Everything posted by island
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கருத்துகளுக்கு தனிமனித தாக்குதல் மூலம் பதில் வழங்குபர்களில் நீங்கள் முக்கியமான ஒருவர். மீண்டும் கூறுகிறேன் அரசியல் என்பது எல்லோருக்கும் பொதுவானது. மக்களை பாதிக்கும், பாதித்த பாரிய அரசியல் முடிவுகளை எடுத்த அனைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே. எவரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இதுவே உலக வழமை. ஆகவே அப்படிப்பட்ட விமர்சனங்களையும் உண்மைகளையும் அவ்வப்போது நான் தெரிவிப்பேன். அதற்கு நீங்கள் தனிமனித தாக்குதல் மூலம் பதில் வழங்குவது குறித்து பிரச்சனை இல்லை. ஏனென்றால், உங்களுக்கு தெரிந்ததை தானே உங்களால் செய்ய முடியும் என்பதை ஒரு சக கருத்தாளரக புரிந்து கொள்கிறேன்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வீரப்பையன், தனி மனித தாக்குதலை ஒன்றிற்கு பல முறை பல திரிகளில் உங்கள் நண்பர்கள் செய்யும் போது வரவேற்ற நீங்கள் அவர்களுக்கு இந்த அறிவுரையை கூறிவிட்டு இங்கே வாருங்கள்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நேரடியாக நேர்மையாக கருத்தியல் ரீதியில் எதிர்கருத்து வைக்க திராணியற்ற கோழைகள் இப்படித்தான் பின்புறமாக புரளியை கிளப்பி குளிர்காய்வது வாடிக்கை. அவ்வளவு ரோஷம் இருந்தால் நேரடியாக தாயகம் சென்று எதிர்ததுப் போராடுவது தானே. அதை விடுத்து, குடும்பத்துடன் ஜாலியாக வாழ்ந்து கொண்டு அடுத்தவன் பிள்ளையை தூண்டிவிட்டு தாம் அதை வைத்து வியாபாரம் செய்து பிழைத்த கோஷ்டி தானே. இப்போது வியாபாரம் கொஞ்சம் மந்தம் போல, அதனால உசுப்பேத்தி வியாபாரத்தை தொடர முயற்சி செய்யும் கோஷ்டி இப்படி தான் இருக்கும்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
காட்டிக் கொடுத்து அழிக்க புலிகள் என்ன பத்து பதினைந்து பேராக கெரில்லா போரா நடத்திக்கொண்டிருந்தார்கள். வென்றால் எனது வீரம். தோற்றால் ஐயோ அவனால தான் தோற்றேன் என்று புலம்பல். இது என்னப்பா சின்னப்பிள்ளை சண்டையா? புலிகள் என்றுமே இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது தான் உண்மையில் புலிகளை கொச்சைப்படுத்தும் செயல்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நானாவா? அது யாரப்பா நானா?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இதுவரை எவருமே ஜனநாயக முறைப்படி ஒரு நிர்வாகத்தை செய்யவில்லை என்பதால் அப்படி தான் கூற முடியும். அரசியல்வாதிகள் மீது மட்டும் எல்லா பழி போட்டு தமது தவறுகளை மறைத்து தப்பிக்க நினைப்பவர்கள் மகா கோழைகள். எதிர் காலத்தில் புதிய தலைமுறையாவது பழைய கறள் கட்டிய அரசியலில் இருந்து தம்மை விடுவித்து உண்மையான அனைவருடைய புரிந்துணர்வான பண்பாடாக அறிவுபூர்வமான அரசியலை செய்யும் போது நிலைமை மாறுபடலாம்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அதாவது சீமான் ஒழுங்காக இருக்கும் போது ஆதரிக்காமல் சீமான் லூசனாக மாறியபின் ஆதரிக்கின்றீர்கள்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
மாற்றி மாற்றிப் பேசும் பக்கா அயோக்கிய அரசியல்வாதிகள் உள்ள நாடு அது ஆகவே அவர்கள் கூறுவதை ஆதாரமாக எடுத்துவராமல் அறிவியல் ஆய்வுகளை நம்புங்கள் வீரப்பையன். நான் நக்கி பிழைப்பது இருக்கட்டும், நீங்கள் தமிழை ஒழுங்காக வாசிக்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள். திரும்ப சென்று எழுத்துக்கூட்டியாவது அல்லது கற்றவர்களது உதவியுடனாவது நான் எழுதி இருப்பதை வாசிக்க முயற்சி செய்யவும்.😂 “எப்போதும் தமிழன்”, என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது தமிழை ஒழுங்காக வாசித்து அதன் பொருள் அறியும் அறிவும் திறனும் வேண்டும்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நீங்கள் என்னை சிங்கள தேசிக்காய் என்று அழைத்தால் எனக்கு கோபம் வராது. ஏனென்றால் அது எனக்கானது அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே தாராளமாக அப்படி நீங்கள் கூறி மகிழ்ந்து கொள்ளலாம். உங்களது அந்த மகிழ்சசிக்கு நான் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால், உண்மையை கண்டவுடன், அந்த உண்மை தனது பாசாங்குத்தனத்தைச் (Hypocrisy) சுட்டிக்காட்டுவதாக மனதார உணர்ந்து எவனுகெல்லாம் எரிச்சல் வருகிறதோ, அவனெல்லாம் தமிழ் தேசிக்காய் ஆவான். தேசிய என்ற வார்ததையில் சிறப்பான நேர்மறை அம்சங்கள் பல இருப்பதால் அந்தச் சொல்லுக்கு மோசமான பிற்போக்கு தேசிக்காய்கள் தகுதியற்றவர்கள்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இந்த பழமொழி தீவிர தேசிக்காய்களுக்கு தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். அடுத்த தலைமுறையையும் அழிக்க நினைக்கும் மகா அயோக்கியர்கள் இவர்கள். (வந்து சிவப்பு புள்ளியை இட்டு இதை ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துமாறு அன்புடன் உங்களை அழைக்கிறேன்.)
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சரியாக சொன்னீர்கள். எமது ஈழத்தமிழர் ஆயுத இயக்கங்கள் பற்றி தமிழ் நாட்டு மக்கள் அறிந்ததே, பிரபா- உமா துப்பாக்கி மோதல் என்ற, ஒற்றுமையீனம் மூலமாகவே. இது நடந்தது 19.05.1982. அன்று இவர்கள் இருவரையும் இலங்கை அரசிடம் கையளிக்காமல் பாதுகாக்கவும் ஒற்றுமைப்படுத்வுமே தமிழ் நாட்டு அரசியல்த் தலைவர்கள் கட்சி பேதமின்றி செயற்பட்டனர். அது முடியாமல் போன பின்பு கூட ஈழத்தமிழருக்கு உதவ கட்சி பேதமின்றி எல்லோரும் பங்களித்தனர் ஆனால், சிங்கள பேரினவாதம் என்ற பாரிய பொது எதிரியுடன் மோத தம்மை மேலும் பலப் படுத்தவேண்டிய நிலையில் கூட சுயநல அதிகார வேட்கையில் தம்முள் மோதி பலவீனப்பட்டு தம் தலையில் தாமே மண்ணை போட்ட பிறகு கூட திருந்தாமல் இன்றும் தாயகத்திலும் சரி புலம் பெயர் நாடுகளிலும் சரி தம்முள் முட்டி மோதிக்கொண்டே தமக்கு உதவிய குற்றத்துக்காக தமிழ் நாட்டிலும் அவர்களிடையே இவ்வாறான பிரிவினைகளை வளர்க்க தூபம் போடுகிறார்கள். ஒரு நாட்டை ஜனநாயக முறைப்படி நிர்வகிக்க எந்த தகுதியும் இல்லாத இனம் இது.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இந்திய மொழிகள் தொடர்பான அறிவியல் ரீதியான ஆராய்சசியை முதன் முதலாக செய்தவர் கார்டுவேல் மட்டுமே. அதற்கு முன்பு வரை வட மொழியான சமஸ்கிரகத்தில் இருந்து தமிழ் உருவாகியது எனவும் சிவபெருமானின் உடுக்கில் இருந்து ஒரு பக்கத்தில் சமஸ்கிரதமும் மறுபக்கதில் தமிழும் பிறந்ததாக அடிமுட்டாள் கருத்துக்களே நம்பப்பட்டு வந்தது. கார்டுவேல் செய்த மொழியியல் ஆய்வை இதுவரை எவரும் அறிவியல் அடிப்படையில் தவறென்று நிரூபிக்கவில்லை. அப்படி நிரூபித்ததாக எந்த உத்தியோகபூர்வ தகவலும் இல்லை. வெறும தமது அரசியல் பிழைப்புக்காக சிலர் கூறுபனவற்றை ஏற்கமுடியாது. அப்படி அறிவியல் ரீதியில் நீரூபித்ததாக நீங்கள் கூறினால் அதை நிரூபித்த அந்த ஆய்வாளர் யார்? 1. அவர்பெயர் என்ன? 2. அந்த ஆய்வுக்காக அவர் பாவித்த critaria என்ன? (தயவு செய்து பாரிசாலன், மன்னர் மன்னன் போன்ற யூருப் டுபாக்கூர்கள் முட்டாள்களின் பெயரை கூறிவிடாதீர்கள்.)
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
எனது கேள்வி இன்றும் “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்” சமஸ்தலங்கா திராவிட சங்கமய என்று உத்தியோகபூர்வமாக வைத்திருப்பதன் காரணம் என்ன? தமிழர் தேச காங்கிரஸ் என்று மாற்றியிருக்கலாம் தானே!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
@புலவர் உங்கள் தலைவர் கஜேந்திரகுமார் தமிழ் தேசம் கேட்டுக்கொண்டு தனது கட்சி பெயரை “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்” - “சமமஸ்தலங்கா திராவிட சங்கமய” என்ற பெயரை இப்போதும் உத்தியோக பூர்வமாக வைத்தருக்கிறார்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உண்மையான தமிழர்கள் என்றால் என்ன? தனியாக தொழிற்சாலையில் எந்த கலப்படமும் இல்லாது உருவாக்கப்பட்ட மனிதர்களா? உலகின் மற்றைய மனிதர்களை போல ஹோமோ சேப்பியன்ஸ் இன மக்கள் இல்லையா?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழர்கள் திராவிட மரபணுவில் இருந்து வந்தவர்களே. அந்த வகையில் தமிழ் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றே. 2009 வரை இந்த வரலாற்று புரிதல் ஈழத்தமிழர்களுக்கும் இருந்தது . யாழ்பாணம் நவீன சந்தை கட்டடம் கட்டப்பட்ட போது அது எமது திராவிட கட்டட கலையின் அடிப்படையில் கட்டப்பட்டது என்று அன்றைய பத்திரிகைகளில் சிலாகிக்கப்பட்டது. தமிழர்கள் திராவிடர்களே என்ற புரிதல் விடுதலைப்புலிகளுக்கும் இருந்தது. திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் என்ற நூலில், இலங்கை தீவில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் திராவிட குடியிருப்புக்கள் என்று எழுதி அடைப்புக்குறிக்குள் தமிழ் என்று அன்ரன் பாலசிங்கம் எழுதியுள்ளார். ஒருவேளை அன்ரன் பாலசிங்கமும் ஒரு வந்தேறி யோ?
- IMG_7908.jpeg
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
குழப்பம் வேண்டாம். சாப்பாட்டில் ஒரு கறியில் காரம் இல்லை, மற்ற கறியில் உப்பு குறைவாக உள்ளது, புளி குறைவாக உள்ளது, வடை , பாயசம், மிளகாய்ப் பொரியல் இல்லை என்று ஒவ்வொரு பந்தியிலும் இருந்து எழுந்து வெளியே வருபவன் இறுதியில் சோறும் இல்லாது இருப்பான். அந்த நிலையிலேயே மக்கள். அது தான் மக்களை இவ்வாறான சிந்தனைகளை நோக்கித் தள்ளியது.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
உண்மை.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அவர்கள் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி ஆளாளுக்கு பங்கு பிரித்துக் சுக போக வாழ்ககையை அனுபவித்துக் கொண்டு இன்றும் பொழுது போக்காக உசுப்பேற்றிக் கொண்டிருப்பவர்கள்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
கடந்த 75 வருடங்களாக தமிழர் தரப்பில் எவரும் தமது சாதனைப் பெறுபேறுகளை மக்களுக்கு கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. மக்களுக்கு ஏற்கனவே இருந்த நிம்மதியான வாழ்ககையைக்கூட கெடுத்தது தான் அவர்கள் மக்களுக்கு கொடுத்த பெறு பேறு. அந்த பல தசாப்த பட்டறிவு தான் மக்களை மாற்றி சிந்திக்க வைத்துள்ளது. அதனால் நீங்கள் சொன்னது போல் மக்கள் மீது குறை சொல்ல முடியாது. மக்களை இந்த நிலைக்கு கொண்டுவந்த 75 வருட ஒட்டுமொத்தமான எல்லா தமிழ் தரப்புக்களே இதற்கு காரணமான குற்றவாளிகள். அந்த கசப்பான வாழ்வை மறந்து மக்களை புதிய வாழ்வை தோக்கி பயணிக்க நினைப்பதில் தவறு இல்லை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ஒரு மாநிலத்தின் பெயரில் ஒரு கொண்டப்படும் “தமிழ் நாடு நாள்” எப்போது என்பதிலேயே ஒரு பொதுவான புரிந்துணர்வுக்கு வரமுடியாத அளவுக்கு அரசியல் காழ்புணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது. அன்று பேரறிஞர் அண்ணா உத்தியோகபூர்வமாக தமிழ் நாடு என்ற பெயரை சூட்டியிருக்காமல் விட்டிருந்தால் எந்தக் கலத்திலும் அந்த பெயரை வைக்க முடியாமல் போயிருக்கும். ஏனென்றால் தமிழ் நாடு என்ற பெயரைப் பார்தது எரிச்சலடைந்த சங்கிகள் அதனை மாற்றி தமிழகம் என்று வைக்க அல்லது முடிந்தால் தக்ஷனபிரதேசம் என்றை வைக்கவேண்டும் என று சங்கிகள் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
இல்லை ஜனாதிபதி சட்டத்தரணி. மாம்பழ சின்னதில் தேர்தலில் நிற்பவர்.
-
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி
இந்த கிறுக்கு சாமியின் பேட்டி ஒன்று கேட்டேன். தலைவர் இறக்கும் போது தமிழீழத்தை கைவிடுவதாக கூறவில்லையாம். எனவே தமிழீழத்தை கைவிட்டு இன்று சமஸ்டி கேட்க எவருக்கும் உரிமை இல்லையாம். இப்படிபட்ட கிறுக்கு பிடித்த பைத்தியங்கள் எல்லாம் மக்களுக்கு அடவைஸ் பண்ணுதுங்க.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
தவராசா மாவீரர் துயிலும் இல்லம் துப்பவக்கும் இடத்தில் நின்று தானும் துப்பரவாக்குவது போல ஒரு காணொளி, போட்டோ எடுத்து அதை தனது முகநூலில் வெளியிட்டு தனது பிரச்சாரத்துக்கு உபயோகிக்கிறார். இதுவெல்லாம் மாவீரரை கொச்சைப்படுத்தும் வகைக்குள் வராது. 😂
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
நீங்கள் சொன்னாலும் சொன்னீங்க. அநுர ரீ கடைல அவரோட அலுவலகத்தை மாத்திட்டார். 😂