Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. நிச்சயமாக பகிரலாம் ஏராளன். யாழ் இணையத்தில் நான் எழுதும் எந்த கருத்துக்கும் நான் காப்புரிமை பெறவில்லை. (பகிடி) 😂 கருத்துக்கள் சுதந்திரமானவை.
  2. இந்த இளைஞர்களை முன்னுக்கு விடவேண்டும் என்னும் போது சிரிப்பு தான் வருகிறது. 1979 இன் இறுதியிலும் 80 களின் ஆரம்பத்திலும் இப்படிதான் இளைஞர்கள் வந்து விட்டார்கள் இனி கிழடுகள் வேண்டாம் ஓய்வெடுக்கட்டும் என்ற கோசங்கள் மொத்த தமிழினத்தையும் அன்றைய காலத்தில் ஆட்டுவித்திருந்தது. ஆனால் அந்த இளைஞர்கள் முன்னையை விட மோசமான பேரழிவுகளையே தமிழினத்துக்கு தந்துவிட்டு சென்றனர். உலக அரசியலை விளங்கி கொள்ளாத அதற்கான முனைப்பை கூட காட்டாத இளையவர்கள் இருப்பதையும் அழிப்பார்கள் என்பதற்கு தமிழினமே உதாரணம். பழைய கறள் கட்டிய கிழடுகளின் வெற்றுக் கோஷங்களை அப்படியே வரிக்கு வரி உள்வாங்கி வெற்று வீரம் பேசும் பல முகநூல் இளையர்கள் தற்போது வலம் வருகிறார்கள். இளைஞர்கள் வரவேண்டும். அவர்கள் படித்த உலக அரசியல், சமூக ஞானம் மிகுந்த, துறைசார் திறமைகள் நிறைந்தவர்களாக இருத்தலே இன்றைய நிலையில் தேவை.
  3. இதுவே எனது கருத்தும். விடுதலைப் புலிகள் யுத்தம் புரிந்த பலமான காலத்தில் கூட தமிழீழம் என்பது சாத்தியமாக இருக்கவில்லை. அன்றைய யுத்தவெற்றிகளின் புளகாங்கிதத்தில் தமிழ் ஊடகங்களும் தமிழருக்குள்ளான பரப்புரைகளும் இவ்வாறான மாயைகளை, பிம்பங்களை தமிழ் மக்களிடையே மட்டும் உருவாக்கியிருந்த போதிலும், அனைத்துலக அரசியல் ராஜதந்திர மட்டத்தில் அதற்கான சூழ்நிலையை நாம் அடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதை நெருங்க கூட இல்லை. அதற்கான உலக அரசியல் வேலைத்திட்டங்களை தமிழர் தரப்பு செய்யவும் இல்லை. ஆனால், உலகத்தின் உயர் அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஒரு கூட்டாட்சிக்கான சூழ்நிலையும் அதற்கு அழுத்தம் கொடுக்க கூடிய பலமும் தமிழர் தரப்புக்கு நிறையவே இருந்தது. வழமைபோல் அதீத எதிர்பார்பபிலும், தவறான அரசியல் வழிகாட்டுதலாலும், யுத்தம் தொடங்கினால் தமிழீழத்தை அடித்து பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், யுத்தமுனைப்பை உருவாக்கி அதை தேர்வு செய்தோம். ஏற்கனவே எதிரிக்கு யுத்தகளத்தில் பல அவமானகரமான தோல்விகளை கொடுத்து எதிரியை ஆக்ரோஷமன நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறோம் என்ற நிலையில் இந்த நேரத்தில் புலிகளுக்கு ஏற்படும் பாரிய தோல்வி அல்லது புலிகளின் அழிவு என்பது தமிழரின் அரசியலை அவர்களது அபிலாசைகளை கேவலமான சூன்ய நிலைக்கு இட்டு செல்லும் என்ற பொறுப்புணர்வு கூட அன்று அரசியல் தீர்மானங்களை எடுத்தவர்களுக்கு இருக்கவில்லை. அது போகட்டும் என்றால் 2009 ம் ஆண்டின் பின்னர் உருவான புதிய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தாயக/ புலம் பெயர் அரசியலாளர்கள் இணைந்து சாத்தியமான ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்கி ஒரே குரலில் அனைத்துலக மட்டத்தில் ஒரு அழுத்தத்தை அன்று யுத்த வெற்றி திமிரில் ஆடிய ராஜபக்ச அரசுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் தமிழ்தரப்பு இனஅழிப்பு யுத்தக்குற்றங்களை வைத்து தமிழீழம் அடையலாம் என்ற மாய பிம்பங்களை கட்டியெழுப்பி பேதை தனமாக அதை நம்பி நாடுகடந்த தமிழீழம் போன்ற உருப்படியற்ற உதவாக்கரை தில்லுமுல்லு வேலைகளிலேயே கவனம் செலுத்தினர். அதன் விளைவு இன்று தாயகத்தில் தமிழரின் இருப்புக்கே ஆபத்து என்ற நிலையில் வந்து நிற்கிறது. ஒரு காலத்தில் தேசியத்துக்காக தமது உயிர், உடமை எல்லவற்றையும் இழக்க தயாராக இருந்த மக்கள், இன்று இவர்களை நம்பினால் அடுத்த தலைமுறையையும் காவு கொண்டுவிடுவார்கள் என்ற பட்டறிவின் காரணமாக வந்த பயத்தினால் தமது அன்றாட பிரச்னைகளை தீர்ப்பவர்களுக்கு வாக்களித்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
  4. நான் அரசியலை அரசியலாக பார்கிறேன். இதில் பக்தி விசுவாசத்துக்கு இடமில்லை. தமிழ் அரசியலில் இராமநாதன் சகோதரர்கள், செல்வா, பிரபா, அமிர், சம்பந்தன் அனைவருமே தோல்வியடைந்த அரசியல் தலைவர்களே. தமது மோசமான அரசியலால் தமிழரின் அரசியல் பொருள்ளதார, கல்வி பலத்தை சிதைத்ததில் அனைவருக்கும் சம பங்கு உள்ளது என்று விசுவாசத்துக்கு அப்பால் ஒளிவு மறைவின்றி கூறுகிறேன். யாரையும் வேறுபடுத்தி இகழவேண்டிய அல்லது துதி பாடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
  5. அப்ப ஏன் சர்வதேசத்துக்கு செய்தி சொல்லப் போகிறோம் என்று வெளிக்கிட்டவையாம். சர்வதேசம் கேட்டதா தங்களுக்கு செய்தி சொல்ல சொல்லி? சர்வதேசம் கேட்காமலேயே வடகிழக்கு இணைத்த சுயாட்சியை வட கிழக்கில் 10 வீதமான மக்கள. மட்டுமே ஆதரிக்கிறார்கள் என்ற சேதியை சொன்னதேன்?
  6. அட! இந்த அரியநேந்திரனே இனந்தெரியாத ரவுடிகளை வைத்து வெற்றி பெற்ற வேட்பாளரை கடத்திச் சென்று மிரட்டி அவரின் வெற்றியை தட்டிப்பறித்து பாராளுமன்றப் பதவிக்கு வந்தவரா? அது தெரிந்தும் அதைபற்றி இங்கு அதைக் கண்டிக்கும் நேர்மை இங்கு எவருக்கும் இல்லை போல் இருக்கிறது.
  7. அனுராவின் கட்சிக்கு தமிழ் பிரதேசங்களில் ஒரு சில தொகுதிகளாவது வரும் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்க வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் கல்வி அறிவுள்ள நேர்மையான இளையவராக இருக்கவேண்டும். பழைய கறள் கட்டிய வெற்று கோஷங்களுடன் மாயைகளை பேசுபவர்கள் வயதில் இளையவர் என்றாலும் அவரை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
  8. 2004 ம் ஆண்டு தேர்தலில் தானே பல கள்ள வாக்குகளை போட்டதாக சிறீதரன் வெளிப்படையாக கூறினார். அப்படி கள்ள வாக்கு போட்டதால் தான் 2004 ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் குடைத்ததாக கூறினார். அவ்வாறு வெளிப்படையாக அவர் தெரிவத்த விடயம் பற்றி யாரும் இங்கு உரையாடுவதில்லை. சிறீதரன் கூறுகிறார் அதை பற்றி பேசினால் அந்த காலத்தில் இருந்தவர்களை எல்லாம் பிழை சொல்ல வேண்டி வரும் என்று. அப்படியானால் அந்த காலத்தில் இவருடன் கிளிநொச்சியில் இருந்தவர்கள் பல கள்ள வாக்குகளை போட்டனர் என்ற உண்மையை கூறுகிறார்.
  9. கள்ளா! என று தெருவில் சிலர் கத்தியது மட்டுமே முக்கிய ஆதாரம் போன்று நீங்கள் எழுதியது தங்களுக்கு சாதாரணமான விடயமாக தோன்றி இருக்கிறது.
  10. தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் உடனடியாக முறையிடுவதும் தேர்தல் ஆட்சேபனை வழக்கு தொடுப்பதும் தான் நடைமுறை. அதை விடுத்து தனது அல்லக்கைகளை வைத்து கள்ளா! கள்ளா! என்று கத்துவதல்ல. அது என்றுமே ஆதாரம் ஆகாது. ஒரு கருத்து களத்தின் மட்டுறுத்துனராக பொறுப்பான இடதத்தில் இருக்கும் நீங்கள் இதை எழுதியது உண்மையில் ஆர்ச்சரியத்தை அளிக்கிறது.
  11. விரிவான தகவல்களுக்கு நன்றி. இந்த தேசியவாத வியாதி பிடித்தவர்களின் எப்போதுமே கருத்தியல் ரீதியில் உரையாட மாட்டார்கள். எடுத்தவுடன் ஒருவரை பற்றி அவதூறு புரிந்து அந்த அவதூறை மட்டுமே ஆயுதமாக பயன் படுத்துவர். அதிலும் இந்த தீவிர தமிழ் தேசியவாதம் பேசுபவர்கள் அதில் ஒருபடி மேலே சென்று மற்றவரை நம்ப வைப்பதற்காக தாமே கட்டமைத்த பொய்களையும் பிம்பங்களையும் மாயைகளையும் அவர்களே ஒரு கட்டத்தில் பேதைகள் போல நம்ப தொடங்கி, அதன் பின்னர் அவர்களே அதற்கு பலியாகி தம்மை நம்பிய மக்களையும் பலியாக்குவர்.
  12. உண்மையில் ஒருவரின் வாக்குகளை மற்றவர் திருவது சாத்தியமற்ற விடயம். தோற்றுவிட்டோம் என்ற ஆற்றாமையில் ரவிராஜின் மனைவி புலம்பிய விடயத்தை வைத்து அவரின் ********** இப்படியான கோயபல்ஸ் பாணி பொய்கள் இட்டுக்கட்டப்பட்டன. சுமந்திரனின் அரசியலிலும் பல தவறுகள் உண்டு. அதை திருத்தி கொள்ளாவிட்டால் அவரை மக்கள் நிராகரிப்பார்கள்.
  13. சிங்கள அரசிடம் உலக அரசறிவியல் தெரியாதவர்களாக வெறும் உணர்சசி அரசியல் செய்து தோற்றவர்கள் பட்டியல். ஜி.ஜி பொன்னம்பலம் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அ. அமிர்தலிங்கம் வே. பிரபாகரன் ஆர். சம்பந்தன் சுமந்திரன் எதிர் காலத்திலாவது அறிவை பயன்படுத்தி அரசியலை செய்தால் வெற்றி கிடைக்கும்.
  14. உண்மை. நிச்சயம் திருடி இருப்பார். அவர்களில் பல திருடர்கள் உண்டு தானே!
  15. அத்துடன் ஒரு துறைசார் அமைச்சர் அந்த துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் என்பதும் தேவையானது.
  16. ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கும் எமக்கும் தொடர்பு இல்லை அது இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் ஜனாதிபதி தேர்தல் அதை புறக்கணிகயுங்கள் என்று பிரச்சாரம் செய்த தேசியக் கும்பலும், பொது வேட்பாளர் என்றும் தாயகம் தன்னாட்சி என்று வீர உரைகள் ஆற்றி மக்களை உசுப்பேற்றிய தேசிய கும்பல்களும் ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி பாராளுமன்றம் செல்ல தமக்குள் அடிபடும் நாள் நெருங்குகிறது.
  17. 40000 சிங்கள இராணுவத்தினரின் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம் என்று சமாதான காலத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இனவெறியர் தானே இந்த கஜேந்திரன். அவர் அவ்வாறு தான் கூறுவார்.
  18. இருப்பினும் பாராளுமன்ற தேர்தல் முடிய மீண்டும் அமைச்சாக அவர் முயலக் கூடும். ஆனால், அநுரவிடம் இவரின் பாச்சா பலிக்காது என்றே நினைக்கிறேன். அநுராவுக்கு மண்டை பிழை என்று பிள்ளையான் கூறிய காணொளி வேறு சமூக வலைத்தளங்களில் உலாவுகிறது.
  19. அரசியலமைப்பின் பிரகாரம் பிரதம மந்திரி ராஜினாமா செய்தால் மொத்த அமைச்சரவையும் பதவி இழக்கும். எனவே பிரதமர் தினேஷ் குணவர்தன ராஜினாமாவை கையளித்த உடனையே டக்லஸ் தனது தானாகவே இழந்துவிட்டார். தனியே ராஜினாமா செய்ய வேண்டியதில்லை.
  20. இருக்கலாம். ஆனால், தாயக மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவில்லை என்ற பொருள்பட எப்போதும் தமிழன் கூறிய கருத்துக்கே பதிலளித்தேன். தனக்கு பணி நிரந்தரபாக்கியவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுயமாக சிந்தித்து தான் அவர் வாக்களித்தார்.
  21. நான் பெரும்பான்மை மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதையே தெரிவித்தேன்.
  22. அவர்கள் சுயமாக சிந்தித்து தான் வாக்களித்து இருக்கிறார்கள். அதில் என்ன சந்தேகம்.
  23. தம்மை தாமே ஏமாற்றிவிட்டு, தாம் உருவாக்கிய மாயைகளை தாமே நம்பி அதற்கு பலியாகிவிட்டு ஐயோ, உலகம் ஏமாற்றிவிட்டது என்று புலம்பல் வேறு. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.