Everything posted by island
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தற்போது கல்குலேற்றர்கள் அதிகம் பாவனையில. இல்லை. கைத்தொலைபேசியில் இருக்கும் கல்குலேற்றரை தான் மக்கள. அதிகம் உபயோகிக்கிறார்கள். அதனால் குழப்பம் வருவது இயற்கை தானே. 😂 தற்போதெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதை விட கைத்தொலைபேசியில் யூருயூப் காணொளிகள்அதிகம் பார்ப்பதால் எதிர்காலத்தில் தொலைக்காட்சிக்கு பதிலாக தொலைபேசியை தெரிவு செய்யும் சந்தர்ப்பமும் உண்டு. 😂
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
எல்லாரும் சுமந்திரனை திட்டி தீர்த்தினம். சுமந்திரனுக்கு இதோட ஆப்பு எண்டாங்கள். கடைசில சுமந்திரன் ஆதரிச்ச சஜித்துக்கு தான் வட கிழக்கில் அதிக வாக்குகள். 😂 சங்குக்கு கட்டு பணமும் அம்போ😂😂😂
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு
பொதுவாக தங்களை விட அரசியல் அறிவு உடையவர்களையே அரசியல் ஆலோசகராக வைத்து கொள்வது உலக வழமை. கஜேந்திரகுமார் மட்டும் உலக வழமைக்கு மாறாக குதிரை கஜேந்திரன் என்ற அரசியல் தற்குறியை அரசியல் ஆலோசகராக கொண்டுள்ளார்.😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ் பிரதேசங்களில் சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியா?
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அரியமோ அவரை களத்தில் இறக்கிய நிலாந்தினோ யதீந்திராவோ எதையும் நிரூபிக்கவில்லை. அவர்களை நிராகரித்து மக்கள் நிரூபித்துள்ளார்கள்.😂 ஓகே சரி. சஜித்துக்கு ஆதரவளித்த சுமந்திரனை அனுரா வச்சு செய்யட்டும். நமக்கென்ன அதில் வந்தது.😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
சாத்தியமே இனி இல்லை. இலங்கையில் சமஸ்டி அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்றால் தமிழ் சிங்கள மக்கள் இருவரும் இணைந்தே அதை சாத்தியமாக்க முடியும். ஒருவரை ஒருவர் பாரிய சந்தேக கண்ணுடன் அச்சத்துடன் பார்ககும் நிலை இருக்கும் வரை அதற்கு சாத்தியமே இல்லை.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இன்றைய நிலையில் 50 வீதம் என்பது சாத்தியமானதே இல்லை. இந்த சிறிய விடயத்தை கூட புரிந்து கொள்ளும் அறிவு அற்ற அரசியல் பேதைகளே இந்த பொதுவேட்பாளர் கோட்பாட்டை உருவாக்கியவர்கள். தங்களது இரண்டுமாத Entertainment காகவே இவர்கள் இதை செய்தார்கள்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அரியத்தின் வாக்குகளை சஜத்தும் ரணிலும் திருடி அவரை தோற்கடித்துவிட்டார்கள் என்று உருட்டினாலும் உருட்டுவார்கள். 😂 எலாக்கட்டத்தில் அப்படி உருட்டுவதும் வாடிக்கை தான். 😂😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
யாழ்பாண மாவட்டத்தில் 31 வீதம், வன்னி மாவட்டத்தில் 16 வீதம், தமிழர்கள் வாழும் திருகோணமலை தேர்தல் தொகுதியில் 15 வீதம், திருமலை மாவட்டம் முழுவதும் 7 வீதம், அரியத்தின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் 11.5 வீதம் பெற்ற பொது வேட்பாளர் எதைச் சர்வதேசத்துக்கு சொல்லப் போகிறார்? வெறும் உசுபேற்றல்களும் வீராப்பு பேச்சுக்களும் என்றுமே அரசியல் தீர்வை நோக்கிய நகர்வுக்கு உதவப்போவதில்லை.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அநுரா குமார திஸநாயக்காவுக்கு வாழ்த்துகள்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தமிழ் மக்களை பொது வேட்பாளர், உலகத்துக்கு செய்தி சொல்லுதல் என்று தவறான concept மற்றும் எந்த பிரயோசனத்தையும் தராத அழிவுகளை மட்டுமே கொடுத்த உசுப்பேற்றல்கள் தோல்வி அடைந்தது மிக்க மகிழ்சசியே.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தமிழ் வாசிப்பு புரிந்து கொள்ளும் திறனில் குறைபாடு இருந்தால் ஆரம்ப பாடசாலைக்கு செல்லவும்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அரியநேத்திரனால் யாழ்பாண ஜனாதிபதியாக கூட வர முடியவில்லை என்று பார்த்தால் வீரம் விளைந்த மண் என று கூறப்படும் வன்னியிலும் தோல்வி. தாயக, புலம் பெயர் புல்லுருவிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி உள்ளனர். உசுப்பேற்றல் காலாவதியாகிவிட்டது என்ற செய்தி புலம் பெயர் அரசியல் வியாதிகளுக்கும் சேர்ததே சொல்லப்பட்டிருக்கிறது. மகிழ்சசி.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பாணம், வன்னி மாவட்ட தேர்தல் முடிவு.
- IMG_7598.jpeg
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
உண்மை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் சர்வஜனவாக்கெடுப்பு மூலம் அரசியலமைப்பை மாற்றலாம்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
வன்னி மாவட்டத்தில் தபால் வாக்குகளில் அரியம் நான்காவது இடத்தில் உள்ளார். சஜித் முதலாவது இடத்தில்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பாணம் , நல்லூர் தொகுதிகளில் அரியநேந்திரம் என்ற தமிழ் பொது வேட்பாளர் முறையே 27 , 32 வீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறார். மிகுதி. 70 வீதத்தை சிங்கள வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள். சங்கே முழங்கு என்று உசுபேற்றியவர்களுக்கு மக்கள் சங்கூதி உள்ளார்கள். 😂
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
நிச்சயமாக இல்லை ஏராளன். கிடைக்காத பதவி என்பதால் வெற்று கோசங்களை வைத்து ஒற்றுமையை காட்டுவதாக நடிக்கிறார்கள். அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக தகுதியான வேட்பாளர்களை ஒற்றுமையுடன் நிறுத்தி தற்போதைய நிலையில் நடைமுறை சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு திட்டத்ததை உருவாக்கி ஒற்றுமையாக தொடர்சசியாக அரசியல் வேலைதிட்டங்களை முன்னெடுத்து இலங்கையில் தமிழரின் அரசியல், பொருளாதார பலத்தை அதிகரிக்கும் வகையில் செயற்பட்டால் அது தான் உண்மையான ஒற்றுமை.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
அவரது கோரிக்கை வட கிழக்கு இணைந்த தமிழர் சுயாட்சி என்பதை வட கிழக்கு மாகாண மக்கள் விரும்புகிறார கள் என்பதை சர்வதேசத்துக்கும் தென்பகுதிக்கும் எடுத்து அறைகூவி சொல்வது என்று இன்று வாக்களித்த பின்னரும் ஶ்ரீதரன் தெரிவித்தார். ஆகவே வட கிழக்கில் 50 வீதத்துக்கு மேல் எடுக்காமல் விட்டால் குண்டு சட்டிக்குள் சங்கூதி ஒரு மண்ணுக்கும் பிரயோசனம் இல்லை. 75 வருடங்களாக எமது எனேர்ஜி எல்வற்றையும் தவறான வழியில் பிரயோகித்து அனைத்தையும் இழந்ததை போல.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தீவிர தமிழ் தேசியவாதம் என்ற போர வையில சிங்கள இனவாதத்துக்கு சமமாக தமிழ் இனவாதம் பேசும் தரப்புகள ஶ்ரீலங்காவில் ஒரு கடும் இனவாத ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றே எப்போதும் எதிர் பார்கிறார்கள். அதன் மூலமே தமது தமது வியாபாரம் செல்வ செழிப்புடன் நடைபெறும் என்றே எப்போதும் நினைக்கிறார்கள். அந்த வகையில் ஐரோப்பாவில் இருக்கும் கடும் தமிழ் இனவாதியின் முகநூல் பதிவு இப்படி கூறுகிறது. அனுர வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகப் பிந்திய செய்திகள் சொல்கின்றன. மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் இதுவரை தமிழர் தேசம் சந்திக்காத பாசிச இன ஒடுக்குதல்களை ஜேவிபியிடமிருந்து எதிர்பார்க்கலாம். அதற்கு வரலாற்றில் ஏகப்பட்ட சாட்சியங்களும் இருக்கின்றன. ஜே ஆர், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு பாசிசம் முறுக்கேறிய ஒரு இயக்கம்தான் ஜேவிபி. எமக்கும் இதுதான் தேவை. ஏனெனில் மைத்ரி, ரணில் போன்றவர்களை வைத்து தமிழ்த் தேசக் கோட்பாட்டிற்கு உள்ளக / வெளியக சக்திகளால் வைக்கப்பட்ட செக் இதன் வழி தகர்க்கப்பட்டிருக்கிறது. நாளையிலிருந்து தமிழீழம் நம்பிக்கையுடன் தனது புதிய பாய்ச்சலை தொடங்கும். வெல்வோம் ❤️ வென்றே தீருவோம் 🔥 இவரை போன்ற சுயநலமிகளின் சிந்தனை தான் தமிழினத்தை இன்றைய அதல பாதாள அவல நிலைக்களுள் கொண்டு வந்திருக்கிறது. இவரின் எதிர்பார்ப்பை வெல்லப் போகும் ஜனதிபதி நிறைவேற்ற கூடாது என்பதே தமிழர் எதிர்பார்பபு.
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
தெருவில் யாராவது குனிந்தால் கல்லெறிய போகிறார்கள் என்ற பயத்தில் பழக்க தோசத்தில் தெரு நாய்கள் ஓடும். பின்னர் சற்று நேரத்தில் பயம் தெளிந்து திரும்பி வரும். அதை போல தான் இவர்களும். ஒவ்வொரு முறையும் நாட்டில் மாற்றம் வரப்போகிறது என்றால் ஓடுவார்கள். பின்னர், பயம் தெளிய இவர்களும் திரும்பி வருவார்கள். அது இவர்கள் வாடிக்கை. 😂
-
யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி
அவர் எதையும் வெட்டி புடுங்கி இருக்க மாட்டார். அடுத்தவர் தனியுரிமையிலும் அவர்களின் ஜனநாயக உரிமையில் தலையிடும் காட்டுதர்பார் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து அதன் காரணமாக மூளை கறள் கட்டிய ஒருவராக இருப்பார். புலம்பெயர் நாடுகளில் தமது அல்லது தமது குடும்பத்தின் பிரைவேசிக்கு, தனிநபர் உரிமைக்கு ஒரு ஒரு சிறிய பங்கம் வந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஜனநாயகத்தின் நலன்களை அனுபவித்து கொண்டிருக்கும் புலம் பெயர் தேசியர்கள் தாயகத்தில் மட்டும் இவ்வாறான காட்டு தர்பாரை ஊக்குவிப்பார்களாம். தமக்கு சுதந்திரம் இல்லை என்று மூக்கால் அழுது புலம்பி தஞ்சம் பெற்று மேற்கு நாடுகளில் சுக போக வாழ்ககை வாழ்ந்து கொண்டு அடுத்தவர் தனியுரிமையை ஒடுக்குவதை ஊக்குவிக்கும் பக்கா சுயநலமிகளே இதனை ஆதரிப்போர்.
-
யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி
பொது வெளியில் இவ்வாறு தனி நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை துரோகிகள் என்று வசைமாரி பொழிவதும், அதை ஒரு இணையத்தளம் எந்த வெட்கமும் இன்றி பிரசுரிப்பதும் எந்த வகையில் நியாயம். இது பக்கா காட்டுமிராண்டித்தனம் இல்லையா? இத்தனைக்கும் இவர்கள் செய்த குற்றம் என்ன? தாம் விரும்பிய வேட்பாளரை ஆதரிப்பது குற்றமா? தேர்தலில் தனக்கு விரும்பிய வேட்பாளரை ஆதரித்தற்காக அவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி பொதுவெளியில் அவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அவர்களை அச்சுறுத்துவது தான் தேசியமா? இதற்கான உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்? இது அவர்களது தனியுரிமையை மீறும் செயல் அல்லவா?
-
ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என்கிறார் ஸ்ரீதரன்
இந்தாள் மட்டுமல்ல இந்த கூட்டமே லூசுகள் தான். 14 லட்சம் வாக்குகளில் இரண்டு அல்லது மூன்று லட்சத்தை பெற்றுவிட்டு வந்து மாபெரும் பேரெழுச்சி என்று லூசுகள் போல் கத்த தான் போகிறார்கள்.