Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. எந்த உணவகம் என்று பெயரை வெளியிட, வீரகேசரி ஏன் பஞ்சிப் படுகின்றது. முஸ்லீம் உணவகம் என்றால்… வீரகேசரி பம்மிக் கொண்டு, விழுங்காமல் நலுங்காமல் செய்தி வெளியிடுவது ஒரு வகை பயபக்தி என நினைக்கின்றேன். 🤔
  2. 🔴 கொழுத்தி எரிக்கப்பட்டது நேபாள பாராளுமன்றம்! சமூக ஊடக தடையை கண்டித்து ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் போராட்டமானது வன்முறையாக வெடித்து தொடர்வதுடன், பிரதமர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதுடன் பாராளுமன்றமும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
  3. சிலருக்கு... புட்டின் என்ன செய்தாலும் பிழை கண்டு பிடிப்பதே முழு நேரத் தொழில். அவர்கள்... கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதில் ஒரு அற்ப திருப்தி. அதுக்கு ஜால்ரா போட பின்னாலை இரண்டு பேர் திரியும் போது.. அவர்களுக்கும் குசி வந்து பினாத்திக் கொண்டு இருப்பது வாடிக்கை. இதுகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல், கடந்து போவதே புத்திசாலித்தனம்.
  4. ஹ... ஹா... ஹா.... ராஜபக்ச கோஷ்டியின் சிவப்பு சால்வைகள் கழட்டப் பட்டு, சிறைச்சாலை சீருடை (Uniform) வழங்கப் பட இருக்கின்றது.
  5. ஹ... ஹா... ஹா.... ராஜபக்ச கோஷ்டியின் சிவப்பு சால்வைகள் கழட்டப் பட்டு, சிறைச்சாலை சீருடை (Uniform) வழங்கப் பட இருக்கின்றது.
  6. பாதாள உலக குழுவுடன் தொடர்பு- வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்! ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குற்றக் கும்பல்களுடன் தொடர்புகளை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற உயர் மட்ட நபர்களின் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் விரைவில் அவையில் அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1446497
  7. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் (ரத்து) தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்! முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை அறிவித்தார். இதன்படி குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார். https://athavannews.com/2025/1446489
  8. இந்த ஆண்டு வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை நடந்த 1,757 வீதி விபத்துகளில் நாடு முழுவதும் மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். வீதி விபத்துகளால் தினமும் சுமார் ஏழு முதல் எட்டு பேர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வாகன சாரதிகள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உட்பட அனைத்து வீதிப் பயனர்களும் போக்குவரத்து சட்டங்களை அவசியம் பின்பற்ற வேண்டும். விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுய ஒழுக்கத்துடன், அவதானத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1446451
  9. சந்தேகத்திற்கிடமான இரசாயனங்கள் குறித்த அறிக்கை இரண்டு நாட்களுக்குள்! நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) தெரிவித்துள்ளது. தொடர்புடைய பொருட்களின் மாதிரிகளை சோதிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் இந்திக வன்னிநாயக்க தெரிவித்தார். இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றக் கும்பலின் உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மீத்தெனிய பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்காலை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நேற்று (08) கந்தானை பகுதியிலும் இதேபோன்ற பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பொருட்களின் மாதிரிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், சோதனை விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் NDDCB தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1446460
  10. போர் முடிந்து 20 வருடமாகி விட்டது. இந்தியா போன்ற செம்மறி நாடுகளால்... விடுதலைப் போராட்டத்தை நசுக்கி, பாதிக்கப் பட்ட அந்தத் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை கொடுக்க முன்வராத கையாலாகாத "பொன்னை" நாடுகள் எல்லாம் இன்னும் ஸ்ரீலங்காவுக்கு உதவி செய்து கொண்டு உலக மேடைகளில் பொய் வேசம் போட்டுக் கொண்டு பிதற்ரித் திரிவது பைத்தியக்காரத்தனமாக உள்ளது.
  11. கே.பி. யை... கைது செய்தவுடன், இலங்கை அரசு தாங்கள் கைது செய்த மாதிரி... மாதக்கணக்கில் பத்திரிகைளில் பீலா விட்டுக் கொண்டு திரிந்தவர்கள். அதை... நம்பின சிங்கள சனமும்... மகிந்தவையும் , கோத்தாவையும்... பாராக்கிரமபாகு மாதிரி தூக்கி கொண்டாடி அடுத்தடுத்து வந்த தேர்தலிகளில் வெல்ல வைக்க அவங்கள் கே.பி.யிடம் இருந்த தமிழ் மக்களின் சொத்துக்களையும் வறுகி எடுத்து... நாட்டை கொள்ளையடித்து விட்டுப் போய் விட்டார்கள். பொய் உடனே பலன் கொடுத்தாலும்... உண்மை ஒரு நாளும் உறங்காது என்பதற்கு மேலே உள்ள சம்பவம் நல்ல உதாரணம். திருட்டு கூட்டங்கள்.
  12. தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை! தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரவுக்கு (Thaksin Shinawatra) அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இது செல்வாக்கு மிக்க அரசியல் வம்சத்திற்கு மற்றொரு அடியாகும். அவர் முன்பு ஒரு மருத்துவமனையில் சிறைத்தண்டனை அனுபவித்ததால், அதன் ஒரு பகுதியை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த உயர்மட்ட வழக்கு, முந்தைய ஊழல் தண்டனையுடன் தொடர்புடையது. 2001 ஆம் ஆண்டு முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தாக்சினும் அவரது குடும்பத்தினரும் தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவரது மகள் பேடோங்டார்ன் முன்பு பிரதமராகப் பணியாற்றினார். ஆனால் கம்போடியாவின் ஹுன் சென்னுடனான கசிந்த தொலைபேசி அழைப்புடன் தொடர்புடைய வழக்கில், அரசியலமைப்பு நீதிமன்றம் நெறிமுறைத் தரங்களை மீறியதாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், 76 வயதான தாக்சினின் அண்மைய வழக்கு அவரது பிரதமர் பதவியுடன் தொடர்புடைய முந்தைய தண்டனையிலிருந்து உருவாகிறது. முன்னாள் பிரதமர் 2006 இல் ஒரு இராணுவ சதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சுயமாக நாடுகடத்தப்பட்டார். 2023 ஆம் ஆண்டு அவர் தாய்லாந்துக்குத் திரும்பியபோது, அவர் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பதவியில் இருந்த காலத்தில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தாக்சின் அரச மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, தாய் மன்னர் அவரது தண்டனையை ஒரு வருடமாக குறைத்தார். ஆனால் இதய பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு அளித்த பின்னர் அவர் விரைவாக பொலிஸ் பொது மருத்துவமனையின் சொகுசுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதால், அவர் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தை மட்டுமே சிறைச்சாலையில் கழித்தார். அவர் ஆறு மாதங்கள் அங்கேயே இருந்தார், பின்னர் பிணை பெற்று போங்கொக்கில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றார். https://athavannews.com/2025/1446479
  13. 19 பேர் உயிரிழப்பு; சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாளம்! 19 பேர் உயிரிழந்த போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நேபாளம் நீக்கியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வலுக்கட்டாயமாக நுழைந்து, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஊழலை எதிர்த்துப் போராடவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். நிலைமையைக் கருத்திற் கொண்டு திங்கள்கிழமை (08) இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், சமூக ஊடகத் தடையை நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந் நாட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தலைநகருக்கு வெளியே உள்ள நகரங்களிலும் நடந்த போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேபாளத்தில் மில்லியன் கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களை நம்பியுள்ளனர். அவர்கள் பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் வணிகத்திற்காக அவற்றை அணுகுகின்றனர். ஆனால், அரசாங்கம் கடந்த வாரம், போலி செய்திகள், வெறுப்புப் பேச்சு மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் சமூக ஊடகங்கள் தொடர்பான தடையை அமுல்படுத்தியது. இதற்கு எதிராக திங்களன்று வீதிகளில் இறங்கிய இளைஞர்கள், அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்துப் போராடுவதாகக் கூறினர். சில போராட்டக்காரர்கள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் சொந்த ஊரான டமாக்கில் உள்ள அவரது வீட்டின் மீதும் கற்களை வீசினர். காத்மாண்டுவில் பொலிஸார் போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி தடியடி பயன்படுத்தியதுடன் இறப்பர் தோட்டாக்களால் சுட்டனர். பிரதமர் கே.பி. சர்மா ஒலி, வன்முறை மற்றும் உயிரிழப்புகளால் “மிகவும் வருத்தமடைந்தேன்” என்று கூறினார். அத்துடன், போராட்டங்களை விசாரிக்க அரசாங்கம் ஒரு குழுவை அமைக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிதி நிவாரணம் வழங்கும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்றும் அவர் உறுதிபடுத்தினார். இதனிடையே, போராட்டங்களின் போது தனது நிர்வாகம் பலத்தைப் பயன்படுத்தியது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தமையினால், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் மாலையில் தனது இராஜினாமாவை வழங்கினார். கடந்த வாரம், நேபாளத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மீறுவதற்காக 26 சமூக ஊடக தளங்களைத் தடை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். சமூக ஊடகங்களைத் தடை செய்யவில்லை, ஆனால் அவற்றை நேபாள சட்டத்தின்படி கொண்டு வர முயற்சிப்பதாக நேபாள அரசாங்கம் வாதிட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446466
  14. இந்த புற்றுநோய் தடுப்பூசியை கண்டு பிடிக்க ஊக்கம் கொடுத்து அதனை வெற்றிகரமாக கண்டு பிடிக்க வைத்தது மட்டுமல்லாது அந்த மருந்தை இலவசமாக கொடுக்க முன் வந்த புட்டின் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். 👏🏻 🤝 👍🏽
  15. 150 வருடம் உயிர் வாழ்வது, பெருங்குடல் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி என்று ரஷ்யா வேறை லெவலில் குதிரைப் பாய்ச்சல் பாய்ந்து முன்னேறிக் கொண்டு இருக்கின்றது. 😂 அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம்… முடியை புடுங்கிக் கொண்டு நிற்கிறார்கள். 🤣
  16. இவன் எல்லாம் பிடிபட்டால்.... பிணை கேட்க ICU ல் படுத்து கிடநது நாடகம் ஆட வெளிக்கிடுவாங்கள்... Ice Production family. 😂 உண்மை உரைகல்
  17. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார். பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது எனவும் தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்ய மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா (Vernika Govortsova) தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது எனவும் மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446390
  18. 83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது! கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆண் சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேக நபர் கணேமுல்லயைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1446379
  19. சிங்கள காடையர்கள்..... இதனையும் மீண்டும் எரிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  20. 5 பில்லியன் டொலர்களை எட்டிய வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்புதல். 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்புதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. 2025 ஆகஸ்ட் மாதம் மொத்த பணம் அனுப்புதல் US$680.8 மில்லியனாக இருந்தது. இது 2024 ஆகஸ்ட்டில் US$577.5 மில்லியனிலிருந்து 19.3% அதிகமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், மொத்த பணம் அனுப்புதல் US$5,116 மில்லியனை எட்டியது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் US$4,288.2 மில்லியனாக இருந்தது. https://athavannews.com/2025/1446366
  21. நியாயப்படி.... 🥑 அவகோடா வாங்கும் போது, நான் தான் உங்களை நினைக்க வேண்டும். நிச்சயமாக பென்னாம் பெரிய அவகோடாவை வாங்கி, உங்களை நினைப்பேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.