Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இதை செய்வதானால் இந்தியா தனியாக இதை செய்ய முடியாது. எப்படியும் 13 ம் திருத்த சட்டமூலத்தை ஏற்றுக்கொண்ட புள்ளியில் இருந்து தான் இதனைத் தொடங்க வேண்டும். தமிழ் தரப்பில் யாராவது தனியாகவோ கூட்டாகவோ இதை ஆரம்பிக்க வேண்டும். இதனை யாராவது ஆரம்பித்தால் தமிழர் தரப்பில் இருந்தே பாரிய எதிர்பபும் அவர்களுக்கு எதிராக துரோகிகள் என்ற பிரச்சாரமும் பாரியளவில் நடத்தப்படும் என்பதே இன்றைய நிலை. அண்மையில் கூட பெரடல் வந்தால் கூட ஏற்று கொள்ள கூடாது. கொன்பெரடல் வந்தால் அதனை வேண்டுமானால் பரிசீலிக்கலாம் என்ற குரல்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வந்தது. இங்கு யாழிலும் அது பகிரப்பட்டது.
  2. புலிகளை சாடி தான் எந்த கருத்தையும் எழுதவில்லை. போராட்டத்தை முழுமையாக தன்னிச்சையாக பொறுப்பேற்றுக்கொண்ட அவர்கள் தொடர்சசியாக செய்த தவறுகளை இறுதியில் அவர்களையும் அழித்து தமிழ் மக்களுன் போராட்டதையும் பாரிய பின்னடைவுக்கு கொண்டு வந்த ஜதார்தத்தை மட்டுமே எனது கருத்தில் தெரிவித்தேன்.
  3. நீங்கள் கூறியபடி, நாங்கள் 30 வருடம் போரை நடத்தினோம் என்று போரை நடத்தியவர்களோ அவர்களுடன் நின்ற மக்களோ பிரமிக்கும் நிலையில் இன்று அவர்கள் இல்லை. நொந்து நூடில்ஸ் ஆக விட்டார்கள். ஆனால், அந்த முப்பது வருட ஆரம்பத்திலேயே யுத்தப் பிரதேசங்களில் இருத்து நைசாக தப்பி ஒடி வந்தவர்களே இப்படி ஆயாசமாக ஜாலியாக, நாங்கள் 30 வருடம் போரை நடத்தினோம் என்று கதையளந்து பிரமிக்க கூடிய நிலையில் உள்ளார்கள்.
  4. நீங்கள் கூறிய இந்த விடயத்துடன் ஈழத தமிழர் இந்தியாவிற்கு கலாச்சார ரீதியாக எப்போதும் நெருக்கமாக இருந்ததையும் அந்த மக்களை இந்திய இராணுவம் படுகொலை செய்வது தவறு என்பதை விரிவாக விளக்கி ஈழத்தமிழனின் குரலாக இந்த கடிதத்தைப் பிரசுரியுங்கள் என்று 1987 ல் நவம்பர் மாதம் இந்திய இராணுவம்- புலிகள் யுத்தம் தொடங்கிய வேளையில் ஆனந்த விகடன், குமுதம், கல்கி ஆகிய மூன்று இதழ்களுக்கும் கடிதம் எழுதி, கட்டாயமாக போய் சேரவேண்டும் என்பதற்காக பதிவு தபாலில் அதை அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரிக்க கூட இல்லை. அனேகமாக குப்பைத்தொட்டிக்குள் போயிருக்கும்.
  5. நாங்கள் எளிய தமிழ் பிள்ளைகள். இவை எல்லாம் மீம்ஸிலும் வட்ஸ்சபிலும் ரீல்ஸிலும் வந்தால் மட்டுமே நம்புவோம். 😂
  6. தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழ் கட்சிகளிடம் பணம் இல்லை என்கு அவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் நிலாந்தன். தமிழகட்சிகள் பாவமாம். புலம் பெயர் தமிழர் தான் உதவி செய்ய வேண்டுமாம். 1977 ம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணியில் கூட்டங்கள் தான் மிக பணச்செலவில் பிரமாண்டமாக ஒவ்வொரு ஊர்களிலும. நடத்தப்பட்டது. வானுயர பதாகைகள், கொடிகள், தலைவர்கள் வரவேற்க ஒரு சந்தியில் இருந்து அடுத்த சந்திவரை நீளமாக கட்டி வைக்கப்பட்ட சீன வெடிகள் என எல்லா கூட்டங்களும் களைகட்டியது. அரசியல் ஆய்வாளராக நிலாந்தன் அதை அறிந்திருப்பார். அப்படி இருந்த தமிழர் தரப்பு இன்றைய நிலையை அடைய என்ன காரணம் என்பதை ஆய்வாளராக நிலாந்தன் நேர்மையாக ஆராயவேண்டும். நிலாந்தன் உரிய காலத்தில் உரியவர்களிடம் இடித்துரைக்கும் அருமையான சந்தர்பபம் அவருக்கு கிடைத்தும் கிடைத்தும் அதை செய்யாது இன்று காலங்கடந்து புலம்புபவர்.
  7. இலங்கை தமிழர்களின் தலைவராக யார் வருகிறார்கள் என்பது இங்கு முக்கியமல்ல. திரு.கஜேந்திரகுமருக்கும் அந்த தகுதி உள்ளது. ஆனால் தலைவராக வருபவர் தற்போதைய ஜதார்தத நிலையை அனுசரித்து moderate ஆகச் சிந்தித்து அரசியல் செய்து தென்னிலங்கை தரப்பபுகளோடு பேசி தனது பதவிக்காலத்துக்குள் சிறிது சிறிதாகவேனும் சில அடைவுகளை மக்களுக்கு பெற்றறுக் கொடுத்து இப்போது இருக்கும் நிலையை மேலும் பலப்படுத்திவிட்டு ஓய்வு பெறுபவராக இருக்கவேண்டும் வெறுமனே தனது வாழ்நாள் முழுவதும் தீவிர தேசியம் பேசி தான் சாகும் போது முன்னர் இருந்த நிலையை விட மோசமாக்கி நிலமையை மேலும் சிக்கலக்கி விட்டு தான் கண்ணை மூடுவதில் எந்த பலனும் இல்லை.
  8. சமாதான காலத்தின் ஆரம்ப பகுதியில் ஐரோப்பா வந்திருந்த இளம்பருதி, நீங்கள் கூறிய அதே கருத்தையே இங்கும் மக்கள் சந்திப்புகளில் தெரிவித்திருந்தார். நான் நேரடியாக அக்கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தேன். அது மட்டுமல்ல சமாதான காலத்தின் ஆரம்பத்தில் ஐரோப்பா வந்திருந்த அமுதாப் உட்பட இயக்க உறுப்பினர்கள் அனைவருமே அரசியல் தீர்வு, பேச்சுவார்ததை தொடர்பாக அந்தந்த நாடுகளுன் பிரதிநிதிகளை சந்தித்து பேசுவதையோ அது தொடர்பான அறிவு பூர்வமான செயல்களை செய்வதை விட தமிழ் மக்களை சந்தித்து அடுத்த யுத்த தயாரிப்புகளுக்கான நிதி சேகரிப்புக்கான தூண்டுதல்களையே மக்களுக்கு வழங்குவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினர். மக்கள் சந்திப்புகளில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை. மாறாக ஜெயசிக்குறு, ஆனையிறவு சமர் தொடர்பான தமது வீர அனுபவ கதைகளையே பேசிஅடுத்த யுத்தத்திற்கு மக்களின் நிதி பங்களிப்புற்கு தயார்ப்படுத்தும் வேலைகளையே செய்தனர். இவை எல்லாம் ஐரோப்பிய நாடுகளால் நிச்சயம் அவதானிக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஐரோப்பாவில் வேலை செய்த செயற்பாட்டாளர்களும் அதையே சமாதான காலம் முழுவதும் செய்தனர். பின்னர் யுத்தத்தில் சொதப்பியதும்ம் அதே ஆட்கள் யுத்த நிறுத்தம் வேண்டி ஐரோப்பிய வீதிகளில் மக்களை திரட்டி ஆர்பாட்டங்கள் செய்தனர். அப்போது கூட யுத்த நிறுத்த கோரிக்கைகள் மக்களுடம் இருந்து வந்ததாக காட்டாமல் இயக்க கொடிகளுடனும் பிரபாகரனின் படங்களுடனும் புலிகளின் சார்பிலான ஆர்பாட்டங்கள் என்று ஐரோப்பிய நாடுகள் நம்பும்படியான வேலைகளையே பேதைத் தனமாக செய்தனர். இவர்கள் அனைவருமே இறுதி யுத்தத்தில் மக்கள் அழிவுகளுக்கு இலங்கை அரசுடன் இணைந்து கூட்டுப் பொறுப்பு கூற வேண்டியவர்கள்.
  9. நிச்சயமாக தப்பே இல்லை வசி. இது இயல்பானது. இவ்வாறாக இடதுசாரி சோஷலிச கொள்கைகளில் உள்ள நல்ல அம்சங்களை எமது வாழ்வின் வளத்திற்காக ஆதரிக்குக்கும் நாம் எமது நாட்டிலும் சக மனிதர்களான எளிய மக்களிடமும் அதே பரிவுடன் நடந்து கொள்ளாமை குறித்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டினேன். மற்றப்படி உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி.
  10. கந்தையர், கதையை மாற்ற வேண்டாம். கேள்விக்கு விடை தெரியாத ஒரு பரீட்சாத்தி தனது வசதிக்காக தானே ஒரு கேள்வியை எழுதி அதற்கு பதிலெழுதுவது போல் எழுதி உள்ளீர்கள். சர்வதேத்திடம் தீர்வு இல்லை அவர்களால் எந்த தீர்வையும் தர முடியாது, என்று கூறியவர் நீங்கள். அவ்வாறு நீங்கள் கூறியதற்கு, அப்படியானால் ஏன் வருடா வருடம் ஜெனிவா ஜநாவுக்கு தீர்வை வலியுறுத்தி செல்கிறார்கள் என்று நான் கேட்டேன். அதற்கு நீங்கள், என்ன தருவார்கள் என்று சும்மா அறிவதற்கே அதாவது விடுப்பு அறிவது போல அறிவதற்கே 40 வருடங்களாக தமது வேலைகளை விட்டு விட்டு வருடாவருடம் இருமுறை ஜநாவுக்கு செல்கிறார்கள் என்று கூறி அங்கு செல்பவர்களை அவமானப்படுத்தியதும் நீங்கள் தான். அதற்கான பதிலடியே எனது பதில். அதற்கு பதிலெழுத முடியாததால் அதை மடை மாற்றுவதற்கு முழு தமிழர்களையும் தேவையில்லாமல் உங்கள் வசதிக்காக இங்கு இழுத்தது நீங்கள் தான். ஐநவுக்கு போராட்டங்களுக்கு சென்ற தமிழர்கள் எவரும் எவரும் சர்வதேச நல்லுறவு எமக்கு தேவையில்லை என்று அடி முட்டாள்கள் போல் கூறவும் இல்லை கூறவும. மாட்டார்கள். அப்படிப் பேசுவது அடி முட்டாள்தனம் என்து அவர்களுக்கும் தெரியும். கந்தையர் நாம் எதை பற்றி விவாதித்தோமோ அதற்குள் மட்டும் நிற்கவும். தேவையில்லாமல் நான் கூறாத விடயங்களை நீங்களே இதற்குள் திணித்து அதற்கு பதில் எழுத வேண்டாம். நீங்கள் பட்டியலிட்ட அந்த பெரும் பாலான அறிவுசார் தமிழர் எவரும் இப்படியான லூசுத்தனமாக கருத்தை கூறவும் இல்லை கூறவும் மாட்டார்கள். அதனால் தான் அவர்கள் பல துறைகளில் முன்னேறி உள்ளார்கள் என்பதை மனதில் கொள்க. (அதற்கிடையில் கிடைத்தது சாட்டு என்று வரலாறு என்ற பெயரில் இராமாயணம், மகாபாரத காவியங்கள் எழுதும் ஒருவர் வேறு வந்து வேறு புலம்பி விட்டுச் சென்றுள்ளார். பாவம் 😂😂😂)
  11. என்ன தருவார்கள. என றதை அறிய 40 வருடம் போனவர்கள் என்றால் அந்த அடி முட்டாள்களுக்கு தீர்வு கொடுக்க கூடாது. அது தான் நல்லது. Enjoy 😂😂😂😂😂😂😂
  12. சர்வதேசத்திடம் ஒன்றுமே இல்லை என்றால் கடந்த 40 வருமா வருடத்துக்கு இரண்டுமுறை ஜேனிவா ஐக்கிய நாடுகள் சபைக்கு மினக்கெட்டு பஸ் பிடிச்சு போய் ஒரு நாள் முழுவதும் „We want Tamil eelam“என்று ஏன் கத்தினார்கள்? இப்போதும் வருடத்திற்கு இரண்டுமுறை அங்கே ஏன் போகிறார்கள்? ஒன்றுமிலாத இடத்துக்கு போவது லூசுத்தனம் தானே! 😁
  13. கந்தையர் நீங்கள் எதையும் உங்கள் விருப்படி கூறிவிட்டு போகலாம். அதை உலகம் கணக்கில் கூட எடுக்கப்போவதில்லை. சர்வதேச சமூகம், சக்தி வாய்ந்த நாடுகள் என்ன நினைக்கிறார்களோ அது தான் முக்கியம். அவர்களை பகைத்து ஒரு போதும. தனி நாடு எடுக்க முடியாது. உலகம் எமக்கு தேவையில்லை அவர்களது நல்லுறவு தேவையில்லை என்று தான் தோன்றி தனமாக நடந்தால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும். அது தான் நடந்தது.
  14. நீலனை கொன்றது சரி என்று இதே திரியில் எழுதி கொலையாளிக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்போது அது கொலைக் குற்றம், அதற்கு தான் புலிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்கின்றீர்கள். எப்படியோ நீலனை கொன்றது தவறு, அது குற்றம் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. சர்வதேச நாடுகள் குற்றம் என்று சொல்லி விட்டது. இவ்வாறான தவறுகள், கொலைகள் தமிழர்களையும் அவர்களது போராட்டதையும் பாதித்தது என்பதே எனது வாதம்.
  15. இலங்கை அரசு செய்த யுத்த குற்றங்களை சர்வதே நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமாம். ஆனால் புலிகள் செய்த படு கொலைகளை அவர்களின் ஆதரவாளர்களே தங்களுக்குள் விசாரணை செய்து அந்த கொலைகள் எல்லாம் நியாயமானவை தான் என்று தீர்ப்பு எழுதுவார்களாம். 😂😂
  16. அமெரிக்கா தர்மத்தின் பால் நின் றதில்லை என்றால் தமிழர் தரப்பு தர்மத்தின் பால் நின்றதா? சிங்கள பேரினவாத இன ஒதுக்கலுக்கு எதிராக போராட்டத்தில் உள்ள நியாயப்பாட்டை தவிர தமிழர் போராட்ட தரப்பின் செயற்பாடுகளும் தர்மத்தின் பால் நிற்கவில்லை. இதற்கு பல உதாரணங்கள் உண்டு.
  17. பாராளுமன்ற உறுப்பினர் அஷவினிக்கு வாழ்ததுகள். அவரை தெரிவு செய்த மக்களுக்கு சேவையாற்ற வாழ்ததுக்கள். பி. கு பொதுவாகவே நம்மவர் மற்றும் இந்தியர்கள் தமக்குள் எவ்வளவு வலதுசாரித்தனத்தையும் பத்தாம் பசலித்தனத்தையும் சாதீய ஒடுக்குமுறைகளையும் ஆதரித்தை கைக்கொண்டாலும் தாம் குடியேறிய நாடுகளில் இடதுசாரிய தாராளவாத (moderate) கட்சிகளை தான் தெரிவு செய்வார்கள். 😂
  18. தலை நிமிர்ந்து சாவோம் என்று பீற்றுகிற தேசியர்கள் பல தாம் மட்டும் தப்பி ஓடு வந்து ஐரோப்பாவில் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தி தமது சந்ததிகளை இங்கே விருத்தி செய்து ஜாலியாக வாழ்ந்து கொண்டு அங்கே உள்ள அப்பாவி மக்கள் தலைநிமிர்ந்து சாகட்டுமாம். 1981 வரை வடகிழக்கின் சனத்தொதை ஏனைய தென் மாகாணங்களுக்கு ஈடாக வளர்சசி அடைந்தது என்பதை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
  19. மிக காத்திரமான புள்ளியை சுருக்கமாக சுட்டிக்காட்டியுளீர்கள். நன்றி. இந்த விடயம் தமிழர் தரப்பில் சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒரு புள்ளி என்று நினைக்கிறேன். ஒரு விடுதலை இயக்கத்திற்கு தனியே இராணுவபலம் என்பது நிலையற்றது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. ஒரு குறுகிய காலத்திலேயே அடித்து துவம்சம் செய்யக்கூடியது இராணுவபலம். அதை செய்து காட்டினார்கள். ஆனால் தனது இலக்குகளை நோக்கி முன்னேற விரும்பும் ஒரு விடுதலை இயக்கத்திற்கு “அரசியல், ராஜதந்திர, அனைத்துலக நல்லுறவு”, என்ற பலம் மிக மிக முக்கியமானது. உலக அரசியல் சமன்பாட்டின் மாற்றங்களினால் ஒரு வேளை அந்தப் பலத்தில் சில தளம்பல்கள் வந்தாலும் மீண்டும் சீர்செய்து(redictable) கொள்ளக்கூடியது. சிக்கல்களை உண்டாக்கினாலும் ஒரு போதும் பேரழிவை உண்டாக்காது. துரதிஷரவசமாக விடுதலைப்புலிகள் இந்த பலத்தை உருவாக்குவதில் கவனம் எடுக்கவேயில்லை. எமது போராட்டத்தில் தார்மீக நியாயம் உள்ளது. எனவே, வெட்டு ஒன்று துண்டு இரண்டாக எமது நியாயத்தை உலக நாடுகளுக்கு எடுத்து சொன்னால் போதும் அவர்கள் எமது கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற சிந்தனை ஓட்டமே அவர்களின் அரசியல் சித்தாந்தமாக இருந்தது. ( இந்த விடயத்தில் திரு அன்ரன் பாலசிங்கம் உள்ளக ரீதியில் போராடித் தோற்றுப்போயிருகலாம் என்று நினைக்கிறேன்) மாறாக விடுதலைப் போராட்டதை வெறும் இராணுவ சட்டத்துக்குள் அடைத்தனர். உலகின் பார்வையில், இது பன்முகப்படுத்தப்படாத ஒற்றை தலைமை இயக்கத்தின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் போராட்டம் என்று நினைக்க வைப்பதான பல செயல்கள் புலிகளின் வெளிநாட்டு கிளைகளால் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை அரசின் பிரச்சாரத்திற்கு உதவி செய்யும் பல செயல்கள் புலிகளாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசிற்கும் ஒரு நாட்டை உருவாக்க அனைத்துலக அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் விடுதலை இயக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை கருத்தில் கொள்ளாத செயல்கள் எமக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. உதாரணமாக ஐரோப்பிய யூனியன் புலிகளை தடை செய்த உடனே ஐரோப்பிய யூனியனை சேர்ந்த யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்கள் எமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற புலிகளின் உத்தரவு அனைத்துலக மட்டத்தில் எதிமறை விளைவுகளையே ஏற்படுத்தியது. பின்பு அதே ஐரோப்பிய யூனியன் நாடுகளில் யுத்த நிறுத்தத்தை வேண்டி புலிகளின் கொடிகளுடன் ஆர்ப்பாட்டங்கள் செய்தோம். அதை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை.
  20. ஆயுதப் போராட்டம் தொடங்கியபோது இருந்த நிலையை அடையவே ஒரு நூற்றாண்டு எடுக்கும். அந்தளவுக்கு போராட்டதை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டே ஆயுத போராட்டம் Bitter end க்கு வந்தது. அதற்குள் இது போதாதென்று இன்னும் பின்னோக்கி கொண்டு போக ஆசை உங்களுக்கு .
  21. இப்படி படுத்திருந்து கற்பனையில் சுகம் காண மட்டுமே பாவம் இனி உங்களால் முடியும். சரி நீங்கள் அதையாவது செய்து பொழுதை போக்குங்கள். மக்களின் அரசியல் என்பது நீங்கள் நினைப்பது போல் ஒரு தனிநபரில் மட்டும் தங்கி இருக்கும் சென்றிமென்ற் அல்ல. வருங்கால சந்ததியாவது அறிவுத்திறனுடனும் பொறுப்புணர்வுடனும் சுயமாக சிந்தித்து தமது அரசியலை செய்யட்டும் என்று கூறி விட்டு போய் சேருவதே இந்த தலைமுறை அவர்களுக்கு செய்யும் குறைந்த பட்ச உதவி என்ற நிலை தான் தற்போதைய ஜதார்த்தம். நீங்கள் கூறியது போல் வானத்தை பார்ததபடி மடையர்களாக எமது எதிர்கால சந்ததி இருக்கும் என்று நான் நம்பவில்லை.
  22. அந்தக் குறி ஆட்களை அகற்றுவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியதால் குறிக்கு தனது மக்களின் அரசியல் அபிலாசையே கேள்விக்குறியாகியது கூடப் புரியவில்லை.
  23. நிச்சயமாக! உங்கள் கற்பனைகள் கூட ஜதார்த்தத்தை தொட்டு செல்வதாகவே இருப்பதை உங்கள் முன்னைய ஆக்கங்களில் பார்த்துள்ளேன்.
  24. இதை உலகம் புரியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டிய முன்னெடுப்பை பொறுப்புடன் செய்ய வேண்டிய நாம் சந்திரிகா காரில் ஏறும் போது தற்கொலை குண்டுதாரி மூலம் அவரை படு கொலை செய்ய முயற்சித்து உலகிற்கு எமது செய்தியை தெரிவித்தோம். சந்திரிகாவை படுகொலை செய்தால் செம்மணி படுகொலைகளை உலக நாடுகள் கண்டித்து தற்கொலை குண்டு தாரியை உலகம் பாராட்டும் என எதிர்பார்ததோம்.
  25. நானும் உங்களைப் போலவே தமிழ் ஈழம் கிடைக்கும் என்று பேதை த்தனமாக ஆரம்பத்தில் நம்பினேன். சற்று maturity வந்த பின்னர் உலக நாடுகளை அரசியல் ராஜதந்திர ரீதியில் வெல்லாமல் அது சாத்தியமல்ல என்பதை புரிந்து கொண்டாலும் எம்மவர்கள் இராணுவபலத்தை துரும்பு சீட்டாக வைத்து உலகளவில் அரசியல் பலத்தை அபைத்துலக நல்லுறவையும் தமிழர் சார்பில் உருவாக்குவார்கள் என நம்ப தொடங்கினேன். உலக சூழல் இந்த விடயத்தில் எமக்கு சாதகமாக இல்லை என்பது இயல்பாக புரிய ஆரம்பித்தது. நாம் இருவரும் சாதாரண குடிமக்களாதலால் அப்படி நம்பியதில் தவறே இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.