Everything posted by தமிழ் சிறி
-
ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் வெளியேற ஆர்வம் உள்ளவர்கள் வணிக விமானங்கள் மற்றும் படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வெளியேறலாம் எனவும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1439405
-
கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை
கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை. சிறிய ரக விமானமொன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கனடாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வென்கூவர் தீவிலுள்ள விக்டோரியா பகுதியில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய செஸ்னா வகை விமானமொன்று, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கனடாவின் ராயல் மவுண்டட் பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் தகவல் வழங்கப்பட்டது. விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பறந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் சந்தேக நபர் ஒருவர் மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் பிற்பகல் 1.45 மணியளவில் குறித்த விமானம் வென்கூவரில் தரையிறங்கியதும், அதிலிருந்த ஒரே பயணியாகக் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அரசாங்க ஊடகமான CBC வெளியிட்ட புகைப்படங்களில், தரையிறங்கிய செஸ்னா விமானத்தை பாதுகாப்பு வாகனங்கள் முற்றுகையிட்டதைக் காணலாம். குறித்த விமானம் விக்டோரியாவில் உள்ள ஒரு விமான மன்றத்தின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தால், வென்கூவர் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், 9 உள்நாட்டு விமானங்கள் மாற்றுத் திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் கடத்தல் சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1439372
-
அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு.
இவர் ஏற்கெனவே இராணுவத்தில் இருந்து விலகி, பிக்குவாகவும் சில காலம் இருந்தவர் என்ற படியால்..... இவருக்கு மடகாஸ்கர் தண்டனைகளை கொடுக்க மாட்டார்கள். மாறாக பதவி பதவி உயர்வு கொடுத்து அழகு பார்ப்பார்கள்.
-
கருத்து படங்கள்
- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூடு தொடர்பில் முக்கியத் தகவல்! செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதி 4 – 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. கடந்த வழக்கு தவணையில் போது, செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் தொடர்பிலான அறிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரி, மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இருவரும் தமது அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்து, தமது அவதானிப்புக்கள் தொடர்பிலும் மன்றில் கூறினார். அதன் போதே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார். நீல நிறப் புத்தகப்பை, பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட என்புத்தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 – 5 வயதுடையதாக இருக்கும். அத்துடன் எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் காணப்படுகிறது என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். அதனை அடுத்து, புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்று கட்டளையிட்டது. செம்மணியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன. மேலும் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை. எனவே இது சம்பந்தமான மேலதிக மான ஆய்வுகள் தேவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றில் தெரிவித்து தனது அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார். செம்மணிக்கு தன்னை அனுமதிக்குமாறு சிறிதரன் கோரிக்கை இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணி ஊடக நீதிமன்றில் கோரிக்கை முன் வைத்துள்ளார். சட்டத்தரணி ஒருவருடன் அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல அனுமதிப்பது தொடர்பில் மன்று பரிசீலிப்பதாக தெரிவித்தது. 21ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வு பணிகள் அதேவேளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இது வரை காலமும் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439350- 35 கிலோ கிராம் தங்கத்துடன் ஒருவர் கைது!
35 கிலோ கிராம் தங்கத்துடன் ஒருவர் கைது! சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது 01.1 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் கிரேண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும் 13 கிலோகிராம் தங்க நகைகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1439346- ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
ஜூலை முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் வருகை! இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அண்மைய தரவுகளின்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,247,815 ஐத் தாண்டியுள்ளது. முதல் 13 நாட்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இதில் 16,329 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இது 20.5 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்தும், அவுஸ்திரேலியாவில் இருந்தும் அதிகளவானோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு, இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 258,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். https://athavannews.com/2025/1439324- அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு.
அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.சி. தயானந்த, பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட சந்தேகநபர் வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார். அத்துடன் சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார். சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ சிப்பாயை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவானால் இதற்கு முன்னர் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த பொலிஸார் இந்த குற்றம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர். கல்னேவா புதிய நகரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கே.பி. மதுரங்க ரத்நாயக்க, முன்னர் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் அவரை அடையாளம் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439344- உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு!
ட்ரம்பின் அச்சுறுத்தலால் கலங்காத புட்டின் மேலும் போராடுவார் – ரஷ்ய வட்டாரங்கள் தகவல்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான தடைகள் குறித்த அச்சுறுத்தல்களால் கலங்காத மேற்குலகம், தனது அமைதிக்கான நிபந்தனைகளில் ஈடுபடும் வரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் தொடர்ந்து போராட திட்டமிட்டுள்ளார். மேலும், ரஷ்யப் படைகள் முன்னேறும்போது அவரது பிராந்திய கோரிக்கைகள் விரிவடையக்கூடும் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமான மூன்று வட்டாரங்கள் தெரிவித்தன. 2022 பெப்ரவரியில் உக்ரேனுக்குள் ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்ட புட்டின், ரஷ்யாவின் பொருளாதாரமும் அதன் இராணுவமும் எந்தவொரு கூடுதல் மேற்கத்திய நடவடிக்கைகளையும் தாங்கும் அளவுக்கு வலிமையானவை என்று நம்புவதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க புட்டின் மறுத்ததால் திங்களன்று (14) ட்ரம்ப் விரக்தியடைந்தார். மேலும், பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் உட்பட உக்ரேனுக்கான ஆயுத விநியோக அலையை அறிவித்தார். அத்துடன், 50 நாட்களுக்குள் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தினார். கிரெம்ளினின் உயர்மட்ட சிந்தனையை நன்கு அறிந்த மூன்று ரஷ்ய வட்டாரங்கள், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தின் கீழ் புட்டின் போரை நிறுத்த மாட்டார் என்றும், மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகளுக்கு மத்தியில் ரஷ்யா, மொஸ்கோவின் எண்ணெய் வாங்குபவர்களை குறிவைத்து அச்சுறுத்தப்பட்ட அமெரிக்க வரிகள் உட்பட மேலும் பொருளாதார நெருக்கடியைத் தாங்கும் என்று நம்புவதாகவும் கூறின. ட்ரம்ப் மற்றும் புட்டினுக்கு இடையே பல தொலைபேசி அழைப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ரஷ்யாவிற்கு விஜயம் செய்த போதிலும், அமைதித் திட்டத்திற்கான அடிப்படை குறித்து விரிவான விவாதங்கள் எதுவும் இல்லை என்று ரஷ்யத் தலைவர் நம்புவதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான புட்டினின் நிபந்தனைகளில் நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்ற சட்டப்பூர்வ உறுதிமொழி, உக்ரேனிய நடுநிலைமை மற்றும் அதன் ஆயுதப் படைகள் மீதான வரம்புகள், அங்கு வசிக்கும் ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவின் பிராந்திய ஆதாயங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது குறித்து விவாதிக்கவும் புட்டின் தயாராக உள்ளார், இருப்பினும் இது எவ்வாறு செயல்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரேன் தனது கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீதான ரஷ்யாவின் இறையாண்மையை ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும், நேட்டோவில் சேர விரும்புகிறதா என்பதைத் தீர்மானிக்கும் இறையாண்மை உரிமையை கெய்வ் தக்க வைத்துக் கொள்கிறது என்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். கிரெம்ளின் சிந்தனையை நன்கு அறிந்த இரண்டாவது வட்டாரம், மேற்கத்திய அழுத்தத்தால் ஏற்படக்கூடிய எந்தவொரு பொருளாதார இழப்புகளையும் விட மொஸ்கோவின் இலக்குகளை புட்டின் மிக முக்கியமானதாகக் கருதினார் என்றும், ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக சீனா மற்றும் இந்தியா மீது வரிகளை விதிக்கும் அமெரிக்க அச்சுறுத்தல்கள் குறித்து அவர் கவலைப்படவில்லை என்றும் கூறியது. போர்க்களத்தில் ரஷ்யாவின் கை மேலோங்கியுள்ளதாகவும், போரை நோக்கிச் செல்லும் அதன் பொருளாதாரம், பீரங்கி குண்டுகள் போன்ற முக்கிய ஆயுதங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியின் உற்பத்தியை விட அதிகமாக உள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரேன் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கை ஏற்கனவே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யா, கடந்த மூன்று மாதங்களில் சுமார் 1,415 சதுர கிமீ (546 சதுர மைல்) முன்னேறியுள்ளது என்று உளவுத்துறை வரைபடமான DeepStateMap இன் தரவுகள் தெரிவிக்கின்றன. ஷ்யா தற்போது கிரிமியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, அதை 2014 இல் இணைத்துக் கொண்டது. மேலும் லுஹான்ஸ்க் கிழக்குப் பகுதி முழுவதையும், டொனெட்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் 70% க்கும் அதிகமான பகுதிகளையும், கார்கிவ், சுமி மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான மோதலான ரஷ்ய – உக்ரேன் போரில் 1.2 மில்லியன் மக்கள் காயமடைந்துள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்கா கூறுகிறது. ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ தங்கள் இழப்புகளுக்கான முழு புள்ளிவிவரங்களையும் வழங்கவில்லை. மேலும் மொஸ்கோ மேற்கத்திய மதிப்பீடுகளை நிராகரிக்கின்றது. போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த பின்னர் 2025 ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப், ரஷ்யாவுடனான உறவுகளை சரிசெய்ய முயன்று வருகிறார். புட்டினுடன் குறைந்தது ஆறு முறை தொலைபேசியில் பேசியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439332- புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம்
ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
1999ஆம் ஆண்டு செம்மணி புதைகுழி வழக்கை தற்போதைய செம்மணி மனித புதைகுழி வழக்கோடு இணைத்து அழைப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என சட்டத்தரணி கருத்து தெரிவித்த அந்த வாரத்திலிருந்தே அரியாலை - செம்மணி பிரச்சினையை கிளப்பி அந்த முயற்சிகளை நிறுத்தும் நோக்கத்தோடு கருத்துருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது….. செம்மணி இங்கு இடம்பெற்ற தமிழர்கள் மீதான இனப்படுகொ*லையின் முக்கிய சாட்சியமாக மாறக்கூடும். இங்கு நாளாந்தம் எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகள் அதற்கு ஒரு முக்கிய சாட்சிகள். குழந்தைகளின் என்புத் தொகுதி என சந்தேகிக்கப்படும் ஒன்றரை அடி என்புத் தொகுதிகள், சிறுவர்களின் என்புத் தொகுதிகள் என சந்தேகிக்கப்படும் 3 அடிக்கும் குறைவான என்புத் தொகுதிகள், மண்டையோடுகள் நொருங்கிய நிலையில் காணப்படும் என்புத் தொகுதிகள், முழங்கால்கள் மடக்கப்பட்டு கைகள் கால்கள் கட்டப்பட்டது போன்ற சந்தேகத்துக்கிடமான என்புத் தொகுதிகள், பாடசாலை புத்தகப்பை, குழந்தைகள் விளையாடும் பொம்மை, சிறுமியின் ஆடை, வளையல், பெண்களின் பாதனிகள் என இதுவரை வெளிவந்த சான்றுப் பொருட்கள் செம்மணியின் கொடூரத்தை இந்த உலகிற்கு பறைசாற்றுகின்றன. செம்மணியில் நிகழ்ந்த படுகொ*லைகள், கிருசாந்தி படுகொ*லை, பழைய செம்மணி புதைகுழி அகழ்வு எல்லாம் தற்போது செம்மணி சித்துப்பாத்தி மயானத்தின் புள்ளியில் இணைவதை திசை திருப்பத சிலர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தற்போதைய புதைகுழி வேறு 1999 செம்மணி புதைகுழி வேறு என்ற கருத்துவாக்கத்தை அவசர அவசரமாக ஏற்படுத்தி செம்மணி புதைகுழியில் ஏற்பட்டிருக்கும் கவனத்தை சிதைக்க முற்படுகின்றார்கள். இவ்வளவு காலமும் அமைதியாக இருந்தவர்கள் கடந்த வாரத்திலிருந்து தங்களுக்கு தரப்பட்ட பணியை சமூக வலைத்தளங்கள் ஊடாக அவசர அவசரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஏன்னில் கடந்த வாரமே” நீதிமன்றின் முறையான அனுமதியோடு பழைய செம்மணி புதைகுழி வழக்கை(1999) தற்போதைய செம்மணி மனித புதைகுழி வழக்கோடு இணைத்து அழைப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி கருத்து தெரிவித்தார். நான் அவதானித்தவரை அன்றிலிருந்து அரியாலை - செம்மணி பிரச்சினையை கிளப்பி அந்த முயற்சிகளை நிறுத்தும் நோக்கத்தோடு கருத்துருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியை செம்மணி என அழைக்கக்கூடாது என அந்த பிரதேசத்திலிருக்கும் தங்களின் விசுவாசிகளிடமிருந்து கருத்துவாக்கங்களை சிலர் முதலில் எழுப்புகின்றனர். அகழ்வு இடம்பெறும் இடத்தினை செம்மணி என கூறக்கூடாது என்று கூறுபவர்களின் முகநூல் பதிவுகளை பார்த்தாலே தெரியும் அவர்கள் யார்? அவர்களை இயக்குபவர்கள் யார் என? செம்மணியில் வெளிவரும் என்புத் தொகுதிகளையும் அதன்பின்னால் இருக்கும் இருண்ட பக்கங்களையும் ஆராயாமல் செம்மணி என்ற சொல்லை பயண்படுத்த விடாமல் கருத்துவாக்கத்தைச் செய்து செம்மணி புதைகுழி வழக்கை வேறொரு கோணத்திற்கு கொண்டுசெல்ல பார்க்கிறார்கள். எங்களுக்கு இடையில் உருவாக்கப்படும் கருத்துவாக்கங்களின் பின்னனிகளை ஆராய வேண்டும் செம்மணி எங்களுக்கு நடந்த இனப்படுகொ*லையை பறைசாற்றும். அதனை தடுக்க இடமளியோம்…. செம்மணி புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியை செம்மணி என அடையாளப்படுத்துவதற்கு எதிராக நிற்பவர்களின் சூழ்ச்சியையும் அவர்களின் பின்புலத்தையும் அறிந்துகொள்வோம்.. செம்மணி என்பதை தவிர்த்துவிட்டு போவதற்கு இடமளியோம். பிரபாகரன் டிலக்சன்- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
4-5 வயதுடைய சிறுமி செம்மணிப் புதைகுழியில் நீல நிற புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4-5 வயதுடைய சிறுமியினுடைய என்புத் தொகுதி என சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினால் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. பிரபாகரன் டிலக்சன்- அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை! தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை அமைக்கப்படவுள்ளது. அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரீஸின் புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது. மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வில் மற்றும் நகர சபை உறுப் பினர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, https://athavannews.com/2025/1439315- 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
நீங்கள்… சுத்தி, சுத்தி எங்கை வாறியள் எண்டு விளங்குது. 😂 ஊரில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மீது புலம் பெயர் மக்கள் அதிக கௌரவத்துடன் அவர்களை மதிக்க வேணும். 🙂- உணவு செய்முறையை ரசிப்போம் !
பத்து வகையான போலி ரெசிபி செய்வது எப்படி .... பருப்பு போலி (Chana Dal Poli / Puran Poli) தேவையான பொருட்கள்: பூரணத்திற்குப்: கடலை பருப்பு – 1 கப் வெல்லம் – 1 கப் ஏலக்காய் பொடி – ¼ மேசைக்கரண்டி மாவிற்குப்: மைதா – 1 கப் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – 2 மேசைக்கரண்டி உப்பு – சிட்டிகை செய்முறை: 1. மாவுக்கான பொருட்கள் சேர்த்து மென்மையாக பிசைந்து ஓய விடவும். 2. கடலை பருப்பை வெந்து வெல்லத்துடன் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 3. சிறிய உருண்டைகளாக உருட்டி, மாவால் மூடி, வட்டமாக தேய்க்கவும். 4. தாவாவில் நெய் விட்டு போலி சுடவும். --- 2. தேங்காய் போலி (Coconut Poli) தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் வெல்லம் – ¾ கப் ஏலக்காய் – சிறிதளவு மைதா – 1 கப் மஞ்சள் தூள், உப்பு – சிறிதளவு நெய் – தேவையான அளவு செய்முறை: 1. வெல்லம் உருக்கி தேங்காயுடன் சேர்த்து பாகு தயாரிக்கவும். 2. மாவை பிசைந்து உருண்டை எடுத்து மேலே தேங்காய் பூரணம் வைத்து தேய்க்கவும். 3. நெய்யில் சுட்டு பரிமாறவும். --- 3. சக்கரை பொங்கல் போலி (Sweet Pongal Poli) செய்முறை: 1. வெல்லம், பாசிப்பருப்பு, அரிசி சேர்த்து சக்கரை பொங்கல் போல தயார் செய்யவும். 2. அதனை பூரணமாக வைத்து போலி போன்று பரிமாறலாம். --- 4. சக்கரை போலி (Sugar Poli) தேவையானவை: சர்க்கரை – 1 கப் மைதா – 1 கப் தேங்காய் (விருப்பம்) – ¼ கப் ஏலக்காய் – சிறிது செய்முறை: 1. சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் சேர்த்து பாகு தயாரிக்கவும். 2. பூரணமாக வைத்து மாவில் மூடி தேய்த்து சுடவும். --- 5. பால் போலி (Milk Poli) செய்முறை: 1. பால் கொதிக்க வைத்து சர்க்கரை, தேங்காய், சிறிது ரவை சேர்த்து கொழுக்கட்டு போலக் கெட்டியாக செய்யவும். 2. அதை பூரணமாக வைத்து போலி செய்யவும். --- 6. கொதுமை மாவு போலி (Wheat Flour Poli) மாற்றம்: மைதா பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தலாம். இதனால் fibre அதிகமாக இருக்கும், ஆரோக்கியமானது. --- 7. பீடருட் போலி (Beetroot Poli) செய்முறை: 1. பீட்ரூட்டை உரித்து அரைத்துப் பாகு தயாரிக்கவும். 2. அதனை பூரணமாக வைத்து போலி செய்யலாம். அழகான ரோஸ் கலர் கிடைக்கும். --- 8. சோயா போலி (Soy Poli) செய்முறை: 1. சோயா கிரான்யூல்ஸ் வேக வைத்து பிசைந்து வெல்லத்துடன் கிளறி பூரணமாக்கவும். 2. போலி வடிவத்தில் செய்து சுடவும். --- 9. முந்திரி போலி (Cashew Poli) செய்முறை: 1. முந்திரியை நன்கு அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து பாகு செய்து பூரணமாக்கவும். 2. போலி சுடவும் – இது ரொம்ப ரிச் ஸ்வீட் போலி ஆகும். --- 10. பாசிப்பருப்பு போலி (Moong Dal Poli) செய்முறை: 1. பாசிப்பருப்பை வேக வைத்து வெல்லத்துடன் சேர்த்து பூரணமாக்கவும். 2. சாதாரண போலி போலச் செய்யலாம். --- பொதுவான குறிப்புகள்: எல்லா போலிக்கும் மைதா அல்லது கோதுமை மாவை மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஓய வைக்க வேண்டும். நெய் அல்லது நெய்+எண்ணெய் கலந்தது சுட வழிகிறது. சுடும்போது தீயை மிதமாக வைத்தால் மென்மையான போலி கிடைக்கும். திண்டுக்கல் சமையல்- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
மன்னிக்கவும் அல்வாயன். நான்தான் தவறான தகவலை வழங்கி விட்டேன். மேலே நீங்களும், நிழலியும் கூறியதே சரியான தகவல்.- பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
தகவலுக்கு நன்றி நிழலி. 🙂- 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
6 வயது சிறுமி பாலியல் குற்றவாளிக்கு, ஆண்மை நீக்க உத்தரவிட்ட மடகஸ்கார் நீதிமன்றம்!- இரசித்த.... புகைப்படங்கள்.
ஓடின சைக்கிள் சில்லை ஒருமாதிரி கொண்டுவந்து ஒய்யாரமாய் வீட்டிலே ஒளிரும் விளக்காக்கி ஒரின்பம் காண்கின்றேன்❤️ Thava Arumugam- 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் எந்த நாடு என்று தெரியவில்லை. ஆனால்... ஜேர்மனியில் இருந்து சென்ற மற்ற ஒருவர் சண்டித்தனம் செய்து இருக்கின்றார். இந்த விடுமுறைக்கு... இன்னும் நிறைய சம்பவம் நடக்கும் போலுள்ளது.- பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
அல்வாயான், தென் கிழக்கு பல்கலைக்கழகம் என்றால்... மகிந்த ராஜபக்சவின் ஊர். அரசன் எவ்வழியோ... குடிகளும் அவ்வழியே. 😂 அதுக்காக.. மற்ற சிங்களப் பகுதிகள் திறம் என்று நினைக்கப் படாது. 🤣 - யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.