Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தன. சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர். நேற்றைய தினம் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பையோடு, சிறுவரினுடையது எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது. அந்த என்புத் தொகுதிக்கு அருகில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை, ஆடை, சிறுமிகள் பயன்படுத்தும் காலணி, சிறு கண்ணாடி வளையல்கள் என்பனவும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்த மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438781
  2. மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்! மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) வணிக நோக்கமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இது கைவிடப்பட்ட விமான நிலையமாக மாறிவிட்டது, இதன் காரணமாக நாடு பெரும் கடனை எதிர்கொள்கிறது. குறிப்பாக இலங்கை தற்போது 2030 வரை செலுத்த வேண்டிய 260 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை எதிர்கொள்கிறது. இதனிடையே, மத்தள விமான நிலையத்தை விமானங்கள் தரையிறங்கி புறப்படும் ஒரு செயல்பாட்டு நிறுவனமாக மேம்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நடக்கக்கூடிய ஒன்றல்ல. இந்த விமான நிலையத்திற்கான செலவு மற்றும் கடன் செலுத்துதல்களை நாங்கள் தற்போது எதிர்கொள்கிறோம். இது ஒரு முக்கிய விமான நிலையமாக இல்லாவிட்டாலும், மாற்று விமான நிலையமாக இது அவசியம். விமான பராமரிப்பு போன்ற பிற செயல்பாடுகளுக்கு விமான நிலையத்தைப் பயன்படுத்தவும், பிரதான விமான நிலைய வளாகத்திற்கு வெளியே உள்ள நிலத்தை சூரிய மின்சக்தி திட்டங்களுக்குப் பயன்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது என்றும் கூறினார். நேற்று மத்தள விமான நிலையத்தின் ஆய்வு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட பின்னரே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1438782
  3. அடுத்த வாரம் மும்பையில் திறக்கப்படும் டெஸ்லாவின் காட்சியறை! மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தனது புதிய காட்சியறையை ஜூலை 15 ஆம் ஆம் திகதி மும்பையின் ஜியோ வேர்ல்ட் டிரைவில் திறக்கவுள்ளது. பல வருட திட்டமிடல் மற்றும் ஊகங்களுக்குப் பின்னர் இந்திய சந்தையில் நுழைய விரும்புவதால், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மின்சார வாகன (EV) தயாரிப்பாளருக்கு இது ஒரு முக்கிய படியாகும். பில்லியனர் எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனம், இந்திய சந்தையில் நுழைவதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதத்தில் மும்பையில் உள்ள இடத்திற்கான குத்தகையைப் பெற்றது. 4,000 சதுர அடி பரப்பளவிலான இந்த காட்சியறை மும்பையின் ஆடம்பர சில்லறை விற்பனை இடங்களில் ஒன்றில், நகரின் ஆப்பிள் ஃபிளாக்ஷிப் காட்சியறைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடம் பார்வையாளர்கள் டெஸ்லாவின் மின்சார கார்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களை ஆராயவும் அனுமதிக்கும். இதனிடையே, டெஸ்லா அதன் குறைந்து வரும் விற்பனை எண்ணிக்கையுடன் போராடி வருகிறது. மேலும் கடந்த 6 மாதங்களில் அதன் பங்கு 23.17% சரிவைக் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1438802
  4. பாகிஸ்தானில் பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்ட நிலையில் அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மாகாணத்தின் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் சுட்டுக்கொல்லப்பட்ட ஒன்பது பேரும் பஞ்சாப் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களது உடல்கள் குண்டுத் துளைத்த காயங்களுடன் மலைகளில் கண்டெடுக்கப்பட்டதாகவும் உதவி ஆணையர் சோப் நவீத் ஆலம் தெரிவித்தார். எவ்வாறு இருப்பினும் இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த மக்களையும், பலுசிஸ்தானில் வெவ்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் பயணிகள் பஸ்களையும் கிளர்ச்சியாளர்கள் குறிவைப்பது இது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. Athavan Newsபாகிஸ்தானில் பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதத் தாக்...பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந...
  5. வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்! உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, தனது கட்டண அச்சுறுத்தால் சந்தை ஏற்ற இறக்கங்களைத் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, வெள்ளை மாளிகை ‘சூப்பர்மேன்’ என்று சித்தரித்துள்ளது. 79 வயதான அவரை “நம்பிக்கையின் சின்னம்” என்று அழைத்த வெள்ளை மாளிகை, ஜேம்ஸ் கன் இயக்கிய சூப்பர்மேன் திரைப்படம் வெள்ளிக்கிழமை (11) வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர்மேன் கதாப்பாத்திரத்தில் AI-உருவாக்கிய ட்ரம்பின் படத்தை வெளியிட்டது. வெள்ளை மாளிகை அல்லது ட்ரம்ப்பால் AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்வது புதுமையல்ல. கடந்த மே மாதம் போப் லியோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி போப் போன்ற AI-உருவாக்கப்பட்ட தனது படத்தைப் பகிர்ந்து கொண்டார். ஒகஸ்ட் 1 முதல் கனடா இறக்குமதிகளுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் வியாழக்கிழமை (10) அறிவித்தார். இது இரண்டு வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கிடையேயான விரிசலை ஆழப்படுத்தும் நடவடிக்கையாகும். ஏனைய பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15 முதல் 20 சதவீதம் வரை முழுமையான வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி இதுவரை 22 நாடுகளுக்கு வரி அறிவிப்பு கடிதங்களை வெளியிட்டுள்ளார். இதில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத வரிகளும் அடங்கும். https://athavannews.com/2025/1438830
  6. 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி! 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். இந்த எண்ணிக்கை பரீட்சை எழுதிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். மேலும், ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று மொத்தம் 13,392 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும் என்றும் அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1438746
  7. 2025 உயர் தரப் பரீட்சை திகதி அறிவிப்பு! 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் நடைபெற உள்ளது. https://athavannews.com/2025/1438749
  8. கல்பிட்டியில் கடற்படைக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள். கல்பிட்டி, தளுவ பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் கடற்படையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்படையினர் என தம்மை அறிமுகப்படுத்திய இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தின் போது கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடையணிந்த இருவர் வந்து அதை வீடியோ பதிவு செய்ததால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. அப்போது அங்கு வந்த நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். எனினும், இக்குற்றச்சாடை கடற்படையினர் ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438757
  9. பாகிஸ்தான் மோசடி மையத்தில் சோதனை; இலங்கையர்கள் உட்பட 149 பேர் கைது! பாகிஸ்தான் பொலிஸார் ஒரு மோசடி மையத்தில் நடத்திய சோதனையில் 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது. பைசலாபாத் நகரில் செயல்பட்டு வரும் இந்த வலையமைப்பு குறித்து கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த மையம் பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், போலி முதலீடுகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், இரண்டு இலங்கையர்கள், ஆறு பங்களாதேஷினர், இரண்டு மியான்மர் நாட்டவர்கள் மற்றும் ஒரு சிம்பாப்வே நாட்டவரும் அடங்குவர். 149 பேரில் பதினெட்டு பேர் பெண்கள் என்று அந்த நிறுவனம் மேலும் கூறியது. மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் முதல் முதலீட்டில் ஒரு சிறிய வருமானத்தைப் பெறுவார்கள் என்றும், பின்னர் பெரிய தொகைகளை ஒப்படைக்க வற்புறுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. சந்தேக நபர்கள் புதன்கிழமை (09) நீதமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 87 பேர் ஐந்து நாள் தடுப்புக் காவலில் வைக்க NCCIA-யிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 62 சந்தேக நபர்கள் ஜூலை 23 வரை நீதிமன்ற காவலில் மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1438754
  10. கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதித்த ட்ரம்ப்! எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15% அல்லது 20% மொத்த வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பொருட்களுக்கான புதிய வரி விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் சுயமாக விதித்துக் கொண்ட காலக்கெடுவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது. கனடா மீதான அண்மைய வரிகளை ட்ரம்ப் வியாழக்கிழமை (10) சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதில், கனடாவுக்கான புதிய வரிகள் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கனடா பதிலடி கொடுத்தால் அது அதிகரிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார். அமெரிக்கா ஏற்கனவே சில கனேடிய பொருட்களுக்கு 25% முழுமையான வரியை விதித்துள்ளது. இந்த நிலையில் 35% வரி என்பது வொஷிங்டனுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கு ஒரு அடியாகும். இந்த வாரம் ஜப்பான், தென் கொரியா மற்றும் இலங்கை உள்ளிட்ட அமெரிக்க வர்த்தக பங்காளிகளுக்கு ட்ரம்ப் அனுப்பிய 20க்கும் மேற்பட்ட கடிதங்களில் இந்தக் கடிதமும் ஒன்றாகும். கனடாவின் கடிதத்தைப் போலவே, ஒகஸ்ட் 1 ஆம் திகதிக்குள் வர்த்தக பங்காளிகள் மீது அந்த வரிகளை அமுல்படுத்துவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். அண்மைய வரி அச்சுறுத்தல் கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ ஒப்பந்தத்தின் (CUSMA) கீழ் வரும் பொருட்களுக்குப் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ட்ரம்ப் அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகளுக்கு உலகளாவிய 50% வரியையும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத அனைத்து கார்கள் மற்றும் லொரிகளுக்கும் 25% வரியையும் விதித்துள்ளார். செப்பு இறக்குமதிகளுக்கு 50% வரியையும் அண்மையில் அவர் அறிவித்தார், இது அடுத்த மாதம் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. கனடா அதன் பொருட்களில் நான்கில் மூன்று பங்கினை அமெரிக்காவிற்கு விற்கிறது. மேலும் இது ஒரு வாகன உற்பத்தி மையமாகவும், உலோகங்களின் முக்கிய விநியோகஸ்தராகவும் உள்ளது. மெக்ஸிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும், அமெரிக்க ஏற்றுமதிகளை அதிகம் வாங்குபவராகவும் கனடா உள்ளது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியக தரவுகளின்படி, கடந்த ஆண்டு இது $349.4 பில்லியன் அமெரிக்க பொருட்களை இறக்குமதியும், $412.7 பில்லியன் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதியும் செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக சவால்களைச் சமாளிப்பதற்கான உறுதிமொழியுடன் தனது லிபரல் கட்சியை மீண்டும் தேர்தல் வெற்றிக்கு அழைத்துச் சென்ற கார்னி, ஜூலை 21 ஆம் திகதிக்குள் அதன் முக்கிய வர்த்தக பங்காளியுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438739
  11. அனைவர் வாழ்வின் விமானப் பயணத்தின் போதும் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தை… நகைச்சுவையுடன் விவரித்த விதம் அழகு. அதிலும் அந்த கடைசிப் பந்தி அருமை. 😂
  12. வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர். சம்பந்தனை மறந்து விட்டார்கள் என்று பதிவுகள் வந்த பின்னர் தான் ஏற்பாடு தீவிரம். நான்கு நாட்களுக்கு முதல் சம்பந்தரின் நினைவு நாள் என்பதே இப்போதுதான் எதேச்சையாக ஒரு செய்தியைத் தேடிய போது தெரிய வந்தது. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக - அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம் சிவனேசன், ரவிராஜ் உட்பட எண்ணற்ற அரசியல்வாதிகளின் நினைவுதினங்களையும், தமக்காய் ஈகையாகிய மறவர்கள் தினங்களையும் மக்கள் இன்னும் நினைவு கூர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உளவியல்தான் என்ன? 'சம்பந்தர்'களை இந்த இனம் அவர்களைப் புதைத்த ஈரம் காயும் முன்னம் மறந்து விடுகிறது என்பதன் பின்னால் இருப்பது இந்தத் தேசத்தின் இறைமை. அதை அடகு வைத்தவர்களை மக்களும் மன்னிப்பதில்லை - வரலாறும் மன்னிப்பதில்லை. நாளை 'சுத்துமாத்து' களுக்கும் இதே தீர்ப்புத்தான். ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது அது யாரையும் மன்னிப்பதில்லை. யாழ்ப்பாண புலனாய்வு
  13. திடீரென இடிந்து விழுந்த பாலம், வாகனங்களோடு ஆற்றுக்குள் விழுந்தனர் பலர் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரிப்பு! குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் (மஹி) ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் பாலம் இருந்தது. வழக்கம்போல நேற்று காலை வாகனங்களில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர். திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்ற பலர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக இதுவரை உயர்ந்துள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் நீந்திச்சென்று பலரை மீட்டனர். தகவலறிந்து விரைந்துவந்த `பொலிஸார், தீயணைப்புப் படையினர், மாநில மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர், இருப்பினும் பலர் காயமடைந்ததுடன் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்து மாநில மற்றும் மத்திய அரசு விஷேட கவனம் செலுத்தி வருகிறது. Vaanam.lk
  14. ஹன்ட் ( The Hunt )என்னும் பெயரில் ராஜீவ் காந்தி கொலை விசாரணை பற்றிய வெப் தொடர் ஒன்று வந்துள்ளது. நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அது பற்றி எழுத முடியவில்லை. ஆனால் பொதுவாக இவ்வாறான நடந்த சம்பவங்களை படமாக்குபவர்கள் ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிந்து படமாக்குவதில்லை. பொலிஸ் என்ன சொல்கிறதோ அதையே ஊடகங்கள் வெளியிடும். ஊடகங்கள் என்ன வெளியிடுகின்றனவோ அதையே இவர்கள் படமாக்குவார்கள். உதாரணமாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கோடியாக்கரை சண்முகம் மரணம் பற்றி ஊடகங்கள் உண்மையை கண்டறிந்து எழுதவில்லை. கமிசனர் தேவாரம் தலைமையில் 300 பொலிசார் பாதுகாப்பில் வேதாரணியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கோடியாக்கரை சண்முகம் மரத்தில் தொங்கி தற்கொலை செய்துவிட்டார் என்று தேவாரம் கூறியதை ஊடகங்கள் அப்படியே வெளியிட்டன. நீதிமன்றம்கூட அது குறித்து கேள்வி எழுப்பாமல் அது தற்கொலை மரணம் என்று ஏற்றுக்கொண்டது. ஆனால் உண்மை என்னவெனில் விசாரணையின்போது கோடியாக்கரை சண்முகம் வேதாரணியம் காங்கிரஸ் எம்எல்.ஏ ராஜேந்திரன் பெயரைக் கூறிவிட்டார். ராஜேந்திரன் மூப்பனாரைக் கைகாட்டுவார். அதனால் ராஜேந்திரனையும் மூப்பனாரையும் காப்பாற்றுவதற்காக கோடியாக்கரை சண்முகம் அடித்துக் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டார் என்றே அன்று பேசப்பட்டது. தோழர் பாலன்
  15. ஓட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலன் கருதி விசேட நடவடிக்கை. ஓட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து சமூக சக்தி செயலகத்தின் தலைமையில் நேற்று (09) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த திட்டம் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதோடு ஒருங்கிணைப்பு பணிகளை ஜனாதிபதி அலுவலகம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் ஓட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான தேசிய அளவிலான பொறிமுறை முன்னெடுக்கப்பட்டது. ஓட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 250 மில்லியன் நிதியை சமூக சேவைகள் திணைக்களத்தால் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குதல், பராமரிப்பு நிலையங்களை செயல்படுத்த தேவையான மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பது, இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களை இணைத்து அறிவியல் பின்னணியுடன் கூடிய புதிய மாதிரியொன்றைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டது.இந்த விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர். ஓல்கா, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க,மேலதிகச் செயலாளர் எச்.ஏ. ஹேமா பெரேரா, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன, சுகாதார அமைச்சின் சமூக சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் வருணி ரசாதரி, சமூக சுகாதார பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமாலகே மற்றும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துஷித சேனாதிபதி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1438718
  16. 15 வயது சிறுமியை… அந்த இளைஞன் விடுதிக்கு கொண்டு வரும் போதே, விடுதி உரிமையாளர் காவல் துறைக்கு இரகசிய தகவல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக… அந்த விடுதி உரிமையாளரும் சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டமைக்காகவும், சிறுமியை பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்காமல் இருந்தமைக்காகவும் பாரதூரமான குற்றமாக கருதி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,
  17. அறப் படித்த ஆட்கள்தான்… இப்பிடியான கூழ் முட்டை வேலை செய்யுறது. 😂
  18. 5- வகையான பாரம்பரியமான துவையல் 🥥 1. தேங்காய் துவையல் (Coconut Thuvaiyal) சிறப்பம்சம்: எளியதும், பரம்பரிய சுவையும் 🔸 பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் வத்தல் மிளகாய் – 2 உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம் – சிட்டிகை உப்பு, எண்ணெய், சிறிது இம்லி 🔸 செய்முறை: 1. எண்ணெயில் பருப்பு, மிளகாய் வதக்கி, இறுதியில் இஞ்சி, பெருங்காயம் சேர்க்கவும். 2. தேங்காய், உப்பு, இம்லி சேர்த்து அரைக்கவும். 3. சாதத்துடன் கலந்தால் அருமை! --- 🍅 2. தக்காளி துவையல் (Tomato Thuvaiyal) சிறப்பம்சம்: கொஞ்சம் காரமானும், நல்ல Shelf life கொண்டதும் 🔸 பொருட்கள்: தக்காளி – 3 வத்தல் மிளகாய் – 3 கடலை பருப்பு – 1.5 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம், உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. பருப்பு, மிளகாய் வதக்கி, பின் தக்காளி சேர்த்து வெந்துவிடும்வரை வதக்கவும். 2. உப்பு சேர்த்து அரைத்து, சிறிது எண்ணெயில் சுட்டு வைக்கவும். --- 🌿 3. கொத்தமல்லி துவையல் (Coriander Thuvaiyal) சிறப்பம்சம்: கொத்தமல்லி வாசனையுடன் அருமையான பச்சை நிற துவையல் 🔸 பொருட்கள்: கொத்தமல்லி இலை – ஒரு கட்டு பச்சை மிளகாய் – 2 கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிது இம்லி, உப்பு 🔸 செய்முறை: 1. பருப்பு, பச்சை மிளகாய் வதக்கி, பின் கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 2. அனைத்தையும் அரைத்துத் தாளிக்கவும். --- 🌶️ 4. கார வெங்காய துவையல் (Spicy Onion Thuvaiyal) சிறப்பம்சம்: சாதத்துடன் சும்மா சூப்பரா இருக்கும் 🔸 பொருட்கள்: வெங்காயம் – 2 (நறுக்கியது) வத்தல் மிளகாய் – 3 இஞ்சி – சிறிது பெருங்காயம் – சிட்டிகை உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. எண்ணெயில் வெங்காயம், மிளகாய், இஞ்சி வதக்கவும். 2. உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். 3. தேவைப்பட்டால் எண்ணெயில் சிறிது வதக்கவும். --- 🫘 5. பருப்பு துவையல் (Mixed Dal Thuvaiyal) சிறப்பம்சம்: அதிக நாள்கள் வைத்துக் கொள்ளக்கூடியதுடன், சத்து அதிகம் 🔸 பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி வத்தல் மிளகாய் – 3 இம்லி – சிறிது தேங்காய் – 2 மேசைக்கரண்டி (ஐச்சிகை) பெருங்காயம், உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. பருப்பு, மிளகாய் வதக்கி, தேங்காய், இம்லி சேர்த்து அரைக்கவும். 2. எளிய சாதம், இடியாப்பம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சூப்பர். தமிழ்நாடு ரெசிப்பீஸ்
  19. யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது. யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து, துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டார். இதனையடுத்து பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறித்த சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும், அவரே சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து வந்து 17 நாட்கள் விடுதியொன்றில் தங்க வைத்திருந்தார் எனவும் தெரியவந்துள்ளது. அதேவேளை, விடுதியின் உரிமையாளரும், குறித்த சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனைக் கைதுசெய்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438714
  20. செம்மணி மனித புதைகுழி: இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம். செம்மணி மனித புதைகுழியில் கடந்த 15 நாட்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று நண்பகலுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438700
  21. யாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்! யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டத்தில், காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsயாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்!யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மால...
  22. Avocado பழத்தை... மாம்பழம் என எழுதி வைத்திருக்கின்றார்கள்.
  23. இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி! அமெரிக்காவால் அதிகளவு வரி தள்ளுபடி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு பல்வேறு பங்குதாரர்களுடன் மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்சிகளின் பலனாகவே இந்த வரிக்குறைப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அமெரிக்கா, ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்த 44 சதவீத வரியை மறுசீரமைத்து, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 30 சதவீத வரி மட்டுமே விதிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானம், இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாக இருக்குமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த வரிச் சலுகை காரணமாக இலங்கை தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் போட்டித் திறனை அதிகரிக்கும் என்பதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438688

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.