Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா. ரஷ்யா -இந்தியா – சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால்,அமெரிக்காவை சமாளிக்க, ரஷ்யாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து இந்தியாவுடனும் நட்பு பாராட்டுவதற்கான தருணத்தை சீனா எதிர்பார்த்துள்ளது. அதற்கேற்ப கடந்த 2002ல் நிறுவப்பட்ட ஆர்.ஐ.சி., எனப்படும் ரஷ்யா- இந்தியா- சீனா முத்தரப்பு மன்றத்திற்கு புத்துயிர் அளிக்க, ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இந்த முத்தரப்பு மன்றம் தான் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் ‘பிரிக்ஸ்’ அமைப்புக்கு அடித்தளம் அமைத்தது. கடைசியாக, கடந்த 2017 டிசம்பரில் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் 15வது முத்தரப்பு சந்திப்பு நடந்தது. மூன்று நாடுகளும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அடையாளம் காணவும் ஆர்.ஐ.சி.இ வழிவகுத்தது. ஆனால் 2019ல் வந்த கொரோனா, லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் மோதல் மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு ஆகிய பிரச்னைகளால், இந்திய – சீன உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்இ சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து, முடங்கியிருந்த மூன்று நாடுகளின் ஆர்.ஐ.சி., முத்தரப்பு உறவுக்கு புத்துயிர் அளிப்பதற்கான பேச்சுகள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை எதிர்ப்பதற்கு இந்தியா, ரஷ்யாவின் உதவி தேவை என்பதால், முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முயற்சிக்கு சீனாவும் தற்போது முழு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439632
  2. 5.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விலை போன `விண்வீழ்கல்‘ செவ்வாய்க் கோளைச் சேர்ந்த 24.5 கிலோகிராம் எடையுடைய அரிய விண்வீழ்கலொன்று 5.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு Sotheby’s நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்துள்ளது எனவும், அதில் நிகழ்நிலை மூலமாக பலர் பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘NWA 16788’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்வீழ்கல்லானது 2023ஆம் ஆண்டு சஹாரா பாலைவனத்தில் உள்ள நைஜர் நாட்டின் அகாடெஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் குறித்த விண்வீழ் செவ்வாய்க் கோளிலிருந்து பிரிந்த மிகப்பெரிய துண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து Sotheby’s நிறுவனத்தின் துணைத்தலைவர் கெசேண்ட்ரா ஹெட்டன் கருத்துத் தெரிவிக்கையில் ” இந்த அரிய விண்வீழ்கல் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது எனவும், அது பெருங்கடலுக்குப் பதிலாக பாலைவனத்தில் விழுந்தது மிகப் பெரிய அதிசயம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439682
  3. பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்! பிரித்தானியாவில் 2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி ஜூலை 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, வாக்களிக்கும் வயது குறைக்கப்படும் என உறுதியளித்தது. இந்நிலையில், வாக்களிப்பதற்கான வயது வரம்பை 16 ஆக குறைத்து நாடு முழுதும் அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் 16 வயது பூர்த்தியடைபவர்களின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsபிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்!பிரித்தானியாவில் 2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் பிரத...
  4. இலங்கையர்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை! ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, மாநியங்கள் அல்லது உதவிகளை வழங்குவதாக கூறி, தனி நபர்களிடமிருந்து பண மோசடி செய்யும் நபர் தொடர்பில் இலங்கை மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள உத்தியோப்பூர்வ அறிவிப்பில், சம்பந்தப்பட்ட நபர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, குறிப்பாக இளம் தொழில்முனைவோருக்கு மானியங்கள் அல்லது நிதி வழங்குவதாகக் கூறுவது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த நபர் பொய்யான வாக்குறுதிகளின் பேரில் தனிநபர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் காணாமல் போவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு மோசடி என்பதை நினைவில் கொள்ளவும்! அனைத்து ஐரோப்பிய ஒன்றிய மானியங்களும் ஒப்பந்தங்களும் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தேர்வு செயல்முறைகளைப் பின்பற்றி மாத்திரமே வழங்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத் தேர்வு மற்றும் விருது நடைமுறைகள் முகவர்கள் போன்ற மூன்றாம் தரப்பினரின் சேவைகளை நிதியுதவியை எளிதாக்க ஒருபோதும் அனுமதிக்காது. மேலும், சமர்ப்பிக்கப்பட்ட மானிய முன்மொழிவுகள் அல்லது கொள்முதல் டெண்டர்களைச் செயல்படுத்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து எந்தப் பணத்தையும் ஒருபோதும் கோராது. இதுபோன்ற மோசடிச் செயல்பாட்டை நீங்கள் சந்தித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2025/1439610
  5. தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்? தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகே மேலுமொரு சட்ட விரோதக் கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலேயே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று விகாரை வளாகத்திற்குள் சென்று பார்வையிட்டதாகவும், அங்கு கட்டடம் ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விகாரை வளாகத்தினுள் புதிய கட்டடம் அமைப்பதற்கு விகாரதிபதியினால் சபையில் அனுமதி கோரப்படாத நிலையில், புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் அங்கு சென்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், புதிய கட்டடங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா ? என்பது தொடர்பில் விகாரதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார். https://athavannews.com/2025/1439624
  6. கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சிறுவன்! கொழும்பு, கஹதுடுவ பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன், இரத்தினபுரியில் வைத்து வாகனத்திலிருந்து குதித்து தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, கெடன்தொல, புதிய பெலன்வாடிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில், கடத்தப்பட்ட சிறுவன் ஒருவன் இருப்பதாக 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கு ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரத்தினபுரி பொலிஸின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிலியந்தலையில் உள்ள தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன், பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கஹத்துடுவ மயானத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த குழுவினரால் சைக்கிளுடன் கடத்தப்பட்டதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந் நிலையில், சிறுவனை கடத்திய குழுவை அடையாளம் காண பொலிஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2025/1439607
  7. தாதியர்களின் ஒய்வு வயது விவகாரம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று (17) ரத்து செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு சட்டத்திற்கு முரணானது என்றும், அது செல்லாதது என்றும் கூறி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439594
  8. ட்ரம்பின் உடல் நிலை குறித்த வெள்ளை மாளிகையின் அறிவிப்பு! அமெரிக்க ஜனாதிபதி ‍டெனால்ட் ட்ரம்புக்கு நாள்பட்ட சிரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளது. ட்ரம்பின் கைகளில் ஏற்பட்ட காயம் குறித்த ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அண்மையில் அவரது கால்களில் வீக்கம் ஏற்பட்ட பின்னர் ட்ரம்ப், விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். எனினும், பரிசோதனை எப்போது நடந்தது என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. இந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 79 வயதான அமெரிக்க ஜனாதிபதி, தனது உடல் நல ஆரோக்கியம் தொடர்பில் அடிக்கடி புகழ்ந்து வருகிறார். அதில் ஒன்றாக அவர், தன்னை “இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் ஆரோக்கியமான ஜனாதிபதி” என்றும் விவரித்துள்ளார். நாள்பட்ட சிரை நோய் என்பது கால்களில் உள்ள நரம்புகளில் ஏற்படும் ஒரு நிலை, இதில் நரம்புகள் வீங்கி, முறுக்கியும், விரிவாக்கப்பட்டும் காணப்படும். இது சிரை அடைப்பான் பலவீனமாக இருப்பதன் காரணமாக இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதால் ஏற்படுகிறது. இதன் விளைவாக கால்களில் வலி, வீக்கம், மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந் நிலைமை உலகளவில் 20 இல் ஒருவரை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1439616
  9. மாணவிக்கும், மாணவனுக்கும் உள்ள வித்தியாசம். 😂
  10. செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் தோண்டப்படல் வேண்டும் - நாம் தமிழர் சமூகசேவை ஒன்றியம். யாழ்ப்பாணம் செம்மணி படுகொலை தொடர்பில் அரசின் கவனம் திரும்பியிருக்கின்றது. தோண்ட தோண்ட வெளிவரும் பச்சிளம் பாலகர்களின் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளும், அதிகமான உடல்கள் இருப்பதாகவும், புதைக்கப்பட்டிருப்பதாகவும், தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வடமாகணத்திலே தமிழர்களின் ஆதரவைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறிப்பாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அரசாங்கம் இருக்கின்றது. இந்த நிலையில் செம்மணி புதைகுழி விடயம் கவனம் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது இது வரவேற்கத்தக்கது இதற்கு நிச்சயமாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவற்றைப்போல் கிழக்கிலும் இன்றும் கண்டுகொள்ளப்படாத படுகொலைகள், தோண்டப்பட வேண்டிய பல புதைகுழிகள் உள்ளன. அவற்றுக்கு நீதியை வேண்டித்தான் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துகின்றோம். என நாம் தமிழர சமூக சேவை ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கோபாலன் பிரசாத் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (16.07.2025) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. குறிப்பாக 1990, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் ஜிகாத் எனும் அமைப்பினால் பல படுகொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த செய்தியை சர்வதேசத்திற்கும் தேசிய அரசாங்கத்திற்கும் சர்வதேச அரங்கிக்கிற்கும், கொண்டு வருவதற்காகவே நாம் இந்த ஊடக சந்திப்பை செய்கின்றோம். குறிப்பாக 20.06.1990 ஆம் ஆண்டு வீரமுனை பிள்ளையார் கோயில் படுகொலை இதன் போது 60 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள் அதேபோன்று 05.07.1990 ஆம் ஆண்டு வீரமுனையில் 13 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் 10.07.1990 ஆம் ஆண்டு வீரமுணையில் 15 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். 16.07.1990 ஆம் ஆண்டு மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினருமாக 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். அதேபோன்று 26.07.1990ஆம் ஆண்டு வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லிம் ஊர்கால் படையினரால் மிகவும் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டு காணாமல் செய்து படுகொலை செய்து இருக்கின்றார்கள். 29.07.1990 ஆம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினருடன் வெளியேறிக் கொண்டிருந்தபொழுது கடத்திச் செல்லப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார். 01.08.1990 ஆம் ஆண்டு சவளக்கடையில் 18 பேர் கைது செய்யப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று 12.08.1990 ஆம் ஆண்டு வீரமுரையில் அகதி முகாமில் புகுந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதோடு, அதில் ஆலய தர்மாகத்தா உட்பட குறிப்பாக தம்பி முத்து சின்னத்துரை உட்பட 14 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதில் பலர் காயமடைந்து இருக்கிறார்கள். வீரமுனையிலே 600; வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைதீவு, வளத்தாப்பிட்டி, கணபதிபுரம், மல்வத்தை, ஆகிய கிராமங்களில் இருந்து 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லிம்களால் முற்றாக தீக்கிரியாக்கப்பட்டிருக்கின்றன. 20.06.1990 ஆம் ஆண்டிற்கும் 15.08.1990 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வீரமுனையில் மாத்திரம் 232 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 1600 க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. அயல் கிராமங்களான சம்மாந்துறை முஸ்லிம்கள் சிங்கள இராணுவத்தினரின் உதவியுடன் தமிழர்களை படுகொலை செய்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் மிகவும் மோசமான தாக்குதலுக்கு உள்ளான கிராமங்களான வாழைச்சேனை, செங்கலடி, ஆரையம்பதி நீலாவணை பாண்டிருப்பு போன்ற பல கிராமங்கள் காணப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த முஸ்லிம் ஜிகாத் அமைப்பினரின் தாக்குதல்களால் பல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இதற்கு நிச்சயமாக இந்த அரசாங்கத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். கொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும். கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும். பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் முஸ்லிம்களால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு தற்போதுவரையில் சிதைவிக்குள்ளான கிராமங்களாக பாலமுனை, பாணமை, மீனோடக்கட்டு, ஒலுவில் நிந்தவூர், சம்மாந்துறை, கரவாகு, தீகபாவி, மாந்தோட்டம், கொண்டவட்டுவான், ஊரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், போன்ற பவகிராமங்கள் இருக்கின்றன. குறிப்பாக தமிழர்கள் பூர்விகமாகக் கொண்ட கிராமங்கள் இன்று முஸ்லிம் காடையர்களால் துடைத்தழிக்கப்பட்டு அந்த தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறி இருக்கின்றன. இந்த சூழலில்தான் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழ் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளைக்கடை, வீரச்சோலை, போன்ற கிராமங்கள் உள்ளன. கூறலாம். இவை அனைத்து படுகொலைகளையும் ஊர்காவல்படை என்ற பெயரில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஜிகாத் முஸ்லிம் ஆயுத குழுக்களே இந்த படுகொலைகளை நடத்தி இருந்தார்கள். அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். புதைகுழிகள் தோண்டப்பட வேண்டும். முஸ்லிம் புதை புலிகள் தோண்டப்படுவதற்கும் மக்களின் வாக்குமூலங்களை செய்கின்ற அதே வேளை முஸ்லிம் ஜிகாத் குழு என்று சொல்லப்படுகின்ற இந்த அமைப்பினர் அந்த அமைப்பின் பெயரில் இயங்கிய முஸ்லிம் காடையர்களையும் தேடி கண்டுபிடித்து இந்த அரசாங்கம் அவர்களை விசாரணை செய்வதோடு, அவர்களை தண்டிப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் ஊர்காவல்படை என்ற பெயரில் அரசாங்கத்தில் சம்பள பட்டியலில் இருந்தவர்கள் இன்றும் அந்தந்த கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் எங்கும் தப்பியோட முடியாது அவர்கள் விசாரித்து பொறுப்பானவர்களும் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், கோடீஸ்வரன், சிறிநேசன் சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்தில் நிச்சயமாக பேசவேண்டும். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சட்டத்தரணிகள் சங்கமும் பொது அமைப்புகளும் இதற்கு ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நீதியை நிலை நாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அது மாத்திரமன்றி ஜிகாத் அமைப்பினரின் பின்னணியில் உடைக்கப்பட்ட ஓட்டமாவடி காளி கோயிலுக்கு நீதி நிச்சயமாக வழங்கப்பட வேண்டும். நானே அந்தக் காளி கோயிலை உடைத்தேன் அதற்கு எதிராக இருந்த நீதிபதியை மாற்றினேன் அது மாத்திரமன்றி காளி கோயிலை உடைத்து மீன் சந்தையை கட்டி அதுவும் காளி கோயில் அமைந்திருந்த கருவறையில் மூலஸ்தானத்தில் மாட்டு இறைச்சிக் கடையை போட்டு இருக்கின்றேன், என முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார். எனவே இதனை இந்த அரசாங்கமும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களும் விசாரணை செய்ய வேண்டும். எனவே தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் பின்னணியில் உடைக்கப்பட்ட எங்களுடைய காளி கோயிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும். அவர் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் அவர் நீதித்துறை இவ்வாறு பயன்படுத்தி இருக்கின்றார், அவர் மாவட்ட அபிவித்துக் குழு தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி செய்திருக்கின்றார், இதற்கு நிச்சயமாக நீதி வழங்கப்பட வேண்டும். நிச்சயமாக இந்த அரசாங்க நீதி வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. எனினும் செம்மொழி புதைகுழி தோண்டப்படுகின்றது ஆங்காங்கே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணைகள் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் இந்த ஜிகாத் அமைப்பின் பேரில் தமிழ் மக்களை கொன்றளித்த இந்த முஸ்லிம் காடையர்களை நிச்சயம் விசாரிக்கப்பட்டு அவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ்கின்றார்கள். அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். என்பதே எமது கோரிக்கை இந்த காளி கோயில் விடயத்திலும் எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்திலே பேச வேண்டும். அந்த காளி கோயிலை உரிய இடத்தில் அமைப்பதற்கு நிச்சயமாக பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கை. அது மாத்திரமன்றி இது தொடர்பில் ஒரு பொது நல வழக்கு ஒன்றை சிவில் அமைப்புகள் தமிழ் உணர்வாளர்கள் தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனது என்பது எனது பணிவான வேண்டுகோள். இதற்கு யாரும் முன்வராத பட்சத்தில் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினராகிய ஆகிய நாம் இதற்காக பொதுநல வழக்கொன்றை நிச்சயமாக நாங்கள் வழக்கு தாக்கல் செய்து நீதியை நிலைநாட்டுவதற்கு நாங்கள் இந்த அரசாங்கத்திடம் முனைவோம். என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220180
  11. செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் தோண்டப்படல் வேண்டும் - நாம் தமிழர் சமூகசேவை ஒன்றியம்.
  12. கொழும்பில் நடக்கும் இப்படியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்... மனோ கணேசனைத் தவிர, வடக்கு, கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் வசிக்கும் சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஏதாவது விசேட காரணங்கள் இருக்குமோ.
  13. வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த இளம்பெண். ஷார்ஜாவில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால், கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தனது ஒன்றரை வயது மகளை கொலை செய்து விட்டு, தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 78 நாட்களில் ரிதன்யா என்ற இளம்பெண், கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் கேரள பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. திருமணமான உடன் கணவரை நம்பி வெளிநாடு நாடு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபன்சிகா மணியன். 32 வயதான இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நிதிஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. விபின்சிகாவுக்கு தந்தை இல்லாதபோதும் அவரின் தாயார், தனது சக்திக்கு மீறி வரதட்சணையாக நகைகள் மற்றும் பணம் கொடுத்து மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்தி வைத்துள்ளார். நிதிஷ் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன், அவரின் தந்தை மற்றும் தங்கை நீத்து பென்னியும் உடன் இருந்துள்ளனர். திருமணமான சில நாட்களில் மனைவி விபன்சிகாவையும், ஷார்ஜாவுக்கு நிதின் அழைத்துச் சென்றுள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மைக் காலமாக தம்பதிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விபன்சிகா தனது மகளை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விபன்சிகாவின் தாயார் ஷியாமளா, கொல்லத்தில் உள்ள குந்தாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்இ தனது மகளிடம் வரதட்சணை கேட்டு, அவரின் கணவர் நிதிஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக விபன்சிகா அழகாய் இருப்பது கணவர் குடும்பத்தினரின் கண்களை உறுத்தியுள்ளது. தாங்கள் கறுப்பாக இருக்கையில் நீ மட்டும் எப்படி வெள்ளையாய் இருக்கலாம் என அடித்து உடலில் காயப்படுத்தியுள்ளனர். கொடூரத்தின் உச்சமாக விபன்சிகாவின் தலைமுடியை வெட்டியதுடன், மொட்டையும் அடித்து விட்டுள்ளனர். இதையடுத்து, தனக்கு நேர்ந்த சித்ரவதைகளை சகித்துக் கொண்ட இளம்பெண், கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததும் கொதித்தெழுந்துள்ளார். அதுகுறித்து, கேள்வி கேட்டதற்காக கணவர் நிதிஷ் விவாகரத்து நோட்டீஸ் வழங்கியதாகவும் விபன்சிகாவின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கணவர் நிதிஷ் மற்றும் அவரின் தங்கை நீத்து பென்னி, தந்தை மீது குந்தாரா பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, தற்கொலை முடிவுக்கு கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரே காரணம் என விபன்சிகா தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன், அவர் கைப்பட எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், தனது கணவர் மட்டும் இன்றி அவரின் தந்தையும் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். அதுகுறித்து கணவரிடம் புகார் கூறியதற்கு,அவர் ”உன்னை தனக்கு மட்டும் இன்றி, தனது தந்தைக்காகவுமே திருமணம் செய்ததாகக் கூறி கதிகலங்க வைத்துள்ளார். மேலும் ஆபாச படங்களை பார்த்து, தன்னை பாலியல் ரீதியாகவும் கணவர் கொடுமைப் படுத்தியதாகவும் அப்பாவிப் பெண் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் தன்னை ஒரு நாயைப் போன்று நடத்தியதால், வேறு வழியின்றி விபரீத முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக விபன்சிகா தெரிவித்துள்ளார். தன்னை இந்த நிலைக்கு தள்ளிய கணவன் மற்றும் அவரின் தங்கை, தந்தையை விட்டுவிடாதீர்கள் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த மூன்று பேரையும் கேரளாவுக்கு வரவழைத்து விசாரணை நடந்த பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். https://athavannews.com/2025/1439580
  14. யாழ்ப்பாணத்து பனை வேலி அடைப்பு.
  15. செம்மணி புதைக்குழி, அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை!-மனோ கணேசன். “செம்மணி புதைக்குழி விவகாரம் அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை ஆகும்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவினை தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது” ” இன்று, இலங்கையர் அரசு என கூறி, ஆட்சிக்கு வந்திருக்கும் அநுர அரசுக்கு அக்னி பரீட்சை. இதை கடந்து தம்மை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்த நாட்டின் தலைவருக்கு இருக்கிறது. இது மட்டுமல்ல, தெற்கிலும் பல புதை குழிகள் இருப்பதாக ஆதாரங்கள் ஆங்காங்கே வெளிபட்டுள்ளன. அவற்றையும் ஆய்வு செய்து நீதியை நிலை நாட்டுங்கள். எங்களது நல்லாட்சியில் பல்வேறு காரியங்களை நாமும், வடகிழக்கு தமிழ் கட்சிகளும் நிர்ப்பந்தம் செய்து ஆரம்பித்தோம். ஐநா சபைக்கு கொண்டு போனோம். தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அரசியல் கைதிகளை கணிசமாக விடுவித்தோம். காணிகள் கணிசமாக விடுவித்தோம். காணாமல் போனோர் அலுவலகம், நஷ்ட ஈட்டு அலுவலகம், ஆகியவற்றை அமைத்தோம். யுத்த அவலத்துக்கு மூல காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கு “அதிகாரபகிர்வு” தீர்வை தேடி, புதிய அரசியலமைப்பு பணியை செய்தோம். அனைத்தையும் நான்கு ஆண்டுகளில் செய்து முடிக்க முடியவில்லை. முடியாது. ஆனால் நாம் நல்ல ஆரம்பத்தை தந்தோம். நாம் ஆரம்பித்த இந்த பணிகளை அப்படியே முன்னே கொண்டு செல்ல வேண்டியதே இந்த அரசின் கடமை. முதலிப் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளை அங்கே அனுப்புங்கள். அதை செய்யுங்கள் என நான் அநுர குமார திசாநாயக்கவை நான் கோருகிறேன்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439581
  16. யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று! யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில், இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் பங்கேற்புடன் இன்றைய தினம் (17) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே குறித்த கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபவானந்தராசா , ஜெய்சந்திரமூர்த்தி ரஜீவன், க. இளங்குமரன் , சிவஞானம் சிறிதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அருச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. https://athavannews.com/2025/1439557
  17. செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்! செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர். https://athavannews.com/2025/1439568

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.