தெற்கு சீனாவின் சில பகுதிகள் புதன்கிழமை (24) மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தன. இதனால் சீன அதிகாரிகள் குறைந்தது 10 நகரங்களில் பாடசாலைகள் மற்றும் வணிகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் பின்னர் ஹொங்கொங்கிலிருந்து எந்த விமானங்களும் புறப்படவில்லை என்று விமான நிலையத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது. கேத்தே பசிபிக் முன்னதாக அதன் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு ஹொங்கொங், ஆய்வகம் அதன் மிக உயர்ந்த புயல் எச்சரிக்கையான T10 ஐ வெளியிட்டது. புயல் நகரும்போது குறிப்பிடத்தக்க அளவு வீக்கம் மற்றும் புயல் எழுச்சி ஏற்படும் என்றும், சில பகுதிகளில் இயல்பை விட நான்கு முதல் ஐந்து மீட்டர் வரை நீர் மட்டம் உயரக்கூடும் என்றும் எச்சரித்தது. https://athavannews.com/2025/1448326
  16. எனக்கு… 🚰 தண்ணியிலை கண்டம் இருக்கு என்று சிவன் கோயில் சாத்திரியார் சொன்ன படியால், மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் 🛀🏾 🪣ஒரு வாளி தண்ணீரில் குளிப்பேன். 😂
  17. இந்த வருமான வரி சோதனை செய்பவர்களுக்கு… ஸ்ராலின், உதயநிதி, சபரீசன் வீடுகள் ஒன்றும் கண்ணுக்கு தெரியாதோ… 😂
  18. படத்தில்… குளிப்பவரின் கமக்கட்டு முழுக்க ஒரே காடாக பார்க்க அசிங்கமாக இருக்கின்றது. 🤮 அவரை முதலில்… அதுகளை சவரம் செய்து விட்டு, குளிக்கச் சொல்லுங்க, ப்ளீஸ்….. 😂
  19. சட்டம் இப்பதானே… வந்தது. கருணாநிதி கில்லாடி, முந்தி விட்டார். 😎
  20. பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா! கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காரை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இராமநாதன் அர்ச்சுனா இவ்வாறு செயற்பட்டுள்ளார். நேற்றையதினம்(22) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448248

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.