Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. இனவாதமற்ற நாடு என்பது ஒவ்வொரு பிரஜைக்கும் சமநிலை, சம உரிமைகள் மற்றும் சமப்பாடு வழங்கப்படும் ஒரு சமூகமாக இருக்க வேண்டும். அத்தகைய நாடு மக்கள் மக்களின் இன, மத, மொழி, தோற்றம், கலாசாரம் அல்லது பிற தனிப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் வேறுபாடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இனவாதமற்ற நாடு என்பது ஒற்றுமை, பன்மை, சமநிலை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட நாட்டு அமைப்பாக இருக்கும். இதை அடைவதற்கு அநுர என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்ன அரசியலமைப்பு மாற்றங்களை செய்யப் போகிறார் என்பது எனக்கு தெரியாது. காலங்காலமாக புரையோடிப்போயிருக்கும் இனவாதத்தை ஒழிப்பது நிச்சயம் சவாலான விடயம். “நான் மந்திரவாதியல்ல ஆனால் இதை ஒழிக்க நான் எனது பதவிக்காலத்தில் என்னால் முடிந்த அளவு பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார். இனவாதத்தின் தீமைகள் பற்றி சிங்கள பிரதேசங்களிலும் அவர்கள் மத்தியில் அதிகமாக உரையாடி உள்ளார். அவர் தனது ஆட்சியை ஆரம்பிக்க முதலே அவரை இனவெறியர் என்று கட்டமைத்த பிரச்சாரத்தை ஆரம்பித்தது நிச்சயமாக தீய நோக்கிலேயே! இனவாதம் என்பது, தமிழர் மத்தியில் புரையோடிப்போயிருக்கும் சாதிவாதத்தையும் உள்ளடக்கியது. சிங்கள இனவாதம் குறைந்தாலும் அது குறையுமா என்பது சந்தேகமே. தமிழ் தேசியப் பரப்பில் தலைவர்களாக இவ்வாறான பல இனவெறியர்கள் இருந்தும் அவர்களை “இனவெறியர்” என்று அழைப்பார்களா? அதுவும் இனவாதம் தான் என்பதை, வரலாற்றில் எமது தவறுகளை மறைத்து எழுதும் அது பற்றி பேசுபவர்கள் மீது அவதூறுகளை பதிலாக தெரிவிக்கும் எம்மவர் இங்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை என்பதோடு அதை ஜஸ்ரின் கூறியபடி சத்தமின்றி மொள்ள கடந்து செல்லவே பலரும் இங்கு விரும்புவர்.
  2. கருத்துக்கு எதிர்கருத்தாக உங்கள் செந்தோழர் என்று நக்கல். இதுவே தமிழ் தேசியவாமிகளின் கடந்த 75 வருட நடைமுறை. நான் அநுர ஆதரவாளன் அல்ல. இலங்கையின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்டுள்ள நிலையில் இலங்கையில் இதுவரு புரையோடிப்புள்ள இனவாதத்தை அகற்ற போவமாக அவர் உறுதி அளித்துள்ள போது இவ்வாறான அவதூறுகள் தேவையா?
  3. அநுர இனவெறியரக இருக்க வேண்டும் என்பதே ரஞ்சித் போன்ற இனவாதிகளின் நோக்கம். ஆனால் தாயகத்தில் உள்ள மக்களினதும் உலகம. முழுவதும் வாழும. லட்சக்கணக்கான மக்களுனதும் நோக்கம் இனிமேலாவது இலங்கையில. இனவாதம் ஒழியவேண்டும் என்பதும் அநுர இனவாதமற்ற ஆட்சியை தரவேண்டும் என்பதும்.
  4. ரஞ்சித் எழுதுவதற்கு நான் எப்படி முட்டுக்கடை போட முடியும்? ஆனால், இவ்வாறு முன்முடிவுடன் அவரை போன்ற பலர் சமூகவலைத்தளங்ககளில் கிளம்பி உள்ளார்கள். அவர்களது இனவாத நோக்கங்களை விபரித்து, வாசிக்கும் மக்கள் தெளிவு பெற நான் எனது கருத்துகளை எழுதினேன். அவ்வளவு தான்.
  5. எனக்கு கடந்த காலம் பற்றிய புரிதல் நன்றாகவே உள்ளது . இலங்கையில் இனவாதத்தை தூண்டியதிலும் அதை வளர்ததெடுத்ததுலும் சிங்களம், தமிழ் ஆகிய இரு பகுதியிலும் அரசியல் செய்த அனைவருக்கும் சம பங்கு உள்ளது என்பது .
  6. அவர் இனவாதமற்ற ஆட்சியை நடத்த போவதாக கூறியுள்ள நிலையில், அவர் தனது ஆட்சியை சரிவர ஆரம்பிக்க முதலே அவசரப்பட்டு அவரை இனவெறியர் என்று பிரச்சாரம் செய்வது சரி என உங்களுக்கு பட்டிருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்.
  7. சிங்கள அதிகாரவர்க்கத்தில் கடுமையான இனவாதிகள் இருக்க வேண்டும் என்ற விருப்பில் எப்போதுமே உள்ள தமிழர் தரப்பு செய்த தூண்டுதல்கள், தவறுகள் பலவற்றை இங்கு கூறினால் ஐயோ பழசை கிளறுகினான் என்று ஒப்பாரி வைப்பவர்களும் தாங்களே! கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜஸ்ரின் சில பழைய விடயங்களை ஆதாரத்துக்காக சுட்டிக்காட்டியபோது அவர் அவர் கூறிய வரலாற்று உண்மையை மறுக்க முடியாமல் போனதால் அவர் தேவையற்று பழசு காவி திரிவதாக கூறியவர. தாங்கள் என்பதை மிக சீக்கிரமே மறந்து விட்டீர்கள். ஜஸ்ரின் மிகசிறப்பாக கூறினார், வரலாற்றில் நடந்த பலவற்றை சுட்டிக்காட்டும் போது பூனைப்பாதங்களால் மொள்ள கள்ள மௌனத்துடன் கடந்து போக விரும்புபவர்களே வரலாற்றை நினைவு கூருகிறோம் என்ற போர்வையில் இன குரோதத்தை இலங்கையில் தக்க வைக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள்.
  8. வரலாற்றை நினைவு கூறுகிறோம் என்ற போர்வையில் வன்மத்தையும் குரோதத்தையும் விதைப்பது சிங்கள , தமிழ் இனவாதிகளின் வாடிக்கை. முதலில், “இனவெறியன் அநுர” என்ற இத்தலைப்பு சரியானதுதானா என்பதை பொறுப்புடன் யாழ் இணையம் சிந்திக்க வேண்டும். அநுர அங்கம் வகித்த மக்கள் விடுதலை முன்னணிக்குள் பல மாற்றங்கள் வந்து பல இனவாதிகள் வெளியேற்றப்பட்டு ஹரணி அமரசூர போன்ற சமூக ஆர்வலர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில் அவற்றை கண்ணக்கெடுக்காமல் பழைய ஜேவிபி செய்த அரசியல் நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக அநுர மீது திணித்து அவரை இனவாதாக கட்டமைப்பது தவறானது. அநுர பதவிக்கு வந்து இனவாதத்திற் தீமைகளையும் எவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் எமது பழைய அரசியல்வாதிகள் இனவாதத்தை வளர்ததார்கள் என்று விரிவாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்து புதிய பாதையில் இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவோன் என ற அறைகூவலை விடுத்த நிலையில் அவர் தனது ஆட்சியை முழுமையாக ஆரம்பிக்க முதலே அநுரவை ஒரு இனவெறியர் என்று கட்டமைக்க முன்வருவது வரலாற்றை நினைவுகூற அல்ல. மக்கள் மத்தியில் இனக்குரோதத்தை மறைய விடாமல் அதன் மூலம. தாம் அரசியல் நடத்தும் நயவஞ்சகமே.
  9. பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள் அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்.
  10. அநுர ஆட்சிக்கு எதிராக மக்களை தூண்டி அதற்கெதிராக அநுர நடவடிக்கை எடுக்கப்போய் அதில் தமிழ் மக்கள் இறக்க வேண்டும் தாம் அதை வைத்து வெளிநாடுகளில் புலம்பி அரசியல் வியாபாரங்களை தொடரவேண்டும் என்பதே இந்த சுயநல கும்பல்களின் நோக்கம். அதற்காகவே கடந்த சில நாட்களாக அநுரவுகெஉ எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பழைய பட்டறிவுகளை வைத்தை மக்கள் தெளிவடைந்து இவர்களின் இந்த அயோக்கியத்தனம் ஈடாறாமல் இனவாதம் ஒழிந்த நாடாக தமிழ் மக்கள் அங்கு மகிழ்வாக வாழவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
  11. கடந்த காலங்களில் கூட ஒவ்வொரு முறையும் தெற்கில் இனவாதத்தில் இருந்து விலகி பயணிக்கும் அரசியல் சக்திகள் சற்று பலம் பெற்று இனவாதம் பலமிழக்கும் சமிக்ஞைகள் எப்போதெல்லாம் தோன்றுகினதோ அப்போதெல்லாம் சிங்கள இனவாதத்தை எதிர்தது அரசியல் செய்வதாக காட்டிக்கொள்ளும் தரப்புகள் இவ்வாறு பதட்டம் அடைந்ததுடன் அதை கெடுத்து சிங்கள இனவாத அரசுகள. அங்கு பலம் பெற தம்பன் ஆனதெல்லவற்றும் செய்தன. அதன் தொடர்சசியே இப்போது சமூக வலைத்தளங்களில்லும் சில வலைத்தளங்கள், தொலைக்காட்சிகளிலும் அநுரவை சிங்கள இனவெறியலாக காட்டும் இந்த ஈனத்தனம். சிங்கள இனவாதிகளை விட மிக மோசமான இந்த இனவாதிகள் முறியடிக்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும்.
  12. இவர்களின் எண்ணம் ஈடேறக் கூடாது. சிங்கள, தமிழ் இனவாதிகளால் கடந்த 75 ஆண்டுகளாக சிதைவடைந்துவரும் தமிழ் மக்களின் வாழ்க்கை இனியும் இந்த இரு பகுதி இனவெறியர்களால் சிதைவடைய அனுமதிக்க கூடாது.
  13. அநுரா இனவெறிக்கு எதிராக தெரிவித்த விடயங்கள் தமிழ் இனவெறியர்களை பதட்டமட செய்துள்ளது. தமது தமிழ் தேசிய வியாபாரத்துக்கு புலம்பெயர் தாயக பிரதேசங்களில் பாதிப்பு வந்துவிடும் என்று இத்தரப்புகள் அச்சம் கொண்டுள்ளன. எனவே அநுரா தனது ஆட்சியை சரியாக ஆரம்பிக்க முதலே அவசரமாக பழைய மக்கள் விடுதலை முன்னணி செயற்பாடுகளை தூசி தட்டி எடுத்து அதை வைத்து அநுர மீது வசைமாரி பொழிந்து அநுரவை சிங்கள இனவெறியனாக தமிழ் மக்கள் மத்தியில் காட்டி தமது தமிழ் தேசிய வியாபாரத்தை நடத் முயல்கிறார்கள் என்பது தெரிகிறது.
  14. அநுர குமார திஸாநாயக்க இனவெறியனாகாக இருக்க வேண்டும் என்று கடும் போக்கு தமிழ் இனவெறியர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. இந்த தமிழ் இனவெறியர்களின் விருப்பம் ஈடேடக் கூடாது என்பதே தமிழ் மக்கள் எதிர்பார்பபு.
  15. அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளை நிராகரித்து அநுர கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். அங்கு உள்ளவர்களுடன் பேசியபோது அப்படி தான் நடக்கும் போல. உள்ளதாக தெரிவித்தார்கள். தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தமிழரசு கட்சி, கஜே கும்பல் ஆகியவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
  16. அட சீ! இது தெரிந்திருந்தால் மகேசன் மீதும் சேற்றை வாரி இறைத்து வசை மாரி பொழிந்திருப்போமே! நமக்கு அவ்வளவு விவரம் பத்தாது. இப்படியெல்லாம் எமது பொய அம்பலப்படும் என்று எப்படி தெரியும். 😂
  17. சண் மாஸ்டர் என்று ஒருவர் ஆதன் தொலைக்காட்சிக்கு செவ்வியளித்திருந்தார். உரைநடை முதல் அனைத்தும் நிலாந்தன் மாஸ்ரர்ர போலவே இருந்தது.
  18. ஒரு விடயம் எதற்காக எழுதப்பட்டது, எந்த கேள்விக்கு பதிலாக எழுதப்பட்டது போன்ற விடயங்களை வாசித்து விளங்க முயற்சிக்க வேண்டும். புரிதல் கடினமாக இருந்தால் அதனை திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும். அப்போதும் புரியவில்லை என்றால்…… no comment. That my attitude .
  19. சுமந்திரன் இதை கூறியது தேர்தலுக்கு முன்பு, அதாவது சஜித்தை அவர் ஆதரித்த போது வடக்கிற்கு அநுர வந்து அவர் பேசிய பேச்சை தமிழ் ஊடகங்கள் தமிழர்களை அவர் அச்சுறுத்துகிறார் என்று கூறியபோது ரணிலும் அப்படி கூறியபோது, அப்படியல்ல தமிழர்களை எச்சரிக்கும் தொனியில் அநுர பேசவில்லை என்று உடனடியாகவே தனது கருத்தை கூறியிருந்தார். இப்போது இந்த பழைய செய்தி இணைக்கப்பட்ட காரணம், அநுர வெற்றி பெற்ற பின் அநுரவுக்கு ஆதரவாக சுமந்திரன் மாறிப்பேசுகிறார் என்று மடை மாற்ற.
  20. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை கவனியுங்கள். ஜேவிபி போர் அழிவுளை விட்டு சென்றதாலோ பல ஆயிரம் சிங்கள இளைஞர்களின் தியாகத்தினாலோ மட்டும் அநுர ஜனாதிபதியாக தெரிவாகவில்லை. சிங்கள மக்களும் அதற்காக வாக்களிக்கவில்லை. போர் அழிவுகளுக்கு பின்னர் அவர்கள் தம்மை ஒரு அரசியல் கட்சியாக ஜனநாயக பாதையில் மிக நீண்ட காலம் வேலை செய்தார்கள். பல படித்த இளைஞர்களை கட்சிக்குள் உள்வாங்கினார்கள். அவர்களுடன் பல கலந்துரையாடல்களை செய்து தமக்குள் உள்ள முரண்பாடுகளை கருத்தியல் ரீதியில் அணுகி கட்சியை கிட்டத்தட்ட மக்கள் பணிக்கு தயாராக உள்ள கல்வியாளர்கள் குழுவாக மாற்றினார்கள். இறந்த தமது போராளிகளை மதித்தாலும் அவர்களின் தியாகத்தை வைத்து அவர்களின் பெருமைகளை மட்டும் பேசி கட்சி நடத்தவில்லை. ஜேவிபின் தவறுகளை நியாயப்படுத்தவில்லை. மாறாக தாம் ஆயுதப்போரட்ட காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டார்கள். அத்துடன் மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசினார்களேயொழிய இறந்த போரளிகளை பற்றி தினமும் பேசவில்லை. முக்கியமாக ஆயுத போராட்ட காலத்தில் தாம் செய்த தவறுகளை நியாயப்படுத்தவில்லை இவர்களை தமிழர் அரசியலுடன் பொருத்தி பாருங்கள். தம்மை காலத்துக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளாமல் மக்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாமல் வெறும் கோஷங்களையும் கருத்து முர்ணபாடு வரும்போது அவர்களை துரோகிகள் என்று திட்டுவது பொய்களை புனைந்து வசைமாரி பொழிவது ஆயுத போராட்டதில் போராளிகள் செய்த தவறுகளை இன்றும் நியாயப்படுத்துவது முதலியவற்றுடன் இறந்த போராளிகளை வைத்து அரசியல் செய்வதையுமே இன்றும் தாயக/ புலம் பெயர் அரசியலளர்கள் செய்கின்றனர். இவர்களின் அரசியல் சுயநல அரசியல் பிழைப்புக்காக தமது இறந்த தலைவரை கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் இரண்டையும் எப்படி நீங்கள் ஒப்பிடுவீர்கள்?
  21. ராஜகுமார் ரஜீவ்காந்த் சிங்கள மக்களுடன் இணைந்து அரசியல் செய்வதன் மூலமே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற கொள்கையுடன் சிங்கள இளைஞர்களுடன் இணைந்து வேலை செய்பவர். சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கமும் இவருடன் இணைந்தே பணியாற்றுகின்றார்.
  22. நிச்சயமாக பகிரலாம் ஏராளன். யாழ் இணையத்தில் நான் எழுதும் எந்த கருத்துக்கும் நான் காப்புரிமை பெறவில்லை. (பகிடி) 😂 கருத்துக்கள் சுதந்திரமானவை.
  23. இந்த இளைஞர்களை முன்னுக்கு விடவேண்டும் என்னும் போது சிரிப்பு தான் வருகிறது. 1979 இன் இறுதியிலும் 80 களின் ஆரம்பத்திலும் இப்படிதான் இளைஞர்கள் வந்து விட்டார்கள் இனி கிழடுகள் வேண்டாம் ஓய்வெடுக்கட்டும் என்ற கோசங்கள் மொத்த தமிழினத்தையும் அன்றைய காலத்தில் ஆட்டுவித்திருந்தது. ஆனால் அந்த இளைஞர்கள் முன்னையை விட மோசமான பேரழிவுகளையே தமிழினத்துக்கு தந்துவிட்டு சென்றனர். உலக அரசியலை விளங்கி கொள்ளாத அதற்கான முனைப்பை கூட காட்டாத இளையவர்கள் இருப்பதையும் அழிப்பார்கள் என்பதற்கு தமிழினமே உதாரணம். பழைய கறள் கட்டிய கிழடுகளின் வெற்றுக் கோஷங்களை அப்படியே வரிக்கு வரி உள்வாங்கி வெற்று வீரம் பேசும் பல முகநூல் இளையர்கள் தற்போது வலம் வருகிறார்கள். இளைஞர்கள் வரவேண்டும். அவர்கள் படித்த உலக அரசியல், சமூக ஞானம் மிகுந்த, துறைசார் திறமைகள் நிறைந்தவர்களாக இருத்தலே இன்றைய நிலையில் தேவை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.