Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. எள்ளுப் பாகு அல்லது எள்ளு உருண்டை செய்யும் முறை.
  2. படத்தில் 58 வயது இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் பொலிஸாரால் செருகப் பட்ட தடியும், பொலிசாரின் அடையாள இலட்சனைகளும் காணப்படுகின்றது.
  3. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், முக்கிய மொழிப் பாடங்களான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சித்தி வீதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆங்கில மொழியில் சித்தி வீதம் 73.82% ஆக கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்ப தவணை ஜூலை 14 முதல் ஜூலை 28 வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Vaanam.lk
  4. சர்வதேச அரங்கில் கலக்கும் எம் இளம் தமிழச்சி! விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்க்கும் பெருமை சேர்த்துள்ள தமிழகத்தின், கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை செல்வி. மாயா ராஜேஷ்வரன் ரேவதி. இவர், 16 வயதில் 76% வெற்றி விகிதத்துடன், இவரின் திறமை அடையாளம் காணப்பட்டு டென்னிஸ் உலகின் சிறந்த பயிற்சி மையமான ரஃபா நடால் அகடமியில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற்று வருகிறார் செல்வி மாயா, சிறந்த திறமையுடனும் கடின உழைப்புடன் கூடிய விடா முயற்சியுடன் முன்னேறி வரும் இளம் தமிழச்சி இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்! Vaanam.lk
  5. இன்ஜினுக்கு தேவையான எரிபொருள் மற்றும் காற்று செல்லாமல் தான் மேலே எழும்பும்போது இழுவை திறன்(pulling power) இல்லாமல் இஞ்சின் செயலிழந்து கீழே விழுந்து விட்டது என்று ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு கூட தெரியும். கடமை என்பது காலில் கிடக்கும் செருப்புக்கு சமம் என்று கருதக்கூடிய பணியாளர்களை ஒவ்வொரு நிறுவனமும் பதவியில் அமர்த்திருக்கிறது .ரயில் வரும்போது கேட்டை திறந்து விடுவது, சாலையில் பள்ளத்தை தோண்டி போட்டு விட்டு எந்த எச்சரிக்கை பலகையும் வைக்காமல் செல்வது, மனித உயிர்களுடன் விளையாடும் பொறுப்பற்ற பணியாளர்களால், அதிகாரிகளால் அனைத்து நிலைகளிலும் மனித உயிர்கள் மாண்டு போகிறது. உண்மை உரைகல்
  6. கல்கிசை - காங்கேசன்துறை குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை தினசரி ஆரம்பம்! கொழும்பு: இலங்கையின் தெற்கையும் வடக்கையும் இணைக்கும் மிக முக்கியமான ரயில் சேவைகளில் ஒன்றான கல்கிசை - காங்கேசன்துறை இடையேயான குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை (A/C Train), தினசரி சேவையாக அமுலுக்கு வந்துள்ளது. பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இலங்கை ரயில்வே திணைக்களம் இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. முக்கிய அம்சங்கள்: தினசரி சேவை: முன்னர் வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) மாத்திரம் இயக்கப்பட்ட இந்த சொகுசு ரயில், இனிமேல் வாரத்தின் ஏழு நாட்களும் சேவையில் ஈடுபடும். பயண அட்டவணை - கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை: காலை 5:15 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும். காலை 5:40 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். காலை 5:45 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும். மதியம் 12:45 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். பயண அட்டவணை - காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை வரை: நண்பகல் 1:50 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும். மாலை 8:00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். மாலை 8:30 மணிக்கு கல்கிசையை சென்றடையும். யாழ் தேவி ரயில் சேவை மாற்றம்: நேர மாற்றம்: இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக, பிரபலமான யாழ் தேவி ரயில் சேவையின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய புறப்படும் நேரம்: யாழ் தேவி ரயில் இனி காலை 6:40 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மாலை 3:00 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். முந்தைய நேரம்: முன்னதாக யாழ் தேவி ரயில் காலை 5:45 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை, வடக்கு நோக்கிய மற்றும் தெற்கு நோக்கிய பயணிகளுக்கு, குறிப்பாக வணிகப் பயணங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Dharussafa NEWS
  7. வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு! வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார். இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்துள்ளனர். இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச் சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்தியதாகவும் இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தியதுடன் பொலிசாரின் இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர். இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என தெரிவித்தனர். இந் நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 58வயதுடைய இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்று தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1438856
  8. இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்! இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு (COPE) அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் , SLIIT இல் பதிவாகியுள்ள நிதி மோசடிக்கு நல்லாட்சி அரசாங்கமும் அதன் முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். மகாபொல புலமைப்பரிசில் நிதியிலிருந்து SLIIT ஐ நீக்கி, அதை ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியதன் காரணமாக, நல்லாட்சி அரசாங்கத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக அவர் தெளிவுபடுத்தினார். இந்த விடயத்தை ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அடங்கிய அப்போதைய அரசாங்கமும் அமைச்சரவையும் விதிமுறைகளை மீறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டத்தை கண்டறிந்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க சிஐடி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்படும். இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை மீண்டும் மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1438835
  9. மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி! ஆனையிறவு உப்பளத்தின் முன்பாகவுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுவதாக A9 வீதியில் பயணிப்போர் தெரிவிக்கின்றனர். பாரியளவு மின் இணைப்பினை கொண்ட குறித்த மின்கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது. அத்துடன் குறித்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாமல் உள்ளது எனவும், ஆனால் காற்றின் தாக்கம் அதிக அளவு காணப்பட்டால் மின்கம்பம் கீழே விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரியளவு மின் விபத்துக்கள் மற்றும் ஆனையிறவு உப்பளம் தீப்பற்றி எரியக்கூடிய அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி A9 வீதியில் பாரியளவு வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது. எந்நேரமும் மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருப்பதால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பயணிகள் பயத்துடனே பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. பலமுறை இது தொடர்பில் தெரியப்படுத்தியும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை ஆனையிறவு உப்பளத்தாலும் மற்றும் இலங்கை மின்சார சபையினாலும் எடுக்கப்படவில்லை. இதனை இலங்கை மின்சார சபை கண்டும் காணாமலும் இருப்பதற்கான காரணமும் தெரியவரவில்லை இவ்வாறே பூநகரி பிரதான வீதியிலும் ஒரு சில மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ” உரிய தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி ஏற்படும் விபத்தையும் அசௌகரியத்தையும் தடுக்குமாறு ஆதவன் செய்திப் பிரிவு வேண்டுகோள் விடுக்கிறது. https://athavannews.com/2025/1438818
  10. எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது ! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற எயார் இந்தியா விமான விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது வெளியில் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது. இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு உள்ளது. இதில், விபத்து இடம்பெற்ற தினத்தில் விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களும் கண்டுபிடிக்கப்பட்டு விமான நிலையத்தின் ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாகங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானம் புறப்படும்போது இறக்கை மற்றும் தரையிறங்கும் சக்கரங்கள் சரியான நிலையில் இருந்ததாகவும் ஆனால் விபத்துக்குப் பின்னர் எரிபொருள் கட்டுப்பாட்டு கருவிகள் அணைந்த நிலையில் இருந்ததாகவும் இதன் மூலம் விமானம் நடுவானில் பறக்கும்போது எரிபொருள் தடைபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், விமானத்தை முறையாகப் பராமரித்துள்ளார்களா என்பதை அறிய, விமானப் பராமரிப்புப் பதிவுகளை ஆய்வு செய்தார்கள். அதன்படி, விமானத்தில் கடைசியாக L1-1 மற்றும் L1-2 ஆகிய பெரிய பராமரிப்புப் பணிகள் 38,504:12 மணி நேரங்களுக்கு முன்பும், 7,255 முறை விமானம் இயக்கப்பட்ட பின்பும் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த பெரிய பராமரிப்புப் பணி (D-check) டிசம்பர் 2025-ல் செய்யப்பட இருந்தது. இடது பக்க என்ஜின் (ESN956174) மே 1, 2025 அன்றும், வலது பக்க என்ஜின் (ESN956235) மார்ச் 26, 2025 அன்றும் நிறுவப்பட்டன. விபத்து நடந்த அன்று, விமானத்தில் நான்கு Category ‘C’ Minimum Equipment List (MEL) குறைபாடுகள் இருந்தன. இவை ஜூன் 9, 2025 அன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஜூன் 19, 2025 வரை அவை சரி செய்யப்படாமல் இருந்தன. விமானத்தின் கதவு கண்காணிப்பு கேமரா, விமான நிலைய வரைபடம், கம்ப்யூட்டர் நெட்வேர்க் மற்றும் விமானத்தில் இருந்த பிரிண்டர் ஆகியவை பழுதடைந்திருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1438853
  11. பிள்ளைகளின் தலையில் பூ வைக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிய அம்மா.
  12. வரலாற்றில் முதல் 9A *************************** கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம் அது. பெரிதாக எவரும் கண்டுகொள்ளாத ஊர் அது. முக்கியமாக கல்வித்துறையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை என்றால் என்ன? க.பொ.த சாதாரன தரப் பரீட்சை பெறுபேறுகள் என்றால் என்ன அந்த பாடசாலையின் பெறுபேறு என்ன என்று எவரும் கேட்டுக்கொள்வதில்லை. வலயக் கல்வி அலுவலகம் மாத்திரம் தனது புள்ளிவிபர பதிவுக்காக பெறுபேறுகளை கேட்டுகொள்வார்கள். அவ்வளவுதான். பாடசாலை ஆரம்பித்த 1993 என நினைக்கின்றேன். அன்று இன்று வரை வளப்பற்றாக்குறை இன்றி இயங்கிய நாட்கள் இல்லை என்றே கூற வேண்டும். 1996 கிளிநொச்சி இடப்பெயர்வுக்கு முன் அந்த பாடசாலையினை தமிழ்த்தினப் போட்டியில் சிறுவர் நாடகத்திலும், கிளித்தட்டு போட்டியிலும் அந்தப் பாடசாலையினை மாவட்ட மட்டத்தில் பலரும் திரும்பி பார்த்தனர். அப்போதே இப்படியொரு பாடசாலை இருக்கிறது என்பது ஏனைய பல பாடசாலைகளுக்கு தெரியவந்தது. அதற்காக உழைத்தவர் அப்போது அந்த பாடசாலையில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சிங்கராசா ஆசிரியர். அவர் அந்த ஊர் மக்களும், மாணவர்களும் சிங்கா சேர் என்று அழைப்பர். இதன் பின்னர் மறுபடியும் அப்பாடசாலையினை எவரும் கண்டுகொள்வதில்லை. இப்படி பல வருடங்கள் கடந்தோடிய நிலையில் தற்போது அப்பாடசாலையினை ஒரு மாணவன் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றான். சக்திவேல் குயிலன் என்ற அந்த மாணவன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ பெறுபேறுகளை பெற்றதன் மூலம் அப்பாடசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக 9ஏ பெற்ற வரலாற்று சாதனையினை ஏற்படுத்தியதன் மூலமே குயிலன் பாடசாலையினையும், ஊரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறான். இந்த ஒரு மாணவன் பெற்ற 9 ஏ ஏன் சாதனை என்றால், வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் பாடசாலை கல்வியினை பிரதானமாகவும், அந்த ஊரில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் மேலதிக கல்வியையும் மட்டுமே பெற்றிருக்கிறான் குயிலன். வறுமையான குடும்பம், பெற்றோர்கள் கூலித்தொழிலை செய்கின்றவர்கள். தினமும் வேலை கிடைக்காது வரையறுக்கப்பட்ட சொற்ப வருமானம், வசதிவாய்ப்புக்கள் குறைவு, இந்த வயதில் கல்வியை குழப்பும் வகையில் கவனக் கலைப்பான்கள் அதிகம், நகர்புற பிள்ளைகள் போன்று பெற்றோர்களால் மேலதிக வகுப்பு, பிரத்தியோக வகுப்பு, அந்த பயிற்சி புத்தகம், இந்த பயிற்சி புத்தகம் என எதுவும் இல்லை, தம்பி படிச்சனீயா? என்ன படிச்சனீ? இந்த முறை எத்தனை மாக்ஸ்? என கேள்வி கேட்காத பெற்றோர்கள் என அவனை சுற்றி காணப்பட்ட அந்த சூழலுக்குள் இருந்து படித்து அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெறுவது என்பது சாதனைதானே?! இந்த சாதனைக்கு அவனது பாடசாலையும், அந்த கவ்வி நிலையமும், படிப்பதற்கு தடை போடாத அந்த ஏழை பெற்றோரும், அவனது முயற்சியும், உழைப்பும்தான் காரணம். இதன் மூலமே அவன் சாதித்திருக்கிறான். அவனது இந்த சாதனையால்தான் இன்று ஊற்றுப்புலம் என்ற அந்த கிராமத்து பாடசாலையினை பலரும் திரும்பி பார்க்கின்றனர். ஊரும், பெருமைகொள்கிறது. தனது வரலாற்றில் முதல் தடவையாக ஒருவன் 9ஏ பெறுபேறுகளை பெற்றது அவர்களை பெருமை கொள்ள வைக்கிறது. Murukaiya Thamilselvan
  13. அகதிகளைப் பரிமாற்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா திட்டம்! பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ‘One in, One out‘ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், அகதிகளை பரிமாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளன. இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிரித்தானிய விஜயத்தினை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்தல் மற்றும் அகதிகளை கட்டுப்படுத்தவே இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், சிறு படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இதற்குப் பதிலாக, பிரான்ஸில் இருந்து அங்கீகாரம் பெற்ற சமமான எண்ணிக்கையிலான அகதிகளை, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் பிரித்தானியா ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வழியாக கடந்த சில ஆண்டுகான அதிகளவிலான புகலிடக்கோரிக்கையானர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே குறித்த திட்டம் இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த விடயம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438838
  14. தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் நுழைந்து கரும்புகளை ருசித்துக் கொண்டிருந்த குட்டி யானை ஒன்று, தோட்ட உரிமையாளர் டார்ச் அடித்துப் பார்த்தபோது, பதற்றமடைந்து ஒரு கம்பத்தின் பின்னால் மறைந்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது. டைரக்டர் மதுரை மைந்தன்
  15. நிராயுதபாணிகளாய் வெள்ளைக்கொடியொடு நின்ற மேனிகளை நிர்வாணமாக்கிய அவமானச்சின்னமே வாளேந்திய சிங்கம் என உலகறியட்டும். மிருகம் புணர்ந்து பிறந்த இனத்தின் மிருகத்தனத்தை இன்னும் உலகறியட்டும். எம்மினப்பெண்களை அவுத்து அம்மணமாக்கிய அசிங்கங்களின் கோரமுகம் உலகமறியட்டும். பிணமான பின்னும் புணர்ந்த பௌத்த இனமானம் எதுவென உலகம் அறியட்டுமே... #செம்மணி ஈழப்பிரியன்✍️ Rj Prasath Santhulaki
  16. மாப்பிள்ளையின் முகநூல் கருத்துக்களை பார்த்து விட்டு, தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம். 😂
  17. மாகாண ரீதியாக மாணவர் சித்தி பெற்ற சதவீதம். வட மாகாணம் கடைசி நிலையில் உள்ளது.
  18. #சுகர்னு docter கிட்ட போறாங்க .. அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார். #ஒரு_வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார். 😂#மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார். 🧔#அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார். அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான். காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது. இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை. 1. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. 2. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல. 3. ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை. 4. வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான். TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை. வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான். பாடையில போகற வரைக்கும் அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான். 👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன். மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும். அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்.. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ################### ############### ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗ 1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். 2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். 3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். 4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும். 5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். 6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். 7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். 8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். 9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். 10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார். 11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். 12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார். வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். 13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும். உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘ உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும். குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும். இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா? இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்? மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல், இருமல், காய்ச்சல், இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை! இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்! இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது! இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்! மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து, கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்! உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......! - இணையத்தில் படித்தது. -
  19. திறந்து ஒரு வாரம் கூட ஆகாத திருவண்ணாமலை தென்பொன்னை ஆற்று பாலத்தோட நிலைமை. Mohanraj T
  20. LTTE பாதுகாத்த இரகசிய பதுங்குக்குழி கண்டுபிடிப்பு, அகழ்வின் பல கண்டுபிடிப்புகளாம்! தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பாரிய அளவிலான நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்றை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நேற்று (ஜூலை 10, 2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளன. போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு, எட்டாம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் காணியில் அமைந்துள்ள இந்த நிலக்கீழ் பதுங்குக்குழி, விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஏக்கர் பரப்பளவிலான இந்தக் காணி, போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாமாகச் செயற்பட்டுள்ளது. சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பதுங்குக்குழியின் வாயில்கள், 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்ட குண்டுத் தாக்குதல்களால் மூடப்பட்டிருந்ததால், மக்கள் இதன் இருப்பை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. போருக்குப் பின்னர், இந்தக் காணியில் கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். அண்மைக் காலமாக, இந்தப் பதுங்குக்குழிக்குள் விடுதலைப் புலிகளின் தங்கம் அல்லது ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் பரவியதால், சிலர் காணி உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து, புதுக்குடியிருப்புப் பொலிஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை அடுத்து, புதன்கிழமை (ஜூலை 09, 2025) இந்த நிலக்கீழ் பதுங்குக்குழியை அகழ்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், குறித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கிராம சேவையாளர், விஷேட அதிரடிப் படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், கனரக இயந்திரங்கள் கொண்டு துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பதுங்குக்குழிக்குள் நீர் நிரம்பியிருந்ததால், அதனை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. நீதிபதி பிரதீபனின் பணிப்புரைக்கமைய, நேற்று காலை 10.30 மணியளவில் அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இந்தப் பதுங்குக்குழிக்குள் என்னென்ன பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு அப்பகுதி மக்கள் மத்தியிலும், பாதுகாப்புத் தரப்பினர் மத்தியிலும் நிலவி வருவதாகச் சொல்லப்பட்டாலும் நேற்று எதுவுமே அங்கே கண்டெடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. Vaanam.lk
  21. பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு! இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை போன்ற நாடுகள், பிரித்தானியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை இலகுபடுத்தும் நோக்கிலும், பிரித்தானிய மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், இந்த புதிய வர்த்தக திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு, இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய வர்த்தக திட்டம், தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்றிக், இது இலங்கையின் ஆடைத்துறைக்கும் பிரித்தானியாவின் நுகர்வோருக்கும் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக விளங்குவதுடன் மொத்த வர்த்தகத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகளவான ஆடைகள் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் ஆடைகள் மாத்திரமின்றி, பரந்த அளவிலான பொருட்களுக்கும் பிரித்தானியாவின் வர்த்தக திட்டத்தை, வளர்ந்து வரும் நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438801
  22. செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தன. சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர். நேற்றைய தினம் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பையோடு, சிறுவரினுடையது எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது. அந்த என்புத் தொகுதிக்கு அருகில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை, ஆடை, சிறுமிகள் பயன்படுத்தும் காலணி, சிறு கண்ணாடி வளையல்கள் என்பனவும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்த மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438781
  23. மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்! மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) வணிக நோக்கமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இது கைவிடப்பட்ட விமான நிலையமாக மாறிவிட்டது, இதன் காரணமாக நாடு பெரும் கடனை எதிர்கொள்கிறது. குறிப்பாக இலங்கை தற்போது 2030 வரை செலுத்த வேண்டிய 260 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை எதிர்கொள்கிறது. இதனிடையே, மத்தள விமான நிலையத்தை விமானங்கள் தரையிறங்கி புறப்படும் ஒரு செயல்பாட்டு நிறுவனமாக மேம்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நடக்கக்கூடிய ஒன்றல்ல. இந்த விமான நிலையத்திற்கான செலவு மற்றும் கடன் செலுத்துதல்களை நாங்கள் தற்போது எதிர்கொள்கிறோம். இது ஒரு முக்கிய விமான நிலையமாக இல்லாவிட்டாலும், மாற்று விமான நிலையமாக இது அவசியம். விமான பராமரிப்பு போன்ற பிற செயல்பாடுகளுக்கு விமான நிலையத்தைப் பயன்படுத்தவும், பிரதான விமான நிலைய வளாகத்திற்கு வெளியே உள்ள நிலத்தை சூரிய மின்சக்தி திட்டங்களுக்குப் பயன்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது என்றும் கூறினார். நேற்று மத்தள விமான நிலையத்தின் ஆய்வு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட பின்னரே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1438782

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.