Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு ! பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில், தற்போது பிரித்தானியாவும் ஆதரிப்பதாக பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை, பாலஸ்தீன அரசை தாம் ஆதரிப்பதாகவும் , மேலும் இதுபோன்ற நீண்டகால அரசியல் தீர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம் எனவும் ஆனால் இப்போது, இன்று, துன்பத்தைத் தணிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் காசாவில் உள்ள தீவிரமான, நியாயப்படுத்த முடியாத துன்பங்களை நாங்கள் கையாள்கிறோம் எனவும் அதுதான் இன்று நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் அறிவித்டதிருந்த நிலையில் இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். https://athavannews.com/2025/1440747
  2. நாய் வாலை, நிமிர்த்த முடியாது என்று சொல்வார்கள். சிலதுக்கு... கல்லெறி பட்டும் புத்தி வராது. 😂
  3. சம்பந்தன் மாதிரி…. நாத்தம் பிடிச்ச வேலை செய்யக் கூடாது என்றுதான், சென்ற பாராளுமன்றத் தேர்தலில் சுத்துமாத்து சுமந்திரனுக்கு மக்கள் நாமம் போட்டு, வீட்டில் குந்த வைத்திருக்கின்றார்கள். 😂 🤣
  4. தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த எட்டுப் பேரை கைது செய்துள்ளார்களாம். இவங்கள் வெறியில்… மாதா சிலையை உடைத்ததை விட, ஊரில் உள்ள புத்தர் சிலைகளை உடைத்திருக்கலாம். 😂
  5. ஆபிரிக்கர்கள் இலங்கை விசாவுக்கு காசு கட்டித்தான் வரவேண்டும். 😂 அப்படி வந்தாலும்…. 🤣
  6. மாலைதீவு பிரஜைகள் இனி இலங்கையில் ஒரே உள்வருகை விசாவில் 1 வருடம் தங்கலாம்!
  7. தாய்லாந்து - கம்போடியா கலவரம், இதுவரை 40 பேர் வரை இருபுறமும் உயிரிழப்பு, 200க்கும் மேற்பட்டவர்கள் காயம், இலட்சக்கணக்கானவர்கள் இடப்பெயர்வு! ஜூலை 24ம் திகதி அதிகாலை முதல் ஆரம்பித்த தாய்லாந்து, கம்போடியா எல்லைப்பதற்றம் தொடர்ந்து இராணுவ நடவடிக்கையாக மாறி தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்கள் இக்கணம் வரை இடம்பெற்று வருகின்றது. தொடரும் தாக்குதல்கள் காரணமாக, எல்லைப்புறத்தில் வசிக்கும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றதோடு தாய்லாந்து நாட்டில் பணிபுரிந்த முப்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கம்போடியவிற்கு திரும்பி வருகின்றனர். அத்துடன், கம்போடியாவுடனான எல்லைப்பகுதியில் நேற்று மாலையிலிருந்து தாய்லாந்து இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 817 கிலோ மீற்றர் தூரம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்போடியாவின் வடமேற்கு பகுதியின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஆரம்பித்த துப்பாக்கிச்சூடுகள் தற்போது எல்லையின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதோடு, தாய்லாந்தின் F16 விமானங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய டிரோன்கள் கம்போடியாவின் எல்லைப்புற கிராமங்களின் முக்கியமான பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆசியான் (ASEAN) அமைப்பின் ஒத்துழைப்போடு உலக நாடுகளினால் இரு நாடுகளுக்கும் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் தாய்லாந்து ஆரம்பக்கட்ட சமாதான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராக இல்லை என அறிவித்துள்ளது. இந்த நிலையில், பதற்ற நிலையை தணித்து சமாதான பேச்சுவார்த்தையை கொண்டுவர கம்போடியா ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்தை நாடி நிற்கிறது. இருப்பினும் இது தொடர்பான இறுதி முடிவுகள் இன்னுமே எட்டப்படாமையால் தொடர்ந்து இரு நாடுகளிலும் பதற்றமான போர் சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
  8. பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான சர்வதேச மாநாடு! பௌத்த மதம் சார்ந்த மறு அவதாரம் பற்றிய புதிய பார்வை மற்றும் பரிசீலனையை முன்வைக்கும் சர்வதேச புலமை மாநாடு “பௌத்த மதத்தின் மறு அவதாரம் பற்றிய புலமைச் சிந்தனையின் மறு பரிசீலனை” என்ற தலைப்பின் கீழ், 2025 ஜூலை 26ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கலனி பல்கலைக்கழகத்தின் பட்ட பின் படிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்த புலமை மாநாடு, பௌத்த சகோதரத்துவ அறக்கட்டளை, சர்வதேச பௌத்த சம்மேளனம் மற்றும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களால் இணைந்து நடாத்தப்படும். பௌத்த மதத்தில் உள்ள முக்கிய இரு பிரிவுகளான பாலி மற்றும் சமஸ்கிருத சம்பிரதாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மறு அவதாரக் கொள்கையை அறிவியல் மற்றும் புலமை அடிப்படையில் ஆராய்வது இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும். மாநாட்டின் பிரதான உரையை, சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான வணக்கத்திற்குரிய ஷர்த்சே கென்சூர் ஜன்சுப் சோதன் ரின்பொசே அவர்கள் நிகழ்த்தவுள்ளனர். இம்மாநாட்டில் புத்த சாசன அமைச்சரான கௌரவ கினிதும சுனில் செனெவி அவர்கள் முக்கிய அதிதியாக கலந்து கொள்வதுடன், இந்தியா, பூதான், அமெரிக்கா, ஜப்பான், நேபாளம், மியான்மார், தைவான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பௌத்த பிக்குகள் மற்றும் புலமை வல்லுநர்களும் இதில் பங்கேற்று உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440653
  9. சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (26) திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தும் நோக்கில், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை தழுவிய வகையில் ஒரே நேரத்தில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்காக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்களை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. உள்நாட்டு பொறிமுறைகள் பயனளிக்காததால், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் மூலம் மட்டுமே நீதி கிடைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர். https://athavannews.com/2025/1440698
  10. இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்! இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1440703
  11. செம்மணி மனித புதைகுழி: இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 5 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 மனித எலும்புக் கூடுகள் இன்று அடையாளங் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தமாக 90 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக 81 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440675
  12. AI மூலம் வங்கிப் பாதுகாப்பு முறியடிக்கப்படும் அபாயம்! தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை AI தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது . இந்நிலையில்” இனி வரும் காலங்களில் (AI) தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என Chat GPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாம் ஆல்ட்மன்( Sam Altman) ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். அத்துடன் அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, இத்தகைய தவறாக செயல்களை கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440629
  13. சம்பந்தனின் இழப்பு.... சிங்களவருக்கு, ஈடுசெய்ய முடியாதது. 😂 சம்பந்தன் அரசியல் தலைவரல்ல, பக்கா.... அரசியல்வியாதி. தமிழரின் தீர்வை இழுத்தடித்து, நல்லாட்சி அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுத்து, ஒன்றுமே இல்லாமல் செய்த ஆளுமை அற்ற தன்னலவாதி. மக்கள் தன்னெழுச்சியாக ஒரு தலைவனுக்கு நினைவு தினம் கொண்டாடுவதற்கும், பாராளுமன்றத்தில் பத்தோடு பதினொன்றாக அஞ்சலி செலுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்கு கருத்து எழுதும் அரசியல் ஞான சூனியங்கள் உள்ளதை நினைக்க, இந்த நோய்க்கு... வைத்தியமே இல்லை என்று, கடந்து போக வேண்டியதுதான். 🤣 முதலில் ஸ்ரீதரன்... தமிழரசு கட்சி அலுவலகத்தில் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தட்டும். அதுக்கு வக்கு இல்லை. பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்துகிறாராம். மற்ற ஈர வெங்காயத்தை பிறகு பாப்பம். 😂
  14. தமிழன் உயிர் என்றால்… எங்கும் வைத்து அடித்துக் கொல்லலாம் என்ற நிலைதான் உள்ளது. 😡
  15. குடும்பச் சண்டைக்கு எல்லாம் விளக்கமறியலில் வைத்தா விசாரிப்பார்கள். கிளிநொச்சி காவல் நிலையத்தில்…. அதுகும் மதியம் 12 மணிக்கு நடந்த கொலையை, கிளிநொச்சி பொலிசாருக்கு விசாரிக்க தகுதி இருக்கா? அப்படி விசாரித்தாலும் அவர்களிடம் இருந்து உண்மை வெளிவந்து விடுமா?
  16. இந்தியர்கள் அதிகம் செலவு செய்யாவிட்டாலும் சுற்றுலா செய்வதில் விருப்பம் உடையவர்கள். ஆனால்…. பாகிஸ்தான்காரர் சுத்துமாத்து வியாபார புத்தி உடையவர்கள். என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
  17. தமிழ்நாட்டின்... திருநெல்வேலி அல்வா, கீழக்கரை அல்வா, இருட்டுக்கடை அல்வா எல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஸ்ரீலங்கா தொதல், மஸ்கற்ருடன் போட்டி போட முடியாது. உலகப்புகழ் பெற்றது என்றால் ஸ்ரீலங்கா தொதல்தான். 😋
  18. இங்கிலாந்து, ஜேர்மனி, ஒல்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, இத்தாலி, சுவிஸ், சுவீடன், பின்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற தமிழ் மக்கள் அதிகம் வசிக்கின்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் செய்திருப்பது பணத்தையும், நேரத்தையும் சேமிக்கக் கூடியதாக இருக்கும். இந்த இலவச விசா வழங்கும் திட்டம் ஒரு மாதத்திற்கு மட்டுமா, அல்லது அதற்கு மேலுமா என்ற தகவல் கிடைத்தால் அறியத்தரவும். இனி என்ன ... அடுத்த ஹொலிடேக்கு, பெட்டியை கட்ட வேண்டியதுதான். 😂 தகவலுக்கு நன்றி ஏராளன்.
  19. எனக்குத்தான் இந்தப் பிரச்சினை இருக்கு என்று பயந்து கொண்டு இருந்தேன். இப்போ நீங்களும் இணைந்து கொண்டதில் சந்தோசம். 😜
  20. தடுப்புக் காவலில்... தூக்குப் போடும் அளவிற்கு எல்லாம் பொருட்கள் இருக்குமா. பொலிஸார்... அந்தத் தமிழ் கைதியை அடித்துக் கொன்று விட்டு, நாடகம் போடுகின்றார்கள் போலுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.