Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே பொருந்தும். அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம் சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை. தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள் கூறாவிட்டாலும் அது தானே உண்மை. மேற்கண்ட இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன். ஆனால், தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர். நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி, எச்சரிக்கும் தொனியில், “ஈழநாடே வாயை மூடு” என்று, அன்று சுதந்திரன் பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத அவலநிலைக்கு தமிழ் மக்களை இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே. நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி பேசும் போது அவற்றின் உண்மைகளை மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை நீங்கள் பெற்றதும் அந்த தமிழ் அரசியல் தொடர்ச்சி தான். உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான வெற்று அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ கவலை இல்லை என்பதும் தெரிந்ததே. நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே. தமிழ் தேசிய அரசியல் உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள். இலங்கை ஒற்றையாட்சியை நான் ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள். ஆனால், இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே ஆர்வமற்றவர்களாக மாற்றி, பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும் நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே. உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம். மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை. இந்த எனது பதிவுக்கு பதிலாகவும் என்மீது வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே.
  2. இணையத்தேடுதலில் பின்வரும் இணைப்புகள் கிடைத்தன. காழ்புணர்வின் காரணமாக இராமநாதன் கல்லூரியின் சொத்துகளை பறிமுதல் செய்து விட்டார்கள் என்று அதையும் ஒரு காரணமாக தமிழரசு கட்சி பிரச்சாரம் செய்தது நடைபெற்ற விடயம் தான். கிடைத்த இணைப்புகளில் ஒன்று யாழிணையத்தில் கிருபன் என்ற உறவால் முன்னர் இணைக்கப்பட்ட திரி. https://eelanadu.lk/யாழ்ப்பாணப்-பல்கலைக்கழக/ https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்-பல்கலைக்கழக-உருவாக்கமும்-எதிர்ப்பும்/91-293330
  3. உண்மை. இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க வந்த பிரதமரை யாழ் பலாலியில் யாழ்மக்கள் பெரும் திரளாக வந்து வரவேற்றதை இன்றும் காணொளிகளில் பார்கலாம். தமிழரசுகட்சி தனது குறுகிய அரசியலுக்காக எதிர்த்ததை மக்கள எதிர்த்தார்கள் என்று புரட்டுகளை கூற இன்று கூற வரலாற்றை திரித்து எழுதுவோர் முன்வந் துள்ளார்கள். இப்போது வவுனியா பல்கலைக்கழகம் யாழ் வளாகமாக இருந்ததை மாற்றி தனி பலகலைக்கழகமாக மாற்றியதையும் தமிழ் தேசியவாதிகள் எதிர்பபு தெரிவித்தனர்.
  4. ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின் கடந்த கால நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின் தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது. அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ அல்லது அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது.
  5. தமிழரசு கட்சியாலேயே அந்த எதிர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாகவே நான் கூறியுள்ளேன். அதை வாசிக்க வில்லையா? அல்லது வாசித்தும் ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதி உள்ளீர்களா? இப்போதும் கருத்துக்களை நேர்மையாக எதிர் கொள்ளாமல் தந்தை செல்வாவின் பிரபல்யத்துக்கு பின்னால் ஒழிய வேண்டிய நிலை. தந்தை செல்வா இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்து அவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் நீங்கள் பிளேட்டை மாத்தி கூறி இருப்பீர்கள். 😂
  6. எதிர்கக வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான காரணங்களை தேடுவதும் இளைஞர்களை தூண்டி விடுவதும் தமிழரசு கட்சியின் கைவந்த கலை என்பது இலங்கை அரசியலை புரிந்து கொண்ட அனைவருக்கும் தெரியும். பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்பட்டதில் ஈடுபட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களை கொம்பு சீவி விட்டது தமிழரசு கட்சியே என்பது வெள்ளிடை மலையாக தெரியும். பலகலை கழகம் திருகோணமலையில் அமைத்திருந்தால் அது தமிழரின் முழுகட்டுப்பாடில் இருந்திருக்காது என்ற ஜதார்த்தத்தை கூட புரிய முற்படவில்லை. அப்படியே அங்கு திறந்திருந்தாலும் தமிழரின் கலாச்சார தலைநகரை புறக்கணித்து சிங்கள ஆக்கிரமிப்புக்காக திருகோணமலையில் பல்கலை கழகம் திறந்ததாக புரட்டு கூறி பிரச்சாரம் செய்திருப்பார்கள் இந்த தமிழரசு கட்சியினர் என்பது தமிழரசு கட்சியின் செயல்களை பார்தவர்கள் அனைவருக்கும் புரியும். தமிழரசுகட்சி எப்போதுமே தனது உசுப்பேற்றும் அரசியலுக்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் தெரிந்த விடயம் தான். அவை எல்லாம் ஆதாரங்கள் அல்ல..
  7. உங்களுக்கு தெரியுமா, யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான தமிழரசு கட்சியின், மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை திறக்க விடபாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். யாழ்பாணம் முழுவதும் கறுப்பு கொடி ஆர்பாட்டங்கள் நடந்தன. கூறப்பட்ட காரணம், இராமநாதன் என்ற தமிழினத்தின் மாபெரும் தலைவர் பெயரில் உள்ள இராமநாதன் கல்லூரியை, அதன் பெருமைகளை அழிக்கவே அதை அரச பல்கலைக்கழகமாக சிங்கள அரசு மாற்றுகிறது என்பதாகும். அரசின் மிக சிறிய கிராமிய மட்டதிலான அபிவிருத்தி திட்டங்கள் கூட தமிழரசு கட்சியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என அன்று மக்கள் மத்தியில் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர் காலத்தில் தாம் உருவாக்க நினைக்கும் தமிழீழ புரட்சிக்கு அது இடையூறு விளைவிக்கும் என தமிழ் தேசியவாதிகள் அன்று கருதினர். அதன் தொடர்சசியாக எந்த தொழிற்துறை யாழில் உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்க்க காரணங்களை தேடித் தேடி கண்டுபிடித்து அதை எதிர்கக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது. அப்பாவி மக்களை தூண்டி அவற்றிற்கெதிராக போராட்டம் நடத்த அந்த கும்பல் முயற்சி செய்துகொண்டே இருக்கும். தற்போதைய போலி அறிவியல் வட்சப், யூரிப் காணோளிகள் அதற்கு பலம் சேர்ககின்றன. சுற்றுலாதுறையை வளர்கக முற்பட்டால் பல்வேறு நாட்டவர்கள் இங்கு வருவதால் யாழ்பாண கலாச்சாம் கெடுகிறது என்று ஒரு கூட்டம் வரும். ஒரு காலத்தில் “யாழ்பாண வெங்காயங்கள்” இலங்கை முழுவதும் பிரபல்யமாக அதிக கேள்வி உள்ளதாக இருந்தது. நிரம்பலை யாழ்பாண விவசாயிகள் செய்து தமது பொருளாதாரத்தை பெருக்க ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது பொருளாதார கோட்பாடுகள் மூலம் உதவி செய்தார். இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார மாற்றங்களினால் அந்த நிலை இன்று இல்லை என்றாலும் ஏனைய தொழிற்துறைகளை முற்றாக நிராகரித்து யாழ்பாணத்தில் வெங்காயங்களை உற்பத்தி செய்து சந்தைப்டுத்தி மீண்டும் யாழ்பாண வெங்காயங்களை இலங்கை முழுவதும் பிரபல்யப்படுத்தலாம். இலங்கையின் மற்றைய பிரதேசங்கள் பல்வேறு தொழிற் துறைகளால் வளர்சியடைய அவர்களுக்கு தேவையான வெங்காயங்களை நாம் சப்ளை செய்யலாம்.
  8. நீங்கள் கூறிய பாராளுமன்ற பகிஸ்கரிப்பு மூலம் நாம் இழந்தவை மிக அதிகம் என்பதற்கு பல உதாரணங்களை கண் முன்னே கண்ட பிறகும் இவ்வாறு நடைமுறை சாத்தியம் அற்ற முன்மொழிவை கூறுகின்றீர்கள். இவ்வாறு நடைமுறை சாத்தியம் அற்ற கற்பனை வாதங்களை விடுத்து உண்மை உலகுக்கு வாருங்கள் என்று உங்களை நான் கேட்க போவதில்லை ஏனெனில், உங்களை அவ்வாறு கேட்பது உங்கள் முன்மொழிவுகள் போலவே useless ஆன விடயம் என்பது எனக்கு தெரியும். இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகும்கூட இப்படியான useless கருத்துகளை கூறிக்கொண்டு அதே இடத்திலேயே நிற்பீர்கள். அதற்கான பூரண சுதந்திரம் உங்களுக்கு உண்டு.
  9. மினக்கெட்டு உக்கிரேனுக்கு போய் கொல்லுற தெய்வம் பாதிக்கப்பட்ட தமிழரைக் காப்பாற்றி உதவி செய்திருக்கலாலாம். காப்பாறுவதை விட கொல்லுறது தெய்வத்துக்கு சுகமான வேலை போல இருக்கு அல்லது தமிழர் வழிபடுற தெய்வமும் தமிழரை போல் மொக்கு தெய்வம் போல இருக்கு. 😂
  10. அந்த கொதித்தெழுந்த பொருளாதார நிபுணர் இப்ப cool ஆகிவிட்டாரா? பாவம் அவர் தொடர்ந்து கொதித்துக்கொண்டிருந்தால் blood pressure ஏறீடும். 😂
  11. இதை தான் சுருக்கமாக குறிப்பிட்டேன். எமது தலைமைகளுக்கு போராடி எதிர்ப்பு அரசியல் செய்தும் பெறத் தெரிய வில்லை. ஆயுத போர் புரிந்தும் பெறத் தெரியவில்லை . இணைந்து அரசியல் செய்தும் பெற தெரிய வில்லை. கோட்பாட்டு ரீதியான (Theoretic) அரசியல், உணர்ச்சி ரீதியான வார்த்தை ஜால அரசியல் எழுதும் போதும் அதை வாசிக்கும் போதும் புளகாங்கித்தை ஏற்படுத்தும். ஆனால், உங்கள் கருத்துக்களில் தற்போதைய தாயக அரசியல் நிலை, ஜதார்த்தம் பற்றி எள்ளவும் கருத்து எடுப்பதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் எமது மக்களின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும். மக்களின் கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், தொழில்துறை ஆகியவற்றின் உயர்வு மட்டுமே எமது வருங்கால இளம் சந்ததியினர் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள உதவும். அதற்கான வழிமுறைகளை, தந்திரோபங்களை பற்றி சிந்திப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும். வெறும் உசுப்பேற்றல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும். தற்போதைய பலவீனமான தமிழர் அரசியலில் தம்மை தக்க வைத்து எமது இருப்பு காப்பாற்ற எப்படியான அரசியல் தந்திரோபாயங்கள் தமிழர் தரப்பில் கடைப்பிடிக்க படல் வேண்டும் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை. மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினராகி எமது பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யலாம் என்று கூறி விட்டு அடுத்த பந்தியில் பாராளுமன்றத்தை பகிஸ்கரிப்பு செய்து வெளியில் வரவேண்டும் என்றும் கூறுகின்றீர்கள்.
  12. கோத்தபாய இன/ மத அரசியலை செய்த போது உங்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அதே போல் என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
  13. தான் நாட்டின் அனைத்து இன மக்களின் பிரதமர் என்பதை கூட மறந்து நரேந்திர மோடி இஸ்லாமிய வெறுப்பு பேச்சு பேசியுள்ளார்.
  14. அதை நானும் மிகவும் மெச்சுகிறேன். நீங்கள் அரசியல் அறிவை பெருக்கி அதனைப் பலமாக கொண்டு சுயமாக சிந்திக்கும் ஆற்றலை பெற உங்களை வாழ்த்ததுகிறேன் அதனால் தான் உங்கள் அந்த அறிவை மேலும் மங்க செய்ய எத்தனிக்கும் சீமான் போன்ற அரசியல்வாதிகளை தோலுரிக்கிறோம்.
  15. அதை தான் முன்பே கூறினேனே காமடியர்களின் காணொளி அவர்களின் காமடிகளை ரசிப்பதற்காக. நமக்கு சும்மா வெட்டியாக பொழுது போக வேண் டுமென்றால் சாட்டை போன்ற லூசுகளின் விடியோ பார்பது வழமை. அறிவை பெற்றுக்கொள்ள நூல்கள் பல இணையத்தில் உள்ளன அல்லது அறிஞர்களின் காணொளிகளும் உள்ளன. நீங்களும் நல்ல அறிவு தரும் பல நூல்களை இணையத்தில் வாசிக்கவேண்டும். பல அறிஞர் களின் உரைகளை கேட்க வேண்டும். ஒரு challenge ஆக ஒரு மூன்று மாததுக்கு அறிவு தரும் நூல்களையும் அறிஞர்களின் உரைகளையும் கேட்டுவிட்டு பின்னர் சாட்டை போன்ற லூசுகளின் விடியோக்களை கேட்டுப் பாருங்கள். பெரிய வித்தியாசத்தை நீங்களே உணர் வீர்கள் பையன்.
  16. வடிவேலு கொமடியை பின்தொடர்வதை போல் தம்பிகள் கொமடி பார்கக பலர் தொடரலாம் அல்லவா! நான் பெரிய அறிவாளி இல்லை. ஆனால் சாட்டையிடம் அறிவை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அறிவற்றவனும் இல்லை.
  17. சாட்டை துரைமுருக்கன் என்பவரின் Short Video பார்ததேன். அந்த விடியோவில், “திமுக, அதிமுக தமிழ்நாட்டில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்யுது. பாஜக, காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமே பிரச்சாரம் செய்யுது. நாம் தமிழர் கட்சி மட்டுமே சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்யுது என்று லண்டனில் உள்ள, நாம் தமிழர் ஈழத்தமிழர்களின் பிரச்சாரம் என்று ஒரு விடியோவை காட்ட தம்பிகள் வழமை போல் விசிலடிதான். வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் பிரச்சாரம் என்று தம்பிகளும் கேட்கவில்லை. வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறோம் என்று லண்டனில் உள்ள அந்த ஈழத்தமிழ் லூசுகளும் சிந்திக்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் தம்பி ஆகிய பின்னர் சிந்திக்கும் ஆற்றலை இழக்கின்றனரா அல்லது சிந்திக்கும் ஆற்றலை இழந்த பின்னர் தம்பியாகின்றனரா? ஆனால் ரசிகர்களாகிய எமக்கு பார்த்து ரசிக்க நல்ல கொமடி. வடிவேலு கொமடி போரடித்தால் தம்பிகள் கொமடி பார்ககலாம். சுப்பராக இருக்கும். நமக்கும் பொழுது போகணுமல்ல. 😂
  18. தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம் போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள்.
  19. பையன், இந்த 800 ரூபா வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற வருடம் மே மாதத்தில் பார்திருப்பீர்கள்? காலப்பயணம்(time travel) சென்றீர்களா?
  20. ஏற்கனவே எனது ஐடியாவை சொல்லி அந்த கருத்தை மறுதலித்த உறவை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி என்பதை வாசித்து கிரகித்து கொண்டு பின்னர் கேள்வி கேட்க வேண்டும். 😂
  21. துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது.
  22. எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய இள வட்டங்களின் funny life video
  23. @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான காணோளியை இணைக்கிறேன். பி. கு அனுமதி பெறாமலே😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.