Everything posted by island
-
`உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான்
அடுத்த வாரமே தன்னைப் பிரபாகரனின் பேரன் என்பார். இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு அடிக்கிற (B)பிராண்டை பொறுத்து மாறுபடலாம். 😂
-
`உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான்
சங்கி என்றால் சக தோழன் என்று அர்ததம் என்று சமீபத்தில் சீமான் கூறினார். இப்போது உண்மையான சங்கி என்றால் திமுக தான் என்கிறார். அப்படியாயின் திமுக என் உண்மையான சக தோழன் என்று கூற வருகிறாரா?
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
தனக்கு தானே சூனியம் வைக்க அநுரா ஒன்றும் தமிழ் தேசிய தலைமைகள் அல்ல. முந்தய சிங்கள தலைமைகள் போல் இவ்வாறான விடயங்களில் மிகுந்த பொறுப்புணர்சியுடன் யோசித்து சாதுரியமாகவே செயற்படுவார். ஆகவே இவ்வாறான உசுப்பேற்றல்கள் தமிழ் தலைமைகளுக்கு பலித்ததை போல இங்கு பலிக்கப்போவதில்லை. இருப்பினும் பழக்க தோசத்தில் முயன்று பார்த்துள்ளீர்கள். 😂
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மக்களை உணர்சசி அரசியலை செய்து பிரச்சனைகளை தீர்க்காமலேயே நீண்ட காலம் தமிழ் தேசியக்கட்சிகள் பலன் பெறுவதைக் கண்டு கொதித்து போன அர்ச்சனா அதற்கெதிராக கிளர்ந தெழுந்து, இவர்களால் நீண்ட காலமாக பிரச்சனைகளைத் தீர்காமல் அதை பேசிப் பேசியே எவ்வாறு மக்களை ஏமாற்ற முடிகிறதென்று சிந்தித்து தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை ஏன் நான் பயன்படுத்த கூடாது என்று நினைத்தார். அவர் இதை realize செய்ததும் ஒரு தற்செயல் நகழ்வாகவே அமைந்தது. லூசுத்தனங்களை செய்ய செய்ய மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை கண்ட அவர், அட இது தான்டா நமக்கான தளம் என்று புல்லரித்து “ தமிழேண்டா” என்று புளகாங்கிதம் அடைந்தார். இந்த வார்ததை புலம் பெயர் தேசங்களில் மேலும் பல லூசுகளை உற்பத்தி செய்யும் என அவருக்கு நன்கு தெரியும். அது தனக்கு எதிர்காலத்தில் பலனளிப்பதற்கான முதலீடு தான் அவரது பாராளுமன்ற முதல் நாள் அமர்வில் அவரால் காட்டப்பட்ட குறளிவித்தை. இதை பார்தது மேலும பல அர்சனாக்கள் சிலவேளை வரலாம். யாழ்பாணத்தில் மக்கள் தொகை அதகரிப்பு வீதத்தை விட லூசுத்தனங்களை உற்பத்தி செய்வதில் தமிழ் ஊடகங்களுக்கும் யூருப்பர்களுக்கும் உள்ள போட்டி பிரமிப்பை ஊட்டுகிறது. ஊழல் ஒழிப்பு என்பது ஊழல் செய்பவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி முறையான சட்டவாளர்களை கொண்டு அதை முறைப்படி வாதாடினாலே சாத்தியம். (இது அவரது தங்கத்திற்கும் சட்ட புலமை பெற உதவியாக இருக்கலாம்) இப்படியான குரங்கு சேட்டைகள் அதற்கு உதவப் போவதில்லை. அர்ச்சனா ஆதாரங்களுடன் இதை முறைப்படி அணுகி டு வாதாடி ஊழல்வாதிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுத்தால் எனது கருத்தை வாபஸ் வாங்கி கொள்ளுகிறேன்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஊசி அருச்சுனா தன்னிடம் சத்திய மூர்ததிக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அதை அரசாங்கத்திடம் சமர்பிக்க வேண்டும். அல்லது முறைப்படி பொது நல வழக்கு தாக்கல் செய்து இவ்விடயத்தை அணுக வேண்டும். அதை விடுத்து இப்படி அதாகரிகமாக ஒரு வைத்தியசாலை பணிப்பாளரின் அலுவலகத்துக்குள் நுழைவது. பேசுவதை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது எல்லாம் அவரது பண்பாடற்ற செயல்கள். ஒருவருடன் உரையாடுவதை அவரின் அனுமதி இன்றி பதிவு செய்வதே குற்றம். அதை பொது வெளியில் வெளியிடுவதும் குற்றம். மேற்கு நாடுகளில் வாழ்ந்திருந்தால் இந்த அர்சுனாவுக்கு எப்போதோ கடும தண்டனை வழங்கப்பட்டிருக்கும். தான் ஒரு ஹீரோ என்ற நினைப்பில் அதிகமாக ஆட்டம் போடுகிறார். விரைவில் விளைவுகளை சந்திப்பார் என நினைக்கிறேன். மக்களுக்கு ஹீரோயிசம் காட்டுவதே இவரது நோக்கமே தவிர மருத்துவ ஊழல்களை கண்டுபிடிப்பதல்ல.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
@valavan எனது கருத்து என்பது அரசியல் தீர்மானம் குறித்த விமர்சனமே. அவ்வாறான விமர்சனங்கள் உலகில் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அரசியல் விடுதலை அமைப்புகளின் தலைமைகளுக்கும் பொருந்தும். ஒரு அரசியல் அமைப்பு அல்லது கட்சியின் அரசியல் தீர்மானங்கள் ஒட்டு மொத்தமான ஒரு தேசிய இனத்தின் மீது பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் போதும், அந்த தாக்கம் தலைமுறைகளை கடந்தும் தொடரும் போதும், அதை நோக்கிய விமர்சனங்கள், விவாதங்கள் நடப்பது உலக வழமை. சாதாரணமாக கண்கூடாக தெரியும் இந்த உண்மைகளை திரை போட்டு மறைக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு என்பது கடந்த கால அரசியலை எதிர்கொண்டதில் ஏற்பட்ட தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளும. காரணமாக இருக்கும் போது அவற்றை பற்றி உரையாடுவது தவறானதல்ல. இங்கு அரசியலில் புனிதப்படுத்தலுக்கு இடமில்லை. அரசியல் தீர்மானங்கள் முடிவுகள் புனிதமானவை அல்ல. அரசியல் தலைமைகளை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டாதாக புனிதப்படுத்துதல்(sanctification )என்பது மிக தவறான முன்னுதாரணம். அவ்வாறு செய்வது அது சார்ந்த சமூகத்திற்கே தீமை விளைவிக்கும். ஒரு பழைய அரசியல் தலைமைகளை புனிதப்படுத்துவதானது, அவர்களது தவறான தீர்மானங்களையும் முடிவுகளையும் சிக்கலின்றி மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது ஒரு தலைமுறையின் அரசியல் தவறுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. ஒரு அரசியல் தலைமையின் தீர்மானங்கள் இவ்வாறு புனிதப்படுத்தப்பட்டால் அந்த அரசியலை உள்வாங்கி, அதை முன்னுதாரணமாக தொடரும் புதிய தலைமுறையும் அதே பாணியை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும். அதே எதிர்பார்பபில் எந்த பொறுப்புத்தன்மை ( Accountability) இல்லாத முடிவுகளை மீண்டும் எடுக்கும். மூன்று தசாப்சங்களுக்கு முன்பான ஒரு அரசியல் தீர்மானத்தை பற்றி பேசக்கூடாது என்று இப்போது அச்சுறுத்தல் வருகிறது என்றால் அந்த சுதந்திர போராட்டம் மக்களுக்கானதில்லையா? ஆகவே திரும்பவும் கூறுகிறேன் ஒரு அரசியல் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது ஒரு போதும் மாவீரர்களை இழிவு படுத்துவதாகாது. அவ்வாறு நீங்கள் கருதுவது உங்கள் உரிமை உங்களுக்கு அந்த கருத்து இருக்கலாம். ஆனால் , அதை நீங்கள் என்மீது திணிக்க முற்படுவது தவறானது. அதை நான் ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை.
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை - இராமலிங்கம் சந்திரசேகர்!
அவர்கள் நெய்தல் படையுடன் 💪வந்தால் ஶ்ரீலங்கா நேவி ஒண்டுமே புடுங்கேலாது. விட்டுட்டு ஒட வேண்டுயது தான்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
சரி தான் கோஷான் இருந்தாலும்…. நையாண்டி சர்வாதிகாரிகளின் சிம்ம சொப்பனம் மட்டுமல்ல வரட்டு தேசியர்களுக்கான மாமருந்தாகவும் அமையலாம். உறைக்க சொன்னால் அதனால் என் மீது கொண்ட பெருஞ்சினத்தில் ரோஷம் வந்து திடீரெண்டு திருந்தி விட்டால்..👌 நான் இவர்களுடன் vacation போகப் போவதும் இல்லை. எலெக்சன் கேட்கப்போவதும் இல்லை. 😂
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துவது நல்லதே. 1987 ல் மாகாணசபையை உதைத்து தள்ளிவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீசை முறுக்கிய நாம் இப்போது அதற்கு கூட கெஞ்ச வேண்டிய நிலை. ஆகவே இதுவும் இல்லாமல் போக முதல் அன்று உதைத்து தள்ளியதை பொறுக்கி எடுத்துக்கொண்டு நடையை கட்டுவதே செயற்படு பொருள் 😂 முகத்தில் அசடு வழிவதை மறைக்கவும் 1987 ல் முறுக்கிய மீசையில் மண் ஒட்டியதை மறைக்கவும் வேண்டுமானால் சுமனை வைச்சு செய்யலாம். 😂
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
புலம் பெயர் புலிவால்களாக இருப்பதை விட அநுர பிரிகேட்றுக்கு போய்வருவது நல்லதே. புலிவால்களாக குண்டு சட்டிக்குள் குதிரையோடுகவர்களாக இருக்காமல் அங்கு சென்று சற்றே என்றாலும் அறிவை பெற்று வந்து அறிவார்ந்த தமிழ் தேசியவாதிகளாகவாவது மாறட்டும்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
உங்களுக்கு ஏற்கனவே சொல்லியாச்சு. உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்தால் தான் நான் கவலைப்படவேண்டும். எனது கருத்தை நீங்கள் வெறுத்தால் அந்த கருத்து சரியானது என்பதால் மிக்க மகிழ்சசி எனக்கு உண்டாகும். எனவே, நன்றி விசுகு.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
@விசுகு நீங்கள் எனது கருத்தை விரும்பி விருப்ப புள்ளி இட்டால் ஐயோ நான் மொக்குதனமான கருத்தை எழுதிவிட்டேனோ என் று கவலையுறுவேன். ஆனால், நீங்கள் மைனஸ் புள்ளியிடும் போது நான் சரியாக நேர்மையாக சிந்தித்து கருத்தெழுதி உள்ளேன் என்று அக மகிழ்வேன். நன்றி விசுகு.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
ஒட்டு மொத்த தேசியம் பேசிய கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளார்கள். அதிலும் வரட்டு தமிழ் தேசியம் பேசும் சைக்கிள் கட்சி பெற்ற வாக்குகள் ஒட்டு மொத்தமாக அகில இலங்கை ரீதியாக 39894 மட்டுமே. படு தோல்வி. யாழ்பாணத்தில் சைக்கில் கும்பல் பெற்ற வாக்குகளும் மூன்றே மாதம் அரசியல் செய்த அர்சனாவின் சுயேட்சை குழு பெற்ற வாக்குகளும் கிட்ட தட்ட சமமானவையே. அதாவது சுயேட்சைக்குழு 27855. சைக்கிள் குழு 27986. சென்ற முறையை விட அரைவாசி குறைவு. விருப்புவாக்கில் கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் பெற்ற விருப்பு வாக்குகள் கிட்டத்தட்ட சமமானதே. எனவே, மக்கள் கூறிய செய்தி வரட்டு தமிழ் தேசியத்தை கைவிடுங்கள் என்பதாகும். சைக்கில் கும்பலை தோற்கடித்த மக்கள் சொல்லிய செய்தி புலம் பெயர் நாடுகளில் இருந்து சைக்கில் கும்பலை ஆதரித்த சுயநல புலிவால் கும்பல்களுக்கும் சேர்தது தான். இதன் திரு கஜேந்திரகுமார் அவர்களும் சற்றே உணர்திருக்கிறார் போலவே தெரிகிறது. அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டால் அது வரவேற்கத்தக்கதே. தனது முன்னைய அரசியலை திருத்தி அவர் சரியான பாதையில் பயணிக்கும் போது இந்த புலம்பெயர் புலிவால்கள் அவருக்கும் துரோகிப்பட்டம் சூட்டுவார்கள். ஆனால் இந்த சுயநல கும்பலை புறக்கணித்து அவர் இனியாவது சரியான பாதையில் பயணிக்க வேண்டும்.
-
சிவஞானம் சிறீதரன் அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினராகத் தெரிவு
அரசியலமைப்பு கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டியவர். அரசியலமைப்பு உருவாக்க குழுவுக்கு துறைசார் ஆலோசனைகளை வழங்கும் பேராசானாக இருக்கவேண்டியவரை தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணித்திருக்கிறார்கள். இருந்தாலும் இவரின் புலமையின்றி அரசியலமைப்பை வரையமுடியாது என்ற உண்மையை மனமார உணர்ததால் பின்கதவால் இவரின் புலமைசார் அறிவை பெறுமுகமாக உறுப்பினராக தேர்தெடுத்து இவரின் புலமையை பயன்படுத்த உள்ளார்கள்.
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
- இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
ஒரு காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றும் ஆங்கில உரைகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக மட்டத்தில் இருந்த ராஜதந்திரிகள் மட்டத்தில் பிரபல்யமாக இருந்தது. அதை கேட்கவே தூதரகங்களில் உள்ள பல ராஜதந்திரிகள் பாராளுமன்ற கலரிக்கு வருவதுண்டு. ஆனால் இந்த attraction ஐ வைத்து முழுமையான சர்வதேச பரப்புரைகளை அன்றைய தமிழர் தரப்புகள் செய்து அதை ஒரு political investment ஆக மாற்றவில்லை. ஆகவே, இவ்வாறான உரைகளை தாண்டி ஒட்டு மொத்தமான தமிழர் தரப்பால் செய்யப்படும் அரசியல் தான் படிப்படியாக எமக்கு பலனைத் தரும். தமிழரிடையே மட்டும் பெயரெடுப்பதற்காக பேசப்படும் வீர உரைகளால் கிஞ்சித்தும் பிரயோசனம் இல்லை. நினைவேந்தலுக்கு முழுமையான தடை இருக்கும் போது மகிந்த காலத்தில் பெட்டிப்பாம்பாக இருந்த கஜே இப்போது அதற்கான அனுமதியை அரசு உத்தியோகபூர்வமாக கொடுத்த பின்னர் அது போதாது என்று முழங்குவது தமிழரிடையே பெயரெடுக்கவும் இதை பேசுவதால் அரசங்கத்தான் எனக்கு எந்த ஆபத்தும் வராது என்ற துணிச்சல் மட்டுமே. இதனைத் தாண்டி மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் பல உண்டு. அவைகள் பற்றி கவனமெடுக்க வேண்டும் ஆக்கபூர்வ நடைமுறை அரசியலை செய்ய வேண்டும்.- டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
அதுக்கு Remy martin இருக்கு தானே!- டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. இவ்வாறான பெரு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்து நிறுத்தி அரச வருமானத்தை அதிகரிக்க வழிசெய்யும். இவ்வாறாக Corruption ஐ ஒழிப்பது நாட்டை பொருளாதார வளர்சசிக்கு இட்டு செல்வதற்கான முதல் படி. Welldone NPP.- இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
அந்த சரியான நேரத்தை தீர்மானித்திருக்க வேண்டியது தீர்க்கதரிசனமான என்று கூறப்படும் தலைமையே தவிர எம்மை போன்ற சாமான்யர்கள் அல்ல. இவ்வுலகில் வாழும் சாமான்ய மக்கள் எப்படி தம் வாழ்வில் தமது இயலுமைகளை கணக்கிட்டுத் தீர்மானங்களை எடுத்து தமது வாழ்வை நடத்துகிறார்களோ, தம் வாழ்க்கைப் பயணத்தில் தமது இயலுமைகளை தாண்டி தம்மால் எடுக்கப்படும் ரிஸ்க் என்பது தமது குடும்பத்தையோ, தமது பிள்ளைகளையோ காவு கொள்ளுமென தமது உள்ளுணர்வாலோ அறிவாலோ உணர்ந்தால் அதை தவிர்தது எப்படி பொறுப்புணர்வுடன் வருமுன் காப்போனாக தமது பிள்ளைகளுக்கோ, குடும்பத்திற்கோ ஆபத்துவராமல் நடந்து கொள்கிறார்களோ அதை விட அதிகமான பொறுப்புணர்வு பெரும் மக்கட்கூட்டத்தை முழுமையாக பொறுப்பெடுத்து அரசியல் செய்யும் அரசியல் தலைமைக்கும் உண்டு. இவ்வாறு சுலபமாக மற்றயவர்களுக்கு “சுத்துமத்து” என்று எம்மால் ஒரு “பிராண்ட்” கொடுத்து விட்டு அதை அடிப்படையாக வைத்து அரசியல் தீர்மானங்களை எடுக்க முடியுமென்றால் எமக்கு சர்வதேச நாடுகள் கொடுத்த “ பயங்கரவாதி “ என்ற “பிராண்ட்” ஐ ஏற்கத்தான் வேண்டும். நாம் மற்றயவர்களுக்கு கொடுத்த “பிராண்ட்” என்பது எமக்குள் மட்டும் பேசி பொழுது போக்க மட்டுமே எமக்கு உதவும். ஆனால் உலகம் எமக்கு கொடுத்த “பிராண்ட்” எமது நியாயமான அரசியல் கோரிக்கைகளை கூட வலுவிழக்க வைத்துவிட்டது. எரிக் சோல்ஹைம் வந்தது சமாதான பேச்சுவார்ததைக்கு அனுசரணை வழங்க மட்டுமே. எப்போது இருதரப்பும் பேச்சுவார்ததையை முறித்து யுத்தத்தை தொடங்கினார்களோ அத்துடன் அவரின் பணியும் முடிந்துவிட்டது. மீள பேச்சுவார்ததை மேசைக்கு இருதரப்பையும் கொண்டுவர அவர் பல தடவை முயற்சித்ததை பத்திரிகைகளில் பார்ததோம. தானே. இருவரும் அதை உதாசீனம் செய்தால் அவரால் என்ன செய்ய முடியும்? புண்ணுக்கு வலியா? மருந்துக்கு வலியா?- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நான. கூறியது வெளி நாட்டில் உள்ளவர்களை போல் எந்த ஐடியாவும் இல்லாமல் வெறும. கொடி பிடிக்கும் அரசியலை செய்வது பற்றி அல்ல. ஜேவிபி யை போல தம்மை காலத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு அறிவார்ந்த அரசியல் செய்வது பற்றியே. சும்மா தோன்றிய ஐடியா மட்டுமேயொழிய வேறொன்றும் இல்லை. அது தப்பாய் போய்விடுமென்றால் விட்டுடுங்க. ஆனால், கஜனுக்கு ஒருக்கா அறிவிச்சு அதை stop பண்ண சொல்லுங்கோ. அந்தாள் நான் சொன்னதை கேட்டுட்டு காலை எழும்பி முதல் வேலையா வழக்கு போட நீதிமன்றம் தேர்தல் திணைகளம் என்று அலைந்து அந்த கட்சியை இயங்க அனுமதி கேட்டாலும் கேட்டுடும். 😂- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
@goshan_cheநீலன் திருச்செல்வம் என்றுமே அரச எம்பியாக இருக்கவில்லை. இறக்கும் போதும் அவர் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினராகவே இருந்தார் என்பதே எனது ஞாபகம்.- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அதை தான் கூறுகிறேன். முன்னர் புலிகளால் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வி. பு. ம.மு கட்சியை மீண்டும் விண்ணப்பபிப்பதன் மூலம் புதுப்பிப்பதற்கான அனுமதியை எடுத்து அக்கட்சியில் அரசியல் போராளிகள் இயங்கும் போது அது சிறப்பாக இருக்குமல்லவா?- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
உண்மை தான் அந்த குறையை தமிழர் தேசிய அரசியல்வாதிகள் யாரோ ஒருவரோ பலரோ தீர்த்துள்ளனர்.- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இறந்து போன யாரையும் கூட்டிவர முடியாது. ஆனால் இன்று வரட்டு தமிழ் தேசியம் பேசி தம் பக்கத்தில் எல்லாவற்றையும் நியாயப்படுத்தி வருவோர் இவ்வாறான அரசியல் எமக்கு எப்படி பேரிழப்பை தந்தது, எனவே இனிமேல் அறிவுபூர்வ அரசியல் செய்ய வேண்டும் என்று எண்ணிப்பார்கக இவைகளை சுட்டிக்காட்டுதல் முக்கியம் இல்லையா? (உங்கள் திறமையான வாதத்தால் பிணை எடுத்ததற்கு உங்களுக்கு ஒரு நன்றி கூட கிடைத்துள்ளது. வாழ்த்துகள் கோசான்😂) just joke அந்நேரத்தில் சர்வதேச அனுசரணையுடன் அந்த தீர்வு திட்ட அடிப்படையில், ஒரு பேச்சுவார்ததையை நடத்தியிருந்தால், அந்த தீர்வுத்திட்டத்தை யாராலும் சாவடிக்க முடிந்திராது. மாறாக அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு அது ஒரு தீர்வாக வந்திருக்க கூடிய சாத்தியத்தை நீங்கள் முற்றாக நிராகரிக்கின்றீர்களா? அதை போன்றதொரு தீர்வை இனி பெற முடியுமா? அதற்கான உலக சூழல் உள்ளதா?- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நினைவு கூரலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுருகிறது தானே. முன்பு மகிந்த கோட்டபாய காலத்தில் இதை கேட்கும. துணிச்சல் கஜேந்திரகுமாருக்கு இருக்கவில்லை. நினைவு கூரலுக்கு அனுமதி அளித்த அரசாங்கம் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் தன் இலட்சனைகளை பாவிப்பது சட்ட மீறல் என்பதையே குறிப்பிட்டனர். ஜேவிபி யை போல புலிகளுக்கும் இரு முறை தடை நீக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியே இலங்கை தேர்தல் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அது புலிகளாலேயே கலைக்கப்பட்டு விட்டது. அதன் தலைவரும் கொல்லப்பட்டு விட்டார். கஜேந்திரகுமார் வழக்கு பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு காலாவதியான அந்த கட்சியை மீள பதிவு செய்ய அனுமதி பெற்று முன்னாள் போராளிகளில் அறிவுசார் ஆளுமை உள்ளவர்களை கொண்டு அக் கட்சியை இயக்கும்படி செய்யலாம். அவர்கள் காலத்திற்கு ஏற்ப தம்மை தகவமைத்து அரசியல் செய்வது சிறப்பாக இருக்கும். அவர்கள் படிப்படியாக தமது அரசியல் முதிர்சசி மூலம் கட்சியை கட்டியெழுப்பி ஒரு காலத்தில் தமது மடிந்த போராளிகளுக்கு ஜேவிபி போல தமது அடையாளங்களுடன் நினைவு வணக்கம் செய்யும் நிலையை உருவாக்க முடியும். செய்வாரா? - இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.