Everything posted by island
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ கொள்கையை முன்வைத்து வட கிழக்கில் 23 தொகுதிகளில் போட்டியிட்டது. தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட்ட 23 தொகுதிகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 806299 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5174 செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 801125 தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 421594 (இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் காசிஆனந்தனுக்கும் கிடைத்த வாக்குகள் உள்ளடங்கலாக) 100/801125* 421594 = 52.62 வாக்களிப்பு புள்ளி விபர ஆதாரம் தேர்தல் திணைக்களம், ஶ்ரீலங்கா. உங்களுக்கு எப்படி 72 வீதம் வந்தது? ஒருதலை பட்சமாக வரலாறு என்ற பெயரில் எதைக் கூறினாலும் லைக் போட்டு வரவேற்பார்கள் என்ற உங்கள் அனுபவத்தின் மூலம் வந்த துணிச்சல் தான் இவ்வாறு பொய்யான தகவலை கொடுக்க உங்களை தூண்டியதோ?
-
சாம்பல் மேட்டு அரசியல்!
ஏற்கனவே எமது இடுப்பு உடைந்ததை போல், அடுத்தடுத்த தலைமுறைகளினதும் இடுப்பு உடைந்து நாசமாக போகவேண்டும, இலங்கை தீவில் தமிழர் இனம் சுவடு தெரியமல் அழிந்து போனாலும் பரவாயில்லை என்பதே, தமிழர் தரப்பில் அரசியல் செய்வோரின் இன்றைய நிலைப்பாடு. அதாவது, “ நாம் சொல்வதை செய், நாம் சொல்வதை மட்டும் செய் இல்லையெனில் செத்து மடி”, என்பதே தமிழர் தரப்பின் சித்தாந்தம். அந்த முட்டாள் சித்தாந்தத்தை உருவாக்கி ஆயுத போராளிகளிடம் கடத்தியதும் தமிழரசு கட்சிதான். அறிவுக்கு இடம் கொடாதே அதி தீவிர உணர்ச்சிக்கே முன்னுரிமை கொடு என்ற, தமிழரசு கட்சி உருவாக்கிய முட்டாள் சித்தாந்தம் ஆயுத போராளிகளிடம் கையளிக்கப்பட்டு, தமிழரின் பேரழிவுக்கு காரணமாகி, இன்றும் தமிழர் தரப்பு அரசியல் செய்வோர் அனைவரிடமும் வியாபித்த இந்த தற்கொலை அரசியல் தமிழரின் அழிவு வரை தொடரும் போல உள்ளது வேதனை தான்.
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
ஒரு சுதந்திர நாட்டை நிர்வகிக்கும் எந்த தகுதியும் இவர்களுக்கு இல்லை என்பதை இயற்கை உணர்த்தியதை புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள்கள் மீண்டும் மீண்டும் அதை நிரூபிக்கின்றார்கள். இந்த தலைமுறையில் உள்ள இந்த கழிசடைகள் மரித்த பின்னர், புதிய தலைமுறை புதிய வார்ப்புகளாக வடிவம் பெறும் போதே தமிழருக்கு ஒரு விடியல் பிறக்கும்.
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
ஐபிசி தமிழின் வாக்கெடுப்பில் தமிழர்கள் மட்டுமே வாக்களித்திருப்பார்கள் என்பது சொல்லி தெரியவேண்டிய விடயம் அல்ல. தமிழர்களுக்குள் நடந்த வாக்கெடுப்பிலே பொது வேட்பாளர் 23 வீதத்தை மட்டுமே பெற மற்றைய வேட்பாளர்கள் அனைவரும் 77 வீதத்தை இதுவரை பெற்றுள்ளார்கள். தமிழர்களுக்குள்ளேயே ரணிலை வெல்ல தமிழ்ப் பொது வேட்பாளரால் முடியவில்லை.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
அரசியல் கேள்விகளுக்கு பதில் கூற உங்களல் முடியாது. நாட்டை இனத்தை மக்களின் உயிர்களை நாசமாக்கும் அரசியல் கொள்கைகளே உங்களிடம் உள்ளது. குற்றவாளிகளை பற்றியும் குற்றங்களை பற்றியும் கேள்வி கேட்டால் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கவும் மட்டும் தான் உங்களால் முடியும். தமிழர் அரசியலை மீள முடியாத முட்டு சத்தியில் கொண்டுவந்து நிறுத்தி, மக்களின் அழிவை இளைஞர்களின் உயிரை விற்று பணம் சம்பாதித்ததே, அன்றைய இன்றைய செயற்பாட்டாளர்கள் என்று நீங்கள் அழைக்கும் மாபியாக்களின் சாதனை. அரசியல் என்றால், மக்களின் அழிவை வைத்து நிதி சேகரிப்பதும் வியாபாரம் செய்வதும் என்று புரிந்து வைத்திருப்பவர்களால் அரசியல் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
நீங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். நான் கேட்ட எந்த கேள்விக்கும் உங்களால் பதிலளிக்க கூட முடியவில்லை. என்பதால் நீங்களும் இங்கு வகுப்பைடுப்பதை நிறுத்துவீர்களா? உங்களிடமும் வெறும் உசுபேற்றலை தவிர எந்த தீர்வும் இல்லை.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
வாக்கு போடுவது வாக்காளரது தனிப்பட்ட உரிமை. இந்த கேள்வியை இலங்கை நாட்டில் வாக்களிக்க இருக்கும் வாக்காளரிடம் கேளுங்கள்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
நான் அப்படி சொல்லவில்லை.
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
இந்தியாவில் சாதி வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கலாம் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர்களும் ஆங்கிலேயர்களே. கல்வியை தாழ்த்தப்பட்டவர்களுகெஉ மறுத்த, அவர்கள் அவரவர் தத்தமது குலத்தொழிலை செய்தால் போதும் என்ற இந்திய பாரம்பரியத்தை கொண்டு வருவார்களா?
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
எத்தனை தரம் இதையே திருப்பி திருப்பி கேட்பீர்கள்? தமிழர்கள்களிலையே அரைவாசிக்கு மேற்பட்டோர் ஆதரவு தரப்போவதில்லை. இதில் சிங்கள மக்கள் ஆதரவாம். 😂😂
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
கடைசிவரை 50 வீதத்தை நெருங்கப் போவதில்லை என்பது மூளை உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும். நடக்காத ஒன்று நடக்கும் என்று லூசுத்தனமாக கூற நான் என்ன தீவிர தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதியா? வட கிழக்கு இணைந்த சமஷ்டி என்பதை கொள்கையாக அறிவித்து, அதை உலகிற்கு/ சர்வதேசத்திற்கு செய்தி சொல்லப் போவதாக அறிவித்த பொது வேட்பாளர், வட கிழக்கு மாகணங்களில் அளிக்கப்பட்ட வாக்கில் 50 வீதத்துக்கு குறைவாக பெறுவதன் மூலம் அதை வலியுறுத்தும் தார்மீக உரிமையை தமிழர் தரப்பு உத்தியோகபூர்வமாக இழப்பது என்பது, உரோமம் உதிர்வதற்கு ஈடான ஒன்றா?
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
யாருக்கு வாக்களிப்பது என்பது அவரவர் விருப்பம். தமிழர் இனப்பிரச்சனையை பொறுத்தவரை, தனியே ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மூலம் ஶ்ரீலங்கா அரசியலைப்பு மாற்றத்தை கொண்டு வர முடியாது என்பது வெள்ளிடை மலை. இந்த திரியில் எனது முன்னைய கருத்தில் இதைப்பற்றி கூறியுள்ளேன். இத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களுல் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பொது வேட்பாளர் பெறாவிட்டால் வட கிழக்கு இணைந்த சுயாட்சி எனபது வெற்று கோஷமாகவே அமையும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
எனது எந்த கருத்துலும் யாரிலும் வன்மத்தை கொட்டவுமில்லை யாரையும் நான் திட்டவும் இல்லை. தாயக/ புலம் பெயர் அரசியல்வாதிகளின் தமிழ் தேசிய அரசியல் என்ற பெயரில் செய்யும் அரசியலின் பாரிய முரண்பாட்டையும் தமிழர் அரசியலை பின்னோக்கி செலுத்தும் செயலையுமே சுட்டிக்காட்டினேன். தமிழர் அரசியல்வாதிகள் அன்றில் இருந்து தொடர்சசியாக செய்துவரும், தமிழரை மட்டும் மையப்படுத்தும் உசுப்பேற்றல் அரசியல் மூலம், எப்படி ஶ்ரீலங்கா அரசியலமைப்பை மாற்ற முடியும் என்று உங்களால் பதில் கூற முடியுமா? ஶ்ரீலங்கா அரசியலமைப்பை மாற்ற ஶ்ரீலங்கா மக்களில் பெரும்பான்மை மக்கள் சாதகமாக வாக்களித்தால் மட்டுமே முடியும் என்ற ஜதார்த்தத்தை, உங்களால் அல்லது உங்களை போலவே தாயகத்திலும் உதவாக்கரை தீவிர தமிழ் தேசியம் பேசும் அரசியல் கோமாளிகளால் புறந்தள்ள முடியுமா?
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் உங்களுடையதோ உங்களுக்கு நன்றி சொன்னவரதோ வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, உங்கள் இருவரதும் அடுத்த vacation ஐ கூட பாதிக்கப்போவதில்லை. ஆனால் அது தனது வாழ்வாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால் ஒரு பொது மகனான சிந்தித்து வாக்களிக்க வேண்டும், உங்களைப் போல் பொறுப்பற்று பொழுது போக்குக்காக டம்பி பீஸுகளுக்கு வாக்களிக்க தன்னால் முடியாது என்கிறார். @பாலபத்ர ஓணாண்டி.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
தமிழக வெற்றுக் கழகத்தின் கொடி ஸ்பெயின் தொடக்கம் பல இடங்களில் இருந்து கொப்பியடிக்கப்பட்டது போல் உள்ளது.
- IMG_7024.jpeg
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
எனது பார்வையில் பொது வேட்பாளரை மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ் தரப்புக்களின் அரசியலுமே (புலம்பெயர் அரசியல் செய்வோர் உட்பட) எந்த விதமான வினை திறனும் அற்ற தமிழரை பொறுதவரை பாதகமான திசையிலேயே முட்டாள்தனமாக செலுத்தி செல்லும் மண்குதிரையே எனலாம். விடுதலை புலிகளை பொறுத்தவரை அவர்கள் சுதந்திர தனிநாட்டுக்கான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சர்வதேச அரசியலில் அதன் சாத்திய தன்மை குறித்த சந்தேகங்கள் விவாதங்கள் இருந்த போதும் அதைத் தாண்டி அவர்களது அரசியல் தனி நாட்டை நோக்கியதாகவே இருந்தது. ஆயுத வழியில் தனிநாட்டை அடையலாம் என்ற ஒர்மத்துடன் அதை நோக்கிய பாதையில் போராடினார்கள். ஆகவே சர்வ தேசத்தை புறக்கணித்து தமிழரை மட்டும் மையமாக கொண்ட அவர்களது அரசியலில் நியாயம் இருந்தது. ஆனால் இன்றய நிலையில் தமிழரின் சார்பில் செயற்படும் எந்த தரப்பும் தனி நாட்டிற்காக போராடவில்லை. ஶ்ரீ லங்கா என்ற நாட்டிற்குள் அதன் அரசியலமைப்பை கூட்டாட்சி அரசியலமைப்பாக மாற்றவே போராடுகின்றார்கள். ஆகவே தமிழருக்குள் மட்டும் உசுப்பேற்றும் குண்டு சட்டி அரசியலின் மூலம் ஶ்ரீலங்காவில் அரசியலமைப்பை மாற்ற முடியுமா? அரசியலமைப்பை மாற்றுவதென்றால் நாட்டில் வாழும்அனைத்து இன மக்களிடமும் அரசியல் செய்யாமல் சாத்தியமா? உலகில் எந்த நாட்டிலாவது வரலாற்றில் அப்படி நடந்ததுண்டா? வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி என்றால் ஆக குறைந்தது அந்த இரு மாவட்டங்களிலும் வாழும் ஏனைய இன மக்களின் ஆதரவை பெறாவிட்டால் அதை பற்றி உலக நாடுகளிடம் வலியுறுத்த முடியுமா? தமிழ் மக்களிடம் அரசியல் செய்யும் அதே வேளை அதற்கு இணையாக சிங்கள மக்களிடமும் அரசியல் செய்து சமஸ்டிஅரசியலமைப்பின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் அதற்கான் ஆதரவு தளத்தை ஏற்படுத்த வில்லை என்றால் இந்த தமிழ் தேசியவாதிகளது கோஷம் வெறும் வெற்றுக் கோஷமாகவே இருக்கும். அவர்களது பொழுது போக்கு மற்றும் பதவிகளை பெறும் சுயநல அரசியலாகவும. வெற்று வீரம் பேசும் புலம்பெயர் தேசியவாதிகளின் பண திருட்டு அரசியலாக மட்டும் அமைந்து அவர்களுக்கு மட்டும் பயன்தரும் அரசியலாக மட்டுமே அமையும் என்பது எனது கருத்து. தமிழ தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொண்டு செயற்படுவோர் மத்தியில் பல சட்டவாளர்கள், அரசியல் விற்பன்னர்கள், பத்தி எழுத்தாளர்கள், புலம் பெயர் இணையத்தள அரசியல் ஆய்வாளரகள், அதி தீவிர தேசியவாதிகள் என்று பலர் இருந்தும் இதை கணக்கில் எடுக்காதது ஏன்? நாம் இந்த உலகில் வாழும் வரை தமிழ் தேசியத்தை பொழுது போக்காக அல்லது வருமானத்தை பெருக்க, நிதி சேகரிக்க தமிழ் தேசியம் என்ற சொல்லாடலை உபயோகிப்போம் என்ற அவர்களது எண்ணமே இதற்கு காரணம்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
தமிழர் சார்பில் தலைமை தாங்குபவர்கள் அன்றில் இருந்து இன்றுவரை பேசும் ஒற்றுமை என்பது ஆட்டு மந்தைகள் போன்ற ஒற்றுமை. எந்த பிரயோசனமும் அற்ற சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஒற்றுமை. உண்மையில் ஒற்றுமை என்பது அதுவல்ல.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
மாபெரும் பொதுக்கூட்டத்தை சிறிய வளவில் அமைந்த சிறிய பந்தலுக்குள் மக்களை இருத்தி நடத்தி முடித்த அரியநேந்திரனுக்கு பாராட்டுகள்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
கந்தையா, பணத்தை பாதுகாக்கும் கட்டமைப்பு தேவையல்லை. பொறிமுறையும் தேவையில்லை. பணத்தை இவர்கள் பாதுகாக்கவும தேவையில்லை. பணத்தை யாரிடம் இருந்து பெற்றார்கள், யாருடைய பெயரில் பெருந்தொகை பணத்தை எடுத்து அதை அபகரித்து அவர்களை வாழ்நாள் கடனாளியாக்கி னர்களோ அவர்களின் பெயர், முகவரி விபரம் எல்லாம் நீங்கள் கூறிய செயற்பாட்டாளர்களிடம் உண்டு. பணத்தை மனம் இருந்தால் திருடிய இடத்தில் காதும் காதும் வைத்த மாதிரி திருப்பி கொடுத்திருக்கலாம். அதற்கு எந்த தடையும் சட்ட சிக்கலும் இல்லை. பணத்தை இழந்தவர்கள் இப்போதும் உள்ளார்கள். அவர்கள் இவர்களை காட்டிக் கொடுக்கப்போவதில்லை. தமது பணம் திரும்பி வந்ததையிட்டு மகிழ்சசியடையவே செய்வர். பணத்தை பெறும் போதும் இல்லாத சட்ட சிக்கல் உரியவரிடம் திருப்பி ஒப்படைக்கும் போது வரப் போவதில்லை. பணத்தை தாம் அனுபவிப்பதற்தை நியாயப்படுத்த இவ்வறான ஆயிரம் காரணங்களை அவர்கள் கூறலாம். அவர்களுக்கு வேண்டியவர்கள் ஆயிரம் முட்டு கொடுப்புகளைச் செய்யலாம். அவை எதுவும் நியாயமானதல்ல.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
அவர்களெல்லாம் அவர்களின் நடிப்பில், பாசாங்கு தனத்தில் நீங்கள் கூறிய தோற்றவர்களே. ஆனால் பின்னணியில் பினாமி பண முதலைகள். கில்லாடிகளிடம் பணம்பெறுவதா? அது முடியவே முடியாது. எனவே அவர்களின் பழைய நாடகங்களை வெளிச்சம் போட்டு காட்டி எதிர்காலத்தில் அவர்களால் ஏமாற்றுபட இருப்பவர்களுக்கு அவதானமாக இருக்குமாறு விழிப்புணர்வு செய்ய மட்டுமே என்னால் முடியும். உங்களை போல் அவர்களை அப்பாவிகளாக சித்தரித்து அவர்களின் ஏமாற்றுவித்தை தொடர இடமளிப்பதை அனுமதிக்க கூடாது. துவாரகா குழுவினின் கூற்றில் உண்மை உள்ளது என்று நீங்கள் எழுதிய பதிவு இன்றும் யாழ் இணையத்தில் உள்ளது.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
ஏற்கனவே திட்டமிட்டு அப்பாவி மக்களின் பணத்தை அதுவும் தமிழ் தேசியத்தில் அதீத பற்று வைத்திருந்த உணர்வு மனோநிலையில் இருந்த மக்களைக் குறிவைத்து, தேசிய செயற்பாளர்களாக பலகாலம் இயங்கியவர்களால் நடத்தப்பட்ட பாரிய பண கொள்ளையை பற்றியே பேசுகிறோம். நீங்கள் யாரோ சில அப்பாவிகளை கைக்காட்டி பண கொள்ளையர்களில் மீது அனுதாபம் தேட விழைகின்றீர்கள். விரும்பிய கொள்கைக்காக, வேண்டுதலுக்காக கொடுத்தோம் தோற்றுவிட்டோம் அதை மறந்துவிடுவோம் என்று கூறுகின்றீர்கள். யாரிடம் தோற்றீர்கள்? யார் மக்களின் பணத்தை கொள்ளையடித்து வென்றது? என்பவையே இங்கு கேள்வி. இங்கே தோற்றது சக தேசிய செயற்பாட்டாளரிடமே என்பதை மறைக்க படாது பாடுபட்டு ஏதே இனத்தெரியாத நபர களிடம் தோற்றது போல் பாவனை செய்ய முயல்கின்றீர்கள். ஏனெனில் மக்கள் ஏமாந்தது (தோற்றது) புதிதாக வந்த நபர்களிடம் அல்ல. நீண்ட காலமாக செயற்பட்டு கொண்டிருந்த செயற்பாட்டாளரிடமே உங்கள் மொழியில் சேவையாளர்களிடமே. எல்லோருமே தோற்றுவிட்டோம் என்று அனுதாபம் தேட முயற்சிப்பது கிட்டத்தட அந்த டெலிபோன் உரையாடல் பாணியிலான நாடகமே.