Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சர்வதேச விசாரணை குறித்து நீதி அமைச்சருக்கு விளக்கிய சாணக்கியன்! செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். எனினும் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாணக்கியன் தெரிவித்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” ‘மாண்புமிகு நீதி அமைச்சர் அவர்களே, இலங்கையின் சட்டத்தின் கீழ், சர்வதேச விசாரணை நடைபெறக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான வழிகள் உள்ளன. இதற்கான OMP ச ட்டம் நிறைவேற்றப்பட்டது .அதை நீங்கள் சென்று படித்துப்பாருங்கள். விஜயதாச ராஜபக்ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது, அவர் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார் ஆனால் அது நிறை வேற்றப்படவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ஒரு நீதிபதி நீக்கப்படும்போது வெளிநாட்டு விசாரணையாளர்கள் அல்லது வெளிநாட்டு நீதிபதிகள் நீதிபதி நீக்கப்படுவது சரியா இல்லையா என்பதை விசாரிப்பில் ஈடுபட வேண்டும் என்று மசோதா கூறியது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல என்றும், அவர்கள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எனவே உங்கள் துறையில் இவ்வாறான சட்டம் பற்றிய உங்கள் அறிவு போதுமானதாக இருக்காது,இல்லையா? ஒருவேளை நீங்கள் இந்த அவையில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு ஒரு சில ஜனாதிபதி மன்றங்களுடன் பேசி சில ஆலோசனைகளைப் பெற வேண்டும். சரியான தகவல் இல்லாமல் தெளிவில்லாமல் எனது தீர்மானத்தின் அடிப்படையை நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். சர்வதேச பங்கேற்பைக் கொண்டிருக்க இலங்கையின் சட்ட கட்டமைப்பிற்குள் போதுமான இடம் உள்ளது. எனவே உங்களுக்கு இவை பற்றி தெரியாவிட்டால், அதைச் சொல்லாதீர்கள். மேலும் நான் உங்கள் சுயாதீன வழக்கறிஞர்களுடன் என்னைக் குழப்பிக் கொள்ளவில்லை, நான் மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பு வழக்கறிஞர் அலுவலகத்தைப் பற்றிப் பேசுகிறேன்” இவ்வாறு சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1438664
  2. அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை! நாட்டின் சிறைச்சாலைகளில் அதிகளவிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்” சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை மட்டும் அடைக்கும் வசதி உள்ளபோதும், தற்போது 33,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.” கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது ” சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் இந்த நாடு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதேசமயம் ”சிறைச்சாலை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள் எனவும், ஒரு சிலரால் செய்யப்பட்ட சில தவறுகள் நம்பிக்கையை சேதப்படுத்தியிருக்கலாம் எனவும், இலங்கையில் உள்ள பல சிறைச்சாலைகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சிறைச்சாலை ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் உள்ளது எனவும், தொலைபேசிகள் குறைவாகவே உள்ளன எனவும் தற்போது முடிந்தவரை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438652
  3. நிலவிவரும் வறட்சியான காலநிலை! நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலையினால் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதோடு நீரின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு தண்ணீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு 1939 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438657
  4. பால்மாவின் விலை அதிகரிப்பு! இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால் மா பொதியொன்றின் புதிய விலை 1,200 ரூபாயாகும். அதேபோல், 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438673
  5. செம்மணி மனிதப் புதைகுழி: 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்று 14வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 7 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438665
  6. குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம்; 09 பேர் உயிரிழப்பு, பலர் மீட்பு! குஜராத்தின் வதோதராவில் வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று (10) காலை இடிந்து விழ்ந்துள்ளது. இதன்போது, பாலத்தில் பயணித்த 05 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் பலர் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கம்பீரா பாலம் கடந்த ஆண்டுதான் பழுதுபார்க்கப்பட்டதாகவும், பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு மாநில முதலமைச்சர் ரூ.212 கோடி மதிப்பிலான புதிய பாலத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். எவ்வாறெனினும், விபத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுக்கள் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர். வதோதரா மாவட்டத்தின் பத்ராவில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்ததை சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன. https://athavannews.com/2025/1438581
  7. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது” ‘பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம். பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது. பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும். பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டொலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும். பிரேசில் இறையாண்மை,பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது’ இவ்வாறு பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438672
  8. யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வு 14ஆம் நாள் 09.07.2025 யாழ்ப்பாணம்.com
  9. தடுப்பூசி ஏற்ற... உங்கள் நண்பர்கள், உங்களுக்கு நன்மையே செய்துள்ளார்கள். 😂
  10. அறுகம்பையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு! இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இலங்கை அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், பொலிஸார் மற்றும் கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. மேலும் முக்கிய சந்திகள், வர்த்தக நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மோப்பநாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருவதோடு, சில இடங்களில் ட்ரோனின் உதவியுடன் வான் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து பொத்துவில் பகுதிக்கு அதிகளவான உல்லாசப்பிரயாணிகள் வருகை தருவதால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இவ்வாறு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438557
  11. வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல்? வட மாகாணத்தில் இடம்பெற்று வரும் சில சட்ட விரோத மணல் கடத்தல் சம்பவங்களில் பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர்இ வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், ஒப்பந்தகாரர்கள் சங்க நிர்வாகத்தினர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2025/1438573
  12. பாரிய அளவிலான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மீட்பு! பாரிய அளவிலான ஆயுதங்கள், ஒரு தொகை போதைப்பொருட்கள் என்பவற்றை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு SMG வகை துப்பாக்கிகள், பத்து 9 மில்லி மீட்டர் தோட்டாக்கள் கொண்ட இரு மெகசின்கள், T56 துப்பாக்கி வகை ஆயுத பாகங்கள், 9.24 கிலோ ஹெராயின் மற்றும் 67.57 கிலோ கேரள கஞ்சா உள்ளிட்டவை மீட்கப்பட்ட பொருட்களாகும். கடந்த ஜூலை 03 ஆம் திகதி ராகமையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ‘ஆர்மி உபுல்’ என்ற நபர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ராகம, படுவத்த மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது, அவரது பையில் 09 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெராயின் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். விசாரணையில் சந்தேக நபர், ராகமை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தான் வழங்கியதாகவும், அதை தனது தற்காலிக இல்லத்தில் மற்றொரு ஆயுதத்துடன் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து குறித்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன. மேலும் விசாரணையில் 67 கிலோவுக்கு மேல் எடையுள்ள கஞ்சா மற்றும் ஆயுதங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 26 வயதான சந்தேக நபர் பொரளை, பேஸ்லைன் வீதியைச் சேர்ந்தவர் என்பதுடன், தற்போது மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1438594
  13. ஜனாதிபதி பொது மன்னிப்பு மோசடி; துஷார உப்புல்தெனிய பிணையில் விடுவிப்பு! ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனியவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியது. இந்த ஆண்டு வெசாக் போயா அன்று ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் தண்டனை பெற்ற ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அமைச்சரவை முடிவின்படி உபுல்தேனியா பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். முந்தைய நடவடிக்கைகளின் போது, வெசாக் பொது மன்னிப்பு பட்டியலில் அவர் இல்லாத போதிலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் உப்புல்தெனிய சட்டவிரோதமாக அதுல திலகரத்னவை விடுவித்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மன்னிப்பு முறையைப் பயன்படுத்தி 60க்கும் மேற்பட்ட கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1438619
  14. 2026 ஆம் ஆண்டிற்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதி! இலங்கையின் அனைத்து சிரேஷ்ட மற்றும் இடைநிலைப் பாடசாலைகளுக்கும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இணைய வசதி வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதன்போது இணைய வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை பாடசாலைகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ‘1000 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும், இதுவரை 1500 பாடசாலைகளுக்கு 1900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ்இ இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன், கல்வித் துறையின் அனைத்து நிலைகளையும் ஒருங்கிணைக்கும் தேசிய கல்வி மேலாண்மை அமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2026 இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும் எனவும், இதற்காக பாடசாலைகளுக்கு 5,000 ரூபா வரம்பற்ற தரவு தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438623
  15. ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பிள்ளையானுக்கு முன்பே தெரியும் – பொது பாதுகாப்பு அமைச்சர். “பிள்ளையான்” என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் காவலில் இருந்தபோது 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். உயித்த ஞயாறு தாக்குதல்கள் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே இந்த விடயத்தை கூறிய அவர், தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பே அவர் அதைப் பற்றி அறிந்திருந்தார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்றும் குறிப்பிட்டார். 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் குறித்த நீண்டகால விசாரணையில் இந்தக் கூற்று ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கின்றது. https://athavannews.com/2025/1438624
  16. ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம்! ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் பானுடா கிராமத்திற்கு அருகே இன்று (09) பிற்பகல் ஜாகுவார் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இந்திய விமானப்படை (IAF) விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஐந்து மாதங்களில் இது போன்று பதிவான மூன்றாவது விபத்தாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, விமானியின் உடலுடன், விமானத்தின் இடிபாடுகள் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டன. உடல் கடுமையாக சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த விமானி மற்றும் மற்றொரு நபரின் அடையாளங்கள் இன்னும் இராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. போர் விமானம் பயிற்சிப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படை ராஜஸ்தானில் பல தளங்களை இயக்குகிறது. ஜோத்பூர் மற்றும் பிகானரில் முக்கிய தளங்கள் உள்ளன. விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆரம்ப விசாரணையை முடித்த பின்னர் இராணுவம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1438637
  17. காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ட்ரம்ப் – நெதன்யாகு இடையே நடைபெற்ற சந்திப்பு! காசாவில் நடந்து வரும் போர் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் செவ்வாய்க்கிழமை (08) மாலை இரண்டாவது முறையாக சந்தித்தனர். 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு நிபந்தனை மீதமுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறியதை அடுத்து இந்த சந்திப்பு நடந்தது. செவ்வாயன்று 5:00 EST (21:00 GMT) மணிக்குப் பிறகு நெதன்யாகு வெள்ளை மாளிகைக்கு நுழைந்து ட்ரம்புடன் சந்திப்பினை மேற்கொண்டார். இந்தச் சந்திப்புக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவல்லை. இந்த சந்திப்புக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை நெதன்யாகு, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை சந்தித்தார். ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்குப் பின்னர், நெதன்யாகு அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது அரசுப் பயணமாக இது அமைந்துள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் நெதன்யாகு, காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை முடிந்ததாக நம்பவில்லை என்றும், ஆனால் பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு போர் நிறுத்தத்திற்காக நிச்சயமாக செயல்பட்டு வரும் நிலையில், எங்கள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றார். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் காசாவில் உயிருடன் இருக்கும் 10 பணயக்கைதிகளின் விடுதலையும், இறந்த ஒன்பது பேரின் உடல்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இஸ்ரேலிய பிரதமருக்கும் ட்ரம்பிற்குகம் இடையிலான சந்திப்பிற்கு முன்பு, ஒரு கட்டார் தூதுக்குழு வெள்ளை மாளிகைக்கு வந்து அதிகாரிகளுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பேச்சுவார்த்தைகள் பற்றி அறிந்த ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான அண்மைய சுற்று பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இஸ்ரேலிய புள்ளிவிவரங்களின்படி 2023 ஒக்டோபர் 7 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்று 251 பணயக்கைதிகளைக் கைப்பற்றியுள்ளது. இஸ்ரேலின் பழிவாங்கும் தாக்குதலில் காசாவில் குறைந்தது 57,500 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பிரதேசத்தின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1438558
  18. வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை! வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தை கடுமையான விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் உரையாற்றிய அவர், மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்களை (LCs) திறந்துள்ளது. இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், மீதமுள்ள நிதியை கையாள்வது இப்போது நிச்சயமற்றதாகவே உள்ளது. மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமிட்டபடி இறக்குமதிக்கு கிடைக்குமா அல்லது புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த விரைவில் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவோம் என்று நம்புகிறோம். நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், சந்தை தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து உள்ளூர் வாகன விலைகள் தவிர்க்க முடியாமல் மீண்டும் உயரும். தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக குறைந்தது 9,000 வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். அத்துடன், வாகன அசெம்பிளி ஆலைகளுக்கு வரி சலுகைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் முடிவையும் விமர்சித்த அவர், அது அர்த்தமுள்ள பொருளாதார நன்மைகளை வழங்கத் தவறிவிட்டது என்றும் கூறினார். https://athavannews.com/2025/1438545
  19. பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்! சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புத் துறையில் அந்நாட்டுடன் ஒத்துழைப்பதாகவும் பெய்ஜிங் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்களன்று (07) கூறினார். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் போது இஸ்லாமாபாத்திற்கு அதன் பங்கு மற்றும் உதவி குறித்த நேரடி கேள்விக்கு பதிலளிக்க அவர் விரும்பவில்லை. ஒரு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய அண்டை நாடுகள், பாரம்பரிய நட்பை கொண்டுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இயல்பான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் அந்த விடயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரையும் சீனா குறிவைக்கவில்லை என்றார். இந்திய இராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங், பல்வேறு ஆயுத அமைப்புகளை சோதிக்க மோதலை பிரதானமாக பயன்படுத்தி சீனா பாகிஸ்தானுக்கு தீவிர இராணுவ ஆதரவை வழங்கியதாக பரிந்துரைத்ததைத் தொடர்ந்து சீனாவின் மேற்படி பதில் வந்தது. https://athavannews.com/2025/1438489

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.